188 அல்லிவிழியால்
188 அல்லிவிழியால்
திருவடியை அருளுகதய்யதன தான தய்யதன தான
தய்யதன தான தனதான


அல்லிவழி யாலு முல்லைநகை யாலு
மல்லல்பட ஆசைக் கடலீயும்
அள்ளவினி தாகி நள்ளிரவு போலு
முள்ளவினை யாரத் தனமாரும்
இல்லுமிளை யோரு மெல்ல அயலாக
வல்லெருமை மாயச் சமனாரும்
எள்ளியென தாவி கொள்ளைகொளு நாளில்
உய்யவொரு நீபொற் கழல்தாராய்
தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர்
சொல்லுமுப தேசக் குருநாதா
துள்ளிவிளை யாடு புள்ளியுழை நாண
வெள்ளீவன மீதுற் றுறைவோனே
வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
வல்லைவடி வேலைத் தொடுவோனே
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
வள்ளிமண வாளப் பெருமாளே.

-188 வள்ளிமலைபதம் பிரித்தல்
இல்லும் இளையோரும் மெல்ல அயலாக
வல் எருமை மாய சமனாரும்
இல்லும் = மனைவியும். இளையோரும் = (தனக்கு வயதில்) இளையவர்களும். மெல்ல அயலாக =மெதுவாக வேறாகும் படி. வல் எறுமை மாயச் சமனாரும் = வலிய எறுமை மீது வரும் மாயம் வல்ல நமனும்.


எள்ளி எனது ஆவி கொள்ளை கொளு நாளில்
உய்ய ஒரு நீ பொன் கழல் தாராய்


எள்ளி எனது ஆவி = இகழ்ந்து என் உயிரை.கொள்ளை கொளு நாளில் = கொள்ளை அடித்துக் கொண்டு போகும் அந்த நாளில் உய்ய (நான்)உய்யுமாறு நீ ஒரு பொன் கழல் தாராய் = நீ ஒப்பற்ற (உனது) திருவடியைத் தாராய்.


தொல்லை மறை தேடி இல்லை எனு நாதர்
சொல்லும் உபதேச குருநாதா


தொல்லை மறை தேடி = பழைய வேதங்கள் தேடி இல்லை எனு நாதர் = காணுதற்கில்லை என்ற சிவபெருமான் சொல்லும் = (உன்னிடம் கற்றுச்) சொல்லும் உபதேசக் குரு நாதா = உபதேசத்தைச் செய்த குரு நாதனே.


துள்ளி விளையாடும் புள்ளி உழை நாண
எள்ளி வனம் மீது உற்று உறைவோனே


துள்ளி விளையாடும் = துள்ளி விளையாடுகின்றபுள்ளி உழை நாண = புள்ளி மானும் வெட்கப்படும் படி எள்ளி = இகழ்ந்தவளாகிய வள்ளி (வாழ்ந்திருந்த) வனம் மீது உற்று உறைவோனே = வள்ளி மலைக் காட்டில் நின்று தங்கியவனே.


வல் அசுரர் மாள நல்ல சுரர் வாழ
வல்லை வடிவேலை தொடுவோனே


வல் அசுரர் மாள = வலிமை வாய்ந்த அசுரர்கள் இறக்கவும் நல்ல சுரர் வாழ = நல்ல தேவர்கள் வாழவும் வல்லை = விரைவில் வடி வேலைத் தொடுவோனே = கூரிய வேலாயுதத்தைச் செலுத்தியவனே.


வள்ளி படர் சாரல் வள்ளி மலை மேவு
வள்ளி மணவாள பெருமாளே.


வள்ளி படர் சாரலில் = வள்ளிக் கொடிபடர்ந்திருந்த மலைப் பக்கம் கொண்ட வள்ளிமலை மேவும் = வள்ளி மலையில் வீற்றிருக்கும்வள்ளி மணவாளப் பெருமாளே = வள்ளியின் மணாளனாகிய பெருமாளே.

விளக்கக் குறிப்புகள்
1. அல்லி விழியாலும்.....
நல்லை நெஞ்சே.....
அல்லி மாதர் புல்க நின்ற
ஆயிரத் தோளனிடம் ---- பெரிய திருமொழி.


2. மாயச் சமனாரும்....
அண்டிப் பயமுற வென்றிச் சமன்வரும்
அன்றைக் கடியிணை தரவேணும் திருப்புகழ், வஞ்சித்துடனொரு


3. தொல்லை மறை தேடி இல்லை எனு நாதர்.....
வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே
................. மாணிக்கவாசகர்,திருவாசகம்.
4. எள்ளி வன மீதுற்று உறைவோனே...
வெங்காடும் புனமும் கமழும் கழலே --- கந்தர் அனுபூதி.
தினையோ டிதணோடு திரிந்தவனே)
--- கந்தர் அனுபூதி

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends