161.புமியதனில்


தனதனனத் தனதான


புமியதனிற் ப்ரபுவான
புகலியில்வித் தகர்போல
அமிர்தகவித் தொடைபாட
அடிமைதனக் கருள்வாயே
சமரி லெதிர்த் தசுர்மாளத்
தனியயில்விட் டருள்வோனே
நமசிவயப் பொருளானே
ரசதகிரிப் பெருமாளே.

- 160கயிலை மலைபதம் பிரித்து உரை


பூமி அதனில் பிரபுவான
புகலியில் வித்தகர் போல


பூமி அதனில் பிரபுவான = உலகில் அரசாகத் தோன்றிய
புகலியில் = சீகாழித் தலத்து வித்தகர் போல = ஞான சம்பந்தர் போல்


அமிர்த கவி தொடை பாட
அடிமை தனக்கு அருள்வாயே


அமிர்த கவித் தொடை பாட = அமுதமே இது என்று சொல்லத் தக்ககவி மாலைகளைப் பாடுதற்கு அடிமை தனக்கு அருள்வாயே =அடிமையாகிய எனக்கும் அருள் புரிவாயாக.


சமரில் எதிர்த்த சுர் மாள
தனி அயில் விட்டு அருள்வோனே

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
சமரில் = போரில் எதிர்த்து = எதிர்த்து வந்த அசுர் = அசுரர்கள் மாள =மடியும்படி தனி அயில் விட்டு அருள் வோனே = ஒப்பற்ற வேலாயுதத்தைச் செலுத்தி அருள் வோனே.


நமசிவய பொருளானோ
ரசத கிரி பெருமாளே.


நமசிவயப் பொருளானோ = நமசிவ என்னும் ஐந்தெழுத்தின் மூலப்பொருளானவனே ரசத கிரிப் பெருமாளே = வெள்ளி யங்கிரிப் பெருமாளே.