Announcement

Collapse
No announcement yet.

Ilancikumara swami temple. Ilanchi

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Ilancikumara swami temple. Ilanchi

    சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
    *47*
    *நெல்லை மாவட்ட சிவாலயத் தொடர்.*
    <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
    *அருள்மிகு இலஞ்சிக் குமாரர் திருக்கோயில். இலஞ்சி.*
    <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
    *இறைவன்:* வள்ளி தேவசேனா சமேத அருள்மிகு இலஞ்சிக் குமாரர், இருவாலுக நாயகர்.


    *இறைவி:* அருள்தரும் இருவாலுக நாயகர்.


    *தீர்த்தம்:* சித்திரா நதி.


    *தல விருட்சம்:* மகிழமரம்.


    *ஆகமம்:* மகுடாகமம்.
    [[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]


    *தல அருமை:*
    திரு இலஞ்சி எனும் திருத்தலத்தில் சித்திராநதி தீர்த்த்தில் காசிப முனிவர், துர்வாச முனிவர் மற்றும் கபில முனிவர் ஆகியோர்களுக்கு ஒரு ஐயப்பாடு எழுந்திருந்தது.


    இம் மும்முனிவர்களின் ஐயப்பாட்டை, நீக்கி அன்னார்கள் வேண்டிக் கொண்டதிற்கிணங்க இத்திருத்தலத்தில் *இலஞ்சிக் குமாரராக* முருகப்பெருமான் வள்ளி தேவசேனா சமேதராக எழுந்தருளி காட்சியருளிக் கொண்டிருக்கிறார்.


    அத்துடன், பார்வதி பரமேஸ்வரருக்கு திருமணம் நடந்தபோது, இத்திருமணத்தில் அனைவரும் கலந்துகொள்ள இமயம் சென்றார்கள்.


    இதனால், இமயத்தின் வடதிசை தாழ்ந்து போயின. தென்திசை உயர்ந்து போயின.


    இவ்வேற்றத் தாழ்வுகளை சமபடுத்த, அகத்தியப் பெருமானை சிவபெருமான் அழைத்து ஆணையிட அதை ஏற்றுக் கொண்ட அகத்தியர் தென்திசை நோக்கிப் பயணித்தார்.


    தென்பகுதிக்குச் சென்று கொண்டிருந்த குறுமுனி அகத்தியர், பிரதிஷ்டை செய்யப்பட்ட *வெண்மணலான சிவலிங்கம்* இத்தலத்தில் இருக்கிறது.


    இவர், அகத்திய முனிவருக்கு தகுந்த உபதேசங்களை அருளினார்.


    வைணவத் தலமாய் இருந்த குற்றாலத்து மாலனை சிவத்தலமாக்கி குற்றாலீசுவரராக மருகி ஆக்கினார் குறுமுனிவர் அகத்தியப் பெருமான்.


    இறைவனின் கட்டளையைச் சிரமேற்கொண்டு தென்திசை புறப்பட்ட, அகத்தியர் பொதிகைமலையின் குற்றாலத்திற்கு வந்தார்.


    அப்போது குற்றாலத்தில் உள்ள திருக்கோயில் வைணவத் திருக்கோயிலாக இருந்தது.


    அகத்தியர் சிவவேடத்துடன் ஆலயத்தினுள் பிரவேசிக்க, வைணவர்கள் அகத்தியரை உள்ளே செல்ல விடாது தடுத்தனர்.


    உடனே திரும்பி சென்று, சித்ரா நதி வீரத்திற்கு வந்தார்.


    அங்கிருந்த வெண்மணலைக் கொண்டு சிவலிங்கம் அமைத்தார்.


    தேவநாகரியில் வெண்மணல் *இருவாலுகம்* என அழைக்கப்படுவதால் இத்தலத்து ஈசனை *இருவாலுக ஈசர்* என பெயர் ஏற்பட்டது.


    பின் வந்த வேலை நினைவுக்கு வந்த அகத்தியர், மனமுருக முருகப்பெருமானை வேண்டினார்.


    முருகப் பெருமானும் அகத்தியர் முன்னே தோன்றி, *வைணவ வேடம் தாங்கி குற்றாலத்துக் கோயிலுக்குள் செல்"* திருக்கோயிலுக்குள்ளிருக்கும் திருமாலைக் *குறுகுக எனக் குறுக்கி குற்றிலாநாதராக்கு!"* எனப் பணித்தார் இத்தல முருகப்பெருமான்.


    அகத்தியரும் அதேபோலவே செய்து முடித்தார்.


    *இலக்கியச் சிறப்பு:*
    நீரில், தாமரைகள் நிறைந்திருக்கப் பெற்ற இடம் எனப் பொருள் கொண்ட *இலஞ்சி* என்னும் இத்தலத்தில் எழுந்தருளி அருள்புரியும் திருஇலஞ்சி குமாரரை அருணகிரிநாதர் தம் திருப்புகழில்.....


    *சுரும்பணி கொண்டால் நெடுங்குழல் கண்டு*


    *தூரந்தெரிகின்ற விழிவேலால்*


    *சுழன்று சுழன்று துவண்டு துவண்டு*


    *சுருங்கி மயங்கி மடவார்தோள்*


    *விரும்பி வரம்பு கடந்து நடந்து*


    *மெலிந்து தளர்ந்து மடியாதே*


    *விளங்கு கடம்பு விளைந்தணி தண்டை*


    *விதங்கொள் சதங்கை அடிதாராய்*


    *பொருந்தல மைந்து சிதம்பெறனின்ற*


    *பொலங்கிரியொன்றை யெறிவோனே*


    *புகழ்ந்து மகிழ்ந்து வணங்கு குடங்கொள்*


    *புரந்தரன் வஞ்சி மணவாளா*


    *இரும்புன மங்கை பெரும்புளகஞ்செய்*


    *குரம்பைமணந்த மணிமார்பா*


    *இலஞ்சியில் வந்த இலஞ்சியமென்று*


    *இலஞ்சியிலமர்ந்த பெருமாளே!"*
    என பணிந்து வணங்கிப் பாடியுள்ளார்.


    *தல அருமை:*
    புராண காலத்திலேயே தோன்றிய இத்திருத்தலத்தை பதினான்காம் நூற்றாண்டில் மாறவர்மன் குலசேகரபாண்டியனால் புரணமைத்து செப்பனிட்டுக் கட்டுவித்தான்.


    இத்திருக்கோயிலின் சுற்று மதில்சுவரை பதினைந்தாம் நூற்றாண்டில், சொக்கம்பட்டி ஜமீன்தாரரான காளத்திய பாண்டியன் கட்டுவித்து சிறப்பு செய்வித்தான்.


    *தனிச்சிறப்பு:*
    இத்திருக்கோயில் *இருவாலுக ஈசர்* என்றும் *இருவாலுக ஈசர்க்கினியாள்* என்றும் சிவத்தலமாக இருந்தபோதிலும், திருஇலஞ்சிகுமாரர் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.


    முருகன், அம்மை அப்பருடன் எழுந்தருளி உள்ளதால் இங்கு திருமணம் செய்வது விசேஷம்.


    ஆகவே, இப்போது இங்கு அதிக அளவில் திருமணம் நடப்பது தனிச்சிறப்பு.


    இலஞ்சி எனும் சொல்லுக்கு மகிழம் என்று பொருள்.


    மேலும், முருகப்பெருமான் ரிஷிகளின் வேண்டுகோளின்படி இத்தலத்தில் எழுந்தருளி வேண்டுவோர்க்கு ஞானமீந்து, விரும்பும் வசிப்பிடம் இன்றுவரையும் கொடுத்தருள்கிறார்.


    இத்தலத்து திருவிலஞ்சிக் குமாரரை, வரதராஜப் பெருமான் என்று அழைக்கும் பெயரும் ஒன்றுண்டு.


    *திரிகூட சலத்தீசான திக்கினி விலஞ்சியான்*


    *புரியினிற் கபிலராதி யோகியர் புகழ்ந்து கேட்ப*


    *வரியமுத் தேவர்மூவராவது நாமே யென்று*


    *சுருதியின் வரதராஜத் தொல்பெயர் சூட்டிக் கொண்டான்*
    --திருச்செந்தூர் புராணம்.


    திருக்குற்றாலத்தின் ஈசான திசையில் அமைந்துள்ள இலஞ்சியில் குடிகொண்டுள்ள குமரனிடம் கபிலர், துர்வாசர், காசிபர் ஆகியோர்கள் ஒன்றுகூடி, *உண்மையான பரம்பொருள் யார்?* என கேட்டனர்.


    அதற்கு, *நானே பரம்பொருள்* என்று சொல்லித் தனக்குத் தானே வரதராஜப்பெருமான் எனும் தொல்பெயரைச் சூட்டிக் கொண்டார்.


    வரதன் என்றால் வரம் தரும் வள்ளல் எனப் பொருள்.


    வேண்டுவோர் கண்டு வேண்டியது கொடுக்கும் வள்ளலாக இத்தலத்துக் குமரன் அருள்கிறார்.


    முருகப்பெருமான் கருவில் உதித்த அவதாரம் கிடையாது. முருகன் சிவனுடைய அங்க அவதாரமாவார்.


    இதைக்கூட அருணகிரிநாதர் கந்தனுபூதியில், *கருவா மறவா* எனத்தொடங்கும் பாடலின் கடைசி வரியில் *வரதா முருகா மயில்வாகனனே!* என்றே பாடியிருக்கிறார்.


    ஆகையினாலே முருகனுக்கும் வரதராஜப்பெருமான் என்னும் பெயர் பொருத்தம் என்பது புலன்.


    *பூஜா காலம்:*
    அனுதினமும், திருவனந்தல், விளாபூஜை, காலசந்தி, உச்சிக் காலம், சாயரட்சை, அர்த்தசாமம் என ஆறுகால பூஜை நடைபெறுகிறது.


    காலை 6.30 மணி,
    நண்பகல் 12.00 மணி,
    பிற்பகல் 4.30 மணி,
    இரவு 8.00 மணி.


    *திருவிழாக்கள்:*
    சித்திரை பிரமோத்சவம், வைகாசி விசாகம்,, நவராத்திரி, கந்த சஷ்டி, தனுர் பூஜை தை பூசம், மாசி மகம் ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.


    *இருப்பிடம்:*
    இத்திருக்கோயில், தென்காசி செங்கோட்டை நெடுஞ்சாலையில் ஐந்து கி.மீ தொலைவில் உள்ளது.


    குற்றாலம் செங்கோட்டை நெடுஞ்சாலையில் இரண்டு கி. மீ தொலைவிலும் அமைந்திருக்கிறது.


    மதுரை திருநெல்வேலி தென்காசியிலிருந்து பேருந்துகளும் தொடர்வண்டிகள் வசதி உள்ளது.


    *அஞ்சல் முகவரி:*
    அருள்மிகு திருஇலஞ்சிக்குமாரர் திருக்கோயில்,
    இலஞ்சி,
    தென்காசி வட்டம்,
    திருநெல்வேலி- 627 805


    *தொடர்புக்கு:*
    04633 283 201


    திருச்சிற்றம்பலம்.
    நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்களில் நாளைய தலப்பதிவு *அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில், பண்பொழி.*
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X