An incident with Bhaskara rayar
அந்த தேவி உபாசகர் ஒரு முறை, செல்வந்தர் ஒருவரிடம் பணம் கடன் வாங்கி , குறிப்பிட்ட காலத்தில் திருப்பி தருவதாக பத்திரம் எழுதி கையொப்பமும் இட்டிருந்தார் ....
.ஆனால் அவரால் குறித்த காலத்தில் கடனை திருப்பி தர இயலவில்லை !...
அன்று அவர் பூஜையறையில் அம்பிகையை தியானித்தவாறு பூஜையில் ஆழ்ந்திருந்த அக்கணம் .
..கடன் கொடுத்த அந்த செல்வந்தர் அவர் வீட்டு வாசலில் வந்து அவர் பெயரை சொல்லி அழைக்க ....
அந்த தேவி உபாசகர் வெளியே வராததால் ...கோபம் கொண்ட செல்வந்தர் அவரை வாயில் வந்தபடி திட்டி கூச்சல் போட. ஆரம்பித்தார் !
அப்போது உள்ளிருந்து அந்த தேவி உபாசகரின் மனைவி வெளியே'' ..உங்களுக்கு பணம் தானே வேண்டும் ? ..கூச்சல் போடாதீர்கள் !..அரை நொடியில் பணத்துடன் வருகிறேன் ...''மிடுக்காக சொல்லி விட்டு வேகமாக அங்கிருந்து விரைந்தவள் , சொல்லி வைத்தாற்போல் அரை நொடியில் வந்தாள் , ஒரு சிறு பை சகிதம்
.. .பின் புன்னகையுடன் அந்த பையை அவரிடம் நீட்டியவாறே,
'' இதோ பாருங்கள் ..இந்த பையில் நீங்கள் கடனாக கொடுத்த பணமும் அதற்குண்டான , வட்டியும் உள்ளன !''
!.என்றாள் .
..அடுத்த கணம் பத்திரத்தை அவளிடம் நீட்டிய செல்வந்தரை அவசரமாய் இடை மறித்தாள்அவள் !
'' ..பூஜை முடிந்ததும் நீங்கள் அவர் கையினால் பிரசாதம் பெற்றுக்கொண்டு ,பின் இந்த பத்திரத்தையும் அவரிடமே கொடுத்து விடுங்கள் ! ''....
புன்னகை மாறாத முகத்துடன் சொல்லி விட்டு அந்த அம்மாள் உள்ளே செல்ல ..
..செல்வந்தரும் பை, பத்திரம் சகிதம் வீட்டுதிண்ணையிலேயே அமர்ந்து கொண்டார் ..
சற்ற்றைக்கெல்லாம் பிரசாத தட்டுடன் வெளியே வந்த அந்த தேவி உபாசகர் , அங்கே அமர்ந்திருந்த செல்வந்தரை கண்டு வியப்பு மேலிட ,
'' அடடே ...உங்களை கவனிக்க வில்லை ....மன்னியுங்கள் ! ''
பிரசாத தட்டை நீட்டியவாறு பேசியவரை பேச விடவில்லை அந்த செல்வந்தர் ..
'' முதலில் இந்த பத்திரத்தை வாங்கி கொள்ளுங்கள் ! ''...
பேசியவரை கண்டு தேவி உபாசகருக்கு ஏகத்துக்கு ஆச்சரியம் !.
.'' நான் இன்னும் உங்கள் கடனை அடைக்கவில்லையே ?..''
'பரிதாமாக கூறியவரை புன்னகையுடன் ஏறிட்டார் செல்வந்தர் ;
'' உங்கள் மனைவி சற்று முன்பு வந்து மொத்த கடனையும் அடைத்துவிட்டு , பத்திரத்தையும் உங்களிடம் கொடுக்க சொன்னார் !''
ஆச்சரியத்தில் ஆழ்ந்த தேவி உபாசகர் பின் மனைவியை அழைத்து ,
'' நீ இவரது கடனை அடைத்ததாக கூறுகிறாரே ...உண்மையா ?.....''
என்று வினவ ....அந்த அம்மையாரோ திகைப்புடன் ,
'' அய்யோ ...நான் பூஜையறையில் உங்களுடன் தானே இருந்தேன்...?..இது எப்படி சாத்தியம் ? ''
என்று அரற்றிய அக்கணம் ...
பூஜையறையிலிருந்து ஒரு அசரீரி !
'' நான் தான் பணம் தந்தேன் !''..
குரல் கேட்டு பூஜையறைக்கு அனைவரும் விரைய,
அங்கே அம்பிகையின் உருவத்தை தவிர வேறு எதுவும் இல்லை!
கடனை அடைக்க , தன் மனைவி உருவில் வந்தது சாட்ஷாத் அம்பிகையே என்றுணர்ந்த தேவி உபாசகரின் கண்களில் இப்போது தாரை தாரையாய் கண்ணீர் ! அருகே திக்பிரமையுடன் அவரது மனைவி !
'' உங்கள் மேன்மை தெரியாமல் தவறாக பேசி விட்டேன் ...மன்னியுங்கள் !''
கண்கள் பனிக்க , செல்வந்தர் அவரின் கால்களில் விழுந்தார் !
லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் எழுதிய தேவி உபாசகரான பாஸ்கரராயர் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் இது ! தஞ்சை மாவட்டம் திருவாலங்காட்டுக்கு அருகே ,காவேரி ஆற்றங்கரையில் வசித்தவர் இவர் !
தஞ்சாவூர் மயிலாடுதுறை மார்க்கத்தில் , பாஸ்கர ராயபுரம் என்று ஒரு ஊர் இவர் பெயராலேயே இருக்கிறது.!

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends