Announcement

Collapse
No announcement yet.

Tiruvadirai kali

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Tiruvadirai kali

    சிவாயநம.திருச்சிற்றம்பவம்.
    கோவை.கு.கருப்பசாமி.
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    கயிலயார் உண்ட களி.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    திருநடனம் என்றவுடன் நம் நினைவுக்குத் தோன்றுவது சிதம்பரம் நடராஜப் பெருமானையும் அவரது திருநடனத்தையும், அன்று அருளிய திருவாதிரை திருநாளைத்தான்.


    மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனத்தை காண்பது மிகப் பெரிய பேறு ஆகும்.


    அத்தகையத் திருவாதிரைத் திருநாளில் களி முக்கிய பிரதானமாகும்.


    திருவாதிரையில் ஒரு வாய்க்களி என்று நாம் வழக்கமாகிக் கொண்டு சொல்லி வருகிறோம்.


    இதிலும் கூடுதலாக திருவாதிரை தினத்தன்று தில்லை நடராஜப் பெருமானை நினைத்து விரதமிருந்து களி படைத்து உண்பது நன்மை பயக்கும்.


    திருவாதிரை தினத்தில் களி உறுதி என்பது யாவர்க்கும் தெரிந்ததுதான். ஆனால் அந்தக் களி பிடித்துப் போன கதையை வாசியுங்கள்.


    சிதம்பர நகரத்தில் சேந்தனார் என்பவர் வாழ்ந்து வந்தார். சேந்தனார் பட்டினத்தாரிடம் கணக்குபிள்ளைப் பணி செய்து வந்தவர்.


    சேந்தனாரும் அவர்மனைவியாரும் சிவத்தின் ஈடுபாடு வைத்து சிவபக்தர்களாக விளங்கி வந்தார்கள்.


    தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்பதை உணர்ந்திருந்த அவர்கள், வழக்கமாக சிவனடியார்களுக்கு தாம் உணவை எடுத்துக் கொள்ளும் முன்பாக, சிவனடியார்களுக்கு உணவளித்தப் பின், தாம் உணவருந்தும் பழக்கம் தொடர்ந்த வண்ணமாய் இருந்தனர். இது போக நாடி வருவோர்க்கு வேண்டியதைச் செய்யும் ஈகைக் குணம் நிறையவே அவர்களுக்கு இருந்தது.


    ஒரு சமயத்தில் பட்டினத்தடிகள் அனைத்தையும் துறந்து துறவு வாழ்க்கையை மேற் கொண்டார். அவரிடம் இருந்த சொத்துக்களை ஏழைபாழைகளை அறிந்து அவர்களுக்கு பகர்ந்து பிரித்தளித்தார் சேந்தனார்.


    பட்டினத்தாரின் அத்தனைச் சொத்துக்களையும் ஏழைகளுக்கு பிரித்துக் கொடுத்த சேந்தனார், தனக்கென ஏதேனும் சிறு சொத்தைக் கூட ஒதுக்கி வைக்கவில்லை.


    தன் வாழ்வு நிலையை கழிக்க, காட்டிற்குச் சென்று விறகுகளை வெட்டியும் பொறுக்கியும் எடுத்து வந்து விற்று அதில் கிடைக்கும் காசுகளைக் கொண்டு வாழ்க்கையை வாழ்ந்தனர் சேந்தனாரும் அவரது மனைவியாரும்.


    அந்த வறுமையோடு வாழ்ந்து வந்த போதும், முன் மாதிரியே சிவனடியார்களுக்கு அமுது அளித்த பின்தான், அதன் பின் உணவு உண்ணும் வழக்கத்தை விடாது தொடர்ந்தனர்.


    ஒருநாள் கடுமையான காற்று மழை. விற்கக் கொண்டு வந்த விறகுகளும் நனைந்து போயிற்று. நனைந்து போன விறகுகளை வாங்க யாரும் வரவில்லை.


