*ஆலயத் திறப்பு காலம்:*
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6.00 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
*கோவில் அமைப்பு:*
கோட்டூர் இரண்டு பகுதிகளாக கூறப்படுகின்றது.
ஒன்று, மேலக்கோட்டூர் என்றும், மற்றொன்று கீழக்கோட்டூர் என்றும் கூறப்படுகின்றது.
மேலக்கோட்டூரிலுள்ள கோவிலே பாடல் பெற்ற சிவஸ்தலம்.
கோவிலுக்கு முதலாவதாக காட்சிதருகிறது ஒரு நுழைவாயில்.
அதையடுத்து மேற்கு நோக்கிப் பார்த்த வண்ணம் மூன்று நிலை ராஜகோபுரமும் காட்சி தர......
*சிவ சிவ"* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.
இரண்டு பிரகாரத்துடன் விளங்கும் இக்கோவிலின் முதல் வாயில் வழியாக உள்ளே நுழைந்ததும் கவசமிட்ட கொடி மரமத்தைக் காணப்பெற்றோம்.
முன் நின்று வணங்கிக் கொண்டோம்.
அடுத்து பலிபீடத்தின் அருகாக நின்று, நம் ஆணவமலமொழிய பிரார்த்தித்துக் கொண்டோம்.
அதற்கடுத்து நந்தியை பயபவ்யத்துடன் வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
உள்பிரகாரத்தில் மூலவர் சந்நிதிக்கு வந்தோம். சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்துக் கொண்டிருந்தார்.
மனமுருக பிரார்த்தனை செய்வித்து அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியை பெற்று வெளிவந்தோம்.
கருவறை கோஷ்டத்தில் இதன் தெய்வங்களாக நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர்களைக் கண்டு வணங்கி தொடர்ந்தோம்.
சண்டேசுவரர் சந்நிதிக்குச் சென்று, அவருக்குண்டான வர்க்கத்தைச் செலுத்தி வணங்கி நகர்ந்தோம்.
பின்பு, அம்பிகை தேனாம்பாள் சந்நிதிக்குச் செல்ல, அங்கு அம்பாள் கிழக்கு நோக்கி அருட்காட்சிகளை வழங்கிக் கொண்டிருந்தாள்.
அம்பாள் நின்ற திருக்கோலத்தில் அழகுறக் காட்சி தந்தாள்.
மாசி மகத்தன்று இத்தல இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்தால், லிங்கத்தில் அர்த்தநாரீஸ்வர வடிவம் தெரிவதை அனைவரும் பார்த்திருக்கின்றேன், நாங்களும் அக்காட்சியினைப் பார்த்லிருக்கிறோம் என்று, எங்களுக்கு முன் வரிசையில் சென்றோர் கூறக் கேட்டோம்.
தலத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளது இங்குள்ள ரம்பையின் உருவம். கண்டு பிரமித்தோம். இவள் முன்னைவிடவும் அதிக ஈடுபாட்டுடன் சிவனை அனுதினமும் பூஜித்து வந்தாளாம்.
தவம் செய்த அமைப்புடன் காணும் ரம்பையின் உருவச்சிலை காணவேண்டிய ஒன்று.
மற்றும் *உமாமகேஸ்வரர்,* அற்புதமான *அர்த்தநாரீசுவரர்* ஆகியோர்களின் அமைப்பை அனைவரும் அவசியம் தரிசிக்க வேண்டியவை.
இக்கோயிலினுள் உள்ள அமுதக் கிணற்றோடு முள்ளியாறு, சிவகங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், சிவ தீர்த்தம், விஸ்வகர்ம தீர்த்தம், ரம்பை தீர்த்தம் மற்றும் மண்டை தீர்த்தம் என ஒன்பது தீர்த்தங்கள் இத்தல தீர்த்தங்களாக உள்ளன.
