Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    172.தவளரூப


    தனன தானன தத்தன தந்தன
    தனன தானன தத்தன தந்தன
    தனன தானன தத்தன தந்தன தனதான


    தவள ரூபச ரச்சுதி யிந்திரை
    ரதிபுலோமசை க்ருத்திகை ரம்பையர்
    சமுக சேவித துர்க்கை பயங்கரி புவநேசை
    சகல காரணி சத்தி பரம்பரி
    யிமய பார்வதி ருத்ரி நிரஞ்சனி
    சமக நாயகி நிஷ்களி குண்டலி யெமதாயி
    சிவைம நோமணி சிற்சுக சுந்தரி
    கவுரி வேதவி தக்ஷணி யம்பிகை
    த்ரிபுரை யாமளை யற்பொடு தந்தருள் முருகோனே
    சிகர கோபுர சித்திர மண்டப
    மகர தோரண ரத்ந அலங்க்ருத
    திரிசிராமலை அப்பர் வணங்கிய பெருமாளே

    -172 சிராப்பள்ளி


    பதம் பிரித்தல்


    தவள ரூப சரச்சுதி இந்திரை
    ரதி புலோமசை க்ருத்திகை ரம்பையர்
    சமுக சேவித துர்க்கை பயங்கரி புவநேசை


    சகல காரணி சத்தி பரம்பரி
    இமய பார்வதி ருத்ரி நிரஞ்சனி
    சமய நாயகி நிஷ்களி குண்டலி எமது ஆயி


    சிலை மநோமணி சிற்சுக சுந்தரி
    கவுரி வேத விதக்ஷணி அம்பிகை
    த்ரிபுரை யாமளை அற்பொடு தந்து அருள் முருகோனே


    சிகர கோபுர சித்திர மண்டப
    மகர தோரண ரத்ந அலங்க்ருத
    திரிசிரா மலை அப்பர் வணங்கிய பெருமாளே
    .


    [d/v6]பதம் பிரித்து உரை




    தவள ரூப சரச்சுதி = வெண்ணிறம் கொண் சரஸ்வதி இந்திரை =இலக்குமி ரதி புலோமசை = ரதி, இந்திராணி க்ருத்திகை = கிருத்திகை மாதர் ரம்பையர் = அரம்பையர்கள் சமுக சேவித = ஆகியோரால் வணங்கப்படும் துர்க்கை = துர்க்கா தேவி பயங்கரி = பயங்கரிபுவநேசை = புவனேசுரி.


    சகல காரணி = எல்லா காரியங்களுக்கும் காரணமாக இருப்பவள். சத்தி = சத்தி பரம்பரி = முழு முதலாகிய தேவி இமய பார்வதி = இமய மலை அரசனின் மகளான பார்வதி ருத்ரி = ருத்ரி நிரஞ்சனி =மாசற்றவள் சமய நாயகி = சமயங் களுக்குத் தலைவி நிஷ்களி =உருவம் இல்லாதவள் குண்டலி = கிரியா சத்தியானவள் எமது ஆயி =எம் தாய்.


    சிவை = சிவன் தேவி மநோமணி = மனத்தை ஞான நிலைக்கு எழுப்புபவள் சிற்சுக சுந்தரி = அறிவு ரூப ஆனந்த அழகி கவுரி = கவுரி.(கௌரி – பொன் நிறத்தினவள்) வேத விதக்ஷணி = வேதத்தில் சிறப்பாக எடுத்து ஓதப்பட்டவள் அம்பிகை = அம்பிகை த்ரி புரை = திரி புரங்களை எரித்தவள் யாமளை = சியாமள நிறம் கொண்டவள் (ஆகிய பார்வதி0 அற்பொடு = அன்புடன் தந்து அருள் முருகோனே = ஈன்ற குழந்தையே.


    சிகர கோபுர = மலை உச்சியும் சித்திர மண்டப = அழகிய மண்டபங்களும் மகர தோரண = மகர மீனின் வடிவமைந்த ரத்ந அலங்க்ருத = அலங்காரத் தொங்கல்களும், ரத்ன சிங்காரங்களும் நிரம்பிய திரிசிரா மலை = திரிசிரா மலையில் எழுந்த ருளியுள்ளஅப்பர = சிவபெருமான் வணங்கிய பெருமாளே = வணங்கிய பெருமாளே[/div6].


    .




    இப்பாடலில் உமாதேவியின் திருநாமங்கள் கூறப்பட்டுள்ளன
Working...
X