    விறகுகள் விற்க வில்லையே? எப்படி அடியார்களுக்கு அமுது செய்விப்பது?" என கவலையுடன் வீட்டில் மனைவியுடன் புலம்பித் தவித்தார்.


    ஆனால் அவரது மனைவி, சேந்தனாரை தைரியபடுத்தி, இருங்கள் ஏதாவதுணவை தயார் படுத்தலாம் கலங்காதீர்கள் என தைரியம் சொன்னாள்.


    வீட்டில் இருப்பதையெல்லாம் உருட்டிப் பார்த்ததில் உளுத்தம் பருப்பு இருந்தது. அதை சுற்றுத் திருவையிலிட்டு திரித்து மாவைக்கி எடுத்தாள். வெறும் மாவை எப்படி உண்பது என மறுபடியும் எல்லா பாத்திரத்தையும் திறந்து பார்க்க ஒரு பாத்திரத்தின் அடியில் கருப்பட்டி இழகி ஒட்டியிருந்தது.


    எதோ புதையலைக் கண்டது போலிருந்தது சேந்தனாரின் மனைவிக்கு. திரித்து வைத்த உளுந்தம் மாவை, இழகியொழிகியிருந்த கருப்பட்டி பாகினில் கொட்டிக் கிளறி, விறகும் ஈர நிலையிலிருந்தததால் அடுப்பிலிட்ட விறகு மிதமான நிலையில் தீ எரிந்தது.


    குறிகிய கால நிலையில் ,அந்த உளுந்து மாவும் இழகிய கருப்பட்டி பாகும் இளஞ்சூட்டில் வெந்து களி யானது.


    நேரம் கடந்து விட்டதே !" அடியார் யாரேனும் வந்து விட்டால் உணவு ஆக வில்லையே என கவங்கிய சேந்தனார் முன்பு வந்து நின்ற அவரது மனைவி.....


    களி செய்திருக்கிறேன். அடியார் யாராவது வருகிறார்களா? என பார்த்து அழைத்து வாருங்கள் என்றாள்.


    சேந்தனார் அடியாரைத் தேடி வர செல்ல எத்தனிக்கையில், பலமான மழை வந்து பெய்தது.


    இந்த மழையில் எந்த அடியார் வந்து உணவு கேட்கப் போகிறார்கள். அப்படியே வரும் அடியார்க்கு மனைவி செய்து வைத்த களி பிடிக்குமா?" சாப்பிடுவார்களா?"---என மனக் கவலை வேறு வந்து சேந்தனாரிடம் சேர்ந்து கொண்டது.


    சேந்தனாரின் கவலை நீடிக்க வில்லை. அவர் கவலைப்பட்ட அந்த நொடியில் அவர் வீட்டு வாயிற்படியருகே வந்து ஒரு அடியார் மழைக்காக ஒதுங்கினார்.


    அதைக்கண்ட சேந்தனார், உள்ளே வாருங்கள் ஐயா! ஏன் மழையோடு ஒடுங்குகிறீர்கள்.


    நல்லது ஐயா!" எனக்கு பசி அதிகமாக இருக்கிறது! என் பசி போக்க உங்களிடம் உணவு ஏதாவது இருக்கிறதா? என வந்தவர் சேந்தனாரிடம் கேட்டார்.


    மகிழ்ச்சி கொண்ட சேந தனார், அடியாரை வீட்டிற்குள் அழைத்துப் போய் அமரச் செய்து, மனைவியிடம் அடியார்க்கு களியை பரிமாறும்படி சொன்னார்.


    அடியார், களியை எடுத்து உருட்டி ஒவ்வொரு கவளமாக அடியார் விழுங்கிய போது, சேந்தனாரின் மனம் பதைபதைத்தது. இறைவனிடம் மனதிற்குள் வேண்டினார்... இறைவனே! செய்து வைத்த களி அடியார்க்கு சுவைபட இருக்குமாறு அருளுங்கள்! என வேண்டிக் கொண்டார்.


    களியை உண்ட அடியார்....அருமையான சுவை! என ஆனந்தித்தார். என் வாழ்நாளில் இப்படியொரு உணவை நான் உண்டதில்லை. அமிர்தம் போலிருக்கும் இது என்ன உணவு என வினவினார்.


    அடியார் இவ்விதம் கூறியதும், மன வருத்தத்திலிருந்த சேந்தனார் தம்பதியினர் ஆனந்தித்து.... இவ்வுணவு வீட்டிலிருக்கும் வெள்ளப்பாகும்தான். இரண்டையும் ஒருசேர அடுப்பில் காய்ச்சி வைத்தேன் அவ்வளவுதான் ஐயா! இதற்குப் போய் அமிர்தம் என்றெல்லாம் உயர்த்திச் சொல்கிறீர்களே ஐயா! என்றார்கள் இருவரும்.


    அப்படியில்லை நீங்கள் செய்து வைத்த களி, அமிர்தத்திலும் அமிர்தமாகத்தான் இருந்தது. வேண்டுமென்றால் இன்னும் கொஞ்சம் களியை எடுத்து வாருங்கள். அதை அடுத்த வேளை உணவுக்கு எடுத்துப் போகிறேன் என்றார் அடியார்.


    சமைத்து வைத்திருந்த களியுணவே கொஞ்சம்தான். நமது சாப்பாட்டிற்கு வேண்டுமென்று சேந்தனார் எண்ணவில்லை. அடியாரின் ஆவலை பூர்த்தி செய்வதே முக்கியம் என்று , சட்டியிலிருக்கும் அத்தை களியையும் எடுத்து அடியாரிடம் கொடுக்கும்படி மனைவியிடம் கூறினார்.


    கணவரின் சொல்லுக்கு மறுக்காது, சட்டியில் ஒட்டியிருந்த மீதக் களியை வழித்தெடுத்து அடியாரிடம் கொடுத்தனுப்பி விட்டு , அன்று இரவு முழுவதும் பட்டினி கிடந்தனர் சேந்தனார் தம்பதியினர்.


    பொழுது விடிந்ததும் காலை வழக்கம் போல், அர்ச்சகர் வந்து தில்லை நடராஜப் பெருமான் சந்நிதியைத் திறந்தார். அங்கே அவர் கண்ட காட்சி ஆச்சர்யமும் அதிர்ச்சியும் உண்டாக்கியது.


    கருவறை முழுவதும் ஏதோதொரு உணவு சிந்திக் கிடப்பதைக் கண்டார். நிமிர்ந்து பெருமானை நோக்க, எம்பெருமான் வாயிலும், கீழே சிதறிக் கிடந்த அந்த உணவும் ஒட்டியிருந்தது.


    உடனடியாக அர்ச்சகன் ஓடிப்போய், அரசனிடம் முறையிட்டான். யாரோ ஒருவன் இரவில் பெருமான் சந்நிதிக்குள் புகுந்து நாசம் செய்திருக்கிறான் என்று . இச்செய்தியும் கட்டுக்கடங்காத காட்டுத் தீ போல ஊர் முழுவதும் பரவியது.


    அர்ச்சகர் சொன்னதைக் கேட்டதும் அரசனுக்கு அதிர்ச்சி உண்டாக வில்லை. மாறாக ஆச்சர்யம் உண்டானான்.


    அதற்குக் காரணம், முன் தினம் இரவே அரசனின் கனவில் தோன்றிய சிவபெருமான், நீ தினமும் எனக்குப் படைக்கும் உணவை விட, இன்று சேந்தனார் எனக்களித்த களியுணவு அமிர்தம் போல இனித்தது என க் கூறியது அரசனின் நினைவுக்கு தெரிந்தது.


    அதுவரை சாதாரன கனவு போலவே எண்ணியிருந்த அரசனுக்கு, இப்போதுதான் புரிந்தது இது உண்மையாக நடந்தது என்று.


    உடனடியாக சேந்தார் யார்? அவர் எங்கு இருக்கிறார்? என தன் பணியாட்களுக்கு தேடி வர உத்தரவிட்டான்.


    ராஜாங்கப் பணியாளர்கள் சேந்தரைத் தேடியலைந்தார்கள்.
    அந்த நேரத்தில் சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு தேர் வடம்பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.


    அந்த விழாவில் அரசனும் மக்களும் கலந்து கொண்டிருந்தனர். கூட்டத்தோடு கூட்டமாக சேந்தனாரும் அந்நிகழ்ச்சியில் கலந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், சேந்தனாரை யாருக்கும் தெரியவில்லை. அவர்தான் சேந்தனார் என்று யாருக்கும் தெரியவில்லை.


    அப்போது ஏற்கனவே முன் தினம் பெய்திருந்த மழைக்கு தேரின் சக்கரங்கள் சகதியில் சிக்கி த் தேர் நகராது நின்று விட்டது.


    தேர் நின்ற செய்தி அனைவருக்கும் அபசகுணமாகத் தெரிந்தது. ஆனால் இது இறைவன் நடத்தும் விளையாட்டு என யாவர்க்கும் தெரியவில்லை.


    அரசன் யானைகளை வரச் செய்து தேரை நகர்த்தச் செய்தான். இம்மியளவும் தேர் நகரவில்லை.தோல்விதான் கண்டான். இதனால் மன்னனும் மக்களும் என்னசெய்வதென தெரியாமல் திகைத்தனர்.


    அந்த நேரத்தில்தான் அசரீரி ஒலித்தது.........*"சேந்தனாரே!"* நீ!,,,பல்லாண்டு பாடுவாயாக!... என.


    ஒலித்த அசரீரி இறைவனின் அசரீரி என்று அனைவரும்.தெரிந்து கொண்டனர்.


    அசரீரியைக் கேட்ட சேந்தனாரோ!... "இறைவா!, அடியேனா? பாடுவது!. ...
    எனக்கெல்லாம் பாடத் தெரியாதே! எனச் சொன்னதும்தான் தாமதம்..........


    எனக்குப் பாடத் தெரியாதே!
    என்ற பொருளில் தன்னையறியாமலே பாடிக் கொண்டிருந்தார்.


    மேலும்... மன்னுகதில்லை வளர்க நம் பக்தர்கள் வஞ்சகர் போயகல" எனத் தொடங்கி... "பல்லாண்டு கூறுதுமே! என்று பதின்மூன்று பாடல்களை பாடி முடித்தார்.


    இப்பாடல்களை கேட்டு முடித்த இறைவன், மண்ணில் புதையுண்டிருந்த தேர் சக்கரங்களை விடுவித்தார். தேர் நகரத் தொடங்கியது. தேரை இழுப்பதும் பஞ்சு போல இலகுவாகியதிருந்தது. பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தேரை நிலைக்குக் கொண்டு வந்தனர்.


    அதுவரை நடந்ததையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மன்னன், சேந்தனாரிடம் முன்பு வந்து....தங்கள் களி விருந்துண்டது ஈசன்தான். என் கனவில் தோன்றிய இறைவன், நீங்கள் கொடுத்த களி, அமிர்தத்தை விடவும் சுவையாக இருந்தன என கூறினார். நீங்கள்தான் சேந்தனார் என்பதை இறைவன் எனக்கு காண்பித்துக் கொடுத்து விட்டார் எனக்கூறி தன் மகிழ்ச்சியை சேந்தனாரிடம் கூறினார்.


    இறைவனே தன் வீடடிற்கு வந்து களியுண்டது கேட்டு, சேந்தனார் உள்ளம் பூரித்துப் போனார்.


    சேந்தனாரின் வீட்டிற்கு சிவத் தொண்டராக சென்று சிவபெருமான் முதன் முதலில் களியுண்ட தினம் " திருவாதிரை திருநாள் " ஆகும். ஆதலால் திருவாதிரை தினத்தில் ஆருத்ரா தரிசனத்தின் போது களி நைவேத்தியம் படைக்கப் படுகிறது.


    . திருச்சிற்றம்பலம்.
Working...
X