Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    167.மனையவள்


    தனதன தனத்த தான தனதன தனத்த தான
    தனதன தனத்த தான தனதான


    நகைக்க வூரி னனைவரு நகைக்க லோக
    மகளிரு நகைக்க தாதை தமரோடும்
    மனமது சலிப்ப நாய னுளமது சலிப்ப யாரும்
    வசைமொழி பிதற்றி நாளு மடியேனை
    அனைவரு மிழிப்ப நாடு மனவிருள் மிகுத்து நாடி
    னகமதை யெடுத்த சேம மிதுவோவென்
    றடியனு நினைத்து நாளு முடலுயிர் விடுத்த போது
    மணுகிமு னளித்த பாத மருள்வாயே
    தனதன தனத்த தான எனமுர சொலிப்ப வீணை
    தமருக மறைக்கு ழாமு மலைமோதத்
    தடிநிக ரயிற்க டாவி யசுரர்க ளிறக்கு மாறு
    சமரிடை விடுத்த சோதி முருகோனே
    எனைமன முருக்கி யோக அநுபுதி யளித்த பாத
    எழுதரிய பச்சை மேனி யுமைபாலா
    இமையவர் துதிப்ப ஞான மலையுறை குறத்தி பாக
    இலகிய சசிப்பெண் மேவு பெருமாளே



    -167ஞானமலை


    (இடம் விளங்கவில்லை--- வ.சு.செங்கல்வராயபிள்ளை.
    ஆனால் அரக்கோணம் காட்பாடி வழியில் பாணாவரம் அருகில் கோவிந்தச்சேரி கிராமம்தான் ஞானமலை என வலையப்பட்டி கிருஷ்ணன் கருதுகிறார்.
    அங்கு முருகன் பிரம்ம சாஸ்தாவாக
    {முருகனின் 16 திருவுருவ கோலங்களில் ஒன்று}
    காட்சியளிக்கிறார்)
    .


    பதம் பிரித்து உரை


    மனையவள் நகைக்க ஊரில் அனைவரு(ம்) நகைக்க லோக
    மகளிர் நகைக்க தாதை தமரோடும்


    மனையவள் = மனைவி. நகைக்க = நகைக்க. ஊரில் அனைவரும் நகைக்க = ஊரில் உள்ள யாவரும் நகைக்க. லோக மகளிர் நகைக்க =உலகத்திலுள்ள பெண்கள் நகைக்க. தாதை = தந்தை. தமரோடும் =சுற்றத்தாரோடு.


    மனம் அது சலிப்ப நாயனும் உ(ள்)ளம் அது சலிப்ப யாரும்
    வசை மொழி பிதற்றி நாளும் அடியேனை


    மனம் அது சலிப்ப = மனம் வெறுப்பு அடைய. நாயேன் உள்ளம் அது சலிப்ப = அடியேனது உள்ளம் வெறுப்பு அடைய. யாரும் = யாவரும். வசை மொழி = பழிப்பு மொழியை பிதற்றி = பலவாறு ஆராய்ந்து பேசி.நாளும் = நாள்தோறும். அடியேனை = அடியேனை


    அனைவரும் இழிப்ப நாடும் மன இருள் மிகுத்து நாடின்
    அகம் அதை எடுத்த சேமம் இதுவோ என்று


    அனைவரும் இழிப்ப = எல்லாரும் இழிவாகப் பேச. நாடும் மனம் =எண்ணமிடும் மனத்தில். இருள் மிகுந்து = இருள் மிகுந்து நாடின் =யோசித்துப் பார்த்தால். அகம் அதை = (நான்) உடலை. எடுத்த சேமம் =எடுத்த இன்பம். இதுவோ என்று = இது தானோ என்று.




    அடியனும் நினைத்து நாளும் உடல் உயிர் விடுத்த போதும்
    அணுகி முன் அளித்த பாதம் அருள்வாயே


    அடியனும் = அடியேனும். நாளும் நினைத்து = நாள் தோறும் நினைத்து. உடல் உயிர் விடுத்த போதும் = (முடிவில்) உடலினின்று உயிரை விடத் துணிந்த சமயத்தில். அணுகி = என் அருகில் வந்து. முன் அளித்த = நீ அப்போது அளித்த. பாதம் அருள்வாயே = திருவடியை அருள் புரிந்து உதவுக.


    தனதன .............என முரசு ஒலிப்ப வீணை
    தமருகம் மறை குழாமும் அலை மோத


    தனதன...என = (இவ்வாறு). முரசு ஒலிப்ப = பறை ஒலி செய்ய. வீணை தமருகம் = வீணையும் உடுக்கையும். மறை = வேத ஒலி. குழாம் =கூட்டம். அலை மோத = அலை மோதுவதைப் போலப் பெருக.


    தடி நிகர் அயில் கடாவி அசுரர்கள் இறக்கு மாறு
    சமர் இடை விடுத்த சோதி முருகோனே


    தடி நிகர் = மின்னல் போல ஒளிவிடும். அயில் கடாவி = வேலைச் செலுத்தி. அசுரர்கள் இறக்குமாறு = அசுரர்கள் மடியும்படி. சமர் இடை விடுத்த = போர்க்களத்தே விடுத்த. சோதி முருகோனே = சோதி முருகனே.


    எனை மனம் உருக்கி யோக அநுபூதி அளித்த பாத
    எழுத அரிய பச்சை மேனி உமை பாலா


    எனை மனம் உருக்கி = என் மனத்தை உருக்கி. யோக அநுபூதி அளித்த = அனுபூதியை அளித்த. பாத = திருவடிகளை உடையவனே. எழுத அரிய = எழுதுதற்கு அரிதான. பச்சை மேனி = பச்சை மேனியை உடைய. உமை பாலா = பார்வதியின் பாலனே.


    இமையவர் துதிப்ப ஞான மலை உறை குறத்தி பாகம்
    இலகிய சசி பெண் மேவு பெருமாளே.


    இமையவர் துதிப்ப = தேவர்கள் துதிக்க. ஞான மலை உறை = ஞான மலையில் வீற்றிருக்கும். குறத்தி பாக = குறத்தியாகிய வள்ளியின் பங்கனே. இலகிய = விளங்குகின்ற. சசிப் பெண் மேவு =இந்திராணியின் மகளாகிய தேவசேனை விரும்புகின்ற. பெருமாளே =பெருமாளே
    .





    விளக்கக் குறிப்புகள்


    1. நாளும் உடல் உயிர் விடுத்த போதும் அணுகி...
    தமது வாழ்க்கைத் துன்பத்தை நினைத்துத் தாம் உயிர் துறக்கத் துணிந்த வரலாற்றைக் குறிக்கும்.


    2. எனை மனம் உருக்கி யோக அநுபூதி அளித்த....
    இறைவன் திருவடி சூட்டி யோக அனுபூதியைத் தமக்கு அருளிய திறன் இங்கு குறிப்பிடப்படுள்ளது
    .
Working...
X