Announcement

Collapse
No announcement yet.

டிஜிட்டல் இந்தியா பற்றி கேலி செய்து வரும

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • டிஜிட்டல் இந்தியா பற்றி கேலி செய்து வரும

    டிஜிட்டல் இந்தியா பற்றி கேலி செய்து வரும் மிமீஸ் - பதிவுகளுக்கு உங்கள் பதில் என்ன மாரிதாஸ்??? சரி டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் உண்மையில் மோடி என்ன செய்ய விரும்புகிறார்? அது எந்த நிலையில் இப்போ இருக்கு? {கேள்வி: சுந்தர்}

    இந்த திட்டத்தின் அரசு , தனியார் நேரடி மறைமுக முதலீடு தோராயமாக 224.6லட்சம் கோடி. மிக பெரிய அளவில் விரிவாக மோடி முன்வைக்கும் திட்டங்களில் இதுவும் ஒன்று. சரி இதன் மூலம் எதனை சாதிக்க விரும்புகிறார் மோடி.
    {டிஜிட்டல் இந்தியா என்றால் பலர் எதோ பணபரிவர்த்தனை மட்டும் பேசுகிறார்கள் அது தவறு. இந்த திட்டத்தில் எனக்கு பிடித்த 5 விவரங்களை பின் வருவன.}
    1.UIDAI database:
    ஒரு தனி நபர் இந்தியாவில் என்ன, என்ன காரணத்திற்காக அரசு அலுவலகம் செல்ல வேண்டியுள்ளது என்று ஒரு பட்டியல் எடுங்கள்.
    மாநில/மத்திய அரசு அலுவலகம் என்றால் :
    ஜாதி , வருமானம் , இருப்பிட சான்றிதழ் என்று ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான சில பத்து அடிப்படை சான்றிதழ்கள். விதைவைகள் நலஉதவிதொகை , ராணுவவீரர்கள் உதவி , வயதான கைவிடபட்டோர் உதவி தொகைகள், ஓய்வஊதியம் பெற.. உரமானியம் , பெண்கள் திருமண உதவி என்று ஆயிரம் ஆயிரம் நலத்திட்ட உதவி தொகைகள். சொத்து வில்லங்கள் பார்ப்பது , இது தவிர வேலைவாய்ப்புகள் , பள்ளி கல்லூரி சேர்க்கை என்று அனைத்திற்கும்.

    இப்படி ஆயிரம் ஆயிரம் தேவைக்கு மாநில அரசையோ மத்திய அரசையோ நாடி மக்கள் செல்கிறார்கள்... இதில் அனைத்திலுமே மக்கள் பக்கம் என்ன செய்கிறார்கள்???? எதுவும் இல்லை application போடுவது.. சரிதானே. நீங்கள் பாஸ்போர்ட் ஆரம்பித்து இருப்பிட சான்றிதழ் வரை அனைத்துக்குமே உங்கள் விவரங்களை கொடுத்து விண்ணப்பம் செய்கிறீர். அதை சரிபார்த்து உங்களுக்கு அந்த சேவையை , சான்றிதழை வழங்குவது அரசின் கடமை.
    இப்படி மக்கள் விண்ணப்பம் என்பது நன்கு கவனிக்கவும் மொத்தமே 4 விதம் தான்
    1.புதிதாக விண்ணப்பம் செய்வது(நான் புதிய ரேசன் கார்டு/பாஸ்போர்ட் விண்ணப்பிக்கிறேன் )
    2.இருக்கும் தகவலை மாற்ற விரும்புவது(என் ரேசன் கார்டு/பாஸ்போர்ட் போன்றவற்றில் முகவரி , மொபைல் எண் போறவற்றை மாற்றவேண்டும்)
    3.நீக்குவது (நான் கல்யாணம் ஆகி தனி குடித்தனமாக செல்ல ரேசன் கார்டு பெயர் நீக்கம் செய்வது. என் தந்தை இறந்துவிட அவர் ஆதார் நீக்குவது.)
    4.மீண்டும் பெறுவது. (தொலைந்துவிட்ட சான்றிதழ்கள் / பாஸ்போர்ட் அனைத்தையும் மீண்டும் பெறுவது)
    {கம்யூட்டர் சயன்ஸ் மாணவர்களிடம் கேளுங்கள் create, read, update and delete இந்த நான்கின் முக்கியம் அவர்கள் இன்னும் தெளிவாக விளக்குவர்}

