204.இறவாமற்


204
அவிநாசி

தனதானத் தனதான தனதானத் தனதான


இறவாமற் பிறவாமல் எனையாள்சற் குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் பெருமாளே
பதம் பிரித்து உரை


இறவாமல் பிறவாமல் எனை ஆள் சற் குருவாகி
பிறவாகி திரமான பெருவாழ்வை தருவாயே


இறவாமல் = நான் இறவாமல் வரம் தந்தும்
பிறவாமல் = மீண்டும் பிறவமால் வரம் தந்தும்
எனைஆள் = என்னை ஆண்டருளும். சற் குரு நாதா =நல்ல குருவாகியும்.


பிற ஆகி = வேறு துணையாகியும். திரமான =
நிலையான. பெரு வாழ்வை = வீட்டுப் பேற்றை.
தருவாயே = தந்தருளுவாயாக.


குற மாதை புணர்வோனே குகனே சொல் குமரோசா
அற(ம்) நாலை புகல்வோனே அவிநாசி பெருமாளே.


குறமாதை = குறப் பெண்ணாகிய வள்ளி நாயகியை.புணர்வோனே = சேர்பவனே குகனே = குகனே சொல் =எல்லோராலும் புகழப்படும் குமரேசா = குமரேசனே.


அறம் நாலை = அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு வாழ்க்கைக் குறிக்கோள்களையும்
புரு ஷார்த்தங்களையும்) புகல்வோனே =
உபதேசிப்பவனே அவிநாசிப் பெருமாளே =
அவநாசியில் வீற்றிருக்கும் பெருமாளே.


ஒப்புக


பிறவாகி ....
எனக்கு இனிய பிற பொருள்களும் ஆகி.
நேரே தீர வூரே பேரே பிறவேயென் -------- திருப்புகழ்,மைச்சரோருக.