Announcement

Collapse
No announcement yet.

Deepawali for sriranganathar

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Deepawali for sriranganathar

    Deepawali for sriranganathar
    அழகு மாப்பிள்ளைக்கு ஆனந்த தீபாவளி
    தீபாவளி என்றாலே மாப்பிள்ளைகளுக்குக் கொண்டாட்டம் தான்.
    அதுவும் புது மாப்பிள்ளை என்றால் கேட்கவேவேண்டாம்.அப்படியிருக்க ஒருவர் என்றும்அழகான,இளமையானபுது மாப்பிள்ளையாக இருந்தால்கொள்ளை இன்பம்.அதுவும் இந்த மாப்பிள்ளை மற்ற மாப்பிள்ளைகளைப் போலன்றி தாம் எதையும் பெற்றுக் கொள்ளமாட்டார்.
    ஆனால் அனைவருக்கும் வேண்டியதைக் கொடுப்பவர்.யார் இவர்?


    இவர் பெயரே அழகிய மணவாளன்(மாப்பிள்ளை).பூலோக வைகுண்டம் என்று போற்றப் படும் ஸ்ரீரங்கத்தில்,
    எழுந்தருளியிருக்கும் பெரிய பெருமாள் ஸ்ரீரங்கநாதர்/அழகிய மணவாளன்/நம்பெருமாள்.இவர் பெரியாழ்வாரின் மாப்பிள்ளை.


    ஒவ்வொரு வருடமும் ஸ்ரீரங்கநாதர் தீபாவளி கொண்டாடும் விதம் அலாதியானது. தீபாவளியை முன்னிட்டு முதல் நாள் மாலை எண்ணெய் அலங்காரம், மேளதாளத்தோடு பெரிய பெருமாளுக்கு கண்டருளப் பண்ணு வார்கள். மேலும் கோவில்சிப்பந்திகளுக்கு நல்லெண்ணெய், சீகைக்காய் தூள் ஆகியவற்றை பெருமாள் சார்பாக வழங்குவார்கள்.


    தீபாவளிக்கு முந்தைய இரவு உற்சவர் நம்பெருமாளுக்கும் எண்ணெய் அலங்காரம் நடைபெறும்.
    அதைத் தொடர்ந்து கோவிலில் அருள்பாலிக்கும் ஆழ்வார், ஆசார்யர் சந்நிதிகளுக்கு நல்லெண்ணெய், சீகைக்காய்த் தூள்,
    விரலிமஞ்சள் ஆகியவை பெருமாள் சார்பாக அந்தந்த சந்நிதிகளில் உள்ள அர்ச்சகர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.


    தீபாவளியன்று அதிகாலை தாயார் மற்றும் ஆழ்வார், ஆசார்யர் சந்நிதிகளில் எண்ணெய் அலங்காரம் செய்யப்பட்டு,திருமஞ்சனம் நடைபெறும். அதைத் தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவர்களுக்குப் புத்தாடை, மலர் மாலை அணிவித்துஅலங்காரம் செய்வார்கள். அலங்காரம் முடிந்ததும் ஆழ்வார்கள்,ஆசார்யர்களின் உற்சவமூர்த்திகள் அனைவரும் புறப்பட்டு,
    பெரியபெருமாள் மூலஸ்தானத்துக்குக்
    கிழக்கில் உள்ள கிளிமண்டபத்துக்கு வந்து பெருமாள் வருகைக்காகக் காத்திருப்பார்கள்.
    அப்போது பெருமாளின் மாமனார்- பெரியாழ்வாரும் மாப்பிள்ளை (பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை,ஆண்டாளை மணம்புரிந்த
    தால்)ஸ்ரீரங்கநாதருக்காக தீபாவளி சீர் தருவதற்காகக் காத்திருப்பார்.உற்சவர் நம்பெருமாள் காலை பத்து மணியளவில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, சந்தனு மண்டபத்திற்கு எழுந்தருள்வார். அங்கு அவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றதும், சிறப்பு அலங்காரத் துடன் பக்தர்களுக்கு அருள்புரிவார்.


    இந்த நிகழ்ச்சி
    யெல்லாம் முடிந்தபின் ஸ்ரீரங்கநாதரை மாப்பிள்ளையாக அடைந்த பெரியாழ்வார் தீபாவளி சீர் தரும் நிகழ்ச்சி நடைபெறும்.
    பெரியாழ்வாரின் பிரதிநிதிகளாக அரையர்கள் சீர் வழங்கும் வழக்கம் இன்றுவரை மிகச்
    சிறப்பாகக் கடைப்
    பிடிக்கப்படுகிறது.
    நம்பெருமாள் திருவடிகளைச் சுற்றி சீர்வரிசையான நாணய மூட்டைகள்வைக்கப்
    படும். அப்போது வேதபாராயணங்கள் முழங்க, மங்கள வாத்தியம்
    வாசிக்கப்படும்.


    இதை ஜாலி (சாளி) அலங்காரம் என்பர்.
    ஜாலி அலங்காரம் என்பது, ஆயிரம் ஒரு ரூபாய் நாணங்களை இரண்டு புது கைலிகளில் மூட்டையாகக் கட்டி, பெருமாள்திருவடிகளில் சமர்ப்பிப்பது.
    இந்த நிகழ்ச்சி நடைபெற்றதும், பெருமாள் கோவிலின் இரண்டாம் பிராகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
    மீண்டும் சந்தனு மண்டபம் திரும்பி,
    மாலை ஆறு மணி முதல் எட்டு மணி வரை பக்தர் களுக்குக் காட்சி கொடுத்து அருள்வார்.


    அதன்பின், கிளிமண்டபத்தில் காத்திருக்கும் ஆழ்வார்கள், ஆசார்யர்கள் அனைவரும் ஒவ்வொருவராக பெருமாள்முன் எழுந்தருளி, பெயர் சொல்லி அழைக் கப்படுவார்கள்.அப்போது பெருமாள், அவர்களுக்குப் புதுவஸ்திரம், சந்தனம், தாம்பூலம், மலர், பழங்கள் ஆகியவற்றை தீபாவளிப் பரிசாகக் கொடுத்துக்
    கௌரவிப்பார்.


    பெருமாளிடம் தீபாவளிப் பரிசு பெற்ற ஆழ்வார்கள் மற்றும் ஆசார்யர்கள், பெருமாளிடம் விடை பெற்றுக் கொண்டு, தங்கள் சந்நிதிக்குத் திரும்புவார்கள்.இந்தத் திருக்காட்சியை தீபாவளித் திருநாளில் தரிசித்தால் ஆடை களுக்கும்,பணவரவுக்கும் தட்டுப்பாடு உண்டாகாது என்பது நம்பிக்கை.(நேரில் செல்ல இயலாதவர்கள் அவரை நினைத்து,
    மனக்கண்ணில் தரிசித்து அவரை ஸ்தோத்திரம் செய்யலாம்)


    "குடதிசை முடியை வைத்துக்,குணதிசை பாதம் நீட்டி,
    வடதிசை பின்பு காட்டித்,தென்திசை இலங்கை நோக்கி,
    கடல்நிறக் கடவுள் எந்தைஅரவணைத்
    துயிலுமா கண்டு,
    உடல் எனக்கு உருகுமாலோ? என்செய்கேன்?உலகத்தீரே!!!"
Working...
X