21-10-2017---யம துதியை---ப்ராத்ரு த்விதீயை .


தீபாவளிக்கு பிறகு வரும் த்விதீயை அன்று யமுனா தேவி தனது ஸஹோதரன் யமனை தனது


வீட்டிற்கு வரச்சொன்னாள்.. யமனும் தனது ஸஹோதரியின் அழைப்பை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு


நிறைய ஆபரணங்களுடநும், ஜவுளி, சீர்களுடன் யமுனையின் இல்லத்திற்கு சென்றார்.


யமுனையும் தனது கையாலேயே பல விதமான ஆஹாரங்கள் தயார் செய்து யமனை சாப்பிடச்செய்து உபசரித்தாள். யமனும் யமுனைக்கு கொண்டு சென்ற பரிசுகளை தந்தார்.


அந்த திருநாள் தான் யம த்வீதீயை எனப்பெயர் பெற்றது. ஸ்நேஹேந பகினி ஹஸ்தாத் போக்தவ்யம் புஷ்டி வர்த்தனம் தாநாதி ச ப்ரதேயாநி பகினீப் யோ விசேஷத:


யாது போஜயதே நாரீ ப்ராதரம் யுக்மகே திதெள அர்ச்சயேச்சாபி தாம்பூலைர் ந ஸா வைதவ்ய மாப்னுயாத்.


எந்த பெண் தனது ஸஹோதரரை த்வீதீயை அன்று சாப்பாடு முதலியவைகளால் சந்தோஷ படுத்துகிறாளோ அவள் ஒரு போதும் விதவை ஆக மாட்டாள்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
தனது ஸஹோதரி வீட்டிற்கு போக முடியாதவர்கள் தனது ஸஹோதரிக்கு பணம் , பொருட்கள் ஆகியவற்றை சீராக அனுப்பி வைக்கலாம்.


உடன் பிறந்த சஹோதரி இல்லாதவர்கள் தனது சித்தப்பா, பெரியப்பா பெண், மாமா பெண் முதலியவர்களை உடன் பிறந்த ஸஹோதரியாக பாவிக்கலாம்.


இதற்கு உபவாசம், பூஜை மந்திரம் இல்லை. இதனால் ஒற்றுமை, அன்பு வளரும். நீண்ட ஆயுள், ஆரோக்கியம், வலிமை ஐஸ்வரியம் கிடைக்கும்.