Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    201
    விராலிமலை


    தனாதன தனாதன தனாதன தனாதன
    தனாதன தனாதனத் தனதான


    நிராமய புராதன பராபர வராம்ருத
    நிராகுல சிராதிகப் ப்ரபையாகி
    நிராசசி வராஜத வராகர்கள் பராவிய
    நிராயுத புராரியச் சுதன்வேதா
    சுராலய தராதல சராசர பிராணிகள்
    சொரூபமி வராதியைக் குறியாமே
    துரால்புகழ் பராதின கராவுள பராமுக
    துரோகரை தராசையுற் றடைவேனோ
    இராகவ இராமன்முன் இராவண இராவண
    இராவண இராஜனுட் குடன்மாய்வென்
    றிராகன் மலாரணிஜ புராணர்கு மராகலை
    யிராஜசொ லவாரணர்க் கிளையோனே
    விராகவ சுராதிப பொராதுத விராதடு
    விராயண பராயணச் செருவூரா
    விராவிய குராவகில் பராரைமு திராவளர்
    விராலிம லைராஜதப் பெருமாளே.

    - 201 விராலிமலை





    பதம் பிரித்தல்


    நிராமய புராதன பராபர வர அம்ருத
    நிராகுல சிராதிக ப்ரபை ஆகி


    நிராமய = நோய் இல்லாத (ஆமயம்= நோய்).புராதன = பழைய. பராபர = எல்லாவற்றுக்கும் மேலான. வர அம்ருத = வரம் என்னும் இனிமையைத் தருவதான. நிராகுல = கவலை இல்லாத (ஆகுலம்= துன்பம்). சிராதிக = மேன்மை மிக்க. ப்ரபை ஆகி =ஒளியாய் விளங்கும்.


    நிராச சிவ ராஜத வராஜர்கள் பராவிய
    நிராயுத புராரி அச்சுதன் வேதா


    நிராச = ஆசை அற்ற. சிவ ராச = சிவத்துடன் மகிழும் சுகா அனுபவ நிலையைக் கொண்ட. தவ ராசர்கள் = தவ சிரேட்டர்கள். பராவிய = போற்றும். நிராயுத =ஆயுதம் இல்லாமல். புராரி = திரி புரங்களை எரித்த சிவபெருமான். அச்சுதன் = திருமால். வேதா =பிரமன்.


    சுராலய தராதல சராசர பிராணிகள்
    சொரூப இவர் ஆதியை குறியாமே


    சுராதய = விண்ணுலகம். தராதல = மண்ணுலகம்.சராசர = இயங்குவன. பிராணிகள் = நிற்பன. சொரூபி = (ஆகிய உயிர்க் கூட்டங்களின்) உருவங்களில். இவர் = கலந்துள்ள. ஆதியை =ஆதிப் பொருளை. குறியாமே = குறித்துத் தியானிக்காமல்.


    துரால் புகழ் பராதின கரா உள பரா முக
    துரோகரை தரை ஆசை உற்று அடைவேனோ


    துரால் = (செத்தை) அனைய. புகழ் = புகழ் கொண்டு.பராதின = சுதந்திரம் இல்லாத. கரா உள்ள = முதலை போன்ற மனத்தை உடைய. பராமுக துரோகரை =அலட்சியம் செய்யும் துரோகிகளை. தரை ஆசை உற்று = இந்த மண்ணின் மீது ஆசை பூண்டு. அடைவேனோ = சேர்வேனோ?


    இராகவ இராமன் முன் இராவண இரா வண
    இராவண இராஜன் உட்குடன் மாய் வென்ற


    இராகவன் = இரவி குலத்தைச் சார்ந்த இராமன். முன் = முன்பு. இராவண = (கைலை மலையை அசைத்து எடுத்துச் சிவபெருமானால் அடர்க்கப்பட்ட) அந்நாளில் அழு குரல் ஓசை உற்ற.இரா வண = இருளின் நிறமாகிய கரு நிறத்தை உடைய. இராவண இராஜன் = இராவணன் என்னும் அரசன். உட்குடன் = அச்சப்பட்டு. மாய வென்ற =மாயும்படி வென்ற.


    இராகன் மலர் ஆள் நிஜ புராணர் குமரா கலை
    இராஜ சொல வாரணர்க்கு இளையோனே


    இராகன் = அன்பு உடையவனாகிய விஷ்ணுவின். மலர் ஆள் நிஜ புராணர் = மலராகக் கொண்டருளிய உண்மை வரலாற்றை உடைய சிவபெருமானதுகுமரா = குமரனே. கலை = நூல்கள். இராஜ சொல =மேன்மையுடன் புகழை உடைய. வாரணர்க்கு = சொல்லும் யானை முகக்
    கணபதிக்கு இளையோனே = தம்பியே.


    விராகவ சுர அதிப பொராது தவிராது அடு
    விராயண பராயண செரு ஊரா


    விராகவ = ஆசை இல்லாதவனே சுர அதிப =தேவர்களுக்குத் தலைவனே பொராது = போர் புரியாமல் தவிராது = தவறுதல் இல்லாமல் அடு =அடுதல் வல்ல விராயண = வீர வழியில் பராயண =விருப்பம் உள்ளவனே செரு ஊரா = திருப்போரூரில் உறைபவனே.


    விராவிய குரா அகில் பராரை முதிரா வளர்
    விராலி மலை ராஜத பெருமாளே.


    வராவிய = கலந்து விளங்கும் குரா அகில் = குரா,அகில் முதலிய மரங்கள் பராரை = பருத்த அடி மரம்முதிரா வளர் = முதிர்ந்து வளரும் விராலிமலை =விராலிமலை என்னும் தலத்தில் வீற்றிருக்கும்ராஜதப் பெருமாளே = இராசத குணம் உள்ள பெருமாளே.( ராஜத = அரச குணமுடைய : வாரியார் ஸ்வாமிகள்)






    [div6குகஸ்ரீ ரசபதி விரிவுரை


    திடச் சித்தம் உடையவன் தீர்க்கவாகு. அவன் மகன் ரகு. ஒருசமயம் ரகு விஸ்வஜித் எனும் வேள்வியை நடத்தினான். நிறைந்த பொருள் கரைந்தது. பெரியோருக்கு அழகு வறுமையிலும் செம்மை. அதை ரகு அனுசரித்திருந்தான். கருணை நிறைந்த அந்தணர் கவசர். அவர் ஒருநாள் ரகுவிடம் வந்தார். அவர் திருவடிகளை வழிபட மண் பாத்திரத்தில் நீர் கொணர்ந்தார். அது கண்ட கவசர் திரும்பினார். சுவாமி, ஏன் போகிறீர்? வந்த காரணம் தெரிந்தது இல்லையே என்று வழி மறித்தான் ரகு. அரசே, குரு காணிக்கை செலுத்த கோடிப் பொன் வேண்டும். வள்ளலான உன்னிடம் அதை எதிர் பார்த்தேன். உன் நிலையை உணர்ந்தேன். வருந்தித் திரும்புகிறேன் என்றார் வந்தவர்.


    சுவாமி, வந்தவரை வெறும் கையாக அனுப்புவது என் வழக்கதில் இல்லை இங்கேயே இரண்டொரு வாரம் இரும். கோடிப் பொன்னைக் கொடுத்து அனுப்புவேன். என் மேல் ஆணை. இதற்கு முன் நீர் போகக் கூடாது என தடை செய்தான். அவர்க்கு பொன் அளிக்க மன்னன் போர் கோலம் பூண்டான். புனித வட திசை நோக்கி புறப்பட்டான். தனக்கென வாழான் பிறக்கென வாழும் ரகுவின் குணமறிந்து குபேரன் வளரும் செல்வத்தை அவன் பெரும் கருவூலத்தில் நிரப்பினான். அரசர் ஏவலர் அதை அறிந்தனர். ஓடிச் சென்றனர். ரகுவைத் தடுத்து நிறுத்தினர். உற்றது உரைத்தனர். மன்னன் ரகுவின் மனம் மகிழ்ந்தது. அரண்மனைக்குத் திரும்பினான். கொடுத்த வாக்கின் படி கவசர்க்கு கோடிப் பொன்னுக்கு மேலும் கொடுத்து அனுப்பினான். அந்த ரகுவின் மைந்தன் அஜன். அஜன் மைந்தன் தசரதன். தசரதரின் குமாரன் ராமன். போதுமா வரலாறு?.


    பிறரைக் காக்கும் எண்ணம் ரகுவின் கால் வழியில் அந்த ரகுவிற்கு இணையானவன் ஆதலால் இராமன் இராகவன் என பேயர் பெற்றான். அப்புனித புண்ணிய ராமனை எதிர்த்தான் ஒருவன். அவன் கருத்த நிறத்தன். அரக்கர் தலைவன். பயங்கரமான அழுகுரல் ஒலியினன். அதனால் இராவணன் எனும் பெயர் எய்தியவன். அஞ்சா நெஞ்சத்தினன். அவன் அழிய வேண்டும். உலகம் அதனால் உய்யும் என எண்ணிய ராமன் அரிய மலர்களால் சிவ பெருமானை அர்ச்சித்தான். பரம அவ்வழிபாட்டை ஏற்று பேரருள் பாலித்தவர, சத்தானவர்,நிறைந்து எங்கும் நிலைத்த இறைவர். அப்பெருமான் அருளிய உம்மை, இராகவ இராமன் முன் இராவண இராவண இராவண இராஜன் உட்குடன்மாய்வு என்றுஇராக மலர் ஆள் நிஜ புராணர் குமரா எனக் கூவி எழுந்து கும்பிடுகிறோம். ( பூரணர் என்பது புராணர் என மருவியது ).


    (சலந்தரனை மாய்க்க சக்கரம் பெற திருவீழிமிழலையில் கண்ணை ஈந்து ஆழி பெற்ற வரலாறு இங்கு சரியாகப் பொருந்தும் என்பது அடியேனின் தாழ்வான அபிப்பிராயம். இன்னொரு திருப்புகழிலும் மா கடோர சலந்தரன் நொந்து வீழ உடல் தடியும் ஆழி தா என அம்புய மலர்கள் தச நூறு தாள் இடும் பகல் ஒரு மலர் இலாது கோ அணிந்திடு மாலுக்கு உதவிய மகேசர் என்று இவ்வரலாற்றைப் பாடுகிறார். பங்கயம் ஆயிரம் பூவினில் ஓர் பூ குறைய தம் கண் இடந்தான் சேவடி சாத்தலுமே சங்கரன் எம்பிரான் சக்கரம் மாற்கு அருளியது எங்கும் பரவி நாம் தோள் நோக்கம் ஆடாமோ - திருவாசகம். ஆதி சங்கரரின் சிவானந்த லஹரியில் 82 ம் பாட்டு, துவத்து பதே நயணார்ப்பணம் கிருத்துவான் செய்த ஹரி - திருப்புகழ் அடிமை நடராஜன் அவர்களின் கருத்து)


    கண்டதை எல்லாம் கலை என்று கூறி மாபெரும் அவன் மதிப்யை உலகம் மறந்துளது. ஓய அரியது, எவரும் உணர எளியது, கலைச் செய்தி ஊன்றி உணர்வார்க்fகு அக் கலையால் ஓதறிய ஒரு செய்தி உளது. அதை கலை இராஜ சொல் என்கிறோம். – சொல்லாத வார்த்தையை சொன்னாண்டி தோழி என்றார் பிறரும் (வள்ளலார்). நாள்தோறும் கணபதி வழிபாடு எங்கும் நடைபெறுகிறது. வழிபாட்டில் ஒருமை மனம் வாய்க்குமேல் அந்த ஒருமொழியை கணபதி உணர்த்துவதை உணரலாம்.அவ்வளவு பரம உபகாரியானவர் ஆனைமுக அத்தர். அநாதி நித்யர் ஆதலின் அ வாரணர் என்று அவரை அனுபவிக்கிறோம். அத்துணை சிறந்த ஏகம்பருக்கு இளையவர் நீர் அதனால் தான், கலை இராஜ சொல் அ வாரணர்க்கு இளையோனே என்று ஆர்வத்தோடு உம்மை அழைக்கிறோம்.


