பொதுவாக இந்த ஆசமனமனமானது தற்காலத்தில் பலர் கையில் மாட்டிக்கொண்டு படுகின்ற அவஸ்தையை நினைத்தால் சிரிப்பதா வருத்தப்படுவதா என்று தெரியாமல் முழிக்கவேண்டியிருக்கும்.


ஏதோ கடனே என்று மூன்று தடவை உத்தரிணியால் ஜலத்தை எடுத்து மேலும் கீழும் ஜலத்தை சிந்தியவாறே உறிஞ்சவேண்டியது; பிறகு தொடர்ந்து ஜெட் வேகத்தில் கை விரல்களை முகத்தின் அருகில் கொண்டு சென்று கன்னங்களையும் தலையையும் இஷ்டத்திற்குத் தொட வேண்டியது; அவ்வளவுதான் அவர்களை பொறுத்த வரையில் ஆசமனம் முடிந்து விட்டது.


ஆசமனம் இப்படியெல்லாம் செய்யக் கூடாது. கொஞ்சம்தான் எடுத்துப் பருக வேண்டும். அதாவது முழு உளுந்து முழுகும் அளவுதான் ஜலத்தை மூன்று தடவை உட்கொள்ள வேண்டும். அதுவும் எச்சல் பண்ணாமல்.


ஆசமனம் என்பது நமது ப்ராஹ்மணர்களின் நித்ய வாழ்க்கையில் ஒரு மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது. இதை செய்வது ரொம்பவும் சுலபம்.


ஆசமனம் மிகவும் உசத்தியான ஒரு விஷயம். .


ஆசமனம் செய்யும்போது திசைக்கும் பிராதான்யம் தரப்பட்டுள்ளது.. இஷ்டத்திற்கு எந்த திசையை நோக்கியாவது ஆசமனம் அனுஷ்டிக்கக்கூடாது. கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கித்தான் உட்கார்ந்து ஆசமனம் செய்யவேண்டும். மேற்கு மற்றும் தெற்கு திசைகளை தவிர்க்கவேண்டும்.

ஆசமனத்தின் முக்கியத்துவம்:
ஆசமனத்தின் முக்கியத்துவத்தை பற்றி ஸ்ம்ருதி வாக்யங்களிலும் மற்றும் புராணங்களிலும் பல குறிப்புக்கள் நமக்கு காணக்கிடைக்கின்றன. தேவ பூஜையில்கூட ஷோடஸ உபசாரங்கள் செய்யும் சமயத்தில் ஆசமனியத்திற்கும் ஒரு இடம் உள்ளதை நாம் அறிந்திருப்போம்.


மனு, ஆபஸ்தம்பர், போதாயனர், வியாசர், ஹாரிதர், பராசரர், பரத்வாஜர், யாக்ஞவால்க்யர், மாக்கண்டேயர், கௌதமர், பிரஜாபதி, போன்ற ரிஷிகள் ஆசமன நிமித்தங்கள் பற்றியும், ஆசமன விதிகள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளது நமது பாக்யமே. இந்த விவரங்கள் எல்லாம் 'ஸ்ம்ருதி முக்தாபால' க்ரந்தத்தில் நாம் விரிவாக பார்க்கலாம்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
வேதத்தில் ஆசமன விதி:
எல்லா விசாரங்களுக்கும் வேத ப்ராமண்யம் மிக முக்கியம். எல்லா கர்மாக்களிலும் பாஹ்ய சுத்திக்கு ஸ்நானமும், அந்த்ர சுத்திக்கு ஆசமனமும் விதிக்கப்படுகின்றன. அவ்விதத்தில் ஆசமனம் மிக முக்கியமானது.


வேதத்தில் கூறப்பட்டதாலேயே ஆசமன விதி பரம ப்ராஹ்மண்யத்தை அடைந்துள்ளது. யஜுர் வேதத்தில் (ப்ராஹ்மணத்தில்) வரும் வாக்கியத்திற்கு ஸாயன பாஷ்யத்தில் பிரதரம் (பள்ளத்தில்) ஆஸுரத்வ பூர்ணத்தினால் அசுத்தியானது எனவே அதில் ஆசமனம் செய்யலாகாது என்று கூறுகிறது.


அவ்விதமே ஆபஸ்தம்ப தர்ம நிபந்தத்திலும் மழை ஜலங்களிலும், குட்டை ஜலங்களிலும் (பள்ளத்தில் நிரம்பியுள்ள) ஆசமனம் செய்யக்கூடாது என்று மேற்கூறிய வேத வரிகளை அப்படியே அங்கீகரிக்கிறார்.


விதிவிலக்கு இல்லாமல் எல்லாவிதமான வைதிக கார்யங்களிலும், ஸ்ரௌத ஸ்மார்த்த காரியங்களிலும் ஆசமனம் இல்லாத பிரயோகம் கிடையாது.
(சர்மா சாஸ்திரிகளின் 'ஆஹ்நிக தீபிகா' நூலிலிருந்து)