காஞ்சிபுரம் (நிலாத்திங்கள்) - 108 திவ்ய தேசம்
"அஞானியாக என் பக்தனை சாக விட மாட்டேன்" என்கிறார் காஞ்சி வரதன்.
விஸ்வநாதரும், காஞ்சி வரதனும் ஞானத்தை பற்றியும், மோக்ஷத்தை பற்றியும் என்ன பேசினார்கள்?
விஸ்வநாதருக்கு ஏன் ஏகாம்பர நாதர் என்ற பெயர் ஏற்பட்டது?
எந்த நாமத்தை கொடுத்து விஸ்வநாதர், நமக்கு ஞானம் தருகிறார்?

ஒரு சமயம் காசி விஸ்வநாதர், காஞ்சிபுரம் வந்து, வரதராஜ பெருமாளை தரிசிக்க வந்தார்.
பெருமாளை பார்க்க போகிறோம் என்று தன் வேஷத்தை காசி விஸ்வநாதர் மாற்றிக் கொள்ளவில்லை.
ஜடா முடியுடன், சாம்பல் தரித்த காசி விஸ்வநாதராகவே வந்திருந்தார்.
காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார்.
வேகவதியாக, நதி ரூபத்தில் ஆக்ரோஷமாக வந்த சரஸ்வதி, வேகாசேதுவாக சொன்ன வண்ணம் செய்த பெருமாள் அணை போல படுத்து இருப்பதை பார்த்து ஒரு வித அச்சமும், நடுக்கமும் (கம்பனம்) ஏற்பட்டு, வேகம் தணிந்து, சரஸ்வதி அமைதி ஆனாள்.
வேகாநதியாக வந்த சரஸ்வதி, வேகம் குறைந்து, அதற்கு பின், கம்பா நதி என்று பெயருடன் காஞ்சியில் ஓடிக்கொண்டிருந்தாள்.
அதன் நதிக்கரை அருகே ஒரே ஒரு (ஏக) பெரிய மாமரம் (ஆம்பர வ்ருக்ஷம்) இருந்தது.
அந்த இடத்தை தேர்ந்தெடுத்து, சிவபெருமான், காஞ்சி வரதராஜ பெருமாளை தரிசிக்க தியானம் செய்து கொண்டிருந்தார்.
இதனாலேயே, சிவபெருமானுக்கு, ஏகாம்பர நாதர் என்ற பெயர் ஏற்பட்டது.
சிவபெருமானுடைய பக்தியில் மகிழ்ச்சி அடைந்து, வரதராஜ பெருமாள், ப்ரசன்னமாக தரிசனம் கொடுத்தார்.

மேலும் வரதராஜ பெருமாள், விஸ்வநாதரை பார்த்து,
"ஹே தேவ தேவா, மஹா தேவா, உங்களுக்கு நல் வரவு.
நீங்களோ விஸ்வநாதர் (உலகத்துக்கு ஈசன்).
உங்களை எல்லா தேவர்களும் பூஜை பண்ணுகிறார்கள்.
உங்கள் பெருமை எப்பேற்பட்டது.
பாற்கடலில் அம்ருதம் கிடைக்க தேவர்கள் முயற்சி செய்த போது, ஆலகால விஷம் வெளி வர, அதை பார்த்து, அங்கிருந்த தேவர்கள் எல்லோரும் ஓட, நீங்கள் தானே வந்து, ஆலகால விஷத்தை சாப்பிட்டு, தேவர்களுக்கு அபயம் கொடுத்தீர்.
உலகத்தையே அடக்கி விட்ட கர்வத்தில் காமதேவன், ஒரு சமயம் உங்களிடம் வந்து காமத்தால் உங்கள் மனதை கெடுக்க முயல, உங்கள் மூன்றாவது கண்ணால், காமதேவன் பொசுக்கி விட்டீர்களே. உங்களை போன்று, காமத்தை ஜெயித்தவன் யார் இருக்கிறார்கள்?
உங்கள் பக்தனான, மார்கண்டேயனை மரணம் துரத்தி வர, உங்கள் இடது காலால் மரணத்தை உதைத்து ஏறிந்தீரே !
இப்படி மகிமை பொருந்திய நீர், காசியையும் விட்டு விட்டு, இந்த காஞ்சியில் வந்ததென் காரணம் என்ன?" என்று கேட்க,
உடனே, சிவபெருமான்,
"உம்முடைய பெருமைகள் அனைத்தையும் மறைத்துக்கொண்டு, என் பெருமைகளை மட்டும் புகழ்ந்து பேசுகின்றீர்களே !
நான் விஸ்வநாதனாக இருந்தாலும், உண்மையில் நீங்கள் தானே, "ஜகன்நாதன்".
நாங்கள் எல்லாரும் உங்களுக்கு கீழே இருந்து கொண்டு தானே வேலை செய்கிறோம்.
ஆலகால விஷத்தையும் குடித்தேன் என்று என்னை போற்றுகிறார்கள். நீலகண்டன் என்ற பெற்று பிரசித்தம் ஆனேன்.
ஆனால், ...
மேலும் படிக்க...
http://proudhindudharma.blogspot.in/...1/108.html?m=1

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends