Announcement

Collapse
No announcement yet.

GST வரிவிதிப்பில் மாற வேண்டியது மக்களா ? மத்&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • GST வரிவிதிப்பில் மாற வேண்டியது மக்களா ? மத்&#

    GST வரிவிதிப்பில் மாற வேண்டியது மக்களா ? மத்திய அரசா? " - M.Maridhas
    நேற்று தந்திடீவியில் மக்கள் மன்றம் என்று பாண்டே பட்டிமன்றம் " GST வரிவிதிப்பில் மாற வேண்டியது மக்களா ? மத்திய அரசா? " என்று விவாதம் செய்தனர்.சீமானின் பேச்சில் மயங்கி திரியும் ஒரு முட்டாள் எனக்கு அவர் பேசிய வீடியோவை மட்டும் அனுப்பி "கதற்விட்ட சீமான்" என்று தலைப்பிட்டு அனுப்பினார். எனவே அவர்களுக்கும் - அதில் விளக்கம் தேடும் சிலருக்கும் என்பதில் இதோ.முதலில் விவாதத்தில் கலந்து கொண்டவர்களில் எனக்கும் ஒரு வருத்தம் உண்டு... அதை கூறிவிட்டு சீமான் பேச்சை கையில் எடுக்கிறேன்.
    இதில் பேசியவர்கள் பட்டியல் அவர் விவரம் இதோ...
    1.சேகர் அவர்கள் , இவர் தான் (Direct Taxes Committee of Institute of Chartered Accountants of India )ICAI உடைய சேர்மன். எனவே பொருளாதார அறிவை நான் சொல்லி தெரிய தேவை இல்லை.
    2. H ராஜா , இவர் பிஜேபி காரர் என்பதை தாண்டி இவர் professional Chartered Accountant.
    3. அதிமுக மாபோ பாண்டியராஜன், எனக்கு தெரிந்து இவர் ஜெயலலிதாவிடம் இருந்த மிக சில அறிவாளிகளில் ஒருவர். இவர் படிப்பு BE ., MBA.. அதில் MBA முடித்தது Xavier Labour Relations Institute, Jamshedpur. இந்த கல்லூரி நாட்டில் உள்ள பொருளாதார கல்விகளை கற்பிக்கும் மிக சிறந்த கல்லூரிகளில் ஒன்று. இதில் சென்று படிப்பது என்பது எவ்வளவு எளிமையான விசயமும் அல்ல.
    4. கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த மஹேந்திரன் சார். உண்மையான கம்யூனிஸ்ட் அனைவருமே பொருளாதாரம் பேசுவதில் நிச்சயம் தகுதியானவர்களே.. இடதுசாரிகள் பொருளாதார கொள்கை பேசுவதில் நான் 100% வரவேற்பேன். அவர்களிடம் விசயம் இருக்கும். என்ன குழப்புவார்கள், சீனாவுக்கு ஆதரவாக இருப்பர் அது மட்டுமே நெருடல். {நான் கம்யூனிஸ்ட் பொருளாதார கொள்கை நடமுறைக்கு சாத்தியம் இல்லாதது என்பதால் மட்டுமே நான் எதிர்ப்பவன்.}
    5.காங்கிரஸ் கட்சியை சார்ந்த மோகன் குமார மங்களம்.. இவர் குடும்ப பின்னனியோடு இவர் தகுதிகளை பார்த்தால் நிச்சயம் இவரும் பேச தகுதியுள்ள ஆளே..
    கடைசியாக இந்த சீமான்..
    6.சீமானின் என்ற செபாஸ்டீன்- தகுதி அவர் 5படம் இயக்கிய சினிமாகாரர், சிறப்பாக வசனம் எழுதியதற்கு ஒருமுறை தமிழ் நாடு வழங்கும் விருதை பெற்றவர்.
    "அதாவது மற்றவர்கள் பொருளாதாரம் தெரிந்து அறிவாளிகள்... இந்த செபாஸ்டீன் மட்டும் நல்லா வசனம் எழுத தெரிந்தவர்" - இதை என்னவென்று சொல்ல?
    முதல் 5 நபர்கள் 100% பேச தகுதியான நபர்கள்... ஆனால் இந்த கடைசி செபாஸ்டீன் என்ன தகுதி இருக்குனு இவரை கூட்டிவந்து பேசவிட்டீர் தினதந்தி? வழக்கம் போல வசனம் பேசிட்டு போய்ட்டார்.. இவருக்கு சுட்டு போட்டாலும் பொருளாதாரம் வரவே வராது. இவர் ஒரு வடிகட்டின முட்டாள் எத்தனை முறைதான் நிரூபிக்க!!!
    அறிவாளிகள் அமர்வில் மனநிலை பாதித்த கவி ஒருவன் உள் புகுந்து பேசி அவனே சிரித்து கொண்டது போல் இருந்தது இந்த நிகழ்ச்சி. இந்த பைத்தியகாரனிடம் இருந்து 1% மக்களை காப்பாற்ற வேண்டி இந்த பதிவு தவீர சீமானை மதித்து அல்ல.
    சரி இப்போது அவர் பேசிய பேச்சுக்கு செல்வோம்...
    ----------------------------------------------

    01 ) சரக்குக்கு மட்டும் இல்லை வரி... அம்பானியுடைய பெட்ரோலுக்கு வரி இல்லை .,
    இதை பலமுறை தெளிவாக கூறிவிட்டது மத்திய அரசு. மாநிலங்களுக்கு பெட்ரோல் , ஆல்களால் மீதான வரி முறையே 33% , 25% தொடங்கி சில மாநிலங்களில் 54% வரை வரி வசூல் செய்கிறார்கள். இந்த இரண்டும் தான் மாநில வரிவருவாயில் முக்கியமானவை. தற்போதைக்கு இவை இந்த GSTகீழ் கொண்டுவருவது நிச்சயம் பெரிய அளவு நிதிபற்றாகுறையை மாநில அரசுகளின் மீது ஏற்படுத்தும் என்ற நியாயமான கோரிக்கை ஒருபக்கம்... இன்னொரு முக்கியமான காரணம் இந்த பெட்ரோல் மீதான வரி விசயத்தில். பெட்ரோல் மீது தற்போதைக்கு அந்த நாடும் வரியை குறைக்க தயாராக இல்லை என்பதும் இன்னொரு காரணம்.
    கட்ச எண்ணய் உற்பத்தி மூலம் பணம் கொட்டியது அரபிய நாடுகளில்.. அதை கொண்டு உலகம் முழுவதும் தீவிராவாதம் பரப்பின இந்த நாடுகள். இதனால் கடந்த 40 வருடத்தில் பெரிய அளவு உலகம் முழுவதும் தீவிரவாதம் வளர்ந்து நாசம் செய்ய அனைத்து தீவிரவாத பிரச்சனைக்கும் மையமாக இருக்கும் இந்த அரபிய தேசங்களை சார்ந்து இருப்பதை வேகமாக குறைத்து அந்த நாடுகளை பொருளாதார நிலையில் இருந்து வீழ்த்த- உலக நாடுகள் செய்ய வேண்டியது மிம்சாரத்தில் இயங்கும் வண்ணம் அனைத்தையும் மாற்றுவது. இதை 2026க்குள் செய்ய உலக நாடுகள் வேகம் காட்டுகின்றன. (40 வருடம் முன்னர் தீவிரவாத தாக்குதல் என்று எதாவது வரலாறு உண்டா?)
    இல்லை உலகம் இந்த கேடுகெட்ட அரபு நாடுகளால் அழியும் என்று பொருளாதார நிபுணர்கள் கூற ரஷ்யா , அமெரிக்கா தங்களிடம் இருக்கும் கச்சா எண்ணயை அதிகம் எடுக்கவும் ஏற்றுமதி செய்யவும் அனுமதி அளித்து இன்று கட்சா எண்ணய் விலையை வீழ்த்தி மிக பெரிய அளவு நெருக்கடியை உருவாக்கியுள்ளனர். இதனால் கட்சா எண்ணய் விலை வீழ்ந்தாம் நாடுகள் வரியை குறைக்கவில்லை. காரணம் மிம்சாரபயன்பாட்டு ஆரய்ச்சிகள் தடைபெரும். எனவே மிம்சார வாகன பயண்பாட்டை நோக்கி செல்லும் சூழலை உலக நாடுகள் உருவாக்க விரும்புகின்றன. அதன் பின் இந்த நாடுகள் வழிக்கு வரும். இல்லை அழித்து ஒழிக்க வேண்டியது தான்.
