ஜெய ஶ்ரீ ராம்


இந்த ராம நாமம் அந்த விஷ்ணு சஹஸ்ர நாமத்திற்க்கு ஈடானது என பரமசிவன் தனது சக்தியான பார்வதி தேவியிடம் கூறியுள்ளார்.


சரி விஷ்ணு சஹஸ்ரநாமம் என்றால் என்ன?


இந்த உலகை தன் சங்கலபத்தால் விளையாட்டாக படைத்து விளையாட்டாககாப்பாற்றி
விளையாட்டாக அழித்து மீண்டும் உருவாக்கி விளையாடும் அந்த பரம்பத நாதன் ஶ்ரீமன் நாராயணனின் பெருமையை 1000 தலை கொண்ட ஆதிசேஷனால் கூட பகர முடியாது


அப்படி பட்ட பெருமைகொண்டவரை பலாயிரம் பெயர் தாங்கியவரை துதித்தால் இந்த கலியுகத்தில் பிறந்த நம் ஜென்மம் கடைதேறும். அதாவது அவரது நாமஜெபம் சொல்லுவதால் கடைதேற்றும்


ஆனால் பலகோடி நாமாவில் எந்த நாமாவை சொன்னால் முமுபயன் கிட்டும் ?


இந்த கேள்வியை கேட்ட யுதிஷ்டிரனுக்கு பீஷ்மர் கூறியதாக உள்ள இந்த சகஸரமான(1000) அதாவது உன்னதமான நாமக்களை நாம் விஷ்ணு சகஸரநாமம் என்போம்.


சகஸர நாமம் என்றாலே அது விஜ்ணு சகஸரநாமம் என்று தான் அர்தம்


அந்த விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லும் முன் அது பிறந்த வரலாறு பற்றி சிறிது கண்ணுருவோம்


பாரத போர் அதான் தர்மயுத்தம் முடிந்த பின்னால் விளைந்த குல் நாசத்தால் தர்மர் மன வருத்தம் கொண்டார்....


"தான் ஒருவன் அரியணை ஏறுவதற்காக இத்தனைப் பேர் மாண்டு போயினரே..." என்று.


அப்படிப் பட்ட சமயத்திலே மன ஆறுதல் வேண்டி, ஸ்ரீகிருஷ்ணரைக் காண சென்றார்.


பரமாத்மாவான பார்த்தசாரதியோ அப்பொழுது தவத்தில் இருந்தார்.


ஆச்சரியப்பட்டுப் போன யுதிஷ்டிரர், "நீயே பரம்பொருள், பரப்பிரம்ஹம், உயிர்கள் அனைத்தும் உன்னைக் குறித்து தவம் செய்கையில், நீ யாரைக் குறித்து தவம் செய்கிறாய்?" என்று வினவுகிறார்.


(குறிப்பு: யுதிஷ்டிரர் ஸ்ரீகிருஷ்ணரை விட வயதில் மூத்தவராதலால் ஒருமையில் பேசுவதில் ஆச்சரியமில்லை).


ஸ்ரீகிருஷ்ணர் பதில் உரைக்கிறார்,


"என்னுடைய மனமானது கங்கையின் மைந்தரான பீஷ்மரிடத்தே உள்ளது, வா அவரிடம் சென்று ஞான உபதேசம் பெறலாம்".


"ஞான உபதேசம் அளிக்க இறைவனான நீயே உடன் இருக்கும் போது ஏன் பீஷ்மரிடத்தே சென்று கேட்க வேண்டும்?"


"பீஷ்மர் ஞானத்தின் பிறப்பிடம். உலகில் அவரைப் போல ஞானம் பெற்றவர் இல்லை. அவர் பூமியை விட்டுப் பிரியும் பொழுது ஞானமே பூமியை விட்டுப் பிரிகிறது என்று அறிந்துகொள்".


ஸ்ரீகிருஷ்ணர், யுதிஷ்டிரர், அர்ஜுனாதிகள், பாஞ்சாலி, ஸ்ரீவைஷம்பாயனர் என்று அனைவரும் தர்மக்ஷேத்திரக்களத்தில்கூடுகின்றனர்.


அங்கு தன் பெற்ற வரத்தின் படி சரதல்பத்தில் உத்ராயண புண்யகாலத்தில் தனது இறுதி மூச்சை விட அர்சுன்ன் அமைத்து கொடுத்த அம்பு படுக்கையில் காத்திருக்கும் பிதாமகர் பீஷ்மரைச் சந்திக்கின்றனர்.


