Announcement

Collapse
No announcement yet.

Thiruchengaatankudi temple Continues

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Thiruchengaatankudi temple Continues

    Thiruchengaatankudi temple
    Continues
    திருச்செங்காட்டங்குடி.*
    *(3-ஆம்நாள் தொடர்ச்சி.)*

    (நேரில் சென்று தரிசித்ததைப் போல............)

    *குறிப்பு.*
    *இத்தலப் பதிவு அதிக நீளம் கருதி இரண்டு நாள்களாக பதியப்பட்டது. மீதி பாதியை இன்று முதல் பதிவுடனும் இரண்டாம் நாளான பதிவுடனும் இந்த மூன்றாம் நாளான பதிவையும் சேர்த்து வாசிக்கவும், மூன்று நாள் பதிவையும் சேர்த்து சேமித்து இணைத்து வைத்துக் கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இன்றைய பதிவில் சிறுத்தொணாடர் நாயனார் தொண்டும் சேர்ந்து இணைந்து இருக்கும். சிவ சிவ. திருச்சிற்றம்பலம்.*


    *இறைவன்:* உத்தராபதீசுவரர், ஆத்திவனநாதர், கணபதீஸ்வரர், மந்திரபுரீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர், பாஸ்கரபுரீஸ்வரர்.


    *இறைவி:*
    *சூளிகாம்பாள், வாய்த்த திருக்குழலம்மை, வாய்த்த திருக்குலழம்மை உமைநாயகி.


    *தல விருட்சம்:*
    ஆத்தி மரம். (காட்டாத்தி.)


    *தீர்த்தம்:* சத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், இந்திர தீர்த்தம், யம தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், மற்றும் சீராள தீர்த்தம் ஆகிய மொத்தம் ஒன்பது தீர்த்தங்கள்.


    *திருமேனி:* சுயம்புத் திருமேனியானவர். உத்திராபசுபதீஸ்வரர் திருமேனியின் நெற்றியில் காயத்துடனே காட்சி தருகிறார்.


    *புராணப் பெயர்:* கணபதீச்சரம்.


    *ஊர்:* திருச்செங்காட்டங்குடி.


    *பதிகம் பாடியவர்கள்:*
    அப்பர், சுந்தரர்.


    *ஆலய பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.


    *ஆகமம்/பூஜை:* காமிகம்.


    *சிறுத்தொண்டர் வரலாறு:*
    நாயனாரின் இயற்பெயர் - பரஞ்சோதியார்; ஆயுர்வேதக்கலைளையும் பல வட நூற்கலைகளையும், தூயத்தன்மையான படைக்கலத் தொழில்களையும், பயின்று வென்றவர்.


    மதயானையை ஒழுங்குக்கு கொண்டு வந்தும், குதிரையேற்றம் ஏறி நடத்துவிக்கும் ஆற்றலில் இவருக்கு இணை யாருமிலர்.


    தேவர்களிலும், மண்ணுலகத்தோர்களிலும் மேம்பட்ட மிக பெரியவர்.


    பலகலைகளையும் பயின்றதன் பயனாக சிவபெருமானின் கழல் அடைவதே ஞானம் என்ற உணர்வு இவருள் ஓங்கி வளர ஆரம்பித்தது இவருக்கு.


    இறைவன் கழலுக்கு இவர்பால் பெருகிய அன்பு, மலையில் புறப்பட்ட அருவியாய் பள்ளத்தில் வீழும் நீர் போல அமைந்தது.


    ஈசனுக்கு இணையாக அடியார்க்கு இயல்பாகத் தொண்டு பணிசெய்யும் குணத்தைக் கொண்டிருந்தவர்.


    பதவி தந்த மன்னவனுக்குப் போர்த் தலைவராக படையெடுத்துச் சென்று பல நாடுகளை வென்று, பின் வாதாபியையும் வென்று, பெரும்பொருளையும் கொணர்ந்து மன்னனிடம் கூட்டுவித்தார்.


    சிவனடிமைத் திறன் கொண்டிருந்த இவர் நிலையை அறிந்த மன்னன், தன் தவறை உணர்ந்து பெரும் நிதிக் குவியல்களை இவரிடம் கொடுத்தனுப்பி சிவத் தொண்டான உம் பணியைச் சிறப்பாக செய்க!".. என பிரியாவிடை கொடுத்து அனுப்பினான்.


    முன்போல கணபதீச்சரத்தில் சிவ தொண்டுகளை செய்து, முன்னைவிட இப்போது தாராளமான நிதி கையிருப்பிலிருக்க, அமுதளிக்கும் தொண்டுகளை விரித்து செய்வித்தார்.


    சிவனடியார்களுக்கு சிறந்த பணி செய்ய திருவெண்காட்டுநங்கை என்ற நற்குண நங்கையை மணந்து கொண்டார்.


    சிவனடியார்களை நாள்தோறும் அமுது செய்வித்து அகமகிழ்ந்து அதன்பின் தான் உண்ணும் உயர்ந்த தவத்தை மேற்கொண்டு, அதில் ஒழுகி நியதி வழுவாமல் வாழ்ந்து வந்தார்.


    வரும் சிவனடியார்களை இனிய மொழிகள் கூறித் தாழ்ந்து வணங்கிப் போற்றி வழிபடுதலால் இவரை சிறுத்தொண்டர் என அழைக்கப்பட்டு வந்தனர்.


    இவ்வாறு சிறந்த இவரது மனையறத்தின் வேராக விளங்கிய திருவெண்காட்டுநங்கை வழி சீராளர் எனும் மைந்தர் அவதரித்தார்.


    இவரது செயற்கரிய பக்தியின் நிலையை உலகறியச் செய்யும் பொருட்டு, பெருங்கருணையுடன் வயிரவக் கோலத்துடன் திருச்செங்காட்டங்குடி வந்து சேர்ந்தார் சிவபெருமான்.


    பெரும் பசியுடையவர் போல சிறுத்தொண்டர் இல்லத்திற்குச் சென்று....... *"தொண்டனார்க்கு எந்நாளும் சோறளிக்கும் திருத்தொண்டர் வண்டார் பூந்தாரார் இம்மனைக் குள்ளாரோ?"*என கேட்டார்.


    இவரது கோலம் கண்டு, மாதவம் மிக்கவர் சிவனடியாரென உணர்ந்த திருவெண்காட்டு நங்கை அவரிடம்,........ ...


    இன்று "அமுது செய்விக்க யாரும் காணாததால், ஊர் எல்லையில் சிவனடியாரைத் தேடி என்னவர் சென்றுள்ளார்.


    ஆதலால் *எம்மை ஆளுடையவரே நீங்கள் இல்லத்தில் எழுந்தருளி இருங்கள்"* என்றாள்.


    பெண்கள் தனித்திருக்கும் இடத்தில் தனியாக நாம் *புகோம்"*எனக்கூறி, அவ்விடத்தை விட்டு அகலும் நிலையில், திருவெண்காட்டு நங்கையாரிடம் கூறினார்.


    *"அம்பலவர் அடியவர் எவரையும் அமுது செய்விக்கக் காணாதவராய் தேடிப் போயுள்ளார்*உடன் வந்துவிடுவார், தாங்கள் பொறுமை புரிந்து இல்லனுள் எழுந்தருள்க!" என மறுமுறையும் கூறினாள்.


    இறைவனார் அவளிடம் *"ஒப்பில் மனையறம் புரப்பீர் உத்திராபதியுள்ளோம். செப்பருஞ்சீர் சிறுத்தொண்டர் தமைக் காணச் சேர்ந்தனம் யாம் எப்பரிசு அவர் ஒழிய இங்கு இரோம். கணபதீச்சரத்தின் கண் வண்ணமலர் ஆத்தியின் கீழ் இருக்கின்றோம். மற்றவர் தாம் நண்ணினால் நாமிருந்த பரிசுரைப்பீர்"*எனக் கூறி அகன்று சென்றார்.


    அடியவர் எவரையும் காணாது வருந்தி திரும்ப வீடு வந்த சிறுத்தொண்டரிடம், அவர் மனைவியார், பயிரவர் கோலத்தில் வந்த அடியவரைப் விபரம் கூறினாள்.


    விரைந்து எழுந்தோடிப் போனார். பயிரவக் கோலம் கொண்டிருந்தவரைக் கண்டு திருப்பாதம் பணிந்து நின்றார்.


    சிறுத்தொண்டரை நோக்கிய இறைவனான பைரவ வேடத்தவர்..... *"நீரோ பெரிய சிறுத்தொண்டர்?!"* என இறைவனார் கேட்டார்.


    அதற்கு அவர், *"நீறணிந்த அடியவருடன் போற்றப் போதேன்* ஆயிடினும் நாதன் அடியவர் கருணையோடு அப்படி அழைப்பர்" எனச் சொல்லி "அடியேன் மனையில் எழுந்தருளி அமுது செய்ய வர வேண்டும்" என்றார்.


    அவரிடம் "பயிரவர் உத்திராபதியாகிய நாம் தவத்தினன். உம் தொண்டு காணும் படியால் இங்கு வந்தோம். எனக்குப் பரிந்தூட்டும் அரிய செய்கை உம்மால் செய்ய இயலாது" எனவே நீர் செல்க என்றார்.


    சிவபெருமான் அடியவரான தாங்கள் கேட்கின் முடியாததில்லை என உரைப்பதில்லை எனச் சொன்னார் சிறுத்தொண்டர்.


    அதற்கு அவ்விறைவன் சிறுத்தொண்டரிடம்......'யாம் ஆறுமாதத்திற்கு ஒருமுறைதான் உணவு உட் கொள்வோம். அந்த உணவானது பசு வீழ்த்திட்ட உணவாகக் கொண்டு உண்போம். அந்த ஆறுமாத காலத்திற்கு பின் உவ்வுணவை உண்ணும் அதற்கான நாள் இன்று. இதைப் செய்ய உனக்கு அரிது" என்றார்.


    தாங்கள் உணவின் தரத்தைக் கூறினால் ஈசன் துணைகொண்டு செய்வேன்! எனக்கு அரியதில்லை" என்றார் சிறுத்தொண்டர்.


    சரி!...கூறுகிறேன். நன்கு கவனித்து விளங்கிக் கொள்ளவும்!........
    *"ஐந்து வயதிற்குட்பட்டு, உறுப்பில் குறையில்லாத குழந்தையை, அதுவும் அக்குழந்தை அத்தாய் தந்தையர்கள் குழந்தை ஒரே மகனாக இருக்க வேண்டும், தந்தை குழந்தையை அரிய, தாய் தாங்கிப் பிடிக்கனும், அப்போது பெற்றோர்களின் மனம் உவந்து குறையின்றி இருக்கனும், அப்படி சமைக்கும் கறியே நாம் உண்பது"* என்றார் இறையனாரான அவர்.


    இதற்கு உடனே இசைந்த சிறுத்தொண்டர், அடியேனுக்கு இதுவும் அரிதன்று, எம்பெருமான் அமுது செய்யப் பெறில்" இது எமக்கு இலகுவானது என்ற கூறிய சிறுத்தொண்டர் மனைவியாரிடம் வந்து இவ்விபரத்தைக் கூறினார்.


    இவ்வுலகில் பொருள் கொடுத்தால் குழந்தை தருவார் யாரும் உளரோ?! அதுவும் அக்குழந்தையை பெற்றோர்கள் அரிவார்களோ? அப்படியான பெற்றோர் கிடைப்பது அரிது! அதுவும் காலந்தாழ்த்தவும் நேரமிலை. எனவே நாம் பெற்ற மகனை அழைப்போம் நாம்" என்றாள் திருவெண்காட்டுநங்கை.


    பாடசாலைக்குச் சென்றிருந்த சீராளனை அழைத்து வந்து தாய் மடியில் மலர்த்தி பிடித்துக் கொள்ள, தந்தையர் குழந்தையை அரியத் தொடங்கினர்.


    குழந்தை பலிபோகிறதே எனவெண்ணம் அவர்களுக்கில்லை. மாறாக அவ்வடியார் கேட்ட அமுதை செய்வித்து விட வேண்டும் என்ற இவ்வெண்ணமே ஓங்கியிருந்தன.


    அமுதாக்கி முடித்ததும், பயிரவர் கோலம் பூண்டுள்ள அடியவரை அமுதுக்கு எழுந்தருளச் செய்தனர்.


    இலைமுன் வந்த அடியவர் சிறுத்தொண்டரிடம், செயாவன யாவும் நாம் கூறிய முறையில் உள்ளனவா என ராம் பரீட்சீக்க வேண்டும் என கேட்க.......


    அதற்கு, சிறுத்தோண்டரும், திருவெண்காட்டு நங்கையாரும் கறியமுது ஆக்கின விபரத்தைக் கூறி ஒவ்வொன்றையும் முன் வைத்தனர்.


    'ஒன்று குறைந்துளதே?!--என அடியவரான இறைவர் கேட்க.......


    துறையானது யாதுவென கூற இப்பௌதே அது நிவர்த்தியாகுமென கூறிய சிறுத்தொண்டர்................
    அடியவரின் முகம் நோக்கினார்.


    *"தலைக்கறியே நாம் விரும்பி உண்பது"* அது யாம் விரும்பி உண்பதில் முதன்மையானது என
    எனத் தெரிவிக்க,..............


    அதற்கு சிறுத்தொண்டரோ...
    'தலைகறி முற்றும் எழும்பாலானது என்று அது உதவாது என ஒதுக்கினோம் என அஞ்சித் தயங்க...........,


    அப்போது உடனிருந்த தாதியார்,..பக்குவம் செய்த தலைகறியை தனியே செய்து வைத்திருக்கிறேன்! எனக் கூறியபடி தலைக்கறியை கொண்டு வந்து சிறுத்தொண்டரின் கைகளில் கொடுத்தாள்.


    "சரி!"... ஆனால் தனியே உண்ண மாட்டேன் ஈசன் அடியார் எவரேனும் இருப்பின் அவரையும் என்னுடன் இருக்க அமர்த்துக" என்றார் அடியவர்.


    சிறுத்தொண்டர் வெளியில் சென்று எவரொருவரையும் காணாது, விரைந்தோடி வந்து பயிரவக் கோலம் கொண்ட அடியவரிடம்......


    *"அகத்தும் புரத்தும் யாரையும் காணேன்! யானுந் திருநீறு சகத்தில் இடுவார் தமைக்கண்டே இடுவேன்"* எனத் தாழ்ந்து இறைஞ்சினார்.


    *"எம்மைப் போல் நெற்றி நீறிட்டவர் நீவீர் உளரே?! நீரே...எம்முடன் இருந்தயமர்ந்து உண்பீர்"* என்றார்.


    அடியவரை உண்ணத் தொடங்குவிக்கும் நோக்குடன், சிறுத்தொண்டர் உண்ணத் தொடங்க, பயிரவர் வேடத்திலிருக்கும் இறைவர் தடுத்தார்.


    *"ஆறு மாதத்திற்கு ஒருமுறை உண்ணும் நான் உண்ணத் தொடங்கும் முன், நீவீர் வெடுக்கென உண்ண முனைவது நலதில, நாளும் உண்ணும் நீ முண்டி முன்னமே உண்பதென்ன?! எடுத்த கவழத்தை இலையில் விடு! நீ போய் உன் மகனை அழைத்து வா!"*என்றார்.


    *"இப்போது உதவான் அவன்"* என்றனர் இருவரும்.


    *"கூவி அழையும்"* என்று பயிரவர் சொல்ல, தொண்டர் தன் மனைவியாருடன் வீட்டிற்கு வெளியே வந்து *"மைந்தா வருவாய்" "மைந்தா வருவாய்!* என அழைத்தார் சிறுத்தொண்டர்.


    அவர் மனைவியாரோ *"செய்ய மணியே சீராளனே! வாராய் வாராய்,* சிவனடியார் யாம், உய்யும் வகையால் உடன் உண்ண உண்ணை அழைக்கின்றார் *வா!* என்றாள்.


    பெற்றோர்கள் இருவரும் திடுக்கிட்டனர். ஆம்!....
    பாடசாலையினின்றும் வருபவன் போல் சீராளத்தேவன் அழைத்த குரலுக்கு ஓடிவந்து கொண்டிருந்தான்.


    பெற்றோர் இருவருக்கும் பிரமை கொண்டது போலிருந்தது. அரிந்த மைந்தன் அரியயுருயாய் வருகிறானே! என்று......


    சீராளனைக் கண்டு அதிசயித்துப். கண்கள் குளமானது. வாரியனைத்து உச்சி முகர்ந்தாள்.


    திருவெண்காட்டுநங்கை மைந்தனை அள்ளியெடுத்து தழுவிக் கணவன் கையில் கொடுத்தாள்.


    இருவரும் பிரமை மீண்டு சீராளனுடன் வீட்டுக்குள் புகுந்தனர்.


    அங்கே அடியார் பைரவர் இல்லை. பயிரவர் மறைந்தருளிந்தார். விரித்த இலைகளுமில்லை. உண்ணச் செய்வித்திருந்த கறியமுதையும் காணவில்லை. திடுக்கிட்டனர்..திகைத்தனர்...வியந்தனர்..


    அப்போது அவர்களுக்கு முன் ஒளிவெள்ளமாய்...
    *மலையத்துளாளோடு சரவணத்தான தனயோடும் சோமாஸ்கந்தராக விண்ணில் காட்சியளித்தார்.*


    இல்லாளோடு அன்பு மகனுடனும், பணிப்பெண்ணுக்கு மற்றும் காண்பதற்கரியதான சிவதரிசனம் பெற்றனர்.


    சிவதரிசனத்தைக் கண்டதும் அவர்களுக்குள்ளான உடம்பினிலிருந்து ஒரு வித சிலிர்ப்பும், பேச்செழா நாவுடன் தொண்டையும் கணற, சக்திப் பாங்குடன் வானில் மிதவன போலிருந்தன அவர்களுள்ளம்.


    *ஆம்!* சிறுத்தொண்டர், திருவெண்காட்டு நங்கை, சீராளத்தேவன், மற்றும் உணவு சமைத்த பணிப்பெண் தாதியர் ஆகியோருக்கு சிவானந்த வீடுபேறு அருளினார் இறைவனார்.


    இச்சம்பவம் சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தன்று நடக்கப் பெற்றது.


    இச்சம்பவ நிகழ்வை வைதீக விழாவாக இன்றும் *அமுது படையல்* எனும் விழாவாக ஆண்டு தோறும் இத்தலத் திருச்செங்காட்டங்குடியில் கோலாகலமாக நடத்தப் பெற்று வருகிறது.


    இவர்களுக்குக் காட்சி தந்து, முக்தி அளித்த வரலாற்றை நினையும்படி இன்றும் அதனை விழாவாக நடத்திக் காட்டுகிறார்கள்.


    காலையில் உத்திராபதீச்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் நடை பெறுகின்றன.
    அதனைத் தொடர்ந்து,
    சுவாமிக்கு வெள்ளை சார்த்தி, சுமார் பத்து மணி அளவில் உள் பிராகாரத்திலும், வெளிப்பிராகாரத்திலும் சுவாமி வலம் வந்துவிட்டு தனது சபையை அடைகிறார்.


    வழி நெடுகிலும் இருபுறமும் நின்று சுவாமிக்குப் பன்னீரைக் காணிக்கை ஆக்குகிறார்கள் பக்த கோடிகள்.


    நண்பகலில் சுமார் இரண்டு மணிக்கு மீண்டும் உத்திராபதியார் புறப்பாடு நடைபெறுகிறது. அதற்காக அலங்கரிக்கப்பட்ட பவழக் கால் சப்பரத்தில் எழுந்தருளியவாறு, தெற்கு வீதியின் கோடியில் உள்ள சிறுத்தொண்டரது மனைக்குச் செல்கிறார் பெருமான்.


    சிவனடியாரைத்தேடிக் கொண்டு சிறுத்தொண்டர் வெளியில் சென்று விட்டபடியால், அவரது மனைவியான திருவெண்காட்டு நங்கையும்,சந்தனத்தாதியாரும் சுவாமியை எதிர் கொண்டு அழைக்கிறார்கள்.


    ஆண்கள் இல்லாத வீட்டில் நுழைவது முறை அன்று என்று சுவாமி மீண்டும் கோயிலில் உள்ள ஆத்தி மரத்தடிக்கே வந்து அமர்கிறார்.


    சிவனடியார் வந்துவிட்டுப் போன செய்தியை மனைவியின் மூலம் அறிந்த சிறுத்தொண்டர் ஆனந்தம் மேலிடக் கோயிலுக்குச் சென்று அவரை வணங்கி, உணவு அருந்தத் தனது மனைக்கு அழைக்கிறார்.


    தான் உண்பது நரப்பசு என்று சொல்லியும், அதற்கு உடன்பட்ட சிறுத்தொண்டர், பெருமானைத் தன் மனைக்கு வர அழைக்கிறார்.


