வந்த கவிதை

உங்கள்
உயர்ந்த
உள்ளம்தனை
உலகம் முழுவதும்
உரைத்திடவே
உயர்வான்
உங்கள்சைட்டில்
உள்ளதென்று
உணர்த்த
உதவுங்கள்
உயிர்நண்பர்களே
உங்கள்தோழருக்கு
உயர்வானநம்
உலகத்தில்(சைட்)
உல்லாசத்துடன்
உதவுங்கள்சேர்ந்து
-------------
இந்த கவிதைதனை
எழுதி அனுப்பியவர்
இராஜ சேகரனார்
செகந்திராபாத்திருந்து
இனிய மனத்துடனே
ஈவோம் நன்றிதனை.


தந்த பதில்
நன்றி நண்பரே
நன்று செய்தீர்;
நன்று யெ;தீர்
நம்மால் இயன்ற
நாலு உதவிகளை
நானிலம் தனில் வாழும்
நல்ல மாந்தருக்கு
நல்கிடல் கடமையன்றோ?
நறுமண ஊதுபத்தி
நறுமணம் நமக்கீந்து
நன்மை செய்குதன்றோ?
நாடோறும் மெழுகுவத்தி
நல்லொளி வீசுதன்றோ
நமக்கென்று தேவைகளும்
நானா ஆசைகளும்
நம்மை பெற்றோருக்கும்
நம்முடை உற்றோருக்கும்
நடுவில் நமையடைந்த
நங்கை நல்லாளுக்கும்
நலமுடன் அவளீன்ற
நம்முடை வாரிசுக்கும்
நாமும் நடத்திடவே
நாலாயிரம் கடமை
நாளெல்லாம் பாடுபட்டு
நாமும் உழைத்திடவே
நமது கடமைகளை
நன்று முடித்திடவே
நற்போது போதவில்லை
நல்ல விதமாக
நாலு பேருக்கேனும்
நன்மை செய்திடவே
நமக்கும் எண்ணமுண்டு
நம்முடை எண்ணமெல்லாம்
நன்றாய் ஈடேறவே
நானில நாயகனை
நணுகிக் கேட்டிடுவோம்
நாளை வரும் போதெல்லாம்
நம்முடைப் போதாக
நமக்கு மாறிடவே
நாயகன் அருள்புரிவான்.

நண்பர்களுக்கு
நன்றி நண்பர்களே
நலம்பல பெற்றிடுவீர்
நாளும் வந்திடுவீர்
நற்செய்தி பகிர்ந்திடுவீர்

நீவிரும் இதுபோல
நிவைில் வந்ததனை
நித்தமும் மறவாமல்
நம்மிணையத்தில் ஏற்றிடுவீர்

நலங்கள் பொங்கிடவே
நம்முள் பங்கிடுவோம்
நம் ஞாலம் வாழ்கவென்று
நாளும் சங்கிடுவோம் (முழங்குவோம்)

நன்றி! நன்றி! நன்றி!!