பெருமாளின் சேவையே பக்தி. பெருமாளின் சேவையே மோக்ஷத்திற்கு வழி

கூரத்தாழவார் கைங்கர்யம் (சேவை) பற்றி வரதராஜனிடம் கதறுகிறார்.
வரதராஜஸ்தவத்தில்
"வரதா, நீ பரம தயாளு அல்லவா. நான் ஆசையோடு உனக்கு கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று வந்தால், நீ அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.


உன் கைங்கர்யம் எனக்கு வேண்டாம். சீ போ என்று சொல்லி விடாதே.


உங்களுக்கு ஆயிரம் பேர் கைங்கர்யம் செய்ய வருவார்கள். அதனால் நீ செய்ய வேண்டாம் என்று என்னை பார்த்து சொல்லிவிடலாம்.
ஆனால், எனக்கோ, நீங்கள் ஒருவரே தெய்வம்.


என்னை போன்றவர்கள் உனக்கு ஆயிரம் பேர் கிடைத்து விடுவார்கள், ஆனால் உம்மை போன்ற தெய்வம் வேறு இல்லையே!!


உங்களுக்கு கைங்கர்யம் செய்யாமல் நான் எப்படி இருக்க முடியும்?.


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsநீ பரம தயாளு என்று ஏன் சொல்கிறேன் தெரியுமா?
ஆசையினால் கைங்கர்யம் கொடு என்று கேட்கிறேன்.
இதை நம்பி, நீயும் கைங்கர்யம் கொடுத்து விடுவாய்.
ஆனால், வரதா, நான் நீ நினைப்பதை போல திறமையானவனும் இல்லை. ஆதலால், ஆசையினால் வாங்கிய கைங்கர்யத்தையும் குறை சொல்லும் படியாக செய்து விடுவேன் என்ற பயமும் எனக்கு உண்டு.


ஆகையால், வரதா, நீ தயாளுவாக நான் செய்யும் தவறை மன்னித்து விடு.
ஆனால் கைங்கர்யம் செய்யாமல் இருக்க மட்டும் என்னை விட்டு விடாதே.


எனக்கு, உனக்கு கைங்கர்யம் செய்ய வேண்டும் என்ற புத்தி வராவிட்டால் கூட, அடித்து இழுத்தாவது எனக்கு கைங்கர்யத்தை கொடு.


அப்படியாவது உனக்கு கைங்கர்யம் கொடுக்க வேண்டும் என்று, எனக்கு என்ன அவசியம்? என்று ஒரு வேளை நீங்கள் கேட்க விரும்பினால்,
அதற்கு, நீர் எனக்கு பிதா, நான் உன் புத்திரன் என்ற உறவு முறை என்ற உரிமையில் கேட்கிறேன் என்று தெரிந்து கொள்ளுங்கள்.


சரி கைங்கர்யமே கதி என்று இருந்தால், உன் குடும்பம் என்னாவது?
உன் குடும்பத்தை யார் நடத்துவார்கள்?
என்று கேட்டால்,
அதற்கு, "இப்படி நீங்கள் கவலைப்பட்ட பின்பும் எனக்கு என்ன கவலை"
என்று இன்னும் தீவிரமாக கைங்கர்யம் செய்வேன்.


அஞானியாக உள்ள நானே என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றி கொள்ள முடியும் என்றால், பிதவான நீங்கள் என் குடும்பத்தை காப்பாற்றுவது ஒரு பெரிய காரியமோ?


எனக்கு நல்லது கெட்டது தெரியாது. உமக்கும் தெரியாமலா போய் விடும்?


பிதாவாகிய நீ, கெட்ட விஷயங்களில் செல்லும் குழந்தையை தடுத்து, அடித்தாவது நல்ல விஷயங்களில் திருப்ப வேண்டாமோ?


உலக விஷயங்களுக்காக பிறர் காலில் விழுந்து, பிறரை நம்பிக்கொண்டு அலையும் என்னை பிடித்து இழுத்து என் காலில் விழு, எனக்கு தொண்டு செய் என்று சொல்ல வேண்டாமோ?
எனக்கு எது நல்லது?
உனக்கு கைங்கர்யம் செய்வது தானே எனக்கு நல்லது.


எல்லாம் சரி, ஆனால் உன்னை திருத்த முடியாதே என்று மட்டும் சொல்லிவிடாதே.
உன்னால் என்னை நல்லவனாக்க முடியாதா?
நான் தீய வழியில் சென்றாலும், உன் கைங்கர்யமே வேண்டாம் என்று சொன்னாலும், நீயே வேண்டாம் என்று நான் சென்றாலும், ஒரு தாய் வீம்பு செய்யும் குழந்தையை அடித்தாவது திருத்துவது போல, என்னை போகும் போக்கில் போக விடாமல், பலவந்தமாகவாவது அடித்து இழுத்தாவது உன் அருகில் வைத்துக்கொள்.இத்தனை நாள் வரை நான் மோக்ஷம் அடையவில்லை என்பது நான் பிறந்ததிருக்கிறேன் என்பதைலேயே தெரிகிறது.
இதற்கு காரணம், நீ என்னை போகற போக்குக்கு விட்டதால் தானே?
எனக்கு ஏன் இப்படி சுதந்திரம் தருகிறாய்?
இப்படியே இருக்க விட்டால், நாங்கள் உலக விஷயத்திலேயே உழன்று கொண்டே தான் இருப்போம்.

உமக்கு வைகுண்டதுக்கு வர ஒரு ஆள் கிடைக்காது.
வைகுண்டத்தை கூட விடுங்கள். வரதா, அரச்சா திருமேனியுடன் நிற்கும் உனக்கு கைங்கர்யம் செய்ய கூட ஆள் கிடைக்காமல் போய் விடும்.


Further read in blog:
http://proudhindudharma.blogspot.in/...g-post_18.html