அத்திரி மகரிஷியின் ஆலோசனையின் பெயரில், இத்திருத்தலம் வந்து இருந்து, கொழுந்தீசுவரனை நோக்கி இடது காலை தரையில் ஊன்றி வலது கால் மடித்து, உள்ளங்காலில் இடது கையை வைத்து, வலது கையை தலைமேல் வைத்து, அக்கினியில் நின்று தவம் செய்து பாவதோஷ நிவாரணம் பெற்றாள்.
*''கொழுந்தீசனை அக்னி புகுந்தேயெழிலாடலரசி யிடப் பாதந்தரை யிருத்தி யிடக் கரமதனை பாத நடு காட்டி சிரத்தே வலக்கரமிருத்தி தபசு செய"*- என்றார் மூலர்.
குடும்பத்தில் எத்துணை உழைத்தாலும் மேன்மை இல்லை. குழந்தைகளுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் கோளாறு இருக்கிறது. தெரியாமல் காரை ஏற்றி நாயைக் கொன்றேன்.
தெரியாது உயிரினங்களை இம்சை செய்தேன் என வருந்துவோரும், பைரவனின் அம்சமே நாய் இதனை தெரியாது கொன்றாலோ, இம்சை செய்தாலோ, பிரம்மஹத்தி தோஷத்திற்கு சமமான தோஷம் பற்றி, பிறவிதோறும் தொந்தரவு தரும் என்கிறார் திருப்பதஞ்சலி யோகியார் எனுஞ் சித்தர்.
கொழுந்தீசுவரருக்கு, அக்ரபரமேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. இசையை கற்கவும், இசையில் புகழ் பெறவும், பெருந்திரவியம் சம்பாதிக்கவும், பாடல் பாடி பிறரை மயக்க, பாடல்கள் எழுதி கீர்த்தி பெற அம்பிகை மதுரபாசினியாம் தேனாம்பிகையை முழுமதியாம் பவுர்ணமியில் மாலை வேளை தொழுதுவர சித்திக்கும் என்றார் காகபுசண்ட முனிச்சித்தர்.
இத்திருத்தலத்தில் ஒன்பது வகையான தீர்த்தங்கள் உள்ளன.
இதனை மூலர், *''முள்ளி கங்கை பிரம்ம சிவமண்டை அமுதமிந்திர விசுவகன்ம வரம்பாவில் யட்டமி முழுகி கொழுந்தீசரை கொண்டாடு வார் பொருள் பொன்னில் திளைப்பார் பிசகிலையே"* என்றார்.
முள்ளியாற்றுத் தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், பிரம்மன் தீர்த்தம், சிவ தீர்த்தம், மண்டை தீர்த்தம், அமுத தீர்த்தம், இந்திர தீர்த்தம், விசுவகன்ம தீர்த்தம், அரம்பா தீர்த்தம் ஆகிய ஒன்பது தீர்த்தங்களில் அஷ்டமி திதியில் நீராடி கொழுந்தீசுவரரை கொண்டாடி ஆராதிக்க வற்றாச் செல்வம் வீட்டில் விளங்கும் என்பது முக்காலும் உண்மை.
இத்தல விருட்சம் வன்னி. சனிக்கிழமைகளில் இத்தல விருட்சத்தை பூஜித்து வந்தால் கண்ணில் ஏற்படும் கோளாறு, பால்யத்தில் தலையில் ஏற்படும் கேசக் கோளாறு (சொட்டைத் தலை) தன்னால் முடி உதிர்தல் போன்றன அகலும் என்கின்றார் பாம்பாட்டி சித்தர்.
*தல அருமை:*
விருத்திராசுரன் என்ற அரக்கன் தேவர்களை மிகக்கடுமையாக துன்புறுத்தி வந்தான்.
இந்திரன், அவனை வெல்வதற்கான வழியைக் கூறும்படி பிரம்மாவிடம் வேண்டினான்.
ததீசி என்ற முனிவரின் முதுகெலும்பை பெற்று அதை வஜ்ராயுதமாக்கி அதன் மூலம் மட்டுமே அரக்கனை கொல்லமுடியும் என்று பிரம்மா இந்திரனிடம் கூறினார்.
இந்திரனும் அதன்படி முனிவரைக் கொன்று அவரது முதுகெலும்பை வஜ்ராயுதமாக்கி விருத்திராசுரனனைக் கொன்றான்.
முனிவரை கொன்று முதுகெலும்பை பெற்றதால், இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
இந்த தோஷத்தை போக்கிக் கொள்ள தேவகுருவான பிரகஸ்பதியை நாடினான்.
அவரின் கூறிய ஆலோசனைப்படி இந்திரன் பூவுலகம் வந்து வன்னிமரத்தின் அடியில் இத்தலத்தில் இருக்கும் சிவலிங்கத்தை, ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதனால் அபிஷேகம் செய்து வழிபட்டான்.
சிவபெருமான் அருளால் பிரம்மஹத்தி தோஷமும் நீங்கப் பெற்றான். இந்திரன் பூஜித்ததால் இத்தலம் இந்திரபுரம் என்றும் அழைக்கப்பட்டது.
இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானையும் இத்தல இறைவனை வழிபட்டது.
தனது தந்தத்தால் பூமியில் கோடு கிழித்ததால் இத்தலம் கோட்டூர் எனப் பெயர் பெற்றது.
இந்திரன் பூஜித்து பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றதால், இத்தலத்தில் நீராடி இறைவனை வழிபடுபவர்களின் பிரம்மஹத்தி முதலான சகல தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
*சிறப்புகள்:*
இந்திரன் சபையில் நடனமாடிய ரம்பா களைப்பால் உறங்க, அவளது ஆடை விலகியிருப்பதைக் கண்ட நாரதர், ஆடை விலகுவது தெரியாமல் ஒரு பெண் தூங்குவதா?" எனக் கோபங்கொண்டு சாபமிட்டார்.
ரம்பா தன்நிலை உணர்ந்து விமோசனம் வேண்டிட, நீ பூவுலகில் சிவனை ஆராதித்து வந்தால் சாபம் நீங்கும் என்றதால் இங்கு வந்து வழிபட்டார்.
அப்போது ரம்பா இல்லாதை உணர்ந்த இந்திரன் அவளை அழைத்துவர ஒரு கந்தர்வனை அனுப்பினான்.
ரம்பையோ, சிவதரிசனம் கிடைக்காமல் அங்கு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாள்.
🏾நீலகண்டனே, நெற்றிக்கண்ணனே, ஒற்றைவிடை மீது ஏறி வருபவனே, முத்தலைச்சூலம் ஏந்திய கையனே, செறிந்த பொழில்களால் சூழப்பட்டதும் அழகிய மலர்களின் மணம் கமழ்வதுமாகிய கோட்டூரில் விளங்கும் கொழுந்தே என்றுகூறி அவனை வணங்க எழுபவர் மிகப்பெரிதாய சிவலோகத்தில் பெருமானுக்கு அருகில் புகழ் பெறத் தங்குவர்.
🏾தாமரைமலர் போன்ற அழகிய சிறியகால்களையும் பஞ்சுபோன்ற மென்மையான விரல்களையும், அரவு போன்ற அல்குலையும் உடையவரும். மயில் குயில் கிளி போன்ற மொழியினரும், மென்மையான தனங்களையுடையாருமாகிய மங்கையர் குணலைக்கூத்து ஆடிமகிழும் கோட்டூரில் விளங்கும் நற்கொழுந்தே என்று கூறிச் சங்கரனை வணங்க எழுவார் ஐயமின்றி அவன் திருவருளைப் பெறுவர்.
🏾நல்ல மலர்களைக்கொண்டு தொழுது எழும் அடியவர்கட்கு நம்பனாரும், செம்பொன்போன்ற மேனியையும் அழகிய நகில்களையும் உடைய பூங்கொம்பு போன்ற மகளிர் ஆடிப் பாடித் தொழுபவரும், செம்மைமல்கிய கோட்டூரில் விளங்குபவரு மாகிய இறைவரைக் கொழுந்தீசரே என்று வணங்கிட எழுவார் பொன்னுலகில் தேவரோடும் இனிதிருப்பர்.
