சுமார் 700 வருடங்களுக்கு முன், 1311ல் மீனாட்சி கோவில் மூடப்பட்டு இனி ஹிந்துக்கள் தலை தூக்க முடியுமா என்ற நிலையில் இருந்தது நம் மதுரை.


1340ல், டில்லியை ஆண்டு கொண்டிருந்த, "முகமது பின் துக்ளக்" ஆணைப்படி, மதுரை வாஜிராக இருந்த "ஜலாலுத்தின் ஹசன்"னிடம் வேலை செய்த "முகம்மது கியாசுதின்" என்பவன், ஜலாலுத்தின், மற்றும் அவன் மகன், மருமகன் அனைவரையும் கொன்று தான் மதுரை சுல்தான் என்று ஆகி விட்டான்.


1340ல் ஆட்சி செய்ய ஆரம்பித்த "முகம்மது கியாசுதின்" ஹிந்துக்களை வெட்டி தள்ளினான்.


முகம்மது கியாசுதின் மதுரையை ஆண்ட காலத்தில், "இபின் படூடா" (ibn Battuda) தங்கி இருந்த போது, மதுரையில் ஹிந்துக்கள் என்ன நிலைக்கு ஆகினர் என்று விளக்கி இருக்கிறான்.

1.
மரங்கள் வெட்டப்பட்டு, அந்த இடங்களில், கைது செய்யப்பட்ட ஹிந்துக்கள் வரிசையாக நான்கு gate வழியாக அனுப்பப்பட்டு வரிசையாக தலை சீவபட்டார்கள்.
இவர்களோடு கைது செய்யப்பட்ட இவர்களின் மனைவிகளும் கொலை செய்யப்பட்டு, இவர்களின் தலை முடியை கொண்டு பிணங்களை இணைத்து கீழே போட்டனர்.
பால் குடிக்கும் குழந்தைகளை வெட்டி தூக்கி எறிந்தனர்.
இது போன்று, மறுபடியும் வேறொரு காட்டில் மரங்களை வெட்டி, அந்த இடங்களில் இதே போன்று ஹிந்துக்கள் கொத்து கொத்தாக தலை சீவப்பட்டனர்.
இது போன்ற கீழ் தரமான செயலை பார்த்ததில் நான் அவமானப் படுகிறேன். அப்படி ஒரு தண்டனைக்கான குற்றத்தை இந்த ஹிந்துக்கள் செய்யவில்லை. இந்த காரணத்தால் தானோ, கடவுள் (அல்லா) இவனின் ஆயுளை முடித்து விட்டானோ?
மேலும் இன்னொரு இடத்தில் சொல்கிறான்


2.
ஒரு நாள், நானும், முகமது கியாசுதினும் உணவு உண்ணும் சமயத்தில், ஒரு ஹிந்துவை, அவன் மனைவி மற்றும் 7 வயது மதிக்க தக்க ஒரு சிறுவனை கைதியாக இழுத்து வந்தனர் காவலாளிகள்.
மதுரை சுல்தான் "முகமது கியாசுதின்" தன் கைகளை அசைத்து நின்று கொண்டிருந்த அந்த ஹிந்துவின் தலையை வெட்ட சைகை செய்தான். மேலும் காவலாளிகளை பார்த்து, அரேபிய மொழியில், 'அவன் மனைவியும், மகனையும் சேர்த்து' என்று சொன்னான்.
உடனே அந்த ஹிந்துவின் தலை வெட்டப்பட்டது. இதை பார்க்க கூடாது என்று நான் கண்ணை மூடிக்கொண்டேன். சிறிது நேரம் கழித்து பார்த்த போது 3 தலைகளும் ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்தது.
மேலும் இன்னொரு இடத்தில் சொல்கிறான்


3.
இன்னொரு சமயம், நான் மதுரை சுல்தான் "முகமது கியாசுதினுடன்" இருந்த போது, ஒரு ஹிந்து இழுத்து வரப்பட்டான். அவன் மொழியில் ஏதோ பேசினான். எனக்கு புரியவில்லை. உடனே சுல்தானின் காவலாளிகள் தங்கள் ஈட்டிகளை அந்த ஹிந்துவை நோக்கி கொலை செய்ய சென்றார்கள்.
நான் ஏதோ அசம்பாவிதம் நடக்க போவதை உணர்ந்து வெளியே சென்று விட எழுந்தேன்.
என்னிடம் மதுரை சுல்தான், "எங்கே போகிறீர்கள், இபின் படூடா?" என்றான்.
நான், தொழுகைக்கு நேரம் ஆகி விட்டது. நான் சென்று விட்டு வருகிறேன்" என்று சொல்லி நகர்ந்து விட்டேன்.
என் காரணத்தை புரிந்து கொண்டு சிரித்து கொண்டே, அந்த ஹிந்துவின் கை மற்றும் காலை வெட்ட சொன்னான் சுல்தான். நான் சென்று, பிறகு வந்த போது, அந்த ஹிந்துவின் உடல் ரத்தத்தில் மிதந்து கொண்டு இருந்தது.
மேலும் ஒரு இடத்தில் இபின் படூடா சொல்கிறான்,


4.
நான் மதுரையை அடைந்த போது, தூக்கி வீசப்பட்ட பிணங்களால் உருவான, எங்கும் நோய் பரவி இருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட ஹிந்துக்கள் அதிக பட்சம் 2 அல்லது 3 நாட்களில் இறந்தனர்.


நான் மதுரையை விட்டு செல்லும் போது, பொதுவாக அனைத்து ஹிந்துக்களும் நோய்வாய்ப்பட்டு இருந்தனர் அல்லது இறந்திருந்தனர்.


இப்படி 60 ஆண்டுகள் மதுரை சுல்தான் ஆட்சியில் அனுமானிக்க முடியாத துன்பத்தை நம் பாட்டனார்கள் அனுபவித்தனர்.

ஒவ்வொரு தமிழனும், கட்டாயம் மனதில் பதிய வைத்து கொள்ள வேண்டிய நம் பாட்டனார்களுக்கு நிகழ்ந்த சரித்திரம்.


1. தமிழனை வாழ வைத்தது யார்?


2. தெருக்கு தெரு பெரிய பெரிய கோவில்கள் உள்ள கும்பகோணம் போல, ஏன் மற்ற தமிழ் தேசங்களில் கூட காண படவில்லை?


3. ஏன் பொதுவாக தமிழ் நாட்டில் உள்ள கோவில் அமைப்பு போன்று கோபுரங்களோ, சந்நிதிகளோ பொதுவாக வட இந்தியாவில், பாகிஸ்தான், ஈரான், ஆப்கான் போன்ற இடங்களில் காணப்படவில்லை? ஹிந்து கோவில்களின் அமைப்பும் வடக்கில் நம் ஹிந்துக்கள் வழிபடும் முறையும் நம்மை விட வித்தியாசமாக இருக்கிறதே. காரணம் என்ன?
நம் கோவிலில், எவனும் தொட கூடாது, (ப்ராம்மணன் உட்பட), அந்த தெய்வ விக்ரஹத்தை நியமிக்கப்பட்ட அர்ச்சகர் மட்டுமே தொட முடியும் என்று புனிதம் கெடாமல், தெய்வத்தை எவனும் தொடலாம் என்று வட இந்தியாவில் உள்ள கோவில்கள் பொதுவாக உள்ளதே. காரணம் என்ன?
காசியில் உள்ள விஸ்வநாதருக்கு நாம் சென்றாலும் அபிஷேகம் செய்யலாம் என்கிற அளவுக்கு வட இந்தியா அனைவருக்கும் அனுமதி தந்து உள்ளது. இங்கு தமிழ் நாட்டில் உள்ள கோவிலில், நான் ப்ராம்மணனன் என்று மார்தட்டி கர்ப்பக்ரஹத்துக்குள் கூட செல்ல முடியாது.
அர்ச்சகர் ஒருவரே தொட அனுமதி என்று இன்றும் உள்ளதே. இந்த வட இந்திய பூஜை ஏன் நம்மை விட வித்தியாசம் ஆகி போனது? காரணம் என்ன?

4. தமிழகம் மட்டும் மற்ற இந்திய தேசங்களை விட கோவில்கள் பாதிப்பு அந்த அளவு இல்லாத தேசமாக உள்ளதே. என்ன காரணம்?


5. தமிழனை விட பொதுவாக, ஹிந்து என்ற பெருமையும், ஹிந்துக்களை கேலி செய்பவர்கள் மீது உடனே கோபமும், வட இந்தியனுக்கு மட்டும் ஏன் பொதுவாக காணப்படுகிறது?

மேலும் முழு நிகழ்வையும் நீங்களே படித்து கொள்ள...
http://proudhindudharma.blogspot.in/...-post.html?m=1

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends