மஹாபாரத சமயத்தில் ஒரிசா (ஒடிசா) : Odisha (Orissa)
கலிங்க தேசம், ஓட்ற (odra) தேசம் ஆகிய தேசங்கள், இன்று ஒரிசா என்று அழைக்கப்படுகிறது.
வசுதேவரின் தங்கை "ஸ்ருதகீர்த்தி" இந்த நாட்டில் உள்ள அரசனை மணமுடித்தாள். ஸ்ரீ கிருஷ்ணருக்கு, ஸ்ருதகீர்த்தி அத்தை முறை.
ஒரு சமயம், ஸ்ருதகீர்த்திக்கு, தன் அண்ணன் குழந்தைகளை தன் மாளிகையில் வைத்து ஆசையாக சிறிது நாட்கள், பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

தன் அத்தையின் ஆசை படி, தானும், தன் மனைவிகளும், தன் அண்ணன் பலராமரும், தங்கை சுபத்ரையுடன் குடும்பத்தோடு, குஜராத்தில் உள்ள துவாரகையில் இருந்து கிளம்பி, கலிங்கா தேசம் வந்தார்.
இந்த சமயம், துவாரகை சென்று ஸ்ரீ கிருஷ்ணரை பார்க்கலாம் என்று, ப்ரம்ம லோகத்திலிருந்து வந்தார் நாரதர். துவாரகையில் ஸ்ரீ கிருஷ்ணர் இல்லாமல் இருக்க, அவர் கலிங்க தேசம் சென்று இருக்கிறார் என்று அறிந்து, அங்கிருந்து கிளம்பினார்.
போகும் வழியில் ஒரு ப்ராம்மணர் (யோகி) நாரதரை சந்தித்து, "இந்த உலகத்திலேயே சிறந்த பக்தன் உங்களை தவிர யார் இருக்க முடியும். நாராயாணா நாராயாணா என்று விஷ்ணு பக்தியில் எப்பொழுதும் நீங்கள் மட்டும் தான் இருக்கிறீர்கள்" என்றார்.
நாரதர், "என் பக்தி அப்படி ஒன்றும் பெரிதல்ல. துக்கமே இல்லாமல் இருக்கும் போது, பக்தி செய்வது சுலபம். என் பக்தியை விட, பல இன்னல்கள் வந்தாலும் திடபக்தி செய்த பிரகலாதனே சிறந்த பக்தன்" என்றார்.
சரி என்று அந்த ப்ராம்மணர் பிரகலாதனை சந்தித்து, "தாங்களே சிறந்த பக்தன்" என்றார்.
பிரகலாதன், "நான் செய்த பக்தி ஞான விஷயமானது. எங்கும் நாராயணனே இருக்கிறான் என்ற ஞானம் உயர்ந்தது என்றாலும், அது பக்தி ஆகாது. பக்தியில் உருக்கம் வேண்டும், தான் பக்தன், அவர் பகவான் என்ற நிலையில் தான் பக்தி வளரும். தன் வாழ்நாள் முழுவதும் ஸ்ரீ ராமருக்கு கைங்கர்யம் செய்து, ஸ்ரீ ராமருக்காகவே வாழ்ந்த ஹனுமனே சிறந்த பக்தர். நீங்கள் அவரை சென்று பாரும்" என்றார்.
சரி என்று அந்த ப்ராம்மணர் ஹனுமனை சந்தித்து, தாங்களே சிறந்த பக்தன் என்றார்.
ஹனுமன், "நான் ஸ்ரீ ராமருக்கு தொண்டு செய்தேன், கைங்கர்யமே லட்சியமாக இருந்தேன், அவரிடம் எல்லையில்லா அன்பு வைத்துள்ளேன் என்பதெல்லாம் உண்மை தான். ஸ்ரீ ராமரும் என் மீது அளவில்லா அன்பு வைத்துள்ளார் என்பதையும் நான் அறிவேன். ஸ்ரீ ராமரும் உன் கைங்கர்யத்துக்கு பதில் சொல்ல முடியவில்லை என்று பல முறை சொல்லியிருக்கிறார். என்னை ஆலிங்கனம் கூட செய்திருக்கிறார். இருந்தாலும் இதுவே சிறந்த பக்தி என்று சொல்ல முடியாது.

பெருமாள் என்னிடம் எத்தனை பிரியமாக இருந்தாலும், அவருடைய காம்பீர்யம், அவருடைய தெய்வ குணங்கள், என்னை ஏதோ செய்து விடுகிறது. என்ன தான் அவர் அன்பாக இருந்தாலும், அவரிடம் சகஜமாக பேசி நெருங்க முடிவதில்லை. ஒரு வித பயம் எனக்கு எப்பொழுதும் உண்டு. அவரை நெருங்கி செல்லும் போதே, அவரிடம் பேச முடியாமல், அவர் பாதத்தை தொடும் அளவிற்கு தான் என் பக்தி நிற்கிறது. என்னை போல கைங்கர்யமே லட்சியமாக இருந்து, அதே சமயம், ஸ்ரீ கிருஷ்ணரிடம் நெருங்கி பேசி, சகஜமாக பழகும் உத்தவரை போய் பாருங்கள். அவரே சிறந்த பக்தர்" என்றார்.
இதை கேட்ட அந்த ப்ராம்மணர், உத்தவரை சென்று வணங்கி, "நீங்களே சிறந்த பக்தர்" என்றார்.
உத்தவர், "நீங்கள் என்னை சிறந்த பக்தன் என்று சொல்கிறீர்கள். ஸ்ரீ கிருஷ்ணரிடம் பக்தி எப்படி செய்ய வேண்டும் என்பதை, பிருந்தாவனம் சென்ற பின் தான் நானே கற்றுக்கொண்டேன். அங்கு உள்ள கோபியர்கள், ஸ்ரீ கிருஷ்ணனிடம் செய்யும் பக்தியை கண்ட பின்பு தான் எனக்கு பக்தி என்றால் என்ன என்பதே புரிந்தது. அதுவரை நான் படித்த கல்வியினால் எனக்கு கர்வம் மட்டுமே இருந்தது. ஆதலால், நீங்கள் உண்மையான பக்தியை காண வேண்டுமென்றால், பிருந்தாவனத்தில் உள்ள கோபியர்களை சென்று பாருங்கள்" என்றார்.
அந்த ப்ராம்மணர் அலுக்காமல், சரி என்று பிருந்தாவனமும் வந்து விட்டார். அங்குள்ள கோபியர்களை வணங்கி, "நாரதர், பிரகலாதன், ஹனுமான், உத்தவர் அனைவரும், நீங்களே சிறந்த பக்தர்கள் என்று கூறி விட்டார்கள். உங்களை தரிசித்தது என் பாக்கியம்" என்றார்.
அங்கு இருந்த ஒரு கோபிகை, "எங்கள் கிருஷ்ண பக்திக்கு காரணம், நாங்கள் இல்லை. இந்த பிருந்தாவனத்தில் உள்ள ஸ்ரீ ராதையின் பக்தியே மிகவும் சிறந்தது. அந்த பக்தியே, எங்கள் பக்திக்கும் காரணம்" என்றாள்.Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
அந்த ப்ராம்மணர், "அப்படியானால், அந்த ஸ்ரீ ராதையை பார்க்க முடியுமா?" என்றார்.
Further read on

http://proudhindudharma.blogspot.in/...ha-orissa.html