202.மாலாசை
202
விராலிமலை
தானான தான தானான தான
தானான தான தனதான


மாலாசை கோப மோயாதெ நாளு
மாயா விகார வழியேசெல்
மாபாவி காளி தானேனு நாத
மாதா பிதாவு மினிநீயே
நாலான வேத நூலாக மாதி
நானோதி னேனு மிலைவீணே
நாள்போய் விடாம லாறாறு மீதில்
ஞானோப தேச மருள்வாயே
பாலா கலார ஆமோத லேப
பாடீர வாக அணிமீதே
பாதாள பூமி யாதார மீன
பானீய மேலை வயலூரா
வேலா விராலி வாழ்வே சமூக
வேதாள பூத பதிசேயே
வீரா கடோர சூராரி யேசெ
வேளே சுரேசர் பெருமாளே.
பதம் பிரித்தல்
மால் ஆசை கோபம் ஓயாது எந்நாளும்
மாயா விகார வழியே செல்


மா பாவி காளி தான் ஏனு(ம்) நாத
மாதா பிதாவும் இனி நீயே


நாலு ஆன வேத நூல் ஆகம(ம)ம் ஆதி
நான் ஓதினேனும் இல்லை வீணே


நாள் போய் விடாமல் ஆறு ஆறு மீதில்
ஞான உபதேசம் அருள்வாயே

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
பாலா க(ல்)லாரம் ஆமோத லேப
பாடீர வாக அணி மீதே


பாதாள(ம்) பூமி ஆதாரம் மீன
பானீயம் மேலை வயலூரா


வேலா விராலி வாழ்வே சமூக
வேதாள பூத பதி சேயே


வீரா கடோர சூராரியே செவ்வேளே
சுரேசர் பெருமாளே.
பத உரை
மால் = மயக்கம். ஆசை = ஆசை கோபம் = சினம் (ஆகியவை). ஓயாது = ஓய்வில்லாமல் எந்நாளும் =எப்போதும் மாயா விகார = உலக மாயை சம்பந்தப்பட்ட கவலைகளின் வழியே செல் =வழியிலேயே போகின்ற.


மா பாவி = பெரிய பாவி காளி = விட குணம் உள்ளவன் தான் என்னும் நாத = நான் என்றிருந்த போதிலும், நாதனே மாதா, பிதாவும் எனி நீயே =இனி எனக்குத் தாயும், தந்தையும் நீ தான்.


நாலு ஆன வேத நூல் = நான்கு வேத நூல்களையும்ஆகமம் ஆதி = ஆகமம் ஆகிய பிற நூல்களையும்நான் ஓதினேனும் இல்லல் = நான் படித்ததும் இல்லை வீணே = வீணாக (என்).


நாள் போய் விடாமல் = வாழ் நாள் போய்விடாமல்ஆறாறு மீதில் = முப்பத்தாறு தத்துவங்களுக்கு அப்பாற்பட்ட நிலையதான ஞான உபதேசம் அருள்வாயே = ஞான உபதேசத்தை அருள்வாய்.


பாலா = பாலனே கல்லாரம் ஆமோத =செங்குவளை[Sr1] [Sr2] மலர்ப் பிரியனே லேப பாடீர வாக அணி மீதே = ஆபரணங்களின் மேல் சந்தனக் கலவைப் பூச்சு அணிந்த அழகனே.


பாதாள பூமி ஆதாரம் = பாதாளம், பூமி இவைகளுக்குப் பற்றுக் கோடாக இருப்பவனே. மீன பானீயம் = மீன் நிறைந்த. மேலை வயலூரா = மேலைமேன்மை தங்கிய வயலூரில் வீற்றிருப்பவனே.


வேலா = வேலனே விராலி வாழ்வே = விராலி மலைச் செல்வனே சமூக வேதாள = திரளான பேய்க் கணங்களுக்கும் பூத = பூத கணங்களுக்கும் பதி =தலைவனாகிய சிவபெருமானுடைய சேயே =குமாரனே.


வீரா = வீரனே. கடோர = கொடுமை வாய்ந்தசூராரியே = சூரனுக்குப் பகைவனே செவ்வேளே =செவ்வேளே சுரேசர் பெருமாளே
விளக்கக் குறிப்புகள்
1. காளி = விட குணமுள்ளவன். ...காளம் விஷம்
2. ஆறுஆறு மீதில்....
(கனத்த தத்துவமுற் றழியாமல்).............................திருப்புகழ்,நினைத்ததெ.
3. சமூக வேதாள் பூத பதி சேயே...
(பூத பதியாகிய புராணமுனி)...சம்பந்தர் தேவாரம்
.