    எப்பற்றும் இல்லாத நின்னை விராகவ என்கிறோம் ( ராகம் = விருப்பம், வி = இன்மை). அமுதிற்கு சுரை என்று பெயர். அதை உண்டவர் சுரர்.என்றும் இளமையும் மணம் கமழ் நிலையும் இமையா விழியும் ஒளிமிகு உடலும் உடைய அந்த அமரர் வழிபடும் உம்மை சுராதிப என்னாமல் வேறு என்னென்று, பெரும,சொல்லுவது.


    என்றுமே நீர் போர் புரிந்தது இல்லை. சூரபத்மனுக்கு பெருவாழ்வு கொடுத்தீர். மற்றவையும் மறக்கருணையின் திருவிளையாடலே. உமது சங்கல்பம் இலக்கும் தவறுவது இல்லை. அத்தகைய வீரம் உமது அறிவிப்பு. பரம, அக்குறிப்பை என்றும் பாராயணம் செய்கிறது ஒரு பதி. அதனால்தான் அத்தல்ம என்றும் திருப்போரூர் என திகழ்கிறது. அதில் அமைதியாக எழுந்தருளி இருக்கும் உம்மை,பொராது தவிரா அடு விர அயண பராயணச் செரு ஊரா என்று போற்றி எம் மனம் பூரிக்கின்றது. (அயணம் = அறிவிப்பு ).


    குரு மூர்த்தம் ஆன போது குரா மலர் சூடுவீர். போக மூர்த்தம் ஆகிற போது அகில் மண மேனியர் ஆகின்றீர். அந்த அருமை அறிந்தே எங்கும் குரா மரக்களும் அகில் மரங்களும் அடி பருத்து வானோங்கி வளர்ந்த தலம் விராலிமலை.வயலூரில் உம்மை வழிபட்டு இருந்தேம். எளிய எம் முன் எழுந்தருளி விராலி மலைக்கு வா என்றீர், வரத குமார, நீர் அறிவித்த படியே வந்துளன்.அறிவித்தல் அன்றி அறியா உள்ளங்கள் என்று சாத்திரங்கள் கூறும். அருமையான இவ்வரலாற்றின் மூலம் உலகம் உணரும் அல்லவா. இராஜதம் என்பது முக்குணங்களில் ஒன்று. மற்றவை தாமசம் சாத்வீகம். உம்மிடம் உள்ள அவைகளின் அருமையே தனி. அக்குணம் உம்மில் இல்லையேல் சொரூபமே அன்றி உம்மை உருவத்திரு மேனியில் உணர இயலுமோ ?. ஊக்கம், அறிவு, வீரம், தருமம், தானம், கல்வி, கேள்வி, தவம் எனும் எட்டும் உடையது இராஜதம். அதனால்தான் உம்மை ராஜதப் பெருமாளேஎன உணர்ந்து போற்றுகிறது உலகம்.அத்துடன் நாலந்த வேதத்தின் பொருளோனே நான் என்று மார் தட்டும் பெருமாள் என்று வீரிட்டு கூவி விளிக்கலாம் அல்லவா?..
    காரணம் பற்றிய நோய் ஒன்று கரும வழி வந்த பிணி ஒன்று. காரணத்திற்கு மருந்து உண்டு. கருமத்திற்கு மருந்து இல்லை. இந்த இரண்டையும் அனுபவிப்பவர்கள் நாங்கள். அருளே திரு மேனியரான உமக்கு அந்த இரு நோயுகளும் இல்லை அதனால் நிராமயன் ஆயினை. ( ஆமயம் = நோய், நிர் = இன்மை ). பழையனின் பழையன் பழம் பொருள் யாவற்றையும் கடந்த பழம் பொருள் நீர் அதனால் புராதனன் என்று உம்மைப் புகழ்கிறோம். பரம் என்பது சிவ ஞானம், அபரம் என்பது கலைஞானம் இந்த இருஞானமும் உமது சொரூபம். அதனால் தான் பராபரா ( பர அபரா ) என்று பகர்கின்றனர் மேலோர். மேலானவரில் மேலானவர் என்றும் இதற்குப் பொருள் உண்டு. இன்ப வரம் தரும் உம்மை வராம்ருத ( வர அம்ருத ) என்று வாய் மலர்கின்றோம். எழுந்தால் கவலை, வாய்திறந்தால் வம்பு, உறவில் துன்பம், நட்பில் நட்டம், எப்பறம் திரும்பினாலும் ஏராளமான தொல்லை. இது எங்கள் தலைவிதி. எத்துன்பமே இல்லா உம்மை நிராகுல ( நிர் + ஆகுல, ஆகுல = துன்பம் ) என்கிற போதே மாபெரும் எம் வேதனைகள் யாவும் மறைந்திடுகின்றதே.
    எண் சாண் உடம்பில் சிரம் பிரதானம் அதன் உச்சியிலிருந்து 12 அங்குலதிற்கு மேல் துவாத சாந்த நிலம் உள்ளது. அங்கு போரொளிப் பழம்பாய் பிரகாசிக்கும் உம்மை சிர அதிக பிரபையாய் உள்ளிர் என்று உணருகிறோம் ( பிரபை = ஒளிமயம் ).


