191.குடிவாழ்க்கை


191 குடிவாழ்க்கை

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
தனதாத்த தய்ய தனதாத்த தய்ய
தனதாத்த தய்ய தனதான


வள்ளி நாயகனே மரணமடையுமுன்
உன் சரணமடைய அருள் புரிவாய்

குடிவாழ்க்கை யன்னை மனையாட்டி பிள்ளை
குயில்போற்ப்ர சன்ன மொழியார்கள்
குலம்வாய்த்த நல்ல தனம்வாய்த்த தென்ன
குருவார்த்தை தன்னை யுணராதே
இடநாட்கல் வெய்ய நமனீட்டி தொய்ய
இடர்கூட்ட இன்னல் கொடுபோகி
இடுகாட்டி லென்னை எரியூட்டு முன்னு
னிருதாட்கள் தம்மை யுணர்வேனோ
வடநாட்டில் வெள்ளி மலைகாத்து புள்ளி
மயில்மேற்றி கழ்ந்த குமரேசா
வடிவாட்டி வள்ளி அடிபோற்றி வள்ளி
மலைகாத்த நல்ல மணவாளா
அடிநாட்கள் செய்த பிழைநீக்கி யென்னை
யருள்போற்றும் வண்மை தரும்வாழ்வே
அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல
அடியார்க்கு நல்ல பெருமாளே- 191வள்ளி மலைபதம் பிரித்தல்


குடி வாழ்க்கை அன்னை மனையாட்டி பிள்ளை
குயில் போல் ப்ரசன்ன மொழியார்கள்


குடி வாழ்க்கை = இல்லற வாழக்கையில் ஏற்பட்டஅன்னை = தாய் மனையாட்டி = மனைவி பிள்ளை =பிள்ளை குயில் போல் = குயிலைப் போல ப்ரசன்ன மொழியார்கள் = பேசி எதிர்ப்படும் பெண்கள்.


குலம் வாய்த்த நல்ல தனம் வாய்த்தது என்ன
குரு வார்த்தை தன்னை உணராதே


குலம் வாய்த்த = (மேன்மையான) குலம் கிடைத்துள்ள. நல்ல தனம் வாய்த்தது = நல்ல செல்வம் (இவை எல்லாம் நமக்குக் கிடைத்து உள்ளது) என்ன = என்று (ஆணவம் கொண்டு) குரு வார்த்தை தன்னை = குருவின் உபதேச மொழிகளை உணராதே = உணர்ந்து அறியாமல்.


இட நாட்கள் வெய்ய நமன் நீட்டி தொய்ய
இடர் கூட்ட இன்னல் கொடு போகி


இட நாட்கள் = நாட்களைக் கழிக்க வெய்ய = கொடு மையான நமன் நீட்டி = நமன் நெருங்கி தொய்ய =சோர்ந்து போகும்படி இடர் கூட்ட = துன்பத்தைத் தரஇன்னல் கொடு போகி = துயரத்துடன் கொண்டு போய்


இடு காட்டில் என்னை எரி ஊட்டும் முன் உன்
இரு தாட்கள் தம்மை உணர்வேனோ


இடு காட்டில் என்னை = சுடு காட்டில் என் உடலை எரி ஊட்டு முன் = எரிப்பதற்கு முன்னர் உன் இரு தாட்கள் தம்மை = உன்னுடைய இரண்டு திருவடிகளைஉணர்வேனோ = உணர்ந்து அறிய மாட்டேனோ?


வட நாட்டில் வெள்ளி மலை காத்து புள்ளி
மயில் மேல் திகழ்ந்த குமரேசா


வட நாட்டில் = வடக்கே உள்ள வெள்ளி மலை காத்து =வெள்ளி மலையாகிய கயிலாயத்தைக் காத்துபுள்ளி மயில் மேல் = புள்ளி மயிலின் மீது
திகழ் குமரேசா = விளங்கும் குமரேசனே.


வடிவாட்டி வள்ளி அடி போற்றி வள்ளி
மலை காத்த நல்ல மணவாளா


வடிவாட்டி = அழகு நிறைந்த வள்ளி அடி போற்றி =வள்ளியின் திருவடியைத் துதித்து வள்ளி மலை காத்த = வள்ளி மலையில் வேளைக்காரனாகக் காத்து நின்ற நல்ல மணவாளா = நல்ல கணவனே.


அடி நாட்கள் செய்த பிழை நீக்கி என்னை
அருள் போற்றும் வண்மை தரும் வாழ்வே


அடி நாட்கள் = முன் நாட்களில் செய்த = (நான்) செய்த பிழை நீக்கி = பிழைகளைப் பொறுத்துஎன்னை அருள் போற்றும் = எனக்கு உனது திருவருளைப் போற்றும் வண்மை = வளப்பமான குணத்தை தரும் வாழ்வே =
தருகின்ற செல்வமே


அடி போற்றி அல்லி முடி சூட்ட வல்ல
அடியார்க்கு நல்ல பெருமாளே.


அடி போற்றி = உனது திருவடியைப் போற்றி அல்லி =தாமரை மலரை முடி சூட்டி = உனது தலையில் சூட்ட வல்ல அடியார்க்கு நல்ல பெருமாளே =அடியவர்களுக்கு நல்ல பெருமாளே.


ஒப்புக:
அடியார்க்கு நல்ல பெருமாளே
கண் உளார் கருவூருள் ஆன்நிலை
அண்ணலார் அடியார்க்கு நல்லரே . . . சம்பந்தர் தேவாரம்
அடியாரக்கு நல்ல பெருமாள் அவுணர் குலமட.கந்தர் அலங்காரம்


விளக்கக் குறிப்புகள்
வடநாட்டில் வெள்ளி மலை காத்து:-
வடநாட்டில் உள்ள வெள்ளி மலையான திருக்கயிலாயத்தில், கோபுர வாசலில் முருகன் இருந்து காத்தல் செய்கின்றார்.