Announcement

Collapse
No announcement yet.

Sanyasins - Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Sanyasins - Periyavaa

    ஸன்னாஸியாமே ஸன்னாஸி!.....


    பெரியவா அழகாக அபிநயம் பண்ணி சொன்னது..... [let us get the pleasure of imagining periyava's acting]


    "உஜ்ஜயினி ராஜாவா இருந்த பர்த்ருஹரி, தமிழ்ல பத்திரகிரி-ம்பா..! அவர் ஆண்டியாகி, திருவிடைமருதூர் கோவில் மேலகோபுர வாஸல்ல ஒக்காந்துண்டு, பிக்ஷை வாங்கிக்கறதுக்காக ஒரே ஒரு திருவோடு மட்டும் வெச்சிண்டிருந்தார்.


    அவர் தன்னோட குருவான பட்டினத்தாருக்கும் சேத்து பிக்ஷை வாங்கிண்டு வருவாராம்.


    ஒர்த்தர் குபேராம்ஸம்! இன்னோர்த்தர் உஜ்ஜயினி மஹாராஜா! அப்பேர்ப்பட்ட வைராக்யத்தோட ஆண்டிகளாயிட்டா!


    அப்டியும், பர்த்ருஹரிக்கு வைராக்யம் போறலேன்னு பட்டினத்தார் நெனச்சாராம்.!


    ஏன்னா.... பிக்ஷைக்குன்னு திருவோடு [பிக்ஷை பாத்ரம்] வெச்சிருந்தாரோல்லியோ?


    அதான் !...


    ஒரு நாள் ஒரு ஏழை வந்து பட்டினத்தார்கிட்டயே போயி... அன்னம் யாசகம் பண்ணினானாம்.


    கோவில்ல இருந்த மஹாலிங்க ஸ்வாமியேதான் அப்டி ஏழை மாதிரி போனார்ன்னு சொல்லுவா.


    அவர்ட்ட...பட்டினத்தார் சொன்னாராம்....


    "நானே ஒண்ணுமில்லாதவன். என்ன... வந்து கேக்கறியே! போ! மேலகோபுர வாஸல்ல ஒரு குடும்பி இருக்கான்....! அவனப் போய் கேளு! நா.. இப்டி சொன்னதாவே சொல்லிக் கேளு" ன்னு சொல்லி பர்த்ருஹரிகிட்ட அனுப்பினாராம்.


    அதைக் கேட்டதும் ஶிஷ்யர் அதிர்ந்து போயி... "என்னது! நம்மள... குடும்பி...ன்னுட்டாரா குருநாதர்?"


    ஒரு க்ஷணம்தான் !


    புரிஞ்சுடுத்து !


    ஒடன்னே... ஒரே ஒடமையா இருந்த அந்த திருவோட்டையும் போட்டு ஓடச்சுட்டாராம்!


    என்ன ஒரு வைராக்யம்!


    "ஓடு நமக்குண்டு"ன்னு பாடினவரே... அப்றமா ஓடு வெச்சிண்டு இருக்கறவனும் ஸம்ஸாரிதான்..ன்னு புரிஞ்சுண்டார்....


    அதே மாதிரி.... ஸதாஶிவ ப்ரஹ்மேந்த்ராளும், "கையையே மடிச்சு தலைக்கு வெச்சுண்டு, ஆகாஶமே போர்வை, கட்டாந்தரையே மெத்தை, விரக்திங்றவளே பத்னி....ன்னு ஸயனிச்சுண்டு இருக்கற துறவியானவன், ஆனந்த பரவஸ ஸமாதி..ங்கற நித்ரைல ஆழ்ந்திருக்கான்"....ன்னு பாடியிருக்கார்.


    அந்த மாதிரி, அவரே.... ஒரு நாள் ஏதோ வயக்காட்ல, தெறந்த வெளில கைய மடிச்சு தலைக்கோஸரம் வெச்சுண்டு படுத்துண்டிருந்தாராம்.


    அப்போ அந்தப் பக்கமா, ஒழவுக்குப் போற சேரிப் பொம்மனாட்டிகள்ள ஒர்த்தி, ப்ரஹ்மேந்த்ராளை பரியாஸமாப் பாத்து...


    "ஸன்னாஸியாமே ஸன்னாஸி!...... தலைக்கோஸரம் [தலக்கு உயரம்) கேக்கற நல்ல ஸன்னாஸிடி....யம்மா!"ன்னு...கூட வந்தவாகிட்ட கேலி பண்ணினாளாம்.


    ப்ரஹ்மேந்தாளுக்கு "சுரீல்"ன்னுதாம்!


    "ஆகக்கூடி... தனக்கும், மத்த அவயவங்களை விட தலைய... ஒஸத்தி வெச்சுண்டாத்தான் ஸௌக்யம்..ங்கற நெனப்பு போகல ! இல்லியா? அது போகாதவரைக்கும், நாம என்ன ஸன்யாஸி? ஆஹா! அம்பாளேதான் அந்த பஞ்சமப் பொண் மூலமா, உபதேஸிச்சுட்டுப் போயிருக்கா! "ன்னு நெனச்சு, தலைக்கோஸரம் வெச்சுண்டிருந்த கைய எடுத்துட்டு அப்டியே கெடந்தாராம்...!


    அந்த பொம்மனாட்டிகள் சித்த நாழி கழிச்சு திரும்பி போறச்சே, அங்க வந்தாளாம்...! அப்போ, மொதல்ல பரியாஸம் பண்ணினவளே மறுபடியும் அதே மாதிரி சிரிச்சாளாம்..!


    "ஸாமியாருன்னா...... அவுங்களுக்காவே எப்பிடி இருக்கணும்னு தெரிய வேணாம்? ஊர்ல போறவங்க, வர்றவங்க பேச்சை எல்லாம் கேட்டு பண்ணறவங்க, இன்னா ஸாமியாருங்க!"....ன்னாளாம்!


    அன்னிலேர்ந்து ப்ரஹ்மம்..ன்னா, ப்ரஹ்மமாவே....... ஸதாஶிவ ப்ரஹ்மமாவே ஆய்ட்டாராம் !


    இதுல என்னன்னா...... ஸன்யாஸின்னா எப்பேர்ப்பட்ட வைராக்யத்தோட இருக்கணுன்னு, அந்தக் காலத்ல, பாமர ஜனங்களுக்குக் கூட அத்தன நன்னா தெரிஞ்சிருந்திருக்கு!


    அப்டியாப்பட்ட தேஸத்லதான்.... இப்போ, காபி இல்லாம முடியாது! ஓவல்டின் இல்லாம முடியாது.!..ன்னு சொல்ற ஸன்யாஸிகளும் இருக்கா!


    கேட்டாக்க.....


    "நாங்கள்ளாம் ஸன்யாஸத்துக்கும் ஒரு படி மேல போன அதிவர்ணாஶ்ரமிகள்! அந்த பஞ்சம ஸ்திரீ சொன்னா மாதிரி.... நாங்க என்ன பண்ணணும், பண்ணவேணாம்-ங்கறது எங்களுக்கே தெரியும்"..ன்னு சொல்லுவா!


    இந்த மாதிரி பொரளி பண்ணாம, நெஜமாவே ஆத்மஞானம் அடையணும்...ன்னா "பட்"டுன்னு அப்டி ஒரு வைராக்யம் மட்டும் வந்துட்டா போறும்! அன்னிக்கே ஸன்யாஸியா ஆத்தை விட்டு பொறப்படு! ன்னு "யதஹரேவ விரஜேத் ததஹரேவ ப்ரவ்ரஜேத்" ன்னு ஜாபாலோபநிஷத்ல சொல்லியிருக்கு"....


    நம பார்வதீ பதயே
    ஹர ஹர மஹாதேவா


    ஸன்யாஸம் என்ற வார்த்தைக்கு ஒரு உதாரணபுருஷராக, அப்பழுக்கற்ற ஸன்யாஸியாக, ஏதோ காலத்தில் இருந்தார்... என்றில்லாமல், ஸுமார் 25 வர்ஷங்களுக்கு முன்னால் 100 வயஸு வாழ்ந்தே காட்டிய கருணைக்கடல்.... நம் பெரியவா.


    உணவை வாங்க, திருவோடு வைத்துக் கொண்டிருப்பவரே, பெரிய குடும்பி என்றால், இந்த வயிற்றை வளர்க்கவேண்டி, 24 மணி நேரமும் எத்தனையெத்தனையோ பொய்-புரட்டு-பித்தலாட்டம் என்று ஆட்டமாக ஆடும் நாமெல்லாம் எங்கே போவது?


    உணவுக்காகவும், வம்பு பேசுவதற்காகவும் இல்லாமல், நாமம் சொல்ல மட்டுமே நாவும்! நாமும்! என்றிருந்தால், இந்த ஸம்ஸாரம் கூட ஸத்ஸாரமாகும்!


    பகவந்நாமமே கதியெனக் கொண்டால் போறுமே! ஸம்ஸாரமே உயர்ந்த ஸன்யாஸமாகும்!


    ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்
Working...
X