அடியார்கள் கூட்டங்களில் அன்பு வைப்பவனே. நடனம் செய்ய வல்ல மயிலை வாகனமாக உடையவனே. எல்லா திசைகளிலும் உள்ள பத்தர்களும் அற்புதம் என்று புகழும்படி, சந்தங்கள் நிறைந்த அழகிய திருப்புகழ் என்னும் நூலை சிறிதளவு அடியேனும் பாட நீ அருள் புரிந்ததை என்னால் மறக்க முடியாது.
கிளிகள் விழும்படி கவணில் கல்லைக் கட்டி சுழற்றித் தினைப் புனத்தைக் காவல் புரிந்த வள்ளியை அணைந்த பன்னிரு தோளனே. பார்வதியை இடப்பாகத்தில் கொண்ட தந்தையாகிய சிவபெருமானக்கு வேதப் பொருளை முற்றும் போதித்தவனே. பாம்பு மலையாகிய திருச்செங்கோட்டில் வீற்றிருக்கும் தேவர்கள் பெருமாளே. உன் திருவருளை எப்போதும் மறவேன்
விளக்கக் குறிப்புகள்
1. செப்பென வைத்து உலகில் பரவ.....
செய்ப்பதி வைத்து என்றும் பாடம்.
செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பென எனக்கருள்கை மறவேனே............... .....திருப்புகழ்,பக்கரைவிசித்ர.
திருப்புகழ் நித்தம்
பாடும் அன்பு அது செய்ப்பதியில் தந்தவன் நீயே... .திருப்புகழ்,கோலகுங்கு.
திகழ்ப்படு செய்ப்பதிக்கு எனைத்
தடுத்து அடிமைப் படுத்த அருள்
திரு பழநிக்கிரிக் குமரப் பெருமாளே.................. ......திருப்புகழ்,குறித்தமணி.
அருணை நகர் மிசை கருணையொடு அருளிய
மவுன வசனமும் இரு பெரு சரணமும் மறவேனே..
Bookmarks