    எப்படி நீங்கள் சுற்றினாலும் அரசிடம் இந்த 4விதமாக தான் உங்கள் தேவை பூர்த்தி செய்ய வேண்டிவரும். இந்த அனைத்தையும் மக்கள் அவர் அவர் இருந்த இடத்தில் இருந்தே செய்ய வேண்டும். அதாவது அரசு அலுவலகங்கள் நோக்கி வருவதை முழுமையாக குறைக்க வேண்டும்.
    மக்கள் வேலை விண்ணப்பிப்பது மட்டுமே என்னும் பொது எதற்கு அலுவகம் வரவேண்டும்??? அதை ஆய்வு செய்து வழங்குவது அரசின் பணி. விண்ணப்பிக்க மக்கள் வருவதே அவசியமானது அல்ல.
    எனவே அனைத்தையும் online ஆக்கும் வேலை முதல் கடமையாக செய்கிறார்கள் இந்த Digital india திட்டத்தில். UIDAI database மூலமாக ஆதார் கொண்டு இந்த விஷயத்தை எளிதில் சாதித்துவிடலாம் என்பது அரசின் எண்ணம்.
    எடுத்துகாட்டுக்கு :
    உங்கள் கைரேகை மட்டுமே போதுமானது எந்த விண்ணப்பத்திற்கும். அது பாஸ்போர்ட் ஆரம்பித்து முதியோர் உதவி தொகை பெறுவது வரையில். இந்த சேவையை அனைத்து ATM களிலும் உருவாக்குவதும் எளிய விசயமே. இது தவிர அனைத்தையும் நீங்கள் உங்கள் mobile மூலமாகவே செய்துவிட முடியும்.
    பயன் :
    e-Office platform அனைத்து தனியார் , அரசு இடங்களிலும் உருவாக்குவதால் கிடைக்க போகும் முக்கயமான நன்மை - paperless office. இதை சாதாரணமாக எடுக்க வேண்டாம். இன்றும் அரசு அலுவலகங்களில் 70%க்கும் மேல் நேரம் ஊழியர்கள் பேப்பரில் தான் வேலை நடக்கிறது- 95%க்குமேல் பேப்பர் தேவை இருக்க. இதை முழுமையாக கட்டுபடுத்துவது உண்மையில் பெரும் பணி சுமையை மட்டும் அல்ல பேப்பர் தேவையையும் குறைத்துவிடும்.
    -------------------------------------------------------
    2.UMANG (Unified Mobile Application for New-age Governance):

    1947ல் இருந்தே இந்தியாவில் இருக்கும் பிரச்சனை என்னவெறால் மக்கள் அனைவருக்குமே தகவல் சரியாக கிடைப்பது இல்லை.
    என் மகன் ஒரு அணு விஞ்ஞானி ஆகவேண்டும் அதற்கு எங்கே படிக்க வைக்க வேண்டும்?
    என் தந்தை ஒரு விவசாயி அவர் விவசாயம் சார்ந்து என்ன என்ன திட்டங்கள் உதவிகள் மத்திய அரசு வழங்குகிறது???
    தந்தையை இழந்து நிற்கும் என் நண்பனின் மகளுக்கு - அரசு ஏதாவது உதவி செய்யுமா?? அதும் திட்டம் அரசிடம் இருந்தால் எப்படிதெரிந்து கொள்வது?
    என் மகளுக்கு மருந்து வாங்க வேண்டும் அதன் விலை என்ன? அந்த மருந்து generic medicine அரசு எங்கே விற்கிறது?

