சிவானந்த லஹரீ*என்றால் "சிவனை அல்லது சிவத்தை அநுபவிப்பதன் ஆனந்த வெள்ளம்" என்று அர்த்தம்.

காம தஹனம், கால ஸம்ஹாரம், திரிபுர ஸம்ஹாரம், தாருகாவனத்தில் பிக்ஷாடனம், பார்வதீ கல்யாணம், கைலாஸ தர்சனம், நடராஜ தாண்டவம், அடி முடி தேட நின்றது, கிராதனாக (வேடனாக) வந்தது முதலான லீலைகளைப் பண்ணின பரமேச்வரனின் அனந்த குணங்களையும், மஹிமைகளையும், அருளையும், சக்தியையும் அநுபவிப்பது, சிவன் என்ற மூர்த்தியை அநுபவிக்கிற ஆனந்த வெள்ளத்தைத் தருகிறது.

அதே சிவனை அமூர்த்தமாக உள்ளுக்குள்ளே அநுபவித்துக் கொள்ளும்போது அவனுக்கு 'சிவம்' என்று பெயர். [மாண்டூக்ய] உபநிஷத்தில் சொல்லியிருக்கிறபடி விழிப்பு, கனா, தூக்கம் இவற்றைத் தாண்டி, ஆத்மா ஏகமானதே என்கிற அறிவால் அறியத்தக்கவனாக, பிரபஞ்சங்கள் லயிக்கிற துரீய சாந்த நிலையில் அத்வைதமாக சிவனை அநுபவிக்கிறபோது அவனே "சிவம்" ஆகிறான். இப்படி இருவகைப்பட்ட, சிவனைக் குறித்த லீலானந்தம், சிவத்தைக் குறித்த ஆத்மானந்தம் இரண்டையும் வெள்ளமாகப் பெருக்குவதால் "சிவாநந்த லஹரி"க்கு அந்தப் பெயர் ரொம்பப் பொருந்துகிறது.

ஆசார்யாள் எந்த ஸந்தர்ப்பத்தில் [சிவாநந்தலஹரி என்னும்] இந்த சொற்றொடரைப் பிரயோகிக்கிறார் என்றால்: ஆரம்ப ச்லோகமாக, முதல் முதலில், *பார்வதீ-பரமேச்வராள் சேர்ந்திருக்கிற திருக்கோலத்தைச் சொல்லி நமஸ்காரம்* பண்ணுகிறார். அதுதான் ஸம்பிரதாயம். ஸாம்பமூர்த்தி, ஸாம்ப சிவன் என்பதாக அம்பாளோடு கூடினவனாகவே (ஸ+அம்ப=ஸாம்ப. 'அம்பாளோடு சேர்ந்த' என்று அர்த்தம். அப்படித்தான்) ஈச்வரனை எப்போதும் சொல்லியிருக்கிறது. அதனால் முதலில் சிவ-சக்தி ஜோடியாகச் சொன்னார். அடுத்த ச்லோகத்திலேயே 'சிவாநந்த லஹரீ'என்ற பதத்தை ப்ரயோகித்திருக்கிறார். "வஸந்தீமச்-சேதோ ஹ்ரத புவி சிவாநந்தலஹரீ" என்று இந்த இரண்டாம் ச்லோகம் முடிகிறது.

சிவாநந்த லஹரி'யை எடுத்துக் கொண்டால் ஈச்வரனுக்கே என்று இருக்கப்பட்ட *சிவ, பரமசிவ, ஸதாசிவ, சம்பு, சங்கர, பசுபதி, மஹாதேவ, கிரிச, ஸாம்ப* முதலான நாமாக்களில் எதுவாவது ஒன்று ஒவ்வொரு ச்லோகத்திலும் வந்திருக்கும். அப்படி ஒன்றில் இல்லாவிட்டால்கூட ஈடுகட்டுகிற மாதிரி இன்னொன்றில் இரண்டு, மூன்று நாமாக்கள் வந்துவிடும். ரொம்ப ஜாஸ்தி வருவது சம்பு. ' *சம்போ* *சம்போ*என்று கூப்பிட்டு அநேக ச்லோகங்கள் பண்ணியிருக்கிறார். அடுத்தபடி ஜாஸ்தி வருவது *பசுபதி, சிவ*முதலிய நாமாக்கள். சிவனுக்கென்று ப்ரத்யேகமாக இல்லாமல் எந்த தெய்வத்துக்கும் பெயர் மாதிரிச் சொல்லும் ஸ்வாமி, விபு முதலான பதங்களும் கொஞ்சங் கொஞ்சம் வருகின்றன. *சிவ ஸம்பந்தமான இன்பப் பிரவாஹம்* என்ற அர்த்தத்தைக் கொடுக்கிற " *சிவாநந்த லஹரீ* என்ற பெயரைத் தாம் எழுதிய ஒரு சதகத்தில் சொன்னார். 'சிவ' என்ற பேரை அங்கே வெளிப்படச் சொல்லியிருக்கிறது *லஹரி* என்றால் *பிரவாஹம்* 'லஹரி' என்றால் அலை, பெரிய அலை என்றும் சொல்வதுண்டு. அடுக்கடுக்காக அலை வீசிப் பொங்கி வரும் பிரவாஹம் என்பதுதான் இங்கே பொருத்தம். * சிவானந்த லஹரீ*என்றால் "சிவனை அல்லது சிவத்தை அநுபவிப்பதன் ஆனந்த வெள்ளம்" என்று அர்த்தம்.

காம தஹனம், கால ஸம்ஹாரம், திரிபுர ஸம்ஹாரம், தாருகாவனத்தில் பிக்ஷாடனம், பார்வதீ கல்யாணம், கைலாஸ தர்சனம், நடராஜ தாண்டவம், அடி முடி தேட நின்றது, கிராதனாக (வேடனாக) வந்தது முதலான லீலைகளