Announcement

Collapse
No announcement yet.

Sree bhasyam - Sri. PBA .Swamigal

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Sree bhasyam - Sri. PBA .Swamigal

    Sree bhasyam - Sri. PBA .Swamigal
    Courtesy: https://www.google.co.in/url?sa=t&rc...k8ug2Q7yD5FTvQ
    ஸ்ரீ பாஷ்யம் –ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் —
    ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்திர சாஸ்திரம் –
    நான்கு அத்யாயங்கள்
    பதினாறு பாதங்கள்
    நூற்று ஐம்பத்து ஆறு அதிகரணங்கள்
    ஐநூற்று நாற்பத்து ஐந்து சூத்தரங்கள்
    தத்வ ஹித புருஷார்த்தங்களை சம்சய விபர்யயம் அற நிஷ்கரிஷித்து விளக்கக் கூடியது ஸ்ரீ பாஷ்யம் -நமக்கு ஜீவாது-
    ஜிஜ்ஞாச அதிகரணம்
    அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாச
    அத -அதற்குப் பிறகு -கர்மம் விசாரம் செய்து முடிந்த பிறகு
    அத -கர்ம விசாரம் முடிந்த காரணத்தினாலேயே
    ப்ரஹ்ம ஜிஜ்ஞாச-இச்சைக்கு இலக்கான ப்ரஹ்ம விசாரம் செய்யத் தக்கது
    கர்மங்களின் அல்ப அஸ்த்ர பலன்களில் நசை ஒழிந்து
    மோஷ புருஷார்த்தம் விரும்புவர்கள் ஆதலால்
    அந்த ப்ரஹ்மத்தின் ஸ்வரூபம் இப்படிப் பட்டது
    அதனை பெற உபாயம் இன்னது
    பெற்று அனுபவிக்கும் பலன் இப்படிப் பட்டது
    சாதன சம்பத்தியின் ஆனந்தரயமே அத சப்தார்தம் என்பர் சங்கரர் -இத்தை மறுத்து ஸ்ரீ பாஷ்யம்
    ப்ரஹ்மத்தின் ஸ்வரூபம் பற்றியும் கூறுவதை மறுக்க வேண்டுமே
    -லகு பூர்வ பஷம்
    கர்ம மீமாம்சை -அர்த்த வாத அதிகரணம்
    ஆம்நா யஸ்ய க்ரியார்த்தத்வாத்
    ஆநர்த்தக்யம் அததர்த்தாநாம்
    தஸ்மாத் அநித்யமுச்யதே
    வாயவ்ய்ம் ஸ்வேத மால பேத பூதிகாம -கருமம் கர்தவ்யமாக சொல்லும் வேத வாக்கியம்
    அடுத்த வாக்கியம் வாயுர்வை ஷேபிஷ்டா தேவதா -முன் சொன்ன வேத வாக்ய ஆராத்யமான தேவதை வாயு வின் பெருமையை சொல்லும் வாக்கியம்
    சீக்கிரமாக பலன் அளிக்க வல்ல தேவதை
    இப்படிப் பட்ட வாக்கியம் அர்த்த வாத வாக்கியம்
    விதி வாக்யங்கள் இல்லை
    விதி நாது ஏக வாக்யத்வாத் ஸ்துத்யர்த்தேன விதீ நாமஸ்யு -என்ற சூத்ரம் பரிகாரம்
    விதி வாக்யதுடன் ஏக வாக்யமாகக் கொண்டு பிராமாண்யம் பெறத் தட்டில்லை
    சக்தி கிரஹணம்-சிறுவர்கள் கேட்டு அறிவது
    ஆநய
    காம் நய
    அஸ்வம் ஆநய
    எல்லா பதங்களும் யத் கிஞ்சித் கர்த்தவ்யார்த்த பரங்களே
    கார்ய பரங்க ளான வாக்யங்களுக்கு பிரமாண்யம் உண்டு
    ஏவஞ்ச கார்ய ரூபம் இல்லாத பர ப்ரஹ்மத்தின் இடத்தில்
    வேதாந்த வாக்யங்களுக்கு தாத்பர்யம் இருக்க முடியாமையாலே
    வேதாந்த விசார ரூபமான ப்ரஹ்ம விசார சாஸ்திரம்
    ஆரம்பிக்கத் தக்கது அன்று -பூர்வ பஷம் ப்ராப்தம்
    இனி பூர்வ சித்தாந்தம்
    விருத்த வ்யவஹாரத்தினாலேயே சிறுவர் களுக்கு முதல் வியுத்பத்தி உண்டாகிறது என்பது தவறு
    இதோ சந்தரன் இதோ கிளி இதோ குதிரை இதோ மாமா காட்டி பூர்வ ஜன்ம வாசனையாலே
    பதங்களுக்கும் அர்த்தங்களுக்கும் உள்ள சம்பந்தம்
    ஒரு கார்யத்திலும் அன்வயியாத வஸ்துவிலேயே சக்தி கிரஹணம் உண்டாகின்றது என்று மூதலிக்கப் பட்டது
    கார்ய பரமான வாக்யத்தில் இருந்து தான் சக்தி கிரஹணம் உண்டாகிறது என்பதும் தவறு
    தேவ தத்தா உனக்கு பிள்ளை பிறந்தது
    ப்ரபாகரர்கள் சகல பதங்களும் கார்யார்த்த பரங்கள் என்று கூறுவது உக்தி அற்றது
    சித்த பரமான வாக்யத்தில் இருந்தும் சக்தி கிரஹணம் உண்டாகும்
    கர்ம விசாரம் செய்த அளவிலே கர்ம பலன்கள் அஸ்திரம் என்று உணர்ந்து
    கர்ம விசார இச்சை தொலைந்து
    கர்ம விசார இச்சையே ப்ரஹ்ம விசார இச்சைக்கு விரோதியாக இருந்ததால்
    இந்த பிரதி பந்தம் தொலையவே
    ப்ரஹ்ம விசாரத்தில் இச்சையும்
    அதில் பிரவ்ருத்தியும் அடுத்த படியாக உண்டாகிறது
    எனவே ப்ரஹ்ம விசாரத்தை குறித்து
    கர்ம விசாரம் நியமேன அபெஷிதம் என்றது ஆகிறது
    ————————————————————————————
    இரண்டாவது -ஜனமாத்யதிகரணம்
    சூத்ரம் ஜன்மாத் யஸ்ய யத
    ஜென்மாதி –அஸ்ய -யத மூன்று பதங்கள்
    ஜென்மாதி உத்பத்தி ஸ்திதி பிரளயங்கள்
    அஸ்ய -கண்ணால் காணப்படும் இந்த சேதன மிஸ்ரமான பிரபஞ்சத்துக்கு
    யத -எந்த வஸ்து வின் இடத்தின் இருந்து ஆகின்றனவோ அதுவே பர ப்ரஹ்மம்
    தைத்ரியம் பிருகு வல்லி –
    யதோ வா இமானி பூதானி ஜாயந்தே -யேன ஜாதானி ஜீவநதி -யத் பிரத்யந்த்யபி சம்விசந்தி தத் விஜிஞ்ஞாச ஸ்வ தத் ப்ரஹ்ம
    யதோவா இமானி பூதானி
    யத் பிரத்யந்த்யபி சம்விசந்தி
    தத் விஜிஜ்ஞா சஸ்வ
    தத் ப்ரஹ்மேதி
    கார்ணத்வ ரூபமான லஷணம்
    பூர்வ பஷம்
    வ்யாவர்த்தாக லஷணங்கள் மூன்று ப்ரஹ்மம்
    சித்தாந்தம்
    தேவ தத்தன் கறுத்து பருத்து யுவாவாயும் செந்தாமரைக் கண்ணன் ஆயும்
    யுவா நீலோ வாமன பங்குச்ச தேவதத்த –
    விசேஷணம் உப லஷணம் இவை
    விருத்த தர்மங்கள் கால பேதத்தால் ஒரே வ்யக்தி இடம் இருக்கக் குறை இல்லையே
    —————————————————————————————–
    மூன்றாவது அதிகரணம்
    சாஸ்திர யோநித்வாத்
    யோனி காரணம்
    பிரத்யஷம் அனுமானம் கொண்டு அறிய முடியாத்
    அப்பஷோ வாயு பஷ
    தீர்த்தம் ஒன்றையே குடிப்பவன்
    வாயுவை மாதரம் பஷிப்பவன் போலே
    சாஸ்திரம் ஒன்றையே பிரமாணமாக கொண்ட படியாலே
    சாஸ்திரம் ஏவ யோனி
    அப்ராப்தே ஹி சாஸ்திரம் அர்த்தவித்
    பர ப்ரஹ்மம் அனுமானத்தால் சித்திக்க கூடியதாக இருப்பதால் அனுமானம் ஈஸ்வர சதானத்தில் சக்தி உடையது அன்று
    வேதாந்த சாஸ்திரமே பிரபல பிரமாணம்
    சாஸ்திர யோநித்வாத் –
    யஸ்ய தத் -சாஸ்திர யோனி -தஸ்ய பாவ -சாஸ்திர யோநித்வம் -தஸ்மாத் சாஸ்திர யோநித்வாத் -சாஸ்திரம் ஒன்றையே
    -பிரமாணமாக கொண்டது ஆகையினால் வேதாந்த சாச்த்ரத்தினாலே ப்ரஹ்ம விசாரம் செய்ய வேணும் என்றதாயிற்று
    ————————————————————————————–
    நான்காவது சமன்வ்யாதிகரணம்
    சூத்ரம்
    தத் து ச்மன்வயாத்
    தத் கீழ் சூத்ரத்தில் சொல்லப் பட்ட சாஸ்திர பிரமாண கதவம்
    சமன்வயாத் நன்றாக புருஷார்த்தமாக அன்வயிக்கிற படியினால்
    புருஷார்த்தத்வேன சம்பந்தமே சமன்வயமாவது
    ஸ்வயம் பிரயோஜனம் பரம புருஷார்த்தம்
    தத் து சமன்வயாத் -இதில் ப்ரஹ்மண-என்ற ஒரு பதமும் -சாஸ்தரேண -என்ற ஒரு பதமும் தருவித்துக் கொள்ள வேணும்
    வேதாந்த சாஸ்திரங்கள் -மூலம் விசாரித்து அடையும் -ப்ரஹ்ம ஞானம் ஸ்வயம் பிரயோஜனம் -பரம புருஷார்த்தம் -என்றதாயிற்று –
    அத்ராஸ்தே நிதிரிதிவத் –ரங்கேச த்வயி சகலாஸ் சமன்வயந்தே –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2-21-
    ————————————————————————————–
    இந்த நான்கும் சதுஸ் சூத்ரி
    —————————————————————————————
    அடுத்து ஈஷத்யதிகரணம்
    ஈஷதேர் நா சப்தம் –1-1-5-
    ஈஷதே ந அசப்தம் -அசப்தம் பிரதானம் -சாஸ்திர பிரமாணமாக உடையது அல்லாமையால் அனுமான கம்யமானது பிரதானம்
    ந -சத் வித்யையில் உள்ளதாய் -ஜகத் காரணத்தை சொல்லுமதான சச் சப்தத்தால் வாச்யம் அன்று
    சதேவ சோம்ய இதமக்ர ஆஸீத் –ததைஷத பஹூஸ்யாம் பிரஜா யே யே தி –சாந்தோக்யம் -6-2-1-சச் சப்த நிர்திஷ்ட
    வஸ்து ப்ரஹ்மமே ஒழிய பிரதானம் இல்லை
    வஸ்துவுக்கு ஈஷணம் சங்கல்ப கர்த்ருத்வம்
    சந்மூலாஸ் சோம்யே மா பிரஜா –என்று தொடங்கி-ச ஆத்மா -6-8-6- என்று பிரச்துதமான சத்துக்கு சேதனத்வம் சொல்லி இருக்கையாலே
    ஈஷணம் சேதனனுக்கு அசாதாரணமாய் முக்கியமான ஈஷணம் என்பதே விவஷிதம்
    மேலே -6-14-2- தஸ்ய தாவதேவ சிரம் யாவன் ந விமோஷ்யதே அத சம்பத்ஸ்யே -என்று சச் சப்த வாச்யத்தை உபாசிப்பவனுக்கு
    தேகத்தில் நின்று விடும் அளவே தாமதம் -உபாசனத்து லஷ்யம் பிரதானமாய் இருக்க ஒண்ணாதே
    தொடக்கத்தில் யேநாஸ்ருதம் ஸ்ருதம் -என்று ஒன்றைத் தெரிந்து கொண்டால் எல்லாம் தெரிந்த படி ஆகுமேஎன்று சொல்லி
    ஸ்தூல சூஷ்ம சேதனங்களை சரீரமாக கொண்ட ப்ரஹ்மமே விவஷிதம்
    சதா சோம்யே ததா சம்பன்னோ பவதி -6-8-1-லயம் சொல்லி ஸ்வ மவபீதோ பவதி என்கையாலே சச் சப்த வாக்கியம் பரமாத்மாவாகவே இருக்க வேணும் என்றதாயிற்று
    இந்த அதிகரணத்தில் இது தலையான சூத்ரம்
    கௌணச்சேத் நாத்தம சப்தாத்
    தந் நிஷ்டஸ்ய மோஷோபதேசாத்
    ஹேயத் வாவச நாச்ச
    பிரதிஜ்ஞ்ஞா விரோதாத்
    ஸ்வா ப்யயாத்
    கதி சாமான்யாத்
    ஸ்ருத்வாச்ச –1-1-12-
    என்கிற ஏழு சூத்ரங்களும் உள்ளன
    இவற்றின் பொருள் கீழே பார்த்தோம்
    ——————————-
    ஆனந்தமயாதிகரணம் -1-1-6
    ஆனந்தமய அப்யாசாத் -1-1-13-அளவு கடந்த ஆனந்தம் ஜீவாத்மாவுக்கு பொருந்தாது பரமாத்மாவுக்கே பொருந்தும்
    ஆனந்த மய அப்யாசாத் –1-1-13-
    அந்ய பதம் மேலே உள்ள -அந்தரதிகரணம் இரண்டாம் சூத்ரம் -பேத வ்யபதேசாச்ச அந்ய -வருவித்துக் கொள்ள வேண்டும்
    ஆனந்த மய -சப்தத்தினால் சொல்லப் படும் புருஷன் ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டவனாக இருக்க வேண்டும்
    –அளவு கடந்தததாக ஓதப்படுவதால் என்றபடி
    ஆனந்த வல்லி-ஆனந்த மயா வித்யா
    தைத்ரிய ஆனந்த வல்லி
    தஸ்மாத்வா ஏதஸ்மாத் விஜ்ஞானமயாத் அன்யோந்தர ஆத்மா ஆனந்தமய -என்று
    ஆத்மாவை பிரஸ்தாபித்து -அதற்கு மேல்
    சைஷா ஆனந்தச்ய மீமாம்ஸா பவதி -என்று தொடங்கி
    தே யே சதம் பிரஜாபதரா நந்தா ஸ ஏகோ ப்ரஹ்மண ஆனந்த ச்ரோத்ரியச்யச அகா மகாதச்ய -அகா மகாதச்ய மகா விரக்த்ன்
    ச்ரோத்ரியன் வேதாந்தம் சரவணம் பண்ணினவன்
    உபாசன பிரியனான பகவானால் -நிருபாதிகம் இல்லை சோபாதிகம்
    ஸ ஏகோ ப்ரஹ்மண ஆனந்த -இயற்க்கை யாக இவன் ஒருவனே பர ப்ரஹ்மம்
    கோ வா அன்யாத்-எந்த ஜந்து தான் பிரக்ருதமான ஆனந்தம் அடைய முடியும்
    கோ வா பராண்யாத் -எந்த ஜந்து தான் மோஷ ஆனந்தம் அடைய முடியும்
    ஏஷ ஏவ ஹி -இந்த ஆனந்தமயமான ஆத்மா வன்றோ
    ஆனந்தயதி- எல்லா வித ஆனந்தத்தையும் விளைவிக்கின்றது
    கோஹ்யேவான்யாத் க பராண்யாத் எதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத் ஏஷஹ்யே வா நந்தயாதி
    உத்தர நாராயண அனுவாகம் -தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய
    பந்தா வித்யதே அயநாயா -என்பதாலும்
    ஏவம் தம் வித்வான் -இவ்விதமாக மகா புருஷனை உபாசிப்பவன்
    அம்ருதோ பவதி -மோஷ ஆனந்தம் பெற்றவன் ஆகிறான்
    அயனாய -மோஷ ஆனந்தம் அடையும் பொருட்டு
    அந்யா பந்தா ந வித்யதே -அந்த மகா புருஷனைத் தவிர வேறு உபாயம் இல்லை
    அன்வய வ்யதிரேக முகேன இரண்டு ஸ்ருதிகளும் சொல்லி
    தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதே அயனாய -என்பதாலும் இவ்வர்த்தமே நிலை நாட்டப் படுகிறது
    ஏஷ ஹேவ அனந்யாதி-என்கிற சுருதி வாக்யத்தில் அந்வய முகனே தெரிவிக்கப் பட்ட அர்த்தமே நான்ய பந்தா வித்யதே அனயனாய
    -ஸ்ருதியில் வ்யதிரேக முகேன தெரிவிக்கப் படுகிறது
    ச யச்சாயம் புருஷே யச்சாசா வாதித்யே ச ஏக -என்று ஆதித்ய மண்டலத்தில் உள்ள புண்டரீ காஷனே ஆனந்த மயன் என்கிறது
    ————————————————————————————
    ப்ரஹ்ம விதாப்நோதி பரம் -என்று ஆனந்த வல்லியில் ப்ரஹ்மத்தை பிரஸ்தாபித்து
    சத்யம் ஞானம் ஆனந்தம் ப்ரஹ்ம என்று லஷணம் சொல்லி
    தஸ்மாத்வா ஏதஸ் மாதாத்மன ஆகாசாஸ் சம்பூத -என்று
    அந்த ப்ரஹ்மா ஆத்மா என்றும் அதில் நின்றும் ஆகாசாதி பதார்த்தங்கள் உண்டாவதும்
    அந்த ஆனந்தமய ஆத்மாவுக்கு
    தச்யைஷ ஏவ சாரீர ஆத்மா -சரீர சம்பந்தம் உண்டாவது சொல்வதால்
    இந்த ஆனந்தமயனான ஆத்மா ஜீவாத்மா -இது பூர்வ பஷம்
    நிருபாதிகமான ஆனந்தம் அந்த பர பிரமம் ஒருவனுக்கே
    சகல சராசரங்களையும் சரீரமாக கொண்டவன் என்பதால்
    ஆனந்த மயா -விகாரம் இல்லை ஆனந்தம் மலிந்த பரமாத்மா
    யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா சஹ
    ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குதச்சன
    வாக்குக்கும் மனசுக்கும் எட்டாத அப்ரமேய ஆனந்த மயன் பரமாத்மாவே
    விகார சப்தான் நேதி சேன்ன ப்ராசுர்யாத் -இரண்டாவது சூத்ரம் இந்த அதிகரணம்
    யதுக்தம் –ஆனந்த ப்ராசுர்யம் அல்ப துக்க சத்பாவம் அவகமயதீதி -தத் அசத்
    தயை குணத்தால் ஆஸ்ரிதர் துக்கம் அனுசந்தித்து தானும் துக்கிப்பது குணப் பிரசுர்யம் தான்
    ஆனந்த மயன் என்றால் சிறிது துக்கம் கலாசி இருக்குமோ என்னில்
    அபஹத பாப்மா-விஜரோ-விம்ருத்யூர் -விசோக-சுருதி அகில ஹேய பிரத்ய நீகத்வம் சொல்லும்
    ——————————————————————————————–
    பிரக்ருதியில்
    ஜன்ம காரணத்வம்
    ஸ்திதி காரணத்வம்
    லய காரணத்வம்
    கால பேதத்தினால் ஒரே வ்யக்தியினிடம் ஓன்று சேர்ந்து இருக்கக் கூடியவை என்பதால்
    அவை வருத்தங்கள் ஆகாதே
    இதனால் ப்ரஹ்மத்துக்கு பஹூத்வாபத்தி எனபது இல்லை
    உழவன் ஒருவனே விதை விதைப்பதும் பயிர் விளைப்பதும் அறுப்பதும் போலே
    லஷ்மி பதித்வம் அசாதாராண சிஹ்னம்
    —————————————————————————————
    இனி மூன்றாவது அதிகரணம் -சாஸ்திர யோநித்வா அதிகரணம்
    ஸூத்த்ரம் -சாஸ்திர யோநித்வாத் –
    யோநி யாவது -காரணம் -சாஸ்த்ரத்தை பிரமாணமாகக் கொண்ட படி என்கை
    அப்பஷோ வாயு பஷோ -தீர்த்தம் ஒன்றையே குடிப்பவன்
    வாயுவை மாதரம் பஷிப்பவன் போலே
    சாஸ்திரம் ஒன்றையே பிரமாணமாக கொண்டது -என்கை –
    இங்கு பூர்வ பஷம் –
    அப்ராப்தே ஹி சாஸ்திரம் அர்த்தவத் -வேறு எந்த பிரமானத்தாலும் ஏற்படாத விஷயத்தில் தான்
    சாஸ்திரம் பிரவர்த்திப்பது -என்றும்
    பர ப்ரஹ்மம் -அனுமான பிரமாணத்தால் சித்திக்க கூடியதாக இருப்பதாலும்
    பூம் யங்குராதிகம் ச கர்த்ருகம் கார்யத்வாத் கடவத் –எனபது அனுமான சரீரம்
    கர்த்தாவை முன்னிட்டு -வீடு பானை போலே —
    சித்தாந்தம்
    விஸ்வாமித்ரர் சிருஷ்டி அறிவோம் -விசித்திர ஜகத் சிருஷ்டி ஜீவா கோடியில் ஒருவர் பண்ண -அந்ய மிந்த்ரம் கரிஷ்யாமி –
    ஆகவே சாஸ்திரமே பர ப்ரஹ்ம சித்தியில் பல பிரமாணம்
    அப்படிப் பட்ட வேதாந்த சாஸ்திரம் ஒன்றாலே பர ப்ரஹ்ம விசாரம் செய்வது நன்றாக பொருந்தும்
    To be continued
Working...
X