Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    158.அரிவையர்கள்


    தனதனன தனன தந்தத்
    தனதனன தனன தந்தத்
    தனதனன தனன தந்தத் தனதான




    அரிவையர்கள் தொடரு மின்பத்
    துலகுநெறி மிகம ருண்டிட்
    டசனனென மனது நொந்திட் டயராமல்
    அநுதினமு முவகை மிஞ்சிச்
    சுகநெறியை விழைவு கொண்டிட்
    டவநெறியின் விழையு மொன்றைத் தவிர்வேனோ
    பரிதிமதி நிறைய நின்றஃ
    தெனவொளிரு முனது துங்கப்
    படிவமுக மவைகள் கண்டுற் றகமேவும்
    படர்கள்முழு வதும் கன்றுட்
    பரிவினொடு துதிபு கன்றெற்
    பதயுகள மிசைவ ணங்கற் கருள்வாயே
    செருவிலகு மசுரர் மங்கக்
    குலகிரிகள் நடுந டுங்கச்
    சிலுசிலென வலைகு லுங்கத் திடமான
    செயமுதவு மலர்பொ ருங்கைத்
    தலமிலகு மயில்கொ ளுஞ்சத்
    தியைவிடுதல் புரியு முன்பிற் குழகோனே
    கருணைபொழி கிருபை முந்தப்
    பரிவினொடு கவுரி கொஞ்சக்
    கலகலென வருக டம்பத் திருமார்பா
    கரிமுகவர் தமைய னென்றுற்
    றிடுமிளைய குமர பண்பிற்
    கநககிரி யிலகு கந்தப் பெருமாளே
    .
    - 158 கனகமலை
    கநக கிரி – ஆரணியிலிருந்து 15 கி.மீ தூரம்.
    தேவிகாபுரம் என தற்சமயம் அழைக்கப்படுகிறது


    [dib6]பதம் பிரித்து உரை




    அரிவையர்கள் தொடரும் இன்பத்து
    உலகு நெறி மிக மருண்டிட்டு
    அசடன் என மனது நொந்திட்டு அயராமல்


    அரிவையர்கள = மாதர்களை தொடரும் இன்பத்து = தொடர்ந்து செல்லும் சிற்றின்பத்து உலக நெறி = உலகு நெறியில் மிக மருண்டிட்டு= அதிகமாக மோகம் கொண்டு அசடன் என = முட்டாள் என்று பிறர் கூற மனது நொந்திட்டு = மனம் வேதனைப்பட்டுஅயராமல் = சோர்வு அடையாமல்.


    அநுதினமும் உவகை மிஞ்ச
    சுக நெறியை விழைவு கொண்டிட்டு
    அவ நெறியின் விழையும் ஒன்றை தவிர்வேனோ


    அநுதினமும் உவகை மிஞ்சி = நாள் தோறும் களிப்பு மிக்கு
    சுக நெறியை = சுக வழியிலே விழைவு கொண்டிட்டு = விருப்பம் கொண்டு அவ நெறியின்= பாவ வழியில் விழையும் ஒன்றை =செல்ல விரும்பும் அந்த புத்தியை
    தவிர்வேனோ = நீக்க மாட்டேனோ.


    பரிதி மதி நிறைய நின்ற அஃது
    என ஒளிரும் உனது துங்க
    படிவ முகம் அவைகள் கண்டுற்று அக மேவும்


    பரிதி = சூரியன் மதி = நிலா நிறைய நின்ற = பூரண ஒளியுடன் நின்றஅஃது என = அந்தத் தன்மையை ஒப்ப
    ஒளிரும் = விளங்குகின்ற உனது = உம்முடைய துங்க =பரிசுத்தமான படிவம் = வடிவம் உள்ள முகம் அவைகள் =திருமுகங்களை கண்டுற்று = காட்சியை மனதில் நிறுத்தி
    அகம் மேவும் = என் மனத்திலுள்ள.


    படர்கள் முழுவதும் அகன்று உள்
    பரிவினொடு துதி புகன்று எல்
    பத உகளம் மிசை வணங்கற்கு அருள்வாயோ


    படர்கள் = துயரங்கள் முழுவதும் அகன்று = முழுமையும் நீங்கப் பெற்று உள் பரிவினொடு = உள்ளத்தில் அன்புடன் துதி புகன்று =உன்னைத் துதித்து எல் = ஒளி பொருந்திய பத உகளம் மிசை = பாதத் திருவடிகளை வணங்கற்கு அருள்வாயே = வணங்குதற்கு அருள் புரிவாயாக.


    செரு விலகும் அசுரர் மங்க
    குல கிரிகள் நடு நடுங்க
    சிலுசிலு என வலை குலுங்க திடமான


    செரு விலகும் = போரில் பின் வாங்கிய அசுரர் மங்க = அசுரர்களின் பெருமை குறைய குல கிரிகள் நடுநடுங்க = சிறந்த மலைகள் எல்லாம் நடுநடுங்க. சிலுசிலு என = சிலுசிலென்று வலை = கடல்குலுங்க = கலங்க திடமான
    = பலமுள்ளதும்


    செயம் உதவும் மலர் பொரும் கைத்தலம்
    இலகும் அயில் கொளும் சத்தியை
    விடுதல் புரியும் முன்பில் குழகோனே


    செயம் உதவும் = வெற்றியை உதவுவதுமான மலர் பொரும் =பூக்களை போன்ற கைத்தலம் இலங்கும் = திருக்கரத்தில் விளங்கும்அயில் கொளும் = கூர்மை வாய்ந்த சத்தியை = வேலை விடுதல்புரியும் = விடுத்தருளிய முன்பில் குழகோனே = பெருமை வாய்ந்த இளையோனே


    கருணை பொழி கிருபை முந்த
    பரிவினொடு கவுரி கொஞ்ச
    கல கல என வரு கடம்ப திருமார்பா


    கருணை பொழி = கருணை பொழியும் கிருபை முந்த = அருளே முந்துவதால் பரிவினொடு - அன்புடன் கவுரி கொஞ்ச = பார்வதி கொஞ்சி நிற்க கலகல என வரு = கலகலென்று (தண்டை ஒலிக்க) வருகின்ற கடம்பத் திருமார்பா = கடம்பம் அணியும் அழகிய மார்பனே


    கரி முகவர் தமையன் என்று
    உற்றிடும் இளைய குமர பண்பில்
    கநக கரி இலகு கந்த பெருமாளே.


    கரி முகவர் தமையன் என்று = யானை முகக் கடவுளைத் தமையனாக உற்றிடு = வாய்க்கப் பெற்ற இளைய குமர = இளைய குமரனே பண்பில் = அழகுடன் கநக கரி = பொன் மலையில் இலகும்= விளங்கும். பெருமாளே = பெருமாளே.[/div6]



    பரிவினொடு கவுரி கொஞ்ச....


    கவுரி கொஞ்சுவதைக் கோசலை இராமனைக் கொஞ்சுதலை
    ஒப்பிடலாம்.
    மலர் சூடிட வருக என்று பரிவினொடு கோசலை புகல வருமாயன்)
    --- திருப்புகழ் (தொந்திசரிய)
Working...
X