    இரவு சுமார் ஒன்பது மணிக்குச் சிறுத்தொண்டர் பெருமானை அழைக்க வரும் நிகழ்ச்சி நடை பெறுகிறது. அதற்கான பெரியபுராணப் பாடல்களை ஓதுவாமூர்த்திகள் கூடிப் பாடுகிறார்கள்.


    இரவு இரண்டு மணி அளவில் உத்திராபதீச்வார், சிறுத்தொண்டர் மனைக்கு எழுந்தருளுகிறார். மக்கள் கூட்டம் வெளியில் அமர்ந்தவாறு அப்போது ஓதப்படும் பெரியபுராணப் பாடல்களை ஆவலுடன் கேட்டுக் கொண்டிருக்கும்.


    அமுது படைக்கும் போது உள்ளேயிருந்து ஒரு சப்தம் கேட்கிறது. பின் சற்று நேரத்திற்கெல்லாம் சுவாமி விரைவாகக் கோயிலுக்குச் சென்று விடுகிறார்.


    உத்திராபதியார் அருளால் மீண்டும் உயிர் பெற்ற தனது குமாரனுடனும் மனைவி, தாதி ஆகியோருடனும் கோயிலை நோக்கி சிறுத்தொண்டர் வரும்போது, தெற்கு வீதியில் விடியற்காலையில் ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்த வடிவில் அவர்களுக்குத் தரிசனம் கிடைக்கிறது.


    பாடல்கள் இசைக்கப்படுகின்றன.
    தீபாராதனை பெருமானுக்கும் சிறுத்தொண்டருக்கும் நடைபெறுகிறது.


    நால்வரும் பெருமானை வலம் வந்து விட்டுக் கோயிலுக்குச் சென்று விடுகின்றனர். சுவாமி நான்கு வீதிகளையும் வலம் வந்தவாறு திருக்கோயிலைச் சென்று அடைகிறார்.


    கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் தோளில் சுவாமியைத் தூக்கி வரும் ஆட்கள் பாராட்டுக்கு உரியவர்கள். வீதியில் உள்ள மக்களும் அந்த ஆட்களின் பாதங்கள் வெய்யிலால் வருந்துமே என்று, வழி நெடுகிலும் தண்ணீர் தெளித்து வைக்கிறார்கள்.


    தரிசிக்க வரும் அன்பர்களின் தாகம் தீர்க்கத் தண்ணீர், நீர்மோர் ஆகியவை பலரால் ஆங்காங்கே தரப்படுகிறது. இவை எல்லாமே சிவப்பணிதான், சிவபுண்ணியம் தான்!


    சிறுத்தொண்டன் பணி செய்ய"அதனைப் பெருமான் அன்று ஏற்றருளியவாறு,
    இக்காலத்திலும் அவனுக்குப் பணி செய்தால் அவனருளைப் பெறலாம் என்பது நிச்சயம்.


    கண்கள் தாரையாக உருகும் சிறந்த அடியார்களைக் காண வேண்டும் என்றால் இத்தலத்தில் அமுது படையல் உற்சவம் நடக்கும் நேரத்தில் அதைக் காணலாம்.


    எத்தனையோ குடும்பங்களுக்குக் குல தெய்வமான உத்திராபதீச்வரரையும் அவனே கதி என இருக்கும் அடியார்களையும் *"செங்காட்டங்குடியதனுள் கண்டேன் நானே" * என்று அப்பர் பெருமான் அருளியதுபோல் நாமும் காண்கிறோம்.


    *திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்*
    (ஆறாம் திருமுறை)


    பெருந்தகையைப் பெறற்கரிய மாணிக் கத்தைப்
    பேணிநினைந் தெழுவார்தம் மனத்தே மன்னி
    இருந்தமணி விளக்கதனை நின்ற பூமேல்
    எழுந்தருளி இருந்தானை எண்டோள் வீசி
    அருந்திறன்மா நடமாடும் அம்மான் றன்னை
    அங்கனகச் சுடர்க்குன்றை அன்றா லின்கீழ்த்
    திருந்துமறைப் பொருள்நால்வர்க் கருள்செய் தானைச்
    செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.