    இப்படி தகவல்களை கேட்க ஒரு கால் சென்டர் இருந்தால் எவ்வளவு வசதி மக்களுக்கு???? கொஞ்சம் சிந்திக்கவும் உங்கள் Airtel , JIO போன்றவர்கள் நடத்தும் கால்சென்டர் தான் இதுவும்.
    இப்படி அனைத்து தகவல்களையும் நான் google தேடலாம் ஆனால் அது உறுதிபடுத்த பட்ட தகவலா என்பதில் கொஞ்சம் அச்சம் இருக்கும். ஆனால் இன்று Digital india திட்டத்தின் கீழ் UMANG மூலம் மக்களுக்கு அனைத்து தகவல்களையும் கொண்டு சேர்க்கவேண்டும் என்று அரசு மும்மரமாக வேலை செய்கிறது.
    இதில் Annapurna Krishi Prasaar Seva (AKPS) , AICTE , CBSE , CRPF, E-Dhara Land Records, Farm Machanisation , GST, National scholarships , ORP , NPS(National pension System) ,National Pharmaceutical Pricing Authority என்று அனைத்தையும் சார்ந்த தகவல்கள் வெளிப்படையாக ஒன்றிணைக்கும் வேலைகள் கட்சிதமாக முடியும் தருவாயில் உள்ளன.
    அதாவது அரசின் அனைத்து திட்டங்கள் , சந்தேகங்கள் அனைத்தையும் மக்கள் எளிதில் தெரிந்து கொள்ள ஒரு மையத்தை உருவாக்க விரும்புகிறார்கள். நன்கு புரிந்து கொள்ளுங்கள் :
    78 நிறுவனங்களுடன் கைகோர்த்து சுமார் 1,25,000நபர்கள் வேலை செய்யும் வகையில்- 190 மையங்களை கொண்டு மிகப்பெரிய அளவில் BPOs உருவாக்கும் வேலை நடக்கிறது. APP வெளியிட்டுவிட்டார்கள். இந்த வேலை முழுமையாக நிறைவு பெரும் போது - மக்களுக்கு தேவையான அனைத்து சந்தேகங்களையும் தகவல்களையும் IVRS , Apps மூலம் பெற்றுகொள்ள முடியும். {தயவு செய்து தனியாரிடமே இதை அரசு கொடுக்கட்டும் விட்டு விடுங்கள். இந்த சேவையை அரசு ஊழியர்களிடம் கொடுத்தால் மக்களுக்கு சேவை நிச்சயம் கிடைக்காது. சும்மா கார்ப்பரேட் என்று ஆரம்பித்துவிடாதீர்}
    இது அடுத்து எண்ணம்.
    --------------------------------------------
    3.Government e-Marketplace (GeM):

