Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    176.வாசித்துக்காணொணாதது


    தானத்தத் தான தானன தானத்தத் தான தானன
    தானத்தத் தான தானன தந்ததான


    வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது
    வாய்விட்டுப் பேசொ ணாதது நெஞ்சினாலே
    மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது
    மாயைக்குச் சூழொ ணாதது விந்துநாத
    ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது
    லோகத்துக் காதி யானது கண்டுநாயேன்
    யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி
    யூனத்தைப் போடி டாதும யங்கலாமோ
    ஆசைப்பட் டேனல் காவல்செய் வேடிச்சிக் காக மாமய
    லாகிப்பொற் பாத மேபணி கந்தவேளே
    ஆலித்துச் சேல்கள் பாய்வய லூரத்திற் காள மோடட
    ராரத்தைப் பூண்ம யூரது ரங்கவீரா
    நாசிக்குட் பிராண வாயுவை ரேசித்தெட் டாத யோகிகள்
    நாடிற்றுக் காணொ ணாதென நின்றநாதா
    நாகத்துச் சாகை போயுயர் மேகத்தைச் சேர்சி ராமலை
    நாதர்க்குச் சாமி யேசுரர் தம்பிரானே

    -176 திரிசிராப்பள்ளி



    பதம் பிரித்து உரை


    வாசித்து காண ஒணாதது பூசித்து கூட ஒணாதது
    வாய் விட்டு பேச ஓணாதது நெஞ்சினாலே


    வாசித்துக் காண ஒணாதது = நூல்களைக் கற்பதினால் காணலாம்என்றால் அங்ஙனம் காண முடியாது. பூசித்துக் கூட ஒணாதது = பூசை செய்துஅதனால் கூடலாம் என்றால் அது முடியாது. வாய்
    விட்டுப் பேச ஒணாதது = வாய் விட்டுப் பேசிவிவரிக்கலாம் என்றால் அங்ஙனம் பேச்சுக்குஅகப்படாதது நெஞ்சினால் = மனத்தால்.


    மாசர்க்கு தோண ஒணாதது நேசர்க்கு பேர ஒணாதது
    மாயைக்கு சூழ ஒணாதது விந்து நாத


    மாசர்க்கு = மாசு (அழுக்கு) உள்ளவர்களுக்கு தோண
    ஒணாதது = புலப்படாதது நேசர்க்கு = அன்புடையஅடியார்களை விட்டு பேர ஒணாதது = நீங்காததுமாயைக்குச் சூழ ஒணாதது = மாயை தன்னைச்சூழ்தற்கு இடம் தராதது விந்து நாத ஓசைக்கு = (யோக மார்க்கப் பயிற்சியில் கோ எனமுழங்கும்சங்கத் தொனியாக ஒலிக்கும்) ஓசைக்கு


    ஓசைக்கு தூரமானது மாகத்துக்கு ஈறு அதானது
    லோகத்துக்கு ஆதியானது கண்டு நாயேன்


    தூரமானது = தூரமானது மாகத்துக்கு = காயத்துக்கு.
    ஈறு அது ஆனது = அப்பாற்பட்டது லோகத்துக்கு =உலகத்துக்கு ஆதி ஆனது =முதற்பொருளாய்உள்ளது (எதுவோ அதை) கண்டு நாயேன்= கண்டுஅடியேன்


    யோகத்தை சேருமாறு மெய் ஞானத்தை போதியாய் இனி
    ஊன் அத்தை போடிடாது மயங்கலாமோ


    யோகத்தைச் சேருமாறு = சிவ யோகத்தைச் சேரும் படியாக மெய்ஞ் ஞானத்தை= உண்மையானஅறிவை போதியாய் = உபதேசித்து அருளுக இனி =இனியும்
    ஊன் அத்தை= இந்த உடலை போடிடாது= வெறுத்து
    விடாது மயங்கலாமோ = நான் மயங்குதல் நன்றோ?


    ஆசைப்பட்டு ஏனல் காவல் செய் வேடிச்சிக்காக மா மயல்
    ஆகி பொன் பாதமே பணி கந்த வேளே


    ஆசைப் பட்டு = மோகம் கொண்டு ஏனல் காவல் செய் = தினைப்புனத்தைக் காவல் செய்த வேடிச்சிக் காக = வேடப் பெண் வள்ளிக்காக மா = மிக மயலாகி = காமம் கொண்டு பொன் பாதமே பணி = அவளுடைய அழகிய அடிகளை வணங்கிய கந்த வேளே = கந்த வேளே.


    ஆலித்து சேல்கள் பாய் வயலூர் அத்தில் காளமோடு அடர்
    ஆரத்தை பூண் மயூர துரங்க வீரா


    ஆலித்து = ஒலி செய்து சேல்கள் = சேல் மீன்கள்
    பாய் = பாய்கின்ற வயலூர் அத்தில் = வயலூரில்
    காளம் = பாம்பை மோடு அடர் = நெருங்கித் தாக்கி ஆரத்தை = அதை மாலை போல் பூண் = (காலில்)பூணுகின்ற மயூர = மயில் என்னும் துரங்க
    வீரா = குதிரை வீரனே.


    நாசிக்குள் பிராண வாயுவை ரேசித்து எட்டாத யோகிகள்
    நாடி உற்று காண ஒணாது என நின்ற நாதா


    நாசிக்குள் = மூக்கால் பிராண வாயுவை = பிராணவாயுவை ரேசித்து = வெளியிட்டு எட்டாத = எட்டமுடியாத யோகிகள் = யோகிகள் நாடிற்று = நாடியும்காண ஒணாதது என = காணுதற்குக் கூடாதது எனநின்ற நாதா = நின்ற தலைவனே


    நாகத்து சாகை போய் உயர் மேகத்தை சேர் சிரா மலை
    நாதர்க்கு சாமியே சுரர் தம்பிரானே.


    நாகத்து = சுரபுன்னை மரத்தின் சாகை போய் =கிளைகள் போய் உயர் மேகத்தை = உயர்ந்துமேகத்தை சேர் = சேர்கின்ற சிரா மலை = திரிசிராமலை நாதர்க்குச் சாமியே = சிவபெருமானுக்குக்குரு நாதரே சுரர் தம்பிரானே = தேவர்கள்தலைவனே
    .






    குகஸ்ரீ நடராஜன் விரிவிரை


    கொல்லன் உலைக்களத்து துருத்தி போல் சுத்தக் காற்றை நாசி வழி ஈர்த்து மூலாதாரத்தில் பாய்ச்சி ப்ரம்ம கபாலம் வரை பெருக நிறுத்தி அரும்பாடு படுகின்றனர் யூகம் இல்லாத யோகிகள். அறிந்தில் இதுவரை என்று வருந்தும் அவர்கள் இடத்தில் நாதானுபவமாகி நடமாடுபவன் நம்பன் என்பது ஏழாம் அடியில் இருக்கின்ற செய்தி.


    ஓசை ஒலி எல்லாம் அடங்கும் இடம் ஆகாயம். வானளாவிய திரிசிரா மலை மேல் தற்பர நாதமாய் உள்ளார் தாயுமானார். அவருக்குக் குருவான குமரனை நாத சாமியே என கூவி அழைத்தார்.


    தனக்கு மேல் ஒரு தலைவன் இலானை தம்பிரான் என்றார். ஆன்மநாதன் என்பதும் ஒரு வகை. நியதியாக இவைகளை நினைவார் நெஞ்சம் நெகிழ்வுறும்.


    வாதமும் சமய பேதமும் கடந்த மனோலய இன்ப சாகரமே, ஏதும் ஒன்றறியேன்,யாதும் நின் செயலே இறைவனே ஏக நாயகனே என்றார் பட்டினத்து அடிகள். இப்படியான இவ்வருவன் இவ்வண்ணத்தினன், இவன் இறைவன் என்று எழுதிக் காட்டொணாதபடி என்கிறார் அப்பர் அடிகள். இவர்களின் மூலம் கடவுள் சொரூபம் அது எண்ணில் எழுத்தில் அடங்காதது என்பதையும் எல்லாம் அவன் செயலே என்றலையும் ஒருவாறு உணருகிறது எம் உள்ளம். இந்த நிலையில் பிரகிருதி உடலில் இருக்கும் உயிர்கள் யுக்தி முகம் கொண்டு ஓத முயல்வது உணர்த்த நினைப்பது நரி வால் கொண்டு கடல் ஆழம் காண முயலும் கதைப் படி முடியும் வளர்ந்த நூல் அறிவால் அபரஞானம் வளரும். இதைப் பாச ஞானம் என்பதும் உண்டு. கட்டுப்பட்ட இந்த அறிவால் நூல்களை வகை தொகை தோன்ற விரித்து வாசிக்கலாம். காணொணாதது, உருவோடுடருவது பேணொணாதது உரையே தருவது காணும் நான்மறை முடிவாய் விளைவது என எதிர் மறையும் உடன்பாடுமான அத் தெய்வ இயல்பை வாசித்த நூல் அறிவால் ஒருவாறு கருதலாம். எனினும் கடவுள் சொரூபத்தை அவர்களால் காண்பதோ ஆவதில்லை. ஆம் அவ்வளவு தான் செய்தி அதனால் தான் வாசித்துக் காணொணாதது என்றார்.


    வாசித்துக் காண இயலாத தெய்வத்தை பூசிக்கலாம் என்கிறது புந்தி. புறவழிபாடு
    வரவர வளர்ந்து இதயார்ப்பணம் எனும் அகவழிபாடாக அமையுமேல் முத்தி
    நிச்சயம் சித்திக்கும். அவ்வளவுமின்றி என்றும் புறவழிபாடை ஆயின் அது
    உயர் குடிப்பிறப்பும் போகமுமாகி ஒழியும். அதனால் அருமை உயிர்கள் என்றும்
    பரத்திற்கு அயலாக இருந்து விடுகின்றன. - அண்ணல் ஐம்முகங்களும் அருளும் ஆகம நுண்ணிய விதிமுறை நன்கு செயினும் எண்ணரும் அன்பு உள்ளத்து இல்லை எனில் பண்ணிய பூசனை பயன் தரா - எனும் பிரபு லிங்க லீலை இங்கு எண்ணல் நலம் தரும். இவைகளை எண்ணியே பூசித்துக் கூடொணாதது என்றார்.


    அமலன் உலகெலாம் உணர்ந்த ஓதற்கு அரியவன். அவன் சொரூபத்தை வாய் திறந்து வரையறுத்து உரைப்பது வாசன கைங்கரியம். ஆதலால் பேசொணொததுஎன்கிறார்.


    கெட்ட எண்ணம், கேடு கெட்ட புத்தி, வம்பு வழக்கு, பொறாமை, பொல்லாப்பு முதலிய மாசடைந்த மனதில் கலங்காததின் காட்சி ஆவது இல்லை. ஆதலின் மாசர்க்குத் தோணொணாதது என்றார்.


    மாயை இம்மாநிலத்தில் வந்தாள். பிரபுவை பிடிக்க நினைத்தாள். விண்ணைக்குத்தி கை இளைப்பவர் போல கலங்கி நின்றது தான் கை கண்ட பலன். இதையும் எண்ணி மாயாதீதன், தத்வாதீதன், பூதாகாயம் கடந்த ஞானாகாயம் எனலை. மாசர்க்கு ஈரதானது என்பதில் விவரித்தார்.


    உலகிற்கு ஆதி மாயை. அதற்கும் ஆதி அமலன். ஆதலின் லோகத்திற்காதியானது என்றார். அறிவித்தால் அன்றி அறியா உள்ளங்கள் என்பது மெய்ஞானபோதம். உருவன்று, அருவன்று, உளதன்று, இலதன்று,இருளன்று, ஒளியன்று நின்றதுவேஎனும் அருளார்க்கு அந்த அறுமுகத்தைக் காண வேண்டுமேல் கருத வேண்டுமேல்,அவனே தான் தன்னை அறிவிக்க வேண்டும் என்பர் ஆன்றோர்.


    உடம்பைத் தொடர்கின்றது நிழல். அதுபோல் போதாகாயம் உளது போதாகாசத்தில் இருந்து மடங்கி எழுகின்றது மனம். உருத்தி எழும் அவ்விரண்டும் ஒடுங்க அறிய ஞான அருள் வெளியில் செயல் கெட நிற்கும் ஜீவாத்மா. இந்நிலையில் - அகத்துள்ளே மகிழ்ந்த ஜோதிப் பிரகாச இன்பம் ஆவிக்குள்ளே துலங்க அருள்வாயே - ( சீறிட்டு திருப்புகழ் ) என்பது இங்குள்ள அனுபவ இன்பம். யோகமில்லாத ஞானமும் ஞானமில்லாத யோகமும் தற்பர வீடு தராது.


    முருகா, ஊனமானது இவ்வுடல். அந்த பந்தம் அழியாதா?. எத்தனை நாட்கள் இதை சுமக்க வேண்டுமோ என்பார். இதை ஊனத்தைப் போடிடாது மயங்கலாமோஎன்கிறார்.


    ஏகாந்த இடம். அங்கு உயர்ந்த ஒரு பீடம். அதன் மேல் அமர்ந்து காமக் குரோதாதிகளை எண்ணத்தாவும் விஷயாதிகளை தடுத்து நிறுத்தினால் அரிய பிராணன் அடங்கும் அந்நிலையில் இதய எம்மானை எண்ணுவோம். பறந்தோடும் பாவங்கள். எவ்வெம்முகமாகவோ எம்பெருமான் எழுந்தருளுவன்.


    யோகத்தைச் சேருமாறு மெய்ஞானத்தைப் போதியாய், இனி ஊனத்தைப் போடிடாது மயங்கலாமோ என்று விண்ணப்பம் செய்வோம். அந்த தர்மதுரை உரியதை அருளும். உய்தி பெறுவோம். வாழ இது தான் வழி
    .






    விளக்கக் குறிப்புகள்


    இப்பாடலில் மெய்ப் பொருள் தத்துவங்கள் விளக்கப்படுள்ளன. நுண்ணிய உபநிட கருத்துக்களை, தெள்ளிய தமிழில் உணர்த்தும் சொல்லாக்கம் அருணகிரி நாதர் கவித் திறனை உணர்த்தும்.


    ரேசகம் = வாயுவை நாசி வழியாகவெளியேற்றுவது. பூரகம் = பிராணாயாமத்துக்கு உறுப்பாகும் பிராண வாயுவை உள்ளே இழுப்பது. கும்பகம் = ஸ்வாசித்த வாயுவை உள்ளே நிறுத்தும் செயல்.


    ஒப்புக:


    வேடிச்சிக் காக மாமயலாகிப் பொற்பாதமே பணி...
    குரிய குமரிக் கபய மெனநெக்
    குபய சரணத் தினில் வீழா......................................திருப்புகழ், சொரியுமுகி
Working...
X