    இது தான் இரண்டு முக்கிய காரணம்.
    --------------------------------------
    02)ஆனால் ஏழை அப்பத்தா ஓலை ஊறுகாய்க்கு வரி. பர்கருக்கு 5 விழுக்காடு ; கடலைமிட்டாயிக்கு 15% விழுக்காடு...
    இதனால் தான் நான் இந்த சீமானை முட்டாள் என்கிறேன். ஏன் என்றால் 20,00,000 வரை காட்டும் எந்த தொழிலுக்கும் வரியே கிடையாது. காய்கறிகாரன் ஆரம்பித்து கசாப்பு கடைகாரன் வரை யாராது ஒழுங்க பில் போடுங்க , வரிகட்டுங்கனு எப்போ சார் அரசு சொன்னது? இவர்கள் யாரும் GST கீழ் இல்லை. எந்த குடிசை தொழிலும் வரி கிடையாது.
    இவர்கள் எல்லாம் சிறு குறு தொழில் செய்வோர்... 20லட்சம் ஆண்டு வர்த்தகம் இருக்காது.. எனவே இவர்கள் விற்கும் எந்த பொருளுக்கும் வரி கிடையாது.
    ஆனால் அதே ஊறுகாய் என்று ஆச்சி நிறுவனம் ஆண்டுக்கு 80கோடி அளவுக்கு உற்பத்தி செய்து வருமானம் பார்க்கும் என்றால் இந்த நிறுவனத்திற்க்கு வரி கட்டாயம் உண்டு. எனவே பொருள் ஊர்காயா , கடலைமிட்டாயா , பீசாவா , பர்க்கரா என்பதை விட்டு அதை தயாரிக்கும் உற்பத்தி நிறுவனம் எவ்வளவு பெரியது எவ்வளவு ஆண்டு வருமானம் என்பதை பொறுத்து வரி விதிக்கபடுகிறது இந்த GST. இதில் என்ன தவறு?
    எத்தனை முறை அரசு விளக்கம் கொடுத்தாலும் இந்த மாதிரி கிருக்கன் போல் பேசுவதை நிறுத்தாது ஏன்??? ஏன் வேண்டும் என்றே குழப்புகிறான் ???
    அதனால் என் அப்பத்தா , இந்த 100மில்லி ரெத்தம் எடுக்கும் குருட்டு குற்றசாட்டுகள் அனைத்தும் பொய். திட்டமிட்டு பரப்பபடும் கீழ்தரமான குற்றசாட்டு.
    ----------------------------------
    03)கடை என்னுடயது - முதலீடு என்னுடையது- ஆனா வரி 23+30 = 53% வரி...?

    இதை விட GST யை புரிந்து கொண்ட மனிதனை நான் பார்த்ததே இல்லை.. இதனால் தான் நான் திரும்ப திரும்ப கூறுகிறேன் இவருக்கு அடிபடை பொருளாதார அறிவே கிடையாது என்று..
    பொருளாதார அறிவு இல்லாதவன் என்ன செய்வான்? அவன் இஸ்டத்துக்கு வசனம் பேசுவான். அதான் இந்த சீமான் பேச்சு. 23% வரி எல்லாவற்றிகும் கிடையாது. முழுமையாக எனது முந்தய கட்டுரையை படிக்கவும்..
    ----------------------------------

    04)உற்பத்தியை பெருக்கி வருமானம் ஈட்டவேண்டும் அரசு.. வரி போட்டு அல்ல??? என்ற அறிவியல் கருத்தை சீமான் சொல்கிறார்.
    இந்தியா அரசை பொருத்தவரை அரசின் பொதுதுறை நிறுவனங்கள் மூலம் வருமானம் , வரி மூலம் கிடைக்கும் வருமானம் என்று எளிமையாக பிரித்துகொள்ளுங்கள்.. இப்படி தான் அனைத்து நாடுகளும் கொஞ்சம் மாற்றம் இருக்கும்.
    இதில் முதல் 7 பெரும் பொது துறை நிறுவனங்கள் என்றால்
    National Thermal Power Corporation (NTPC)
    Bharat Heavy Electricals Limited (BHEL)
    Indian Oil Corporation Limited(IOCL)
    Coal India Limited(CIL)
    Oil and Natural Gas Corporation (ONGC)
    Steel Authority of India Limited (SAIL)
    Gas Authority of India Limited(GAIL)

    இதில் எல்லா நிறுவனத்தையும் எதிர்த்து தமிழ் நாட்டில் யார் போராட்டத்தை தூண்டிவிடுவது????? இதே சீமான் தானே. ஆக இந்த நிறுவனங்கள் திட்டங்களை சீனாவிடம் நங்கொடை வாங்கிகொண்டு முடக்கும் வேலையை செய்துவிட்டு.. இப்போ எப்படி வெக்கம் இல்லாமல் அரசு உற்பத்தி கூட்டி வருமானம் பார்க்கவேண்டும் என்கிறார்??? அதாவது எந்த பொதுதுறை நிறுவனம் இயங்கவிடுகிறார்கள் இந்த போராளிகள்????
    எல்லாவற்றிலும் உள் புகுந்து குழப்பி போராட்டம் நடத்த தூண்டுவதும் செய்துவிட்டு வருமானம் உற்பத்தி மூலம் வரவேண்டும் - வரியால் மட்டும் வரகூடாது என்று பேசுவது போல ஒரு பச்சோந்தி தனம் எது?
    எல்லா மத்திய அரசின் திட்டத்தையும் எதிர்த்து போராட்டம் நடத்த சீனாவிடம் இருந்து அரபிய வழியாக பெற்ற பணம் போராட்டமாக இங்கே நடக்க... இந்த சீமான் இப்படி பேசுவது உண்மையில் இவரை போன்ற துரோகியை நாடு இதற்கு முன் சந்தித்தது இல்லை என்று கூற தோன்றுகிறது.
    அப்துல் கலாம் மண்ணில் இது போல் ஓநாய்கள், நரிகள் நடமாட்டம் கண்டு வெறுப்பு உச்சத்தை தொடுகிறது.
    -------------------------------------

    05)நம் நாடு ஏற்றுகொன்றுள்ள பொருளாதார கொள்கை உலகமயமாதல் , தனியார் மயமாதல் கொள்கை... சந்தை பொருளாதார கொள்கை.. சந்தை பொருளாதார கொள்கை ஏற்ற எந்த நாடும் வளராது இது சத்தியம்!!!
    எந்த நாடு இப்போ இப்படி கொள்கையால் நாசம் ஆனது என்று கொஞ்சம் கூறினால் நலம். இல்லை என்றால் இது வழக்கம் போல சீமானின் கவர்ச்சி பேச்சு.. சும்மா உலகமயமாதல் என்று ஒரு வார்த்தை வச்சு இவன் இஷ்டத்துக்கு பேசுவது எல்லாம் உண்மையாகிவிடாது.
    "எம்ஜீஆர் முதல்வராக இருந்த போது பெரியாருக்கு பாரட்டுவிழா நடத்த , அதில் பெரியார் கலந்து கொள்ள - அந்த மீடிங்க்ல என்ன சொன்னார் தெரியுமா என்று சத்தமாக வீரவசனம் பேச இவருடய அடிவருடிகள் ஆகா ஓகோ ஏகோ என்று கைதட்ட "
    அட முட்டாள்களா பெரியார் இறந்து 5 வருடம் சென்ற பிறகு தாண்டா எம்ஜீஆர் முதல்வர் ஆனார் என்று சொல்லி புரியவைக்க முயற்சி செய்கிறோம்.
    "முடியாது என்ன சொன்னாலும் அண்ணன் சீமான்" என்று கூறும் இந்த முட்டாள்களை என்ன சொல்வது???? அவர்களுக்காக இந்த பேச்சு எனவே இதை நாம் பெரிதாக விளக்க தேவை இல்லை.
    --------------------------------
    06)5% GST விதிக்கும் கெனடா.. அது கல்வி மருத்துவத்தை இலவசமாக கொடுக்கிறது. என் நாடு அதை தருமா?