🏾அடியாவர் தமக்கு எல்லாம் நம்பனார் பொன்னுலகில் தேவரோடும் குனிதிருப்பர் பாலச்சுளை, மாங்கனி முதலிய தீங்கனிகளையும் தேனையும் உண்ட தோகைமயில்களும் கிளிகளும் அன்னங்களும் விளையாடும் மரஞ்செடி கொடிகள் பலவும் நிறைந்த பொழில்களையும், கயல்கள் உகளும் அழகிய வயல்களையும் உடைய கோட்டூரில் விளங்கும் நற்கொழுந்தே என்று போற்றியவர் அழியாத செல்வமுடையவராய் இவ்வுலகில் புகழோடு வாழ்வர்.
🏾உள்ளம் உருகுவார்க்கு ஒண்சுடராகவும், என்றும் தன்மேல் அன்புடையடியார்க்கு ஆரமுதாகவும் விளங்குபவனே என்றும் கூறிப் பரிவும் பக்தியும் செய்து, குருகுகள் வாழும் கோட்டூர் நற்கொழுந்தே என்று விளித்து வழிபடப்புகும் அடியவர்களின் வினைகள் நீங்கும். அவனது திருவருளைப் பெறலாம்.
🏾நெருங்கி நீண்டு வளர்ந்த சடைமுடியில் பிறைமதி, ஊமத்தை, வெள்எருக்கமலர், வன்னியிலை, ஆகியவற்றைச் சூடியும், தலைமாலைகளை மேனியில் அணிந்தும், கையில் கபாலத்தை உண்கலனாக ஏந்தியும், புலித்தோலை இடையில் உடுத்தும், கொன்றை மரங்கள் பொன்போல மலரும் கோட்டூரில் எழுந்தருளி விளங்கும் கொழுந்தீசரின் திருப்பெயரை விளித்து அவரை வழிபட எழும் அடியவரை என்றும் வழிபடுவார்க்கு இடம், கேடும் ஏதமும் இல்லை.
🏾மாடமாளிகை, கூடகோபுரம், மணிஅரங்கம், அழகியசாலை, புகழ்தற்குரியமதில், பொன் மண்டபம் ஆகியவற்றோடு, அழகிய பொழில்கள் சூழ்ந்த கோட்டூரில் விளங்கும் நற்கொழுந்தே, என்று எழுவார் கேடில்லாதவராய் உலகலொம் விளங்கிய புகழ் உடையவராவர்.
🏾ஒளியும் கூர்மையுமுடைய பற்களைக் கொண்ட இராவணன் கயிலைமலையை எடுத்தபோது உமையம்மை அஞ்ச, இறைவன் தனது திருக்கால் பெருவிரலைச் சிறிதே சுளித்து ஊன்றிய அளவில் அவ்விராவணன் நெரிந்து வருந்தி வேண்ட, அவனுக்கு வாளும் நாளும் அருள் செய்தருளிய, பொழில் சூழ்ந்த கோட்டூர்க் கொழுந்தீசனைத் தொழுவார் இறைவன் திருவடித் தாமரைகளை அடையும் தவமுடையவராவர்.
🏾பந்தாடும் மெல் விரலையும், பவளவாயையும் தேன்மொழியையும் உடைய உமையம்மையோடு அழகிய மலர்கள் நிறைந்த பொழில்களால் சூழப்பட்ட கோட்டூரில் விளங்கும் கொழுந்தீசரை, கடல் அலைகள் பவளங்களைக் கொண்டு வந்து சேர்க்கும் காழியில் தோன்றிய திருஞானசம்பந்தர் போற்றிப் பாடிய இச்செந்தமிழ்மாலையை ஓதவல்லவர் புகழ்பெறுவர்.
Bookmarks