Announcement

Collapse
No announcement yet.

Dad is great - short story

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Dad is great - short story

    அப்பா அப்பா அப்பா


    ஒரு சிறு கதை


    அம்மா கொஞ்சம் தாகத்துக்கு ஜலம் குடிச்சுக்கோ்வெய்யில் வேறஇன்னைக்கு அதிகமா இருக்கு என்று 75 வயது அம்மாவை அக்கறையோடு கேட்டான் ரகுராமன்


    அதெல்லாம் ஒன்னும் வேணாம்டா சீக்கிரம் வேலையை முடிச்சுட்டு வீட்டுக்கு போயிடலாம் என்றாள் அம்மா


    பேங்க் மேனேஜரைப் பார்த்து வாரிசு சர்டிபிகேட் பாஸ்புக்்கூடவே ஒரு கவரிங் லெட்டர் எல்லாம் கொடுத்து விட்டு எங்க அம்மா சகுந்தலா பெயரில் எல்லாம் மாத்திடுங்க சார் என்றான் ரகுராமன்
    பிறகு கொஞ்சநேரம் காத்திருந்தான்


    அம்மாவின் கையை பிடித்துக் கொண்டான் அப்பா இறந்து போயி இந்த 45 நாட்களில் அம்மா ரொம்பவும் ஆடித்தான் போயிட்டா


    அம்மா கவலைப் படாதேம்மா என்று ரகுராமனும் அவன் மனைவியும் அடிக்கடி சொல்லி அவளை ஒரு வாறு தேர்த்தி இப்போது தான் கொஞ்சம் பேசஆரம்பித்திருந்தாள்


    ஆகஸ்ட் மாசம் கடைசியில் மகன் வாசுவுக்கு உபநயனம் செஞ்சுடலாம் னு அப்பாவிடம் ஏப்ரல் மாதமே நாள் பார்க்க சொல்லி இருந்தான் ரகுராமன்


    விஷயத்தைக் கேட்டவுடன் பத்து பதினைந்து வயது குறைந்தவராக ஆட்டோ பிடிச்சு நாலு இடம் போய் நல்ல நாள் பார்த்து குறிச்சு கொண்டு வந்தார் அப்பா


    அப்போது தெரியாது ரகுராமனுக்கு அடுத்த மாதமே அப்பா போயிடுவாருன்னு


    ரகு நீ பணம் எதுவும் கொண்டுவர வேணாம் என் பேரன் வாசுவை மட்டும் இங்க கூட்டிட்டு வா எல்லா செலவுகளும் நான் தான் செய்வேன் என்று சந்தோஷமாக சொன்ன அப்பா இப்போது இல்லை


    பென்சன் பணம் நிலத்தில் கிடைக்கும் கொஞ்ச மகசூல் பணம் இதெல்லாம் சேர்த்து வெச்சிருப்பாரோ


    ஒரு வீடு ஊர்ல இருக்கு அதையும் வாடகைக்கு விட்டிருந்தார் அந்த வாடகைப் பணம் நேராக பேங்க்கு வர்றமாதிரி பேசி வெச்சிருந்தார் அப்பா


    லாக்கர்ல அதிகம் பொருட்கள் இல்ல எதுக்கு வேஸ்ட்டா அதுக்கு வருஷத்துக்கு ஆயிரத்து ஐநூறு வாடகை கொடுக்கணும் னு அம்மா சொன்ன போது இருக்கட்டும் நம்ம பையன் சீக்கிரம் நகைகள் வாங்கி வந்து அடுக்குவான் இருக்கட்டும்னு சொன்னார்


    ரொம்ப தைரியமான மனிதர் என் அப்பா என்று ரகுராமன் அப்பாவைப் பற்றி யோசித்துப் பார்த்தான்


    பி காம் படிச்சு முடிச்சு ஆறு மாதத்துக்கு பிறகு TVS கம்பெனி சோளிங்கர் பிராஞ்சுல வேலை கிடைச்சு லெட்டர் வந்தவுடன்


    கும்பகோணம் ரயில்வே ஜங்க்ஷனுக்கு போய் செங்கல்பட்டுக்கு டிக்கெட் போட்டு வந்தார் அப்பா