    கனடா மக்கள் தொகை ஏறக்குறைய 3.51கோடி
    சென்னை , பெங்களூர் , மும்பை இந்த மூன்று நகரத்தில் மக்கள் தொகை கூட்டு மதிப்பு மட்டும் : 3.5கோடி.
    அதாவது இந்தியாவில் அனைவரையும் விரட்டி அடிச்சுட்டு... இந்த 3 நகரத்து மக்கள் மட்டும் வாழ்ந்தால் எப்படி இருக்கும்??? அப்படி என்று கற்பனை செய்துபாரும்..
    இந்த 3 கோடிபேருக்கு வரியே இல்லாமல் நாட்டை நடத்த முடியும் இந்தியாவால். ஏன் என்றால் அந்த அளவு வழுவானது இந்திய பொருளாதாரம். இது புரிகிறதா???
    கனடாவின் Population Density 3.92 people per.sq.km
    இந்தியாவின் Population Density 382 people per.sq.km

    அதாவது கனடாவில் 4 பேர் வாழும் இடத்தில் இந்தியாவில் 392பேர் வாழ்கிறோம்.. அறிவு இருக்குறவன் இந்தியா கனடாவை ஒப்பிடுவானா???
    கனடாவில் 100% படிச்சவனுக வேற.. இங்கே இந்தியாவில் ??? கனடாவுக்கு எப்போ சுதந்திரம் கிடைத்தது? நமக்கு???
    உண்மையில் அறிவு இருக்கா இல்லையா இப்படி பேச இவருக்கு?
    --------------------------------------
    07)எல்லா நாடும் என் நாட்டில் வந்து முதலீடு செய்யும்... என் நாடு எந்த நாட்டில் முதலீடு செய்கிறது?
    எதுக்கு நாம் அங்கே முதலீடு செய்ய வேண்டும்??? நீ என்ன பைத்தியமா இல்லை பைத்தியமாதிரி நடிக்கிறயா? என்று கேட்க தோன்றுகிறது...
    உலகத்தின் மக்கள் தொகையில் 17.5% இந்தியாவில் இருக்கிறார்கள்... இங்கேயே தேவை அதிகம் இருக்கு உற்பத்தி நிறுவனங்கள் இங்கே வந்து தொழில் தொடங்கி இங்கே வேலைவாய்ப்பை பெருக்க வேண்டி இந்தியா முதலீடுகளை அழைக்கிறது..
    நாம முதலீடு செய்யவில்லை என்று பேசுவது போல ஒரு முட்டாள் தனம் எதுவும் இல்லை... இந்தியா முதலில் வளர்ந்த நாடாக ஆகும் வரை இந்த முதலீட்டின் தேவை இருக்கும்.
    சின்ன நாடுகளில் கொஞ்சம் கொஞ்சம் முதலீடும் செய்கிறது இந்தியா என்று இவருக்கு தெரியவாய்ப்பில்லை. ஸ்ரீலங்கா , நேபாளம் , பங்களாதேஸ் போன்ற நாடுகளுக்கு இந்தியா பெரிய அளவு உதவுவது இவர்க்கு தெரியாதா?
    சமீபத்தில் கூட இந்த நாடுகளுக்காக இஸ்ரோ ஒரு செயற்கைகோல் இலவசமாக வழங்கியது இந்தியா. இது தெரியாதா என்று கேட்டோம் என்றால் என்ன சொல்வார் இந்த மன நோயாளி?
    என் பிள்ளைகள் படிக்கவில்லை... அங்கே எதுக்கு காசு கொடுத்த என்று அடுத்து குழப்புவான்... இது இன்னொரு முட்டாள் தனமான பேச்சு.
    ---------------------------------
    08)வளரும் நாடுகள் பட்டியளில் இருந்து இந்தியா நீக்கபட்டுவிட்டது..???