அப்போது பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தம் யோக நிஷ்டையால் அம்பு படுக்கையில் உள்ள பீஷ்மரின் உடல் ஹிம்சையை அறிந்து கொண்டு புத்துயிர் அளித்து புதிய இரத்தம் பாய்ச்சுகிறார்


அப்போது


ஸ்ரீ வைஸம்பாயந உவாச:


"ஸ்ருத்வா தர்மா நஸேஷேண பாவநாநி ச ஸர்வஸ: யுதிஷ்டிர : ஸாந்த நவம் புநரே வாப்ய பாஷத"


ஸ்ரீவைஷம்பாயனர் கூறுகிறார்,


"தர்மம் குறித்து தான் கற்றறிந்த முறைகள், பாவத்தைப் போக்கும் வழிகள் எவற்றிலும் திருப்தி அடையாத யுதிஷ்டிரன் மீண்டும் ஞானம் பெற இங்கு வருகை தந்துள்ளான், பீஷ்மர் எனும் நித்யமாய் அன்பு இருக்கும் இடத்திற்க்கு"


அச்சமயம் யுதிஷ்டிரர் ஆறு கேள்விகளை பீஷ்மரிடம் கேட்கிறார்,


எப்படி என்றால்


கிமேகம் தைவதம் லோகே கிம் வாப்யேகம் பராயணம்


ஸ்துவந்த : கம் கமர்ச்சந்த : ப்ராப்நுயுர் வாநவஸ ஸுபம்


கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத:


கிம் ஜபந் முச்யதே ஐந்துர் ஐந்ம ஸம்ஸார பந்தநாத்


1. கிமேகம் தைவதம் லோகே?
அகிலத்தில் மிகப் பெரும் தெய்வம் யார்?


2. கிம் வாப்யேகம் பராயணம்?
அனைவருக்கும் அடைக்கலம் யார்?


3. ஸ்துவந்த : ப்ராப்நுயுர் வாநவஸ ஸுபம்?


யாரைத் புகழ்பாடுவதன் மூலம் உன்னத நிலையை அடையலாம்?


4. கம் கமர்ச்சந்த : ப்ராப்நுயுர் வாநவஸ ஸுபம்?


யாரைத் துதிப்பதன் மூலம் உன்னத நிலையை அடையலாம்?


5. கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத:?


எது மிக உயர்வான தர்மம் என்று தாம் கருதுகிறீர்கள்?


6. கிம் ஜபந் முச்யதே ஐந்துர் ஐந்ம ஸம்ஸார பந்தநாத்?


எவரைக் குறித்து ஜபம் செய்வதால் சம்சாரக் கடலில் இருந்து விடுபடலாம்?


இதற்கு பீஷ்மரின் பதில்கள்:


1. ஜகத்திலே மிகப் பெரியவரான புருஷோத்தமனான அனந்தன் (ஸ்ரீவிஷ்ணு).


2. ஒளி பொருந்திய, அனைவரின் புகலிடமான, சர்வ வல்லமை பொருந்திய உண்மைத் தத்துவமானவர் - ஸ்ரீவிஷ்ணு.


3, 4: தேவர்களுக்கெல்லாம் தெய்வமான பரம்பொருளைத் துதிப்பதன் மூலம்.


5, 6: ஆதியும் அந்தமும் இல்லாத புருஷோத்தமனின் நாமங்களைப் பாடுவதன் மூலம் ஒருவர் சம்சாரக் கடலைத் துறந்து உன்னதமான நிலையை அடையலாம்.


இவ்வாறு பதில் அளித்த பீஷ்மர்


ஸ்ரீவிஷ்ணுவின் முக்கிய ஆயிரத்தெட்டு நாமங்களை யுதிஷ்டிரருக்கு உபதேசிக்கிறார்.


விஷ்வம் என்று தொடங்கி சர்வப் ப்ரகரனாயுதன் என்று நிறைவுறும் 1008 நாமங்கள் அவை.


அச்சமயம் அதை கேட்டுக் கொண்டுருந்த முப்பத்து முக்கோடி தேவர்களும் பிரமனும் ருத்ரரும் ஆனந்தம் ஆனந்தம் என பாராட்ட


பார்வதி தேவி பரமேஷ்வரை பார்த்து கேட்கிறார்:

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
ஈஸ்வரரே பீஷ்மர் கூறிய இந்த 1008 விஷ்ணு நாமத்தை இலகுவாக எப்படி சொல்லுவது என எனக்கு தெரிவிப்பீரா என அதாவது


"கேநோ பாயேந லகுநா விஷ்ணோர் நாம ஸஹஸ்ரகம் பட்யதே பண்டிதைர் நித்யம் ஸ்ரோது மிச்சாம் யஹம் ப்ரபோ"


ஈஸ்வர உவாச -


ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே்ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வராநநே


அதாவது பார்வதி தேவி கேட்ட ஸ்ரீவிஷ்ணுவின் இந்த 1008 திருநாமங்களைக் கூற இயலாதவர்களுக்கு எளிதான வழியைக் கூறுங்கள் என்றதுக்கு


பரமசிவனார் பதில் உரைக்கிறார்,


"ராம ராம ராம"


இவ்வாறு ராம நாமத்தை ஜபம் செய்வது ஆயிரம் நாமங்களையும் ஜபம் செய்ததற்கு இணையாகும்.


சிறப்பு: இவ்வுபதேசம், சாட்ஸாத் விஷ்ணுவின் அம்சமான கிருஷ்ண பகவானே பீஷ்மர் அருகில் அமர்ந்து ஆனந்தமாக கேட்ட சிறப்பு உடையது.


நாமும் முடிந்தால் சகஸரநாமம்
தினமும் சொல்லுவோம்


முடியாவிட்டால் எல்லா நேரமும் எங்கும் எப்போதும் இராம நாமத்தை மனத்தால் சொல்லுவோம்


ஜெய் ஶ்ரீ ராம்