Announcement

Collapse
No announcement yet.

Dasavataram part 7-Rama

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Dasavataram part 7-Rama

    Courtesyr.Smt.Saroja Ramanujam
    ராமாவதாரம்
    दशरथस्य मनसः भक्ति कर्मज्ञानेति भार्याः |
    धर्मार्थकाममोक्षेति पूत्रेषु धर्म: रामो परमप्रिय: ||
    दशरथः दशेन्द्रियवशगः कर्मरूपिण्याचोदित:|
    धर्मरूपिणं रामं राज्यात् निष्कासितवान् ||
    धर्मानुसृतः लक्ष्मणः लक्ष्मिसंपन्नः |
    मोक्षार्थं कामः शत्रुघ्नः भरतप्रियानुज:||
    தசரதஸ்ய மனஸ: பக்திகர்மஞாநேதி பார்யா:
    தர்மார்த்தகாமமோக்ஷேதி புத்ரேஷு தர்ம:ராமோ பரமப்ரிய:
    தசரத: தசேந்த்ரியவசக: கர்மரூபிண்யாசோதித:
    தர்மரூபிணம் ராமம் ராஜ்யாத் நிஷ்காஸிதவான்
    தர்மானுஸ்ருத: லக்ஷ்மண: லக்ஷ்மிசம்பன்ன: |
    மோக்ஷார்த்தம் காம: சத்ருக்ன: பரதப்ரிய||
    தசரதஸ்ய- தசரதன் என்ற மனத்திற்கு
    பக்திஞானகர்ம இதி- பக்தி, ஞானம் கர்மம் என்ற
    பார்யா: - மனைவிகள்
    தர்மார்த்தகாமமோக்ஷேதி- தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் என்ற புத்ரேஷு-பிள்ளைகளில்
    தர்ம:- தர்மம் ஆகிய
    ராம:- ராமன்
    பரமப்ரிய: - மிகவும் பிரியமானவன்
    தசரத:- தசரதன்
    தசேந்த்ரியவசக:- இந்த்ரியங்களின் வசத்தில் அகப்பட்டு
    கர்மரூபிண்யா – கரம்த்தின் உருவான கைகேயியினால்
    சோதித:தூண்டப்பட்டு
    தர்மரூபிணம்- தருமத்தின் உருவான
    ராமம் – ராமனை
    ராஜ்யாத்- ராஜ்ஜியத்தில் இருந்து
    நிஷ்காஸிதவான் – வெளியேற்றினான்
    தர்மானுஸ்ருத: -தர்மத்தை (ராமனை) பின்பற்றினான்
    லக்ஷ்மண: லக்ஷ்மணன்
    லக்ஷ்மிசம்பன்ன: - அவன் அர்த்த ஸ்வரூபன் அதாவது கைங்கர்ய மாகிற செல்வத்தை உடையவன்
    மோக்ஷார்த்தம் காம:- காமம் அல்லது ஆசை மோக்ஷத்தை பின்பற்றியே அதனால்
    சத்ருக்ன: - சத்ருக்னன்
    பரதப்ரிய:- பரதனை நேசித்தான்
    விளக்கம்
    தசரதன் என்றால் பத்து ரதங்களை உடையவன் அல்லது பத்துரதங்களை ஒரே சமயத்தில் யுத்தத்தில் சமாளிப்பவன் என்பது பொருள். இது பத்து இந்த்ரியங்கள் உடைய மனிதனைக் குறிக்கிறது. அவனுடைய மனைவிகளில் கௌசல்யா பக்தியையும் சுமித்ரா ஞானத்தையும் கைகேயி கர்மத்தையும் குறிக்கின்றனர்.
    தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் என்பவை அவனுடைய நான்கு பிள்ளைகள். இதில் ராமர் தர்மம், லக்ஷ்மணன், அர்த்தம் , சத்ருக்னன் காமம் , பரதன் மோக்ஷம்.
    இது எப்படி என்றால் வால்மீகி சொல்கிறார், 'ராமோ விக்ரஹவான் தர்ம:', ராமன் தர்மத்தின் உருவே என்று. தர்மத்தின் ஆணிவேர் வேதத்தில் உள்ளது. வேதத்தின் பொருள் பரமாத்மா அதாவது ராமன்.
    'லக்ஷ்மணோ லக்ஷ்மிஸம்பன்ன: ' அதாவது கைங்கர்யம் என்ற செல்வத்துடன் கூடியவன். அர்த்தம் என்றால் பொருள். அது தர்மத்துடன் கூடியே அதாவது தர்மத்தின்படி ஈட்டப்பட்டே இருக்க வேண்டும். அதுதான் லக்ஷ்மணன்
    எப்போதும் ராமனுடன் இருப்பதன் உட்பொருள்.
    பரதன் முமுக்ஷுத்வம் அதாவத் மோக்ஷத்தில் நாட்டத்தை காண்பிக்கிறான்.
    சத்ருக்னன் ஆகிய காமம் அல்லது ஆசை மோக்ஷத்தைக் குறித்தே இருக்க வேண்டும். அதனால் சத்ருக்னன் பரதனை பின்பற்றுகிறான்.
    தசதரதன் ஆகிய மனம் ஞானமாகிய கௌசல்யையை விட்டு இந்த்ரியங்கள் வசப்பட்டு காம்ய கர்மம் ஆகிய கைகேயியின் தூண்டுதலால் தருமத்தை கைவிடுகிறது. இதனால் ராமனாகிய தர்மம் ராஜ்யத்தில் இருந்து வெளியேறுகிறது. சுமித்திரை ஞானத்தின் ஸ்வரூபம். ராமனைப் பிரிய மனம் இன்றி தசரதன தவிப்பது மனிதனின் மனசாட்சி எவ்வாறு தருமத்தைக் கைவிட தயக்கம் காட்டுகிறது என்பதாகும். முடிவில் ஆசைவயப்பட்டு மனம் தருமத்தைக் கைவிட்டு நாசத்தை அடைகிறது.
    இதையே கீதையில் 'த்யாயதோ விஷயான் பும்ஸ: சங்கஸ்தேஷு உபஜாயதே' என்ற ஸ்லோகத்தில் பகவான் ஆசைவயப்பட்டு மனிதன் உலகவிஷயத்தில் பற்றுக்கொண்டு எவ்வாறு முடிவில் நாசம் அடைகிறான் என்பதை கூறுகிறார். 'ஸ்ம்ருதி ப்ரம்சாத் புத்தி நாச: புத்திநாசாத் விநச்யதி.' புத்தி தர்மத்தை விட்டு நாசம் அடைகிறது.


    सीताराममिथुनं जीवब्रह्मयो: ऐक्यं |
    इन्द्रियग्राम: एव बलबान् दशग्रीव: ||
    काञ्चन मृगतृष्णया हृतो जीवो दशेन्द्रियैः |
    लङ्का नाम शरीरे बद्धः संसारार्णवमध्ये||
    आचार्यो आन्जनेयः संगमयति तौ पुनः |
    नाशितं रजसो बलं सत्वगुणसहायतः||
    ஸீதாராமமிதுனம் ஜீவப்ரம்மயோரைக்யம்
    இந்த்ரியக்ராம: ஏவஏவ பலவான் தசக்ரீவ:
    காஞ்சனம்ருக த்ருஷ்ணயா ஹ்ருதோ ஜீவோ தசேந்த்ரியை:
    லங்காநாம சரீரே பத்த: ஸம்ஸாரார்ணவமத்யே
    ஆசார்யோ ஆஞ்சநேய: சங்கமயதி தௌ புன:
    நாசிதம் ரஜஸ: பலம் ஸத்வகுணஸஹாயத:
    சீதாராம மிதுனம்- சீதை ராமன் என்ற இரட்டை
    ஜீவப்ரம்மயோரைக்யம்- ஜீவன் பிரம்மம் இவைகளுடைய ஒன்றாக இருக்கும் நிலையைக் குறிக்கிறது.
    பலவான் – பலம்பெற்ற
    இந்த்ரியகிராம:- பத்து இந்த்ரியங்கள்
    தசக்ரீவ: - பத்துதலை கொண்ட ராவணன்
    காஞ்சனம்ருக த்ருஷ்ணயா- பொன் மானைப் போன்ற பொன்னாசை முதலியவைகளால்
    தசேந்த்ரியை:-பத்து இந்த்ரியங்களால்
    ஹ்ருத; ஜீவ:- ஜீவாத்மா கவரப்படுகிறது
    ஸம்ஸாரார்ணவமத்யே- சம்சாரமாகிய கடலின் நடுவே


    லங்காநாம சரீரே – சரீரமாகிய இலங்கையில்
    பத்த: - சிறைப்படுகிறது
    ஆசார்யோ ஆஞ்சநேய:- ஆஞ்சநேயர் என்ற குரு
    சங்கமயதி தௌ புன:- ஜீவனையும் பரமனையும் மறுபடி சேர்த்து வைக்கிறார்.
    ரஜஸ: பலம்- ராக்ஷசசேனை ( ரஜஸ் என்கிற குணத்தின் பலம் )
    ஸத்வகுணஸஹாயத:- ஸத்வ குணத்தின் உதவியால் ( சத்வகுண ரூபமான விபீஷணன்)
    நாசித:- அழிக்கப்படுகிறது.
    சீதை ராமன் இருவரும் உபநிஷத்தில் கூறியுள்ள இரு பறவைகளை சித்தரிக்கிறார்கள் என்று கொள்ளலாம். முண்டக உபநிஷத்தில் 'த்வா ஸுபர்ணாஸயுஜா ஸகாயா' என்ற பாடத்தில் பின்வருமாறு கூறப்படுகிறது. இருபறவைகள் எப்போதும் ஒன்றாகவே இருப்பன. ஒன்று மேல் கிளையில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டு இருக்கிறது. இன்னொன்று கீழ்க்கிளைக்கு இறங்கி புளிப்பானவையும் இனிப்பானவையுமான பழங்களை சாப்பிட்டு பிறகு மெல்ல மெல்ல மேலே ஏறி அங்கு உள்ள பறவையைப் பார்க்கிறது. பிறகு அதுவும் நானும் வேறல்ல என்று உணர்கிறது.
    இதில் மேலே உள்ள பறவை பரமாத்மா. அதை விட்டு கீழே இறங்கி புளிப்பு இனிப்பு என்கிற கனிகளாகிற சுகதுக்கங்களை அனுபவிப்பது ஜீவாத்மா.இந்த உவமை இங்கே எப்படிப் பொருந்தும் என்று பார்க்கலாம்.
    ஜீவாத்மாவாகிய சீதை எல்லாம் நிறைந்த பரமாத்மாவான ராமனை அடைந்தும் உலகை ஆசையால் பீடிக்கப்பட்டு பொய்மானைப்போன்ற விஷய சுகங்களில் மனம் செலுத்துகிறது.
    ராமன் சீதை சொல் கேட்டு அதைப் பிடிக்கப்போன மாதிரி பகவான் நாம் உலக இன்பத்தைக் கேட்டால் அனுமதித்து விலகி விடுகிறான். பிறகு தசமுகனாகிற இந்த்ரியங்கள் பலம் மிகுந்து நம்மை கவர்ந்து சென்றுவிடுகின்றன.
    இதைத்தான் கீதையில் 'இந்த்ரியாணி பிரமாதீனி ஹரந்தி பிரஸபம் மன:' (கீதை- 2.6௦)- இந்த்ரியங்கள் பலம் வாய்ந்தவை சற்று ஏமாந்தால் மனதை கவர்ந்து சென்றுவிடும் என்று பகவான் சொல்கிறார்
    இலங்கை தான் சரீரம் அது சம்சாரமாகிற கடலால் சூழப் பட்டிருக்கிறது. ஜீவன் இப்போது அங்கே சிறைப் படுகிறது. தன்னுடைய செயலுக்கு வருந்தி ஈசனுடன் சேரத்துடிக்கும் தருவாயில் ஆஞ்சநேயனாகிற குரு தோன்றுகிறார். ரஜஸ் தமஸ் இவைகளின் பலம் சத்துவ குணத்தின் உதவியால் அழிகிறது. ராவணன் ரஜஸ், கும்பகர்ணன் தமஸ், விபீஷணன் ஸத்வம். சீதையின் அக்னிப்ரவேசமே ஜீவனின் அந்த:கரண சுத்தி. பக்தி என்னும் அக்னியால் மனம் புத்தி இவைகளின் மாசுகள் அழிந்துவிடுகின்றன.
    :
    विप्रकृष्टा शोकपरिप्लुता सीता अशोकवने
    जीवस्य परमात्मनः वियोगं नाटयति |
    रामोऽपि भृशं दुःखितः दर्शयति कथं
    ईश्वरोऽपि व्यथते जीवे विदूरम् गते ||
    விப்ரக்ருஷ்டா சோகபரிப்லுதா ஸீதா அசோகவனே
    ஜீவஸ்ய பரமாத்மன: வியோகம் நாடயதி
    ராமோ அபி ப்ருசம் துக்கித: தர்சயதி கதம்
    ஈஸ்வரோ அபி வ்யததே ஜீவே விதூரம் கதே
    ஸீதா- சீதை
    விப்ரக்ர்ஷ்டா- ராமனைப் பிரிந்து
    சோகபரிப்லுதா- சோகத்தில் மூழ்கியதின் மூலம்
    ஜீவஸ்ய- ஜீவாத்மாவினுடைய
    பரமாத்மன:- பரமாத்மாவிடம் இருந்து
    வியோகம்- பிரிவுத்துன்பத்தை
    நாடயதி –காண்பிக்கிறாள் ( நாடகம் மாதிரி)
    ராம: அபி- ராமனும்
    ப்ருசம் துஹ்கித: - மிகவும் துக்கமடைவதன் மூலம்
    கதம் – எவ்வாறு
    ஈஸ்வர: அபி- இறைவனும்
    ஜீவே – ஜீவன்
    விதூரம் கதே – தன்னை விட்டு வெகு தூரம் சென்றுவிட்டபோது
    வ்யததே- வருந்துகிறான்
    தர்சயதி- என்பதைக் காட்டுகிறான்.
    நாம் இறைவனை விட்டு விலகி உலகில் கஷ்டப்படும்போது இறைவனும் அதற்காக வருந்துகிறான். நாம் அவனை வருந்தி அழைக்கும்போது அதற்காகவே காத்திருப்பவன் போல் நம்மை வந்து ஆட்கொள்ளுகிறான்.
    இவ்வாறு தாயாரும் பெருமாளும் நமக்காக ஒரு நாடகம் நடித்துக் காட்டியிருக்கிறார்கள் என்று சொல்லலாம்.
    ராமன் மனிதனாக வந்து மனிதனாகவே வாழ்ந்து நமக்கு வாழும் முறையை பின்னால் கீதையில் சொல்லப் போவதை நிதர்சனமாகக் காட்டியுள்ளதே ராமாயணத்தின் உட்பொருள் என்று தோன்றுகிறது.
Working...
X