    துங்கநகத் தாலன்றித் தொலையா வென்றித்
    தொகுதிறலவ் விரணியனை ஆகங் கீண்ட
    அங்கனகத் திருமாலும் அயனுந் தேடும்
    ஆரழலை அனங்கனுடல் பொடியாய் வீழ்ந்து
    மங்கநகத் தான்வல்ல மருந்து தன்னை
    வண்கயிலை மாமலைமேல் மன்னி நின்ற
    செங்கனகத் திரள்தோளெஞ் செல்வன் றன்னைச்
    செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.


    உருகுமனத் தடியவர்கட் கூறுந் தேனை
    உம்பர்மணி முடிக்கணியை உண்மை நின்ற
    பெருகுநிலைக் குறியாளர் அறிவு தன்னைப்
    பேணியஅந் தணர்க்குமறைப் பொருளைப் பின்னும்
    முருகுவிரி நறுமலர்மே லயற்கும் மாற்கும்
    முழுமுதலை மெய்த்தவத்தோர் துணையை வாய்த்த
    திருகுகுழல் உமைநங்கை பங்கன் றன்னைச்
    செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.


    கந்தமலர்க் கொன்றையணி சடையான் றன்னைக்
    கதிர்விடுமா மணிபிறங்கு கனகச் சோதிச்
    சந்தமலர்த் தெரிவையொரு பாகத் தானைச்
    சராசரநற் றாயானை நாயேன் முன்னைப்
    பந்தமறுத் தாளாக்கிப் பணிகொண் டாங்கே
    பன்னியநூற் றமிழ்மாலை பாடு வித்தென்
    சிந்தைமயக் கறுத்ததிரு வருளி னானைச்
    செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.


    நஞ்சடைந்த கண்டத்து நாதன் றன்னை
    நளிர்மலர்ப்பூங் கணைவேளை நாச மாக
    வெஞ்சினத்தீ விழித்ததொரு நயனத் தானை
    வியன்கெடில வீரட்டம் மேவி னானை
    மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி
    மதிலாரூ ரிடங்கொண்ட மைந்தன் றன்னைச்
    செஞ்சினத்த திரிசூலப் படையான் றன்னைச்
    செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.


    கன்னியையங் கொருசடையிற் கரந்தான் றன்னைக்
    கடவூரில் வீரட்டங் கருதி னானைப்
    பொன்னிசூழ் ஐயாற்றெம் புனிதன் றன்னைப்
    பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தி னானைப்
    பன்னியநான் மறைவிரிக்கும் பண்பன் றன்னைப்
    பரிந்திமையோர் தொழுதேத்திப் பரனே யென்று
    சென்னிமிசைக் கொண்டணிசே வடியி னானைச்
    செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.


    எத்திக்கு மாய்நின்ற இறைவன் றன்னை
    ஏகம்பம் மேயானை இல்லாத் தெய்வம்
    பொத்தித்தம் மயிர்பறிக்குஞ் சமணர் பொய்யிற்
    புக்கழுந்தி வீழாமே போத வாங்கிப்
    பத்திக்கே வழிகாட்டிப் பாவந் தீர்த்துப்
    பண்டைவினைப் பயமான எல்லாம் போக்கித்
    தித்தித்தென் மனத்துள்ளே ஊறுந் தேனைச்
    செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.


    கல்லாதார் மனத்தணுகாக் கடவுள் தன்னைக்
    கற்றார்கள் உற்றோருங் காத லானைப்
    பொல்லாத நெறியுகந்தார் புரங்கள் மூன்றும்
    பொன்றிவிழ அன்றுபொரு சரந்தொட் டானை
    நில்லாத நிணக்குரம்பைப் பிணக்கம் நீங்க
    நிறைதவத்தை அடியேற்கு நிறைவித் தென்றுஞ்
    செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைச்
    செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.


    அரியபெரும் பொருளாகி நின்றான் றன்னை
    அலைகடலில் ஆலால மமுது செய்த
    கரியதொரு கண்டத்துச் செங்க ணேற்றுக்
    கதிர்விடுமா மணிபிறங்கு காட்சி யானை
    உரியபல தொழிற்செய்யு மடியார் தங்கட்
    குலகமெலாம் முழுதளிக்கும் உலப்பி லானைத்
    தெரிவையொரு பாகத்துச் சேர்த்தி னானைச்
    செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.
    To be continued
Working...
X