Announcement

Collapse
No announcement yet.

Sree bhasyam - Sri. PBA .Swamigal continues

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Sree bhasyam - Sri. PBA .Swamigal continues

    Sree bhasyam - Sri. PBA .Swamigal
    continues
    சம்ருத்யதிகரணம் –
    2-1-1-
    கீழ் முதல் அத்யாயத்தில் வேதாந்த பிரதிபாதிதமான
    ஜகத் காரண வஸ்து
    சேதன அசேதன விலஷணமான பர ப்ரஹ்மம் என்று அறுதி இடப்பட்டது
    ஜகத் காரணத்வம் நன்கு திருடி கரிக்கப் படுகிறது
    கம்பம் நட்டு ஆட்டிப் பார்ப்பது போலே
    முதல் பாதத்தில் சாங்க்யர் தோஷங்கள் பரிஹரிக்கப் படுகின்றன
    முன் அத்யாயத்தில் நிரீச்வர சாங்க்யர்களும் சேஸ்வர சாங்க்யர்களும் நிரசிக்கப் பட்டனர்
    அதில் நிரீச்வர சாங்க்யன்-கபில ஸ்ம்ருதி விரோதத்தைக் காட்டி
    ப்ரஹ்மம் ஜகத் காரணம் அன்று என்று வாதிப்பது ஓன்று உண்டு
    அத்தை நிராகரிக்க இந்த அதிகரணம் –
    சம்ருத்ய நவகாச தோஷ பிரசங்க இதி சேத்-
    சேதன அசேதன விலஷணமான ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்று கொண்டால்
    பிரதானம் காரணம் என்று சொல்கிற கபில ஸ்ம்ருதி அப்ரதானமாய் விடுமே என்னில்
    ந-அப்படி சொல்லக் கூடாது
    அந்ய ஸ்ம்ருத்ய நவகாச தோஷ பிரசங்காத்- ப்ரஹ்ம காரணத்வத்தை சொல்லுகிற
    மற்ற ஸ்ம்ருதிகள் அப்ரமாணமாய் விடும் ஆதலால் -எனபது சூத்ரத்தின் பொருள்
    பரசராதி மகரிஷிகள் ஸ்ம்ருதிகள் எல்லாம் அப்ரமாணமாய் விடுவது விட
    கபிலர் ஒருவர் ஸ்ம்ருதி ஒன்றை அப்படி ஆக்குவதே யுக்தம் –
    இங்கே பூர்வ பஷம் –
    சதேவ சோமய இதமக்ர ஆஸீத் -ஸ்வ தந்திர பிரதான காரணத்வத்தில் தாத்பர்யமா
    ப்ரஹ்ம காரணத்வத்தில் தாத்பர்யமா
    கபில காண்டம் ஞான மார்கத்தில் தத்தவங்களை விசதீகரிக்க தோன்றது
    மனு பரசாராதி உக்திகளுக்கு பிரதானம் -இவை பலிஷ்டம் ஆகையாலே –
    ப்ருஹஸ்பதியையும் ஸ்ருதிகள் கொண்டாடி இருக்கையாலே
    அவர் இயற்றிய லோகாயுதத்தை கொண்டு ஸ்ருதியின் பொருளை நிர்ணயிப்பார் உண்டோ-இல்லையே
    ——————————————————————————————–
    இனி
    க்ருத்ஸ் ந ப்ரசக்தி அதிகரணத்தின் பிரமேயம் -விளக்கப் படுகிறது
    பூர்வ பஷம்-
    ப்ரஹ்மமே ஜகத் காரணம் -ஜகத்தாக பரிணமித்தால்
    நிரவயவம் சுருதி விரோதிக்குமே
    ஆகையாலே ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்ன ஒண்ணாது –
    மேல் சித்தாந்தம் –
    ஸூத்திரம் – ஸ்ருதேஸ் து சப்த மூலத்வாத் –
    து -சப்தம் பூர்வ பஷததை வ்யாவர்த்திக்கிறது –
    ப்ரஹ்மம் நிரவவயம் என்றும்
    கார்யப் பொருளாக பரிணமிக்கிறது-பஹூ பவனத்வம் – என்றும் இரண்டு சுருதி சித்தமான அர்த்தங்கள்
    பிரமத்தின் அநிர்வசநீயமான சக்தி விசேஷம்
    கண்ணில்லாதவன் காண்கிறான்
    செவி இல்லாதான் கேட்கிறான்
    என்றும் ஓதப்படுகிறது
    இத்தால் லௌகிக நியாயம் கொண்டு ப்ரஹ்மத்தின் இடத்தில் சோத்யம் செய்வது கூடாது
    ப்ரஹ்ம வ்யாப்தி பரிஷ்க்ரியா -அத்புத சக்தி -உண்டே-
    ——————————————————————————————-
    அடுத்த அதிகரணம்
    பிரயோஜனவத்த்வாதிகரணம்
    பரம புருஷன் சர்வ சக்தி யுக்தன் ஆகையாலும்
    சத்ய சங்கல்பன் ஆகையாலும்
    அவன் சங்கல்ப மாத்ரத்திலே ஜகத்தை சிருஷ்டிக்கும் விஷயம் சம்பாவிதம் அன்று
    அவன் ஜகத்தை சிருஷ்டிக்கும் போதே ஏதேனும் ஒரு பிரயோஜனம் இருந்தாக வேணும்
    அவாப்த சமஸ்த காமனுக்கு சிருஷ்டியினால் பிரயோஜனம் உண்டாக விரகு இல்லை
    நம் போன்றவர்களுக்கும் பிரயோஜனம் என்று சொல்லப் போகாது
    ஆத்யாத்மிக துக்காதிகளுக்கே ஹேது
    பகவானுக்கு பஷபாதித்வம் நிர்தயத்வம் தோஷங்களை சங்கிக்கப் பண்ணுவதையும் இருக்கும்
    ஆகவே பகவான் சிருஷ்டி கர்த்தாவாக இருக்க முடியாது -எனபது பூர்வ பஷம்
    இந்த பூர்வ பஷ ஸூத்த்ரம் -ந பிரயோஜனவத்வாத் –
    இங்கே ஸ்ருஷ்டே-பதம் தருவித்துக் கொள்ள வேண்டும்
    இந்தன் மேல் சித்தாந்த ஸூத்த்ரம் -லோகவத் து லீலா கைவல்யம்
    இத்தால் அவாப்த சமஸ்த காமத்வத்துக்கு கொத்தை இல்லை
    மன் பல் உயிர்களுமாகிப் பல பல மாய மயக்குகளால்
    இன்புறும் இவ்விளையாட்டு யுடையவன் –நம் ஆழ்வார்
    நாட்டைப் படை என்று அயன் முதலாத் தந்த நளிர் மா மலர் உந்தி
    வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் -ஆண்டாள்
    விஷம சிருஷ்டி கான்பதாலே பகவானுக்கு பஷபாதத்வமும் நிர்தயத்வமும் சங்கிக்க நேர்கின்றதே என்னில்
    அந்த சங்கை –
    வைஷம்ய நைர்குண்யே ந சாபேஷ்வாத் ததா ஹி தர்சயதி
    என்கிற அடுத்த ஸூத்த்ரத்தால் பரிஹரிக்கப் படுகிறது
    கருமங்களுக்குத் தக்கபடி நீச்ச உச்ச சிருஷ்டிகள்
    இதன் மேலும் தோன்றுகிற சங்கைக்கு
    அடுத்த ஸூத்த்ரம் பரிஹாரம் உணர்த்துகின்றமை
    கண்டு கொள்வது –
    ——————————————————————————————-
    2-2-சர்வதா அனுபபத்தி அதிகரணம்
    இதில் சர்வ சூன்யவாதிகளான பௌத்த ஏக தேசிகள் பஷம் நிரசிக்கப் படுகிறது
    பர பிரமமே ஜகத் காரனத்வம் என்று நன்று நிலை நாட்டிய பின்
    இதில் இத்தை ஸ்ருளிச் செய்ய என்ன பிரசங்கம் எனில்
    ஜகத் காரண வஸ்து பிரதானமா -பரம அணுவா -பர ப்ரஹ்மமா-எப்போது
    பொருந்தும் என்னில்
    ஜகத் உத்பத்தி என்று ஓன்று நிரூபிக்க முடியுமானால் அப்போது பொருந்தும்
    ஜகத் உத்பத்தியே நிரூபிக்க முடியாததாய் இருக்க எது ஜகத் காரணம் என்கிற சர்ச்சை எதற்கு
    உத்பத்தி பாவத்தில் இருந்து அங்கீ கரிக்கப் படுகிறதா
    அபாவத்தில் இருந்து அங்கீ கரிக்கப் படுகிறதா
    பாவத்தில் இருந்து எனபது சேராது
    மண் பிண்டத்தில் இருந்து குடம் –மண் பிண்டம் உபமர்த்தித்துக் கொண்டு தானே உண்டாகின்றன –
    காரண ஆகாரத்தின் விநாசமே தானே உபமர்த்தம் -அது தான் அபாவம்
    ஆக பாவத்தில் இருந்து உத்பத்தி இல்லை
    அபாவத்தில் இருந்து பாவ உத்பத்தி சம்பவிக்க மாட்டாது அன்றோ
    ஆக உத்பத்தியே நிரூபிக்க முடியாததால்
    உத்பத்திக்கு பிற்பட்டனவான விகாரங்கள் எதுவுமே கிடையாது எனபது சித்தம்
    ஆக லோக விவகாரம் எல்லாம் பிரமை
    ஆக சூன்யமே தான் தத்வம்
    நிரசிக்கும் ஸூத்த்ரம் -சர்வத அநு பபத்தேச்ச -2-2-30-
    பிரமேயங்களோ பிரமாணங்களோ எதுவும் உண்டாகிலுமாம் இல்லையாகிலுமாம்
    பூர்வ பஷிக்கு அபிமதமான சூன்யத்வம் தேறாது ஆகையாலே
    மாத்யமிக தர்சனம் அசமஞ்சசம் என்றபடி –
    சர்வம் சூன்யம் என்று சொல்பவர்கள்
    தங்களுக்கு அபிமதமான இவ்வர்த்தத்தை சாதித்துத் தருபடியான
    பிரமாணம் உண்டு என்று இசையும் பஷத்தில்
    பரமான சத் பாவத்தை இசைந்த போதே சர்வ சூன்ய வாதம் தொலைந்தது
    பிரமாணம் இல்லை என்னும் பஷத்தில் -பிரமாணம் இல்லாமையினாலே
    தங்களுக்கு அபிமதமான அர்த்தம் அசித்தம் என்று முடிந்தது
    மேலும் -சர்வ சூன்ய -வாதத்தாலே நாஸ்தித்வம் தானே விவஷிதமாக வேணும்
    ஒரு ரூபத்தை விட்டு மற்று ஒரு ரூபத்தை அடைவதே நாஸ்தித்வம்
    ரூபாந்தரத்திலே அஸ்தித்வம் சொல்லப் பட்டதாக முடிகிறது
    மண் உண்டை ஓன்று இருந்தது
    அது நசித்த அளவில் ம்ருத் பிண்டோ நாஸ்தி -என்று சொல்லுகிறான்
    இந்த விவகாரத்தில் பானை என்கிற அவஸ்தை தானே விஷயம் ஆகிறது –
    அஸ்தி நாஸ்தித்வங்கள்
    இப்போது மண் உண்டை இருந்தது இப்போது மண் உண்டை இல்லை
    இங்கு இருக்கிறது இங்கு இல்லை
    கால இடம் உட்படுத்தியே வ்யவஹாரம்
    பிண்டத்வ அவஸ்தை மாறி கடத்தவ அவஸ்தை பிறந்தால்
    நாஸ்தித்வ வ்யவஹாரம் பண்ணினாலும்
    வேறு ஒரு ஆகாரத்திலே அஸ்தித்வம் தேறி இருக்கும்
    ஆக ஒரு படியாலும் சூன்ய வாதம் சித்தியாது
    ஆக –
    சூத்ரத்தின் மேல் பொருள்
    சர்வதா –
    சர்வ பிரகாரத்தாலும்
    அநு பபத்தே –
    ஸ்வ அபிமதமான சர்வ சூன்ய வாதம் உப பன்னம் ஆகைமையினாலே -என்றபடி
    ஸ்ரீ பாஷ்யகாரம் அருளிய பொருள் சமஞ்சசம் ஆன பொருள்
    இவர் –
    உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
    உளன் அலன் எனில் அவன் அருவும் இவ்வருவுகள்
    உளன் என இலன் என இவை குணம் உடைமையின்
    உளன் இரு தகைமையினோடு ஒழிவிலன் பறந்தே -திருவாய் மொழி –1-1-9-
    எனபது கொண்டு சூத்ரத்தின் பொருளை ஒருங்க விட்டு அருளிச் செய்கிறார்-
    ஆறாயிரப்படியில் அங்கு அருளிச் செய்த தமிழ் அர்த்தமே
    இங்கு ஸ்ரீ பாஷ்யத்தில் வட மொழியில் அருளிச் செய்யப் பட்டது –
    ————————————————————————————–
    இனி மூன்றாம் அத்யாயம் –
    முதல் அத்யாயத்தில்
    பர ப்ரஹ்மமே ஜகத் ஜென்மாதி காரணமாய் -சர்வ சேஷியானவன் -என்றும்
    தன்னுடைய லீலைக்காக -நான்முகன் சிவன் இந்த்ரன் முதலானவர்கள்
    சிருஷ்டிக்கப் பட்டு உப சம்ஹரிக்கப் படுகிறார்கள் -என்றும்
    அந்த பரம புருஷன் பிரகிருதி மண்டலத்துக்கு புறம்பாய்
    நிதர சூரி சேவிதமான ஸ்தான விசேஷத்திலே
    ஸ்வ இச்சையினாலே சுடர் ஒளி மயமான திவ்ய மங்கள விக்ரஹத்தை பரிக்ரஹித்து
    அப்ரமேயமான ஆனந்தத்தை யுடையனாய்
    தன்னடி பணிந்தார்க்கும் அபரிமித ஆனந்தத்தை அளிப்பவனாய்
    சம்சார பந்தத்தில் நின்றும் விடுபட்ட முக்த புருஷர்களினால் அனுபவிக்கப் பட்டுக் கொண்டு
    இரா நின்றான் என்று தெரிவிக்கும் முகத்தாலே
    சம்சாரிகளுக்கு பகவத் அனுபவ குதூஹலத்தை உண்டாக்குவதற்காக
    பரம புருஷார்த்தமான பகவத் ஸ்வரூப ஸ்வ பாவாதிகள் நிரூபிக்கப் பட்டன-
    பிறகு இரண்டாம் அத்யாயம் செய்தது என் என்னில்
    முதல் அத்யாயத்தினால் நிரூபிக்கப் பட்ட அர்த்தம்
    சர்வாத்மனா அசைக்க முடியாதது என்று
    பிரதி பஷ பிரதி ஷேப பூர்வகமாக சாதிதததுடன்
    ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் என்கிற பகவத் பரணீத சாஸ்திர விசேஷத்தினாலே தேறிய பொருள் என்றும் நிரூபித்து
    சகல சேதன அசேதன பொருள்கள் பரம புருஷ கார்ய பூதங்களே என்பதை
    நன்கு சோதிக்கும் முகத்தாலே
    கார்ய சாமான்யமும் பர ப்ரஹ்ம கார்யமே என்பதும் ஸ்தாபிக்கப் பட்டது –
    ஆக –
    இரண்டு அத்யாயங்களால் –
    புருஷார்த்த ஸ்வ ரூபம் நிச்சயிக்கப் பட்டதாக தேறிற்று
    இப்படி புருஷார்த்த ஸ்வரூபம் நிச்சயிக்கப் பட்டாலும்
    அநாதி வாசனா பலத்தாலே
    சூத்திர புருஷார்த்தங்களையே நச்சிக் கிடக்கும் சம்சாரிகளுக்கு