    இது மிக மிக மிக முக்கியமான அவசியமான ஒன்று என்பது என் கருத்து. அது ஏன்?
    Buyer Organizations , Sellers ,Products அனைத்தையும் ஒரே இடத்தில் அரசு கொண்டு வருகிறது. இதனால் என்ன பலன் என்றால் - நீங்கள் ஒரு துணி கடை போடவேண்டும் என்றால் மொத்த வியாபாரிகள் , உற்பத்தியாளர்கள் விவரம் இங்கே கிடைக்கும். எனவே வாங்கும் நபர் - விற்பவர் - பொருட்கள் மொத்த விவரமும் இங்கே கிடக்கும். இதன் வழியாகவே நீங்கள் பணத்தினை அனுப்பி கொள்ள - அரசு உங்கள் வியாபாரத்தை பாதுக்காக்கும்.
    இது அடிப்படையில் மிக மிக முக்கியமான ஒன்று. இன்று நமது நாட்டின் வியாபார உலகம் பெரும் பிரச்சனைக்கு உள்ளாவதற்கு இடைத்தரகர்கள் தான் காரணம். ஒன்று இரண்டு அல்ல 4 , 5 மட்டத்தில் ஒரு பொருள் கைமாறுவதால் உற்பத்தி விலையை விட அதிகம் விலை கொடுத்து வாங்கும் நிலை இருக்க- இந்த GeM மூலம் அதிகபடியான இடைத்தரகர்கள் ஒழிய வாய்ப்பு அதிகம்.
    நீங்கள் காரைக்குடி அருகே உள்ள கிராமத்தில் - கற்றாழை (Aloe vera) விளைச்சல் செய்கிறீர்.. எங்கே விற்கலாம்??? அந்த விவரம் உங்கள் தந்தைக்கு தெரியாது. ஆனால் அவர் நல்ல விவசாயி. ஆனால் தகவல் அதிகம் தெரியாததால் நல்ல business man ஆக இருக்க முடியாது. ஆனால் உங்களை பற்றி தகவல் fairness cream தயாரிக்கும் ஒரு நிறுவனத்திற்கு எப்படி தெரியவரும்???
    இந்த Government e-Marketplace அந்த வேலையை செய்யும். இதனால் உங்கள் உழைப்பு இங்கே அங்கீகாரம் கிடைக்கும்.
    268153 பொருட்களை இதுவரை அரசு Digital india குழு வரையறை செய்துள்ளது- சுமார் 16527 buyers , 42823 sellers பதிவு செய்துள்ளனர். இது வேகமாக வடிவம் கிடைத்துகொண்டிருக்கிறது. இன்று உடனடியாக பலன் தெரியவில்லை என்றாலும் இதன் பலன் நிச்சயம்வெகு சீக்கிரம் மக்களுக்கு கிடைக்கும்.
    ----------------------------------------
    5.payment gateway:
    -BHIM App நான் சொல்லி தெரிய தேவை இல்லை. இன்று நேற்று அல்ல - அரசு எப்போதுமே பணம் என்பது hard currency noteஆக புழங்குவதை விரும்புவது இல்லை. எந்த நாட்டின் அரசும் விரும்பாது. எந்த வங்கியில் இருந்தும் எந்த வங்கியுள் உள்ள அக்கவுண்டுக்கும் பணம் பரிமாற்ற முடியும். அது ஆதார் எண் மட்டும் போதும் பணம் பரிமாற்றம் செய்ய.
    -இந்தியாவில் rupay card அதிகம் பயன்பாட்டிற்கு வர மோடி விரைவு படுத்தியுள்ளார். இதனால் என்ன பயன்???? visa ,mastercard இரண்டும் வெளிநாட்டு நிறுவனங்கள். ஒவ்வொரு பணமாற்றம் நீங்கள் அந்த கார்டுகள் மூலம் செய்யும் போதும் ஒரு சின்ன குறிப்பிட்ட பணம் அவர்களுக்கும் செல்லும். அது நியாயமான விஷயம் தான் என்றாலும் அதே போல ஏன் இந்திய அரசே செய்ய கூடாது ???? அது தான் rupay card. இது நமது National Payments Corporation of India (NPCI) என்ற அரசு நிறுவனத்தினது. இதை அதிகம் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு சென்று சேர்க்க அறிவுறுத்தலபடுகிறார்கள்.
    தயவு கூர்ந்து அனைவரும் இந்த NPCI வெப்சைட் சென்று பாருங்கள் உங்களுக்கு அரசின் முயற்சி அதன் புள்ளிவிவரம் கிடைக்கும். பணபரிவர்த்தனை வேகமாக மாறிவருகிறது. பெரும் அளவில் இது Digital பண பரிவர்த்தனை ஆகும் பொது - அரசுக்கு மிக பெரிய அளவில் நிம்மதி. ஏன் என்றால் அதனால் யாரும் வருமானத்தை போலி கணக்கு காட்டிவிட முடியாது. பெரும் அளவு மறைக்க முடியாது. உள் நாட்டில் புழங்கும் கருப்பு பணம் பெரிய அளவில் கட்டுபடித்த படும்.
    அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணம் கட்டுவது நிறுத்தும் நாள் மிக தொலைவில் இல்லை. இதனால் அரசு ஊழியர்கள் பணத்தினை கையாள்வது நிறுத்தபட்டு - மக்கள் online மூலமே கட்டிவிட லஞ்சமும் பெரும் அளவில் கட்டுபடுத்தபடும்.
    இதன் பலனை சொல்லிக்கொண்டே செல்லலாம்.
    ----------------------------------------
    5.epathshala:

    ஒரு நல்ல ஆசிரியரிடம் பாடம் கற்று கொள்ள வேண்டும் அது குழந்தைகள் மாணவர்கள் அவசியமானது - அந்த நல்ல ஆசிரியர் நடத்தும் விதத்தில் நம் வீட்டு குழந்தைகளுக்கு அனைத்துமே கற்றுகொள்ளும். அதற்காக தான் நல்ல பள்ளி கூடங்கள்/கல்லூரிகள் தேடுகிறோம். அதன் காரணமாக கல்லூரிகளும் அதிகம் பணம் வசூல் செய்கின்றன. அதிகம் பணம் காரணமாக ஏழை குழந்தைகளுக்கு அந்த கல்வி அறிவு கிடைக்காமலும் போவது நடக்கிறது.
    மிக சிறந்த ஒரு ஆசிரியரிடம் படிக்க டியூசனும் செல்ல வேண்டும்?????
    இனி அதன் தேவை முழுமையாக ஒழியும். நாட்டின் தலை சிறந்த ஆசிரியர்களை கொண்டு வீடியோக்கள் , அனிமேசன் என்று அனைத்து வகையிலும் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்க அது இந்த epathshala மூலம் இலவசமாக சென்று சேர Digital india வழி செய்கிறது. இதற்கு National Council of Educational Research and Training (NCERT) பெரும் பங்கினை ஆற்றுகின்றனர்.
    அனைத்து மொழிகளிலும் இதனை கொண்டு சேர்க்கும் வேலை தான் நடக்கிறது கவலை தேவை இல்லை. நோக்கம் மிக எளிது அனைத்து குழந்தைகளுக்கு தரமான கல்வி இலவசமாக- நல்ல ஆசிரியர்கள் அறிவு மூலம் சென்று சேரவேண்டும் எனபது தான்.
    இதனால் ஒரு மாணவன் அண்ணா யுனிவெர்சிட்டி கீழ் உள்ள ஏதாவது ஒரு பின் தங்கிய கல்லூரியில் சேர்ந்து விட - கவலை கொள்ள தேவையில்லை - IITல் நடத்தும் ஒரு ஆசிரியரின் கிளாஸ் நோட்ஸ் , Lecturing அனைத்தும் இவனுக்கும் கிடைக்கும். சந்தேகங்களும் தீர்த்து வைக்கும் பெரும் FrameWork தயார் ஆக்க முயற்ச்சி நடக்கின்றன.
    ---------------------------------------
    இறுதியாக :
    நாம் மேலே கூறியவை மட்டும் தான் digital india திட்டத்தின் பயன் என்றோ , மோடி பிஜேபி அரசின் எண்ணம் என்று நினைக்க வேண்டாம். மேலே இருப்பது எனக்கு இந்த டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் பிடித்த சில முக்கியமான விவரங்கள் மட்டுமே. இதன் பலன் மிக பெரியது.
    power to empower என்று மோடி இந்த திட்டத்தை ஏன் அறிமுகம் செய்தார் என்று இப்பொது புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.
    மோடி இந்த திராவிட தறுதலை கூட்டம் செய்வது போல் - இந்த digital india திட்டத்தில் இவ்வளவு முதலீடு செய்வதை விட - வீட்டுக்கு ஒரு கலர் டீவி , வாசிங் மெசின் இலவசம் கொடுத்து வோட்டு வாங்க எவ்வளவு நேரம் ஆகும்????? மோடி 3முறை ஆட்சியை குஜராத்தில் படித்த போதும் ஒருமுறை கூட இலவசம் என்று கூறியவர் கிடையாது.
    ஒரு நல்ல குடிமகனுக்கு எது சரி என்று யோசி???


    அரசின் நல்ல திட்டங்களுக்கு ஒத்துழைப்பது மிக முக்கியமான கடமை நம்முடையது. ஆனால் தமிழகத்தில் என்ன நடக்கிறது??? எப்போ பாரு மோடி மோடி மோடி.. வெறுப்பு பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். அட தூய்மை இந்தியா திட்டம் அவர் மக்கள் நல்லதுக்கா கூறினார்??? உங்கள் நல்லதுக்கு கூறினால் அதையும் ஏன் வரவேற்க மனசு இவர்களுக்கு இல்லை???
    மோடியை விமர்சிக்கும் கூட்டம் யார் என்று தேடி பார்!!!! காங்கிரஸ் , திமுக இது தவிர பார்த்தால் அதிதீவிரமாக எதிர்ப்பவர்கள் மதம் மாற்றும் கூட்டத்தினர். இவர்களுக்கு என்ன நோக்கம் மோடியை வெறுக்க என்று நான் கூறி தெரிய தேவை இல்லை. இதில் புதிய போராளிகள் என்று ஒரு கூட்டம் நாட்டின் பிரிவினை விதைக்க என்னவேண்டும் என்றாலும் பேசி குழப்புகிறது.. கார்ப்பரேட் எதிர்ப்பு என்று கிறுக்கன் போல் பேசி திரிகிறது.
    "எல்லாவற்றிலும் வெறும் குறைகள் மட்டுமே சொல்லி திரிபவன் ஒன்று முட்டாளாக இருப்பான் - இல்லை கிறுக்கனாக இருப்பான். அது வீட்டிலோ நாடிலோ இதுவே உண்மை."
    இந்தியாவில் 92.03%மக்களிடம் மொபைல் இருக்கு. கிராமங்களில் கூட வீட்டுக்கு 3 மொபைல் இருக்கு. ஆனால் கழிப்பறை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை? வெறும் 46.9% மட்டுமே. இதுலாம் நல்லாவா இருக்கு கேட்க???
    மக்கள் தங்கள் தவறை திருத்தி - அரசின் நல்ல முயற்சிக்கு ஆதரவு கொடுப்பது நிச்சயம் அவரகள் கடமை -அதை சொல்லி புரியவைக்க வேண்டியது படித்த ஒவ்வொருவரின் கடமை.
    -மாரிதாஸ்

    All should read / follow this person in facebook
    https://www.facebook.com/Maridhas11
    nvs








    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

  • #2
    Re: டிஜிட்டல் இந்தியா பற்றி கேலி செய்து வரு&#2

    Dear Swamin,
    Exhaustive Interesting important and timely post .Thanks

    Comment


    • #3
      Re: டிஜிட்டல் இந்தியா பற்றி கேலி செய்து வரு&#2

      ஸ்ரீ:
      ஆன்மீகத்தைப் பரப்பவேண்டிய அவசியம் இல்லை
      ஆன்மீகம் என்பது அவரவர் தாம் எவ்விதம் தன்னை
      பண்படுத்திக்கொண்டு தன் ஆன்மாவிற்கு நற்கதியை
      ஏற்படுத்திக்கொள்வது என்கிற விஷயம்.
      எனவே, அது ஒருவன் தன் உடலைத் தூய்மையாக வைத்துக்கொள்ள
      பிறரின் அறிவுறுத்தல் இன்றி தன்னைத்தானே பேணிக்கொள்கிறானோ
      அதுபோன்றது.
      அதற்கு உதவுவது எந்த அளவிற்கு உத்தமமான செயலோ
      அதே அளவிற்கு உயர்ந்தது நம் தேசம் சுபிக்ஷமாக இருக்க
      அரசாங்க நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பது.

      புறவாழ்க்கையில் ஒழுக்கத்தைப் பேணும் ஒருவனால்தான்
      குற்ற உணர்வின்றி அகவாழ்வில் மேன்மை அடைய இயலும்

      நம் பாரததேசத்தின் வளங்களை வளர்த்து
      தேசத்தில் சுபிக்ஷம் ஏற்பட ஒற்றுமையுடன் பாடுபட்டால்
      மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நிம்மதியான வாழ்வியலில்
      ஈடுபட்டு, மன அமைதிபெற்று, இறைப்பணிக்குத் திரும்பி
      ஆன்மீகம் செழிக்க வழிவகுக்கும்.

      எனவே,
      அரசியல்வாதி யார் எனப் பாராமல்
      அவரது கட்சி எது எனப் பாராமல்
      நல்ல செயல்களைப் பாராட்டி
      அதனை வெற்றியடையச் செய்யவேண்டியது
      ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.


      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment


      • #4
        Re: டிஜிட்டல் இந்தியா பற்றி கேலி செய்து வரு&am

        Very well said swamin. The word Patriotism is long forgotten by many.

        Comment

        Working...
        X