இறைவனை வசைபாடும் மாணிக்கவாசகர்
[தீபன்]


என்னது மாணிக்கவாசகர் வசைபாடினாரா??!!
நல்லா இருக்குதே கதை!! என்று விழிவிரியாதீர்கள். உண்மைதான் ஒரு பாடலில் மணிவாசகப் பெருமான் இறைவனை இரட்டுற மொழிதலில் வசைபாடுவது போல புகழ்ந்துள்ளார்


அன்பின் வடிவம் மணிவாசகர் உருக்கம் என்றால் அவரது திருவாசகம் என்று உலகத்தவர் ஏத்தும் வாதவூர்ப் பெருமான் இறைவனிடம் அவனைத் தவிர எதையும் கேட்காதவர்


வினையேன் அழுதால் அவனைப் பெறலாமே என்றதின்படி எப்போதும் அவனை எண்ணி நைந்து உருகி அழுபவர் அவர்


குழந்தையைத் தாயார் தனியே விட்டு செல்லநேர்ந்தால் பொம்மையைக் காட்டி நிலவைக் காட்டி விலங்குகளைக் காட்டி என்று எதையாவது செய்து தாயின் பிரிவால் அழும் குழந்தையை சமாதானம் செய்வார்கள் ஆனால் விதிவிலக்காக சிலப்பிள்ளைகள் குட்டிக்கரணம் போட்டுக்காட்டினாலும் அழுகையை நிறுத்தாது பெற்றதாயைக் கண்டால்தான் அதன் அழுகை ஓயும், நம் மாணிக்கவாசகப் பெருமானும் இப்படித்தான் சிவனெனும் தன்னுடைய தாயைக்காணாமல் எப்போதும் அழுகிறார்


அதற்காக அவர் உருகி உருகி வேண்டுகிறார் என்னைக் கைவிட்டு விடாதே!! என்று இறைவனிடம் கதறுகிறார் இறைவன் ஏதும் பதில் சொல்லாதவனாக இருக்கிறான்


உடன் மணிவாசகப் பெருமானுக்கு சற்று கோபம் வருகிறது!! என்னைக் கைவிடாதே என்று உன்னிடம் பலவாறும் கெஞ்சுறேன் ஆனா என்ன கண்டுக்காம போயிட்டினா உன்னைத் திட்டுவேன் உன்னபற்றிய செய்திகளை எல்லாம் எல்லோரும் அறியக் கூறுவேன் என்று பெருமான் இறைவனிடம் மிரட்டுவது போல பேசுகிறார்


உழைதரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத்து ஈயின் ஒப்பாய்


விழை தருவேனை விடுதி கண்டாய் விடின் வேலை நஞ்சுண்


மழைதரு கண்டன் குணமிலி மானிடன் தேய்மதியன்


பழைதரு மாபரன் என்றென்று அறைவன் பழிப்பினையே.


என்பது அந்தத் திருவாசகப் பாடல்


பலாப்பழத்தினை ஈக்கள் விரும்பி மயங்கிக் கிடப்பது போல நானும் உலகியலில் விழுந்து மயங்குபவனாக உள்ளேன் என்னைக் கைவிட்டு விடாமால் உன்னோடு சேர்த்துக் கொள்,


ஒருவேளை என்னை நீ கைவிட்டு விட்டால் உன்னை மாசுடைக் கண்டன் என்றும் நல்ல குணங்கள் இல்லாதவன் என்றும் மனிதன் போன்றவன் என்றும் அறிவுக்குறைவானவன் என்றும் பழையகாலத்து பரதேசி என்றும் திட்டிப் பழிப்பேன் என்று பெருமான் பாடுகிறார் நேரடியாகப் பார்த்தால் இந்த பாடல் உண்மையாகவே இறைவனைத் திட்டுவது போலத்தான் உள்ளது


ஆனால் ஆராய்ந்து பார்த்தால் இப்பாடல் நம் மாணிக்கவாசகப் பெருமானின் தமிழ்புலமைக்கும் சிலேடையாற்றலுக்கும் சிறந்த உதாரணாக இருப்பதை அறியலாம்


ஒவ்வொரு வசையாகப் பார்ப்போம்


மழைதரு கண்டன்


மழைதருவது மேகம் அதன் நிறம் கருப்பு பால்நிற மேணியில் கண்டம் மட்டும் கறுத்திருந்தால் அது ஒரு மரு போலத் தோன்றும் ஆகையால்
உடலில் ஒரு குறையுடையவன் என்று சொல்லித் திட்டுவதுபோல இது இருந்தாலும் இறைவனது கரியகண்டம் அவனது அளவற்றக் கருணையைக் குறிப்பதாம் உயிர்களின் நலம் பொருட்டு அந்த நஞ்சை கண்டத்தில் வைத்த சிறப்பையே பெருமான் இவ்வரியில் சொல்கிறார்🏻


குணமிலி


பொதுவாக நன்னடத்தை இல்லாதவர்களை (irregular) இப்படி சொல்வதுண்டு அதுபோல இறைவனை சொல்வதாய் இது இருந்தாலும் உயிர்களுக்கு உரிய சத்துவ தாமச இரஜோ குணம் என்னும் முக்குணம் இல்லாத அண்டங்கடந்த அல்லவில்லதொரு ஆனந்த இன்பவெள்ளப் பொருள் அவன் என்பதைக் குறிப்பதாம் இது


மானிடன்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
அதாவது தெய்வகுணம் இல்லாத சாதாரண மனிதன்தான் நீ என்று குறைக்கூறுவது போல இது இருக்கிறது ஆராய்கையில்
மான்+இடன் என்று பிரித்து மானை இடக்கையில் ஏந்தியவன் என்றும் மான் போன்ற உமையவளை இடப்பாகம் கொண்டவன் என்றும் பொருள் வருகிறது


தேய்மதியன்


தேய்ந்து போன அறிவு அதாவது குறைந்த அறிவை உடையவன் என்பது போல இது உள்ளது ஆனால் அவன் நாளும் தேய்ந்தழிந்த சந்திரனை தலையில் சேகரித்து வைத்துள்ள தயாவைப் போற்றி மகிழ்வதையே இது குறிக்கிறது


பழைதரு மாபரன்


"பரம்" என்றால் மேல் "அபரம்" என்றால் கீழ் மாபரன் என்பதை மா+அபரன் என்று பிரித்தால் பழமையான கீழானவன் அதாவது பழைய காலம் முதல் கீழ்மையானவன் எனலாம்


ஆனால் இதன் நேரடி பொருள் மா பரன் என்பதே அதாவது முன்னை பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளான பரமன் அவன்
என்று கூறி சிலிர்க்கிறார் பெருமான்


நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து வீடகத்தே புந்திடுவேன் என்று பாடியவரா வசைமொழிவார் அப்படியே மொழிந்தாலும் அது எத்துணை இனிமையாக இருக்கிறது பாருங்கள்🏻
நமசிவாய🏻