    பரம புருஷ பிராப்தியில் பதற்றம் உண்டாகாமைக்கு காரணம்
    தாங்கள் விரும்பிய புருஷார்த்தங்கள் அல்பம் அஸ்தரம்
    என்பதை ஆராய்ந்து உணராமையே என்று கருதிய சாஸ்திர காரர்
    அந்த சம்சாரிகளுக்கு 'இதர விஷயங்களில் வைராக்யத்தையும்
    பரம புருஷார்த்தத்தில் மிக்க ருசியையும் உண்டாக்குவதற்காக
    கர்ம பலன்கள் எல்லாம் ஷயிஷ்ணுக்கள் என்றும்
    பரம புருஷ உபாசன பலமான அப வர்க்கம் ஒன்றே நித்ய புருஷார்த்தம் என்றும் -தெரிவித்து
    இவ் வழியாலே –
    பரம புருஷ பிராப்தியில் த்வர அதிசயத்தை உண்டாக்கவே
    பின்னிரண்டு அத்யாயங்களை அவதரிப்பிகின்றார்-
    ஆக –
    ஏற்கனவே கர்ம விசாரம் செய்து
    அதன் பலன்களை நஸ்வரம் என்று அறிந்து வைராக்கியம் பெற்றவனுக்கே ப்ரஹ்ம மீமாம்சையில் அதிகாரம் என்று
    ஜிஞ்ஞாசா சூத்ரத்திலே நிரூபிக்கப் பட்டு இருப்பதனால்
    மறுபடியும் வைராக்யத்தை உண்டாக்குவதற்காக –
    இந்த பிரயத்னம் வீண் அல்லவோ என்று சங்கை வரலாம்
    பஞ்சாக்னி வித்யா நிரூபணத்தாலே விஷயங்களில் எப்படிப் பட்ட வைராக்கியம் உண்டாகுமோ
    அது கர்ம விசாரத்தினால் -உண்டாக மாட்டாது என்று கருதி
    இங்கு புநர் பிரயத்னம் கொள்ளப் படுகிறது
    ஆகவே இது நிஷ் பலம் அற்று -ச பலமே
    இந்த மூன்றாம் அத்யாயத்தின் முதல் பாதத்தில்
    பஞ்சாக்னி வித்யா நிரூபணம் செய்து
    கர்ம பலன்கள் எல்லாம் நஸ்ரவங்கள் என்றும் நரக துல்யங்கள் என்றும் தெரிவிக்கப் படுகிறது
    அசுத்தமிதி சேந் ந சப்தாத் -மூன்றாம் அத்யாயம் முதல் பாதம் –முடிவில் உள்ள -அந்யா திஷ்டிதாத கரணம் -இரண்டாது சூத்ரம்
    ஷீணே புண்யே மர்த்ய லோகம் விசந்தி -ஸ்ரீ கீதை -சவர்க்க லோக அனுபவம் பண்ணி கீழே வருபவர்களுக்கு
    சாந்தோக்யம் -த இஹ வ்ரீஹியவா ஔ ஷதி வனச்பதயச் தில மாஷா ஜாயந்தே –நெல் முதலனவ்வாகப் பிறப்பது சொல்கிறது
    மனு ஸ்ம்ருதி -சரீரஜை கர்ம தோஷைர் யாதி ஸ்தாவரதாம் நர -ஸ்தாவர ஜன்மம் பாப பலம் –ஸ்வர்க்கத்தில் இருந்து
    இறங்குபவனுக்கு பாபம் இருக்குமா — அக்நீஷோமீயம் கருமம் பாப மிஸ்ரம் ஆகையாலே
    உபபத்தேச்ச -ஸ்ரீ பாஷ்யம் –3-2-4-
    ப்ராப் யஸ்ய பரம புருஷஸ்ய ஸ்வ ப்ராப்தௌ ஸ்வஸ்யைவ உபாயத்வோ பபத்தே
    -நாயமாத்மா பரவச நேன லப்ய தநும் ஸ்வாம் -என்றும்
    அம்ருதஸ் யைஷ சேது -இதி அம்ரு தஸ்ய ஸ்வஸ்ய ஸ்வ யமேவ பிராபக இதி சேதுத்வவ்
    யபதேசோ பபத்தேச்ச –என்றும் ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ ஸூ கதிகள்
    பலமத உபபத்தே –3-2-37-
    ச ஏவ ஹி சர்வஜ்ஞஸ் சர்வ சக்திர் மஹோ தாரோ யாகதான ஹோமாதிபிருபாசா நன்ச ஆராதிதா
    ஐஹிக ஆமுஷ்மிக போக ஜாதம் ஸ்வ ஸ்வரூப அவாப்திரூபம் அபவர்க்கஞ்ச தாது மீஷ்டே
    நஹி அசேதனம் கர்ம ஷணத் வம்சி காலான் தர பாவிபபல சாதனம் பவிது மர்ஹதி -என்றும் ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ ஸூ கதிகள்
    மூன்றாம் அத்யாயம் -பரம புருஷ ப்ராப்திக்கு உபாயத்வத்தை தெரிவிப்பது என்றும்
    நான்காம் அத்யாயம் எனபது உபாய பலமான உபேயத்தை தெரிவிப்பது என்றும் நெஞ்சில் கொள்க –
    உபய லிங்காதி கரணத்தின் பிரமேயம் -பார்ப்போம் –
    மூன்றாம் அத்யாயம் -இரண்டாம் பாதம் –
    ஜீவாத்மா வானவன்
    ஜாக்ரத் ஸ்வப்ன ஸூ ஷுப்தி மூர்ச்சாதி அவஸ்தைகளுக்கு
    ஹேதுவான நாநா வித சரீரங்களை
    ஏற்றுக் கொண்டு -அவ்வவச்தைகளிலே சுக துக்கங்களை அனுபவிக்கிறான்
    என்னும் இடம் கீழே நிரூபிக்கப் பட்டது
    அப்படிப் பட்ட சரீரத்தில் பரமாத்மாவும் சம்பந்தப் பட்டு இருந்தாலும்
    தத் பிரயுக்தமான சுக துக்காதி அபுருஷார்த்த லேசமும் தன்னிடத்தில் ஓட்டப் படாமல் இருக்கிறான் என்றதையும்
    கல்யாண குண கடலாய் இருக்கிறான் என்றதையும்
    நிரூபிக்க இந்த அதிகரணம் தோன்றியது –
    ந ஸ்தான தோபி பரஸ்யோ பய லிங்கம் சர்வத்ர ஹி -இந்த அதிகரணத்தில் தலையான சூத்தரம்
    பரஸ்ய -பரம புருஷனுக்கு
    ஸ்தா ந்த அபி -ஜீவாதிஷ்டித நாநா சரீரங்களில் இருப்பு இருந்தாலும்
    ந -அபுருஷார்த்த சுக துக்க சம்பந்தம் கிடையாது –
    இதற்கு ஹேது என் என்னில்
    சர்வத்ர ஹி உபய லிங்கம் –
    பரம புருஷன் சர்வ சுருதி ஸ்ம்ருதிகளிலும்
    ஹேய ப்ரத்ய நீகத்வம்
    கல்யாணை கதா நத்வம்
    என்கிற இரண்டு அசாதாரண தர்மங்களோடு கூடியவனாக
    பிரதி பாதிக்கப் படுகையாலே
    எனபது சூத்ரத்தின் பொருள்-
    அபஹதபாப்மத்வம் -அதாவது
    புண்ய பாப ரூப கர்மங்களின் பலன் ஸ்பரசியாத -இதுவே ஹேய பிரத்ய நீகத்வம்
    மேலும் ஒரு சங்கை தோன்றக் கூடும்
    ஹேய சம்பத்வம் வஸ்து ஸ்வ பாவத்தாலே அபுருஷார்த்த பாதகமாயே தீரும் அன்றோ
    மாம்சாஸ்ருக்பூய விண் மூத்த வெள்ளத்தில் ஒருவன் ஸ்வ இச்சையால் அமிழ்ந்தாலும்
    ஹேய சம்பந்தம் உண்டாக்கித் தானே தீரும் -சங்கை வருமே –
    ஹேயத்வம் கர்ம க்ருத்யுமே ஒழிய வஸ்து ஸ்வ பாவ பிரயுக்தம் அன்று –
    சம்சார தசையிலே அனுகூலமாக தோன்றுவதும் பிரதிகூலமாக தோன்றுவதும்
    வஸ்து ஸ்வ பாவத்தாலே அன்று
    கால மாற ஒன்றே அனுகூலமாயும் அதுவே பிரதிகூலமாயும் தோன்ற காணலாம்