    அது எப்போ நடந்தது?? எனக்கு தெரியவில்லை... தெற்கு ஆசியாவில் மிக சிறப்பான பொருளாதார கொள்கையும், வளரும் நாடிகளில் பிரதான நாடாக இருப்பது இந்தியா. இதன் GDP 7.65.. இது உலக வங்கியின் அறிக்கையில் கூறபட்டுள்ள தகவல்..
    சீமானுக்கு யாரோ தண்டையார் பேட்டையில் டீகடையில் உக்காந்து சொல்லி இருபாங்க போல... இல்லை என்றால் இந்த one india, மாலைமலர் போன்ற நமிதா, நயன்தாரா செய்திகளுக்கு இடையில் பொருளாதார செய்தியை போடும் கீழ்தரமான ஊடகங்கள் மூலம் செய்தி படித்து வளார்ந்தவராக இருப்பார். அதான் சரியா தவறா என்று தகவலை தெரியாமல் அடிச்சுவிடுகிறார்.
    எனவே இது அடுத்த பொய்.
    ----------------------------------
    10)ஒரே இரவில் வரி அமல் ஆவது கொடுமை என்று திருவள்ளுவர் சொல்லி இருக்கார்...
    ஆமா இவர் திருவள்ளுவர் சொன்னபடி வாழும் தமிழ் மகன்.. சொல்லிவிட்டார்.. திரும்பவும் தான் முட்டாள் என்று நிரூபிக்கிறார் இந்த சீமான்.
    இந்தியாவில் அப்படி ஒரே இரவில் GST எந்த கட்சியாலும் கொண்டுவரவே முடியாது என்பது ஒழுங்கா சட்டம் தெரிந்த அனைவருக்கும் தெரியும். நாடாளுமன்றம் - அதில் இரண்டு அவைகளின் ஒப்புதல் வேண்டும்.. (மாநிலங்கள் அவை எந்த அளவுக்கு விவாதம் நடந்தது என்று கொஞ்சம் ஒழுங்க செய்தி படிக்கும் அனைவருக்கும் தெரியும்.)
    GST மத்திய - மாநில அரசுகள் எத்தனை முறை பேசின... என்ன என்ன விவாதம் நடந்தது.. அது எப்படி நாடாளுமன்றம் சென்றது... பின்னர் எத்தனை முறை விவாதம் நடந்தது.. என்று கடந்த 3 ஆண்டுகள் செய்திதாளை வாங்கி பார்க்க சொல்லுங்கள்..
    முறையாக அறிவிக்கபட்டு தேதி தெரிவிக்கபட்டு நடைமுறைக்கு வந்த திட்டம் இது.. இது ஒரு இமாலய சாதனை.. திடீர்னு சொல்லிடாங்க சீமான் கூற கூசவில்லையா நாக்கு?
    இது போல் பொய் இந்த நாட்டில் சீமான் மட்டுமே பேசமுடியும்..
    இந்தியாவின் சட்டதிட்டம் எப்படி என்ற அறிவும் சீமானுக்கு இல்லை என்பது இதன் மூலம் அப்பட்டமாக தெரிகிறதா???
    இவர் ஒரு வடிகட்டின ஏமாற்று பேர்வழி என்று அனைவரும் தோலுரிக்க - அதுலாம் முடியாது எங்கள் அண்ணன் சீமான் என்று போகும் இந்த 1% வோட்டை என்னவென்று சொல்ல.... ??????
    நான் இப்போதும் கூறுகிறேன்.. சீமானுடன் நான் பொருளாதார விவாதம் நடத்த தயார்.. 100% அவருக்கும் பொருளாதாரம் , அறிவியல் இரண்டும் தெரியாது. அத்துடன் நாடு , ஆட்சி , வரி என்ற எந்த நிர்வாக அறிவும் கிடையாது என்று நிரூபிக்க நான் தயார்.
    -மாரிதாஸ்



    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

  • #2
    Re: GST வரிவிதிப்பில் மாற வேண்டியது மக்களா ? மத&#302

    Splendid What an exhaustive explanation to expose the fanatic

    Comment

    Working...
    X