தினமும் குளிக்கும் போது, நமது
பாரத பூமியை பசுமையாக்கும், நமக்கு உணவாக தானியங்கள் கிடைக்க செய்யும், தேவதைகளின் அம்சமான புண்ணிய நதிகளை ஒவ்வொரு நன்றியுடைய மனிதனும் நினைக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

நாம் குளிக்கும் நாம் குளிக்க வைத்திருக்கும் தண்ணீரும் அந்த புனித நீராக மனதில் தியானித்து, நம் உள்ளும் அந்த பரமாத்மா இருக்கிறார் என்ற த்யானத்துடன், அவருக்கு செய்யும் அபிஷேகமாக நினைத்து குளித்தாலும், புண்ணியம் சேரும்.

ஸ்லோகம்:
கங்கே-ச யமுனே-சைவ
கோதாவரி சரஸ்வதி
நர்மதே சிந்து காவேரி
ஜலேஸ்மின் சந்நிதம் குரு.

"கங்காநதி தேவியே, யமுனாநதி தேவியே, கோதாவரிநதி தேவியே, சரஸ்வதிநதி தேவியே, நர்மதாநதி தேவியே, சிந்துநதி தேவியே, காவேரிநதி தேவியே, உங்கள் அணுகிரஹத்தால், நீங்கள் அனைவரும் நான் வைத்திருக்கும் ஜலத்தில் வந்து, உங்கள் சாநித்தயத்தை தாருங்கள்"
என்று பிரார்த்தனை செய்து, குளிக்கலாம்.

ஒவ்வொரு நதியும் தேவதைகளால் உருவானவை. ஒவ்வொரு தேவதையும் ஒரு பலன் தருகிறது.

சரஸ்வதி தேவி, நதியாக உருமாறி உலகில் வந்த போது, அந்த சரஸ்வதி நதியில் ஸ்நானம் செய்பவர்களுக்கு "ஞானம்" உண்டாகும் படி செய்தாள்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஅதேபோல கங்கை, நதியாக உருமாறி உலகில் வந்த போது, அந்த கங்கா நதியில் ஸ்நானம் செய்பவர்களுக்கு "வைராக்கியம்" உண்டாகும் படி செய்தாள். கங்கையில் எப்பொழுதும் நீராடும் காசி கேதார்நாத் போன்ற இடங்களில் இருப்பவர்கள் வைராக்கியம் அதிகம் பெறுகின்றனர்.

அதேபோல யமனின் தங்கை, சூரியனின் புத்ரி யமுனா, நதியாக உருமாறி உலகில் வந்த போது, அந்த யமுனா நதியில் ஸ்நானம் செய்பவர்களுக்கு பிரேமை (அன்பு) உண்டாகும் படி செய்தாள்.

அதேபோல காவேரி, நதியாக உருமாறி உலகில் வந்த போது, அந்த காவேரி நதியில் ஸ்நானம் செய்பவர்களுக்கு

மேலும் படிக்க...
http://proudhindudharma.blogspot.in/...st_25.html?m=1