    அகர்மவச்யனான பரமபுருஷனுக்கு
    சர்வ வஸ்துக்களும் தன விபூதியாய்க் கொண்டு அனுகூலமாவேயாய் இருக்கும் என்று கொள்ளக் கடவது-
    ——————————————————————————————-
    இனி மூன்றாம் அத்யாயம் கடைசி பாதம் –
    சர்வாந்த அனுமத் யதிகரணம் –
    இதற்கு முந்திய அதிகரணத்தில்
    ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுக்கு சமம் ஆவச்யகம் என்று சொல்லிற்று
    போஜன நியமம் ஆகிற சம விஷயம் ப்ரஹ்ம வித்துக்கு உண்டா இல்லையா என்பதை விசாரித்து நிர்ணயிக்க
    இந்த அதிகரணம் தோன்றிற்று –
    ஸூத்ரம் –
    சர்வான் அன்னம் அநு மதிச்ச ப்ராணாத்யயே தத் தர்ச நாத் –
    ப்ராணா வித்யா நிஷ்டன் எந்த அன்னத்தையும் புஜிக்கலாம் என்று அனுமதிப்பது
    பிரணாபத் தசையைப் பற்றியதேயாம்
    ப்ரஹ்ம வித்தான அதிகாரி விஷயத்தில் ப்ராணாபத் விஷயமாக வே காங்கையாலே -என்று சூத்த்ரார்த்தம் –
    பூர்வ பஷம் –
    சாந்தோகத்தில் ஐந்தாம் பிரபாடகத்தில்
    பிராண வித்யா பிரகரணத்திலே
    பிராண வித்யா நிஷ்டனுக்கு அன்னம் ஆகாதது எதுவும் இல்லை –
    நிஷித்த அன்ன போஜனமும் சர்வதா கூடும் என்றும்
    வித்யா மகாத்மியத்தினால் இதில் தவறு இல்லை -என்றும் சொல்லுவதாக தெரிகிறது
    அல்ப சக்திகனான பிராண வித்யா நிஷ்டனுக்கே நிஷித்த அன்ன போஜனம் அனுமதிக்கப் படுமானால்
    ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுக்கு அந்த அனுமதி கைமுதிக நியாய சித்தமே -என்று பூர்வ பஷம்
    -சித்தாந்தம் –
    ப்ரஹ்ம வித்யா நிஷ்டனான உஷஸ்தன்
    பிராணாபத் தசையிலே –
    ஒரு யானைப் பாகன் உண்டு மிகுந்த காறா மணியை புசித்து
    அதனால் உயிர் தரிக்கப் பெற்றான் என்றும்
    பிறகு அந்த ஆணைப் பாகன் கொடுத்த பானத்தை அந்த உஷஸ்தன் ஏற்றுக் கொள்ள வில்லை என்றும்
    சாந்தோக்யம் முதல் பிரபாடகம் -காண்டம் -9-
    உஷச்த வ்ருத்தாந்த பிரகரணத்தில் காண்கிறது
    இதனால் மகா மகிமை சாலியான ப்ரஹ்ம வித்துக்களுக்கும்
    நிஷித்த அன்ன பஷணம் ஆபத் விஷயம் என்று தெரிவதனாலும்
    ஆகார சுத்தி ஆவச்யகம் என்று தெரிவதனாலும்
    ப்ராஹ்மண சாமான்யத்திற்கும் ஆபத் காலத்தில் சர்வ அன்னமும் அனுமதிக்கப் படுவதாய் காண்கையாலும்
    ப்ரஹ்ம வித்தான அதிகாரி விசேஷத்துக்கும் சர்வ அன்ன அனுமதியானது ஆபத் காலத்தில் மாத்திர விஷயகம்
    என்று சித்திக்கும் போது
    அல்ப சக்திகனான பிராண உபாசகனுக்கு காணும் சர்வ அன்ன அனுமதியும்
    ஆபத் விஷயகாந்தன் என்னுமது பற்றிச் சொல்ல வேணுமோ –
Working...
X