    நேரா செங்கல்பட்டு வரைக்கும் ரயில்ல போ அங்கேர்ந்து சோளிங்கர் கு பஸ்ல போயிடலாம்


    மெட்ராஸ் பொய் சோளிங்கர் போனா 3 மணிநேரம் டைம் வேஸ்ட் என்றார்


    பிறகு செங்கல்பட்டு ஸ்டேஷன் ல இறங்கி பஸ் ஸ்டேண்ட்கு பக்கத்துல நரசிம்ம விலாஸ் னு ஒரு ஹோட்டல் இருக்கு பேர பார்த்துட்டு அது சைவ ஹோட்டல் னு நினைச்சு போயிடாதே பேர அப்படி வெச்சு ஏமாத்தறான்


    அது அசைவ ஹோட்டல் நல்ல விசாரிச்சுட்டு சாப்பிடு என்றார்


    முதல் மாசம் சம்பளம் வாங்கியவுடன் ரகுராமன் பெயரிலேயே ஒரு பேங்க் அக்கவுண்ட் திறந்து அதில் மாதா மாதம் சம்பள பணத்தைப் போட்டு சேமிக்க கற்றுக் கொடுத்தவர்


    இன்று ரகுராமனுக்குத் திருமணமாகி 15 வருடம் முடிந்த நிலையில் பிள்ளைகள் படிப்பு நகர வாழ்க்கையில் வாடகை இதர செலவுகள் என்று நிறைய செலவுகள்


    எந்த மாதமும் அப்பா ரகுவிடம் செலவுக்கு பணம் எடுத்துக் கொடு எனக் கொண்டதேயில்லை


    மாறாக தீபாவளி சங்கராந்தி கார்த்திகை தீபம் ஆடிப் பெருக்கு என்று எப்போதும் எல்லோருக்கும் டிரஸ் வாங்கி அனுப்புவதும்


    டவுன்ல இதெல்லாம் உனக்கு செய்ய நேரமே இருக்காது என்று அம்மா பக்ஷணங்கள் செயது அனுப்புவதும் வருஷா வருஷம் நடந்த நிகழ்வுகள்


    அப்பாவும் அம்மாவும் தனியாக இருக்கிறார்கள் என்று லீவு விடும் போதெல்லாம் மகனை அனுப்பி வைப்பான் ரகு


    ஒவ்வொரு முறையும் பேரப்பிள்ளைக்கு செயின் மோதிரம் சைக்கிள் என்று விலை உயர்வான பொருட்களை வாங்கி கொடுப்பார் ரகுராமனின் அப்பா


    அவருக்கு செலவுக்கு இருக்கானு எப்போதாவது கேட்கும் போது நிறைய இருக்கு கவலைப் படாதே பகவான் குடுக்கறதை பத்திரமா வெச்சு செலவு பண்ணனும்னு சொல்வார்


    சார் மேனேஜர் கூப்பிடறார்்என்று வங்கி ஊழியர் கூப்பிட நினைவுக்கு வந்தான் ரகுராமன்


    அம்மாவைக் கூப்பிட்டுக் கொண்டு உள்ளே போனான்


    உங்க அப்பாவோட அக்கவுண்ட்ல ஒரு லட்சத்து எழுபதாயிரம் இருக்கு அதை அப்படியே உங்க அம்மா அக்கவுண்டுக்கு மாத்திடவா என்றார் ரகு சரி என்றான்


    அம்மாவோ உடனே அது வாசுவின் உபநயனத்துக்கு நீ எடுத்துக்கோ அதுக்குத் தான் உங்க அப்பா வெச்சிருந்தார் என்றாள்


    இந்த நிலைமையில் உபநயனம் எப்படிம்மா என்றதற்கு அது எப்போ செய்தலும் இந்தப் பணத்துல செய்யணும் அது தான் அப்பாவோட ஆசை என்றாள் ரகுராமனின் அம்மா


    ரகு அம்மா சரி போவோம்னு கிளம்ப வங்கிமேனேஜர் லாக்கர்ல எதுவும் பார்க்கலியா என்றார்


    அதை மறந்தே போய்ட்டோம் சரி அதுல சில வெள்ளி டம்ளர் வெள்ளி சொம்பை தான் இருக்கும்னு ரகுராமன் சொன்னான்


