Announcement

Collapse
No announcement yet.

madness - Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • madness - Periyavaa

    பித்தா! பிறைசூடி!..


    ஒருநாள் பெரியவா கொஞ்சம் விஶ்ராந்தியாக அமர்ந்து கொண்டிருந்தபோது, ஒரு அம்மா வந்து பெரியவாளுக்கு எலுமிச்சை மாலை ஒன்றை ஸமர்ப்பித்தாள்.


    பெரியவா சிரித்துக் கொண்டே....


    "காலமேலேர்ந்து... இது மூணாவுது மாலை!" என்று சொல்லிவிட்டு, உச்சந்தலையில் கையால் தேய்த்துக் கொள்ளுவது போல் அபிநயம் பண்ணினார்..


    "இந்த மாதிரி, நெறைய தேவைப்படற ஸ்வாமிகள்-ன்னு தெரிஞ்சுதான் இப்டி கொண்டு வந்திருக்கா..." என்றவர் சற்று நேரம் மௌனமாக இருந்துவிட்டு, நமக்காக ஒரு அழகான உபன்யாஸம் செய்தார்.....


    "அம்பாளுக்குந்தானே இப்டி பண்ணிண்டிருக்கா?..ன்னு கேட்டா, அவ மட்டும் வேற என்னவாம்? பித்தனுக்குப் பொண்டாட்டின்னா, அவ மட்டும் வேற என்னவா இருப்பா?....


    .....அவனைப் "பித்தா"ன்னு ஆரம்பிச்சே, ஸுந்தரமூர்த்தி நாயனார் பாடினார்ன்னா......அவளையோ, ஸஹஸ்ரநாமமே "மத்தா"ன்னு ஒரு பேர் சொல்லிக் கூப்டறது!


    "மத்த"ன்னா, "மதம்"பிடிச்சவன்னு அர்த்தம். மத்தகஜம் ன்னு சொல்றோம். மதம் பிடிச்ச யானைக்கு, புத்தி ஸ்வாதீனத்லேயே இருக்காது. மதநீர்-ங்கறது, பித்தநீர்தான்!


    மத்தமும், பித்தமும் ஒண்ணுதான்! பித்தம் ஜாஸ்தியானா உண்டாறதுதான் பைத்யம். பைத்யம் பிடிச்சா, "பித்தம் தலைக்கேறிடுத்து !"ன்னு சொல்றோம். "சித்தம்" கலங்கினா, அது பித்தம், மத்தம்...ஒரே எதுகைமயந்தான்!


    ஊமத்தம்பூ இருக்கு. உன்மத்தந்தான், தமிழ்ல... ஊமத்தைன்னு ஆயிருக்கு. "உன்"ங்கறது prefix. பின்னால வரதை, ஒரு தூக்கு தூக்கிண்டு எழும்பறதுதான் prefix. தரணம், உத்தரணம் மாதிரி. மோச்சனம், உன்மோச்சனம் - ன்னு, ஈஶ்வரன் நம்மள ஒரே தூக்காத் தூக்கி, கடைத்தேத்தறதை "உன்"ன்னு ஒரு prefix சேத்து சொல்றது.


    உன்மத்தம்கறது, ஒரு செடியோட பேராவும் இருக்கு. அதை அரைச்சுக் குடிச்சுட்டா போறும்! சித்தக் கலக்கம் உண்டாய்டும்.


    அருணகிரிநாதர் "மத்தமும், மதியமும் வைத்திடும் அரன் மகன்"ன்னு பிள்ளையாரைப் பத்தின திருப்புகழ்ல அவரோட 'பித்து' அப்பாவை refer பண்ணியிருக்கார்.


    'மத்த'த்துக்கு அப்றம், மதியம்-ங்கறாரே ! அந்த சந்த்ரனும், சித்தப்ரமை உண்டாக்கறவன்தான். ஒரு பக்கம் அம்ருதத்தை கொட்டறான்; இன்னொரு பக்கம்... ரொம்ப நா...ழி, நெலா வெளிச்சத்ல படுத்துண்டு தூங்கினா, நரம்புல பலம் போறாதவாளோட புத்திய... கொஞ்சம் கலக்கவும் கலக்கிப்பிடுவான்! Lunar-ன்னு, சந்த்ரனோட ஸம்பந்தப்பட்டதை சொல்லுவா! Latin-ல, Luna-ன்னா சந்த்ரன். Lunatic- ன்னா தெரிஞ்சதுதானே!..."


    சிரிக்கிறார்.


    அப்போது, வயஸான பழுத்த ஶிவம் போல், ஓதுவார் ஒருவர் வந்து பெரியவாளை நமஸ்கரித்தார். ஓதுவார் யார் வந்தாலும், பெரியவா அவர்களை ஏதாவது பதிகம் பாடச் சொல்லிக் கேட்டு, அதன் சிறப்பை எடுத்துச்சொல்லி ஸ்லாகிப்பார்.


    வயஸான ஓதுவார், கணீரென்ற குரலில் பதிகம் பாடினார்....


    "பித்தா! பிறைசூடி!...பெருமானே அருளாளா...." என்று ஆரம்பித்து, ஏதோ ஒரு பரவஸ நிலைக்குப் போய்விட்டார்!


    கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தோட, நாத்தழுதழுக்க,


    "பிறைசூடி பெருமானே! சந்த்ரஶேகரா...ங்கற பெரியவாதானே! பெரியவாளை பாடிட்டேன்! பெரியவாதான் ஶிவபெருமான்..."


    ஆனந்தமாக அழுதார்.


    உண்மையை போட்டு உடைத்தாலும், பெரியவாளா ஒத்துக்கொள்ளுவார் ?


    பரிஹாஸமாக சிரித்துக் கொண்டே,


    "அதென்னமோ...எனக்குத் தெரியாது....நீங்க என்னமோ பாடறேள்! ஆனா, அதுக்கு முந்தி ஆரம்பத்ல ஏதோ சொல்லிக் கூப்படறதா வருதே[பித்தா!..] அது இங்க [தன்னைச் சுட்டிக்காட்டி] ரொம்பப் பொருத்தந்தான்!... பித்தா!........"


    காண்போருக்கு......பெரியவாப்பித்து பிடிக்கும்படி, அழகாகச் சிரித்தார்.


    Compiled & penned by Gowri Sukumar
Working...
X