Announcement

Collapse
No announcement yet.

Brahma sutra- Section 1- part1- 4th sutra

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Brahma sutra- Section 1- part1- 4th sutra

    courtesy: Smt.Dr. Saroja Ramanujam
    பிரம்மசூத்ரம் – பிரிவு 1 பகுதி 1
    சூத்ரம் 4
    தத் து ஸமன்வயாத்
    ஆனால் அதுதான் வேதத்தின் முக்கியப் பொருள் என்பதனால்
    பிரம்மம் வேதத்தின்( உபநிஷத்) மூலமே அறியப்படுகிறது.
    து- ஆனால் என்னும் சொல் மீமாம்சகர்களுடைய வாதத்திற்கு எதிர்ப்பாக சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் கொள்கைப்படி பூர்வமீமாம்சம் அதாவது கர்மகாண்டம் என்று சொல்லப்படும் வேதத்தின் முதல் பகுதியே பொருள் வாய்ந்தது. பிரம்மகாண்டம் அல்லது உத்தரமீமாம்சம் என்பது முக்கியம் அல்ல.
    ஏனென்றால் பிரம்மம் என்பது வேதத்தினால் அறியப்படும் பொருள் அல்ல. வேதம் என்பது செய்யவேண்டிய கர்மத்தையும், தவிர்க்க வேண்டிய கர்மத்தையும் அதனால் ஏற்படும் பயனையும் சொல்வது. ப்ரம்மத்தை அறிவது என்பது இவ்விரண்டிலும் சேராது.
    ஆனால் என்ற சொல் இதை மறுக்கிறது.
    ராமானுஜர் சொல்வது என்ன?
    செய்யவேண்டியதையும் தவிர்க்க வேண்டியதையும் சொல்லும் வேத வாக்கியங்கள் மட்டுமே பொருள் செறிந்தவை என்பது தவறு.
    . பிரம்மம் என்பது உயர்ந்த எல்லோரும் அடையவேண்டிய லக்ஷியமாக உள்ளது. அதைக் குறிக்கும் வாக்கியங்கள் தள்ளப்படவேண்டியவை அல்ல.
    கர்மத்தில் பற்றுதலால் பிரம்மஸ்வரூபம் மறைக்கப்பட்டுள்ளது. அது வேதாந்த ( அதாவது உபநிஷத்)வாக்கியங்களில் மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது.
    ஸமன்வயம் என்றால் ஸம்யக் அன்வயம் அதாவது நன்கு சம்பந்தப்பட்டது என்று பொருள்.
    உபநிஷத் வாக்கியங்கள் மூலம் பிரம்மமே முக்கிய புருஷார்த்தம், முடிவான லட்சியம், எல்லையில்லாத ஆனந்தம், தோஷமற்ற ஸகல கல்யாண குணங்களுடன் என்று தெரியவருகிறது. ஆதலால் வேதத்தின் பொருள் பிரம்மம் அல்ல என்பது அறிவின்மை.
    ஆதலால் பிரம்மத்திற்கும் கர்மத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை உபநிஷத் வாக்கியங்களே
    பிரம்மத்திற்கு சான்றாகும். அதனால் அதுவே வேதத்தின் முக்கியப் பொருள்.
    பிரம்மமே ஆதிகாரணம் அதை அறிந்தால் எல்லாம் அறியலாம் அதுவே வேதத்தின் முக்கியப் பொருள் என்று பார்த்தோம். இப்போது இந்த ப்ரபஞ்சம் இயற்கையின் செயல்பாடு என்கிற சாங்கிய மதத்தின் கொள்கைக்கு பதில் அடுத்த சூத்ரம்.
Working...
X