    எதற்கும் பார்க்கப் போனார்கள்


    அப்பா வைத்திருந்த லாக்கர் சாவியை போட்டு திறந்து பார்த்தபோது உள்ளே 2 பேப்பர் கட்டுகள் பிரித்துப் பார்த்த போது அவை அந்த பேங்க்ன் ஷேர் பத்திரங்கள் 500 ஷேர்கள் ஒவ்வொன்றும் ஆயிரம் ருபாய் மதிப்புக்கு எல்லாவற்றையும் அம்மா எப்பெயருக்கு வாங்கி வைத்திருந்தார்


    கிட்டத்தட்ட 5 லட்சம் ருபாய் மதிப்புக்கு


    மேலே ஒரு கடிதம் அதில் என் காலத்துக்குப் பிறகு என் மனைவி சகுந்தலாவுக்கு இந்த ஷேர்கள் உபயோகமாகட்டும்னு என்று சுருக்கமாக எழுதி இருந்தார் அப்பா


    அதற்கும் கீழே ஒரு சுருக்குப் பையில் என்னவோ இருந்தது என்ன என்று பார்த்தால் ஒரு செட் வெள்ளிப் பூணல் ஒரு செட் தங்கப் பூணல்


    அவற்றைப் பார்த்த பிறகு ரகுவுக்கு துக்கம் அடக்கமுடியவில்லை


    பேரனின் உபநயனத்துக்கு வ்வளவு பிளான் செயது வைத்திருக்கிறார் அப்பா குலுங்கி குலுங்கி அழுத்த தொடங்கினான் ரகு


    சற்று தள்ளி நின்றிருந்த வங்கி மேனேஜர் ரகுராமன் சார் தண்ணீர் குடிங்க என்று ஆசுவாசப்படுத்தினார்


    அம்மாவைப் பார்த்தான் ரகு அவள் கண்களிலும் சில துளி கண்ணீர் இருந்தது ரகுராமனுக்கு அம்மா ஆறுதல் சொன்னாள்


    வீட்டுக்கு வரும் வழியில் ஆட்டோவில் வரும் போது அம்மாவிடம் கேட்டான் ரகுராமன்


    எனக்கு னு ஒரு செலவு கூட வைக்கலியே அப்பா உனக்கு கூட பேங்க் ஷேர் அஞ்சு லட்சத்துக்கு வாங்கி வெச்சுட்டுப் போய்ட்டார்


    அவரோட காலத்துக்குப் பிறகும் அவர் காசு நமக்கு வந்துட்டு இருக்கு எனக்கு செலவு எதுவும் வைக்கலியே என்றான் அம்மாவின் கரத்தை பிடித்துக் கொண்டு


    அது தாண்டா அப்பா என்றாள் ரகுவின் அம்மா


    அப்பா இறந்தபிறகே உலகம் அவரை புரிந்து கொள்கிறது


    தாய் பத்துமாதம் சுமந்தால் என்றால்
    தகப்பனோ தன் வாழ்நாள் பூராவும் மனத்திலும் தோளிலும் சுமக்கிறான்


    ஜெய் ஶ்ரீராம்!!

  • #2
    Re: Dad is great - short story

    What a beautiful post.! Appa is Appa. But some sons donot bother about him and mother too zfter marriage.
    Hope all sons read this. Should be posted in other socialmedia too.
    Thanks.
    Varadarajan.

    Comment


    • #3
      Re: Dad is great - short story

      ஸ்ரீ:
      அடியேனுடைய அப்பாவிற்கும்,
      பொருப்பான அப்பாக்கள் அனைவருக்கும்
      இந்த சிறுகதையைப் படித்தபோது வந்த கண்ணீரைக்
      நெஞ்சார்ந்த நன்றியுடன் காணிக்கையாக்குகிறேன்.
      அப்பா - அப்பாதான்
      அப்பா அன்பு அப்பாலதான் தெரியறது?!
      தாஸன்,
      என்.வி.எஸ்


      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment


      • #4
        Re: Dad is great - short story

        தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' என்பது சான்றோர் வாக்கு.
        பிரஹ்மண்யன்
        பங்களூரூ

        Comment

        Working...
        X