Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    180.பத்தர்கணப்ரிய


    தத்தன தத்தன தத்தன தத்தன
    தத்தன தத்தன தனதான


    பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
    பட்சிந டத்திய குகபூர்வ
    பச்சிம தட்சிண வுத்தர திக்குள
    பத்தர்க ளற்புத மெனவோதுஞ்
    சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
    ருப்புக ழைச்சிறி தடியேனுஞ்
    செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
    சித்தவ நுக்ரக மறவேனே
    கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி
    கற்கவ ணிட்டெறி தினைகாவல்
    கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி
    கட்டிய ணைத்தப னிருதோளா
    சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத
    கப்பனு மெச்சிட மறைநூலின்
    தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய
    சர்ப்ப கிரிச்சுரர் பெருமாளே.

    -180 திருச்செங்கோடு



    பதம் பிரித்து உரை




    பத்தர் கண ப்ரிய நிர்த்த(ம்) நடித்திடு
    பட்சி நடத்திய குக பூர்வ


    பத்தர் கண ப்ரிய = பத்தர் கூட்டங்களின் மீது அன்பு உடையவனே நிர்த்தம் நடத்திடு =நடனம் செய்ய வல்ல பட்சி நடத்திய குக =பட்சியாகிய மயிலை வாகனமாகக் கொண்ட குகனே பூர்வ = கிழக்கு.


    பச்சிம தட்சிண உத்தர திக்கு உ(ள்)ள
    பத்தர்கள் அற்புதம் என ஓதும்


    பச்சிம = மேற்கு தட்சிண = தெற்கு உத்தர =வடக்கு (ஆகிய) திக்கு உள்ள பத்தர்கள் =திசைகளில் வாழும் பத்தர்கள் அற்புதம் என ஓதும் = இது அற்புதமானது என்று கொண்டாடும்

    சித்ர கவித்துவ சத்தம் மிகுத்த
    திருப்புகழை சிறிது அடியேனும்


    சித்ர கவித்துவ = அழகிய கவி பாடும் திறனும் சத்தம் மிகுத்த = சந்தங்களின் மேன்மையும் மிகுந்துள்ள திருப்புகழை =திருப்புகழ் என்னும் நூலின் பாக்களை
    சிறிது அடியேனும் = சிறிதளவு அடியேனும்.


    செப்பு என வைத்து உலகில் பரவ
    தெரிசித்த அநுக்ரகம் மறவேனே


    செப்பு என = சொல்லும்படியாக வைத்து =திருவருள் செய்தும் உலகில் = இந்தப் பூமியில் பரவ = (அந்தப் பாக்களைப்) பரவும் படியாக தெரிசித்த = வெளிப் படுத்தியும் அநுக்கிரகம் = நீ அருள் செய்ததை மறவேனே = நான் மறக்க மாட்டேன்.


    கத்திய தத்தை களைத்து விழ திரி
    கல் கவண் இட்டு எறி தினை காவல்


    கத்திய தத்தைகளை = கத்துகின்ற கிளிகளை.
    களைத்து விழ = களைத்து விழும்படியாக.
    திரி = சுழற்றும் கல் கவண் இட்டு எறி =கவணில் கல்லை வைத்து எறிந்து தினை காவல் கற்ற = தினைப் புனத்தைக் காவல் செய்யக் கற்றுக் கொண்ட


    கற்ற குறத்தி நிறத்த கழுத்து அடி
    கட்டி அணைத்த பன்னிரு தோளா


    குறத்தி = குறத்தியாகிய வள்ளியின் நிறத்த கழுத்து = ஒளி பொருந்திய கழுத்தின். அடி கட்டி = அடியில் கட்டி அணைத்த பன்னிரு தோளா =அணைத்த பன்னிரண்டு புயங்களை உடையவனே


    சத்தியை ஒக்க இடத்தினில் வைத்த
    தகப்பன் மெச்சிட மறை நூலின்


    சத்தியை ஒக்க= பராசக்தியாகிய பார்வதியை இடத்தினில் வைத்த = இடப் பாகத்தில் பொருந்தும்படி வைத்த தகப்பனும் மெச்சிட = தந்தையாகிய சிவபெருமானும் மெச்சும்படி. மறை நூலின் = வேத நூலின்.


    தத்துவ(ம்) தற்பரம் முற்றும் உணர்த்திய
    சர்ப்ப கிரி சுரர் பெருமாளே.


    தத்துவம் = உண்மைப் பொருள் தற்பரம் =பரம் பொருள் (ஆகிய) முற்றும் உணர்த்திய = எல்லாவற்றையும் போதித்து விளக்கிய. சர்ப்ப கிரி பெருமாளே = பாம்பு மலையாகி திருச் செங்கோட்டில் உறையும் பெருமாளேசுரர் பெருமாளே = தேவர்கள் பெருமாளே.






    விளக்கக் குறிப்புகள்


    1. செப்பென வைத்து உலகில் பரவ.....
    செய்ப்பதி வைத்து என்றும் பாடம்.

    செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு
    செப்பென எனக்கருள்கை மறவேனே............... .....திருப்புகழ்,பக்கரைவிசித்ர.

    திருப்புகழ் நித்தம்
    பாடும் அன்பு அது செய்ப்பதியில் தந்தவன் நீயே... .திருப்புகழ்,கோலகுங்கு.


    திகழ்ப்படு செய்ப்பதிக்கு எனைத்
    தடுத்து அடிமைப் படுத்த அருள்
    திரு பழநிக்கிரிக் குமரப் பெருமாளே.................. ......திருப்புகழ்,குறித்தமணி.

    அருணை நகர் மிசை கருணையொடு அருளிய
    மவுன வசனமும் இரு பெரு சரணமும் மறவேனே..
    .திருப்புகழ்,முருகுசெறி.
Working...
X