*சிறப்பு:*
இராஜராஜ சோழன் காலத்தில் இப்பகுதியில் உள்ள பட்டன் கல்லூர், நல்லூர், கோடகநல்லூர், கீழக்கல்லூர் போன்ற பகுதிகளில் பிராமணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட பிரம்மதாயத்திற்கு உட்பட்ட பகுதியாக இருந்தது.
இப்பகுதியில் விளைந்து வரும் *கோடகன் சம்பா* என்ற உயர் ரக நெல் சமைப்பதற்கு சுவையாகவும், அதிக நாள் ஆனாலும் கெடாமலும் பயனைப் பெற்றவையாகும்.
எனவே, இந்நெல்லிற்கு அம்மன்னன் *இராஜ அன்னம்* என பெயரிட்டான்.
மேலும், இப்பகுதியில் விளைவிக்கும் கோடகன் சம்பா நெல்லினை கீழக்கல்லூரில் உள்ள இத்திருக்கோயில் இறைவன் சிவபெருமான் முன்னிலையில் அனைவரும் *புரவு வரி* (விலக்களிக்கப்பட்ட வரி) செலுத்த உத்தரவிட்டான்.
மேலும் இவ்வாறாக செலுத்தப்படும் இந்த உயர் வகை நெல்லானது, திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி, திருவைகுண்டம், சங்கரன்கோவில்,
பாபநாசம்,
பிரம்மதேசம் போன்ற இடங்களில் உள்ள ஆலயங்களின் இறைவனுக்குப் படைக்கப்படும் என்றும் அறிவிப்பை மொழிந்தான்.
இந்த அறிவிப்பை ஏற்று அக்கால விவசாயிகள் தங்களது மனசாட்சிப்படி சிவபெருமான் முன்னிலையில் புரவு வரியாக இந்நெல்லை செலுத்தினர்.
சங்கரன்கோவில், பிரம்மதேசம் போன்ற தலங்களின் கல்வெட்டுக்களில் இருக்கின்றன.
இத்திருநாமம் நாளடைவில் புரவரிநாதர் என்றும் திருநாமம் மருவி *புறவேலிநாதர்* எனவாயிற்று.
இதை உறுதிபடுத்தும் விதமாக இத்திருக்கோயிலுக்குள் இன்றும், சதுர எடை மேடை இருப்பதைக் காணப்பெறலாம்.
*தனிச்சிறப்பு:*
அவிமுக்தி ஷேத்திரம் என்னும் சிறப்பினைக் கொண்டது இத்தலம்.
*பூஜை:*
நாள்தோறும் இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றது.
*நடை திறப்பு:*
காலை 6.00 மணி முதல், 10.00 மணி வரை.
மாலை 5.30 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும்.
*திருவிழாக்கள்:*
சிவராத்திரி. மற்றும்
திருவாதிரைத் திருவிழா.
*இருப்பிடம்:*
திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து சேரன்மகாதேவி - முக்கூடல் செல்லும் பாதையில் இருக்கும் கீழக்கல்லூர் என்ற ஊரிலிருந்து தெற்கில் ஒரு கி.மி தொலைவில் அமைந்துள்ளது.
*அஞ்சல் முகவரி:*
செயல் அலுவலர்,
அருள்மிகு புறவேலிநாத சுவாமி திருக்கோயில்,
கீழக்கல்லூர்.
கோடகநல்லூர்.
திருநெல்வேலி-627 010
*தொடர்புக்கு:*
04634 250 555
திருச்சிற்றம்பலம்.
நெல்லை மாவட்ட சிவதலங்களில் நாளைய தலப்பதிவு *நவகைலாயச் சிறப்பு விவரம்.*
இன்னும் சில நாளில் நெல்லை மாவட்ட சிவ தல தொடர் மகிழ்ந்து நிறைவாகும்.
________________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Bookmarks