    பற்று நீங்க மேலோர் பல வகைகளில் முயன்றனர். அதன் பின் 60 நாழிகை பாராயணம் செய்தனர். அதன் பின் 60 நாழிகை ஆறெழுத்தை உருவேற்றினர். அதன் பின் அயர்ச்சி.அயர்ச்சியில் மவுனம். நாள்தோறும் இந்த நடை இதன்வழி ஓடி மீளும். சுவாசம் தானே ஒடுங்கும் இது தான் சிவராஜயோகம். இந்த சாதகரே சிவராஜயோக தவராஜர் எனப்பெறுவர்.
    துருத்தி எனும்படி கும்பித்து வாயுவை சுற்றி முறித்து
    அருத்தி உடம்பை ஒருக்கில் என்னாம் சிவ யோகம் என்னும்
    குருத்தை அறிந்து முகம் ஆறு உடை குருநாதன் சொன்ன
    கருத்தை மனத்தில் இருத்துங்கள் முத்தி கை கண்டதே கண்டீர் எனும் அலங்காரமாக ஒரு இடத்தில் அறிவித்தும் இருக்கிறேன்.
    பொராது தவறாது அடு விராயணர் ஆன உம்மை ஆராதித்ததின் பயனாக எப்படையும் எந்தாமல் சிரித்து புரத்தை எரித்தவர் நீலகண்டர். மேற் சொன்ன சிவராஜ தவராஜர்கள் அந்த நீலகண்டரையே தியானிக்கின்றனர். அதனால் தான்சிவராஜ தவராஜர்கள் பராவிய
    நிர் ஆயுத புராரி என்கிறோம்.


    கை குவித்தவரை கை விடாத திருமால் அச்சுதன் என்று அறியப் பெறுகிறார். ( அச்சுதன் = கை விடாதவர் ). ஓயாது வேதம் ஓதும் பிரம்ம தேவர் வேதா என விளம்பப்படுகிறார். ஸ்ரீகண்டர் , திருமால், பிரம்ம தேவர் எனும் மூர்த்திகள் மூவரில் கலந்து இருந்து நலமாக அவர்கள் தொழிலை நடத்துகின்றீர். அது கருதியே புராரி அச்சுதன் வேத சொரூபா எனப் புகலுகின்றோம் யாம். அவ்வளவு தானா ?


    சுர ஆலயம் எனும் பொன்னுலகம், தராதலம் எனும் மண்ணுலகம் இவைகளில் உள்ள இயங்குவன நிலைத்து நிற்பனவான உயிர்கள் என்றும் உயிர்த்துக் கொண்டே இருக்கின்றன பிராண ஓட்டம் உடைய அவைகளை பிராணிகள் என்றே பேசுகிறோம். திரி மூர்த்திகள் உயிர்ப்பிற்கு மூலமாக அவைகளில் இருந்து உயிர்ப்பவர் நீர். இதனால் தான் உம்மை பிராணிகள் சொரூபம் இவர் ஆதி என்று மறைகள் பேசுகின்றன.


    நிராமய, புராதன, பராபர, வராம்ருத ,நிராகுல, சிராதிக ப்ரபையாகி, நிராச, சிவராஜ தவராஜர்கள் பராவிய நிராயுத புராரி அச்சுதன் வேதா, சுராலய தராதல சராசர பிராணிகளில் உமது சொரூப ஆட்சி உளது. அச்சொரூப வித்திலிருந்து விளைந்தது உம் தடத்த திரு உருவம். அதனால் தான் சொரூபம் இவர் ஆதி என்று சொல்லுகிறோம். ( இவர்தல் = மேலிருந்து எழுந்து விளங்குதல், அநாதி சொரூபம் = ஆதி திருவுருவம் ). சொரூபம் அறிவால் அறிய இயலாதது. எச்சாதனைக்கும் ஆரம்பததில் வேண்டப் பெறுவது திருவுருவே. ஆ, உமது திருவுருவம் குறியைக் குறியாது குறித்தறியும் நிலையைக் கொண்டு உயர்ந்துளர் பெரியோர்.
    படித்தவன், அறிவாளி, பேச்சாளன், எழுத்தாளன், தர்மிஷ்டன் என்று பிறர் புகழ்தலை உவகையோடு வரவேற்பது உலக வழக்கு. ஐயோ, அந்த பகழ்கள் அனைத்தும் குப்பையில் கொண்டு போடுவதற்கே உரியன. அது துரால் புகழ் ( துரால் = குப்பைக் கூழம்) அது தானா முதலையின் சாதுத்தனம் மோசமானது. அம்முதலை போன்ற மனமுடையவர் அளவிலர். காரியம் முடிந்த பின் காலை வாரிவிடும் துரோகிகளும் அரிய இவ்வுலகில் அதிகரித்துளர். யாதாயினும் ஆகுக. வளர வேண்டும், உலகில் வாழ வேண்டும் எனும் இச்சையால் அவர்களோடு உறவு வேண்டேன். புனித உம்மையே புகலடைவேன் என்று விம்மி, பொருமி விண்ணப்பித்தபடி[/div6].




    விளக்கக் குறிப்புகள்
    1 விராவிய குரா முனிவர்கள் குராமரமாக நின்று முருகனை வழிபடுகிறார்கள்
    என இத்தல புராணம் தெரிவிக்கிறது


    2. இராகன் மலர் ஆள் நிஜ புராணர்...
    தன் தவம் பெரிய சலந்தரன் உடலம் தடிந்த சக்கரம் எனக்கு அருள் என்று
    அன்று அரி வழிபட்டு இழிச்சிய விமானத்து இறையவன் பிறை அணி சடையன்...சம்பந்தர் தேவாரம்.

    தேவர்களை வென்ற பின் சலாந்தராசுரன் என்ற அசுரன், சிவனோடு போர்
    செய்ய கயிலைக்குப் போகும் போது, சிவன் ஒரு மறையவர் போல வந்து,
    காலால் ஒரு சக்கரம் வரைந்து, அவனை எடுக்கச் சொன்னார். அப்போது
    அவன் கழுத்து அறுபட்டு இறந்தான். சக்கரத்தைப் பெற திருமால் ஆயிரம்
    பூக் கொண்டு சிவபெருமானை தினமும் வணங்கினார். ஓரு நாள் ஒரு பூ
    குறைய தன் கண்ணையே சாத்தி வழிபட்டார்.


    3. இராஜதப் பெருமாளே...
    ராஜத லக்ஷண லக்ஷ்மி பெற்றருள் பெருமாளே...திருப்புகழ், கோமளவெற்பினை
    இராஜதம் - ஊக்கம், ஞானம், வீரம், தவம், தருமம், தானம், கல்வி, கேள்வி என்னும் எட்டுக் குணம் உடையது



    4. நிராயுத புராரி.....
    ஈர் அம்பு கண்டிலம் ஏகம்பர் தம் கையில்
    ஓர் அம்பே முப்புரம் உந்தீ பற..................... .திருவாசகம்


    5. முன் இராவண = கயிலையை அசைத்து எடுத்துச் சிவபெருமானால் அடக்கப்பட்ட போது அழு குரல் ஓசையுற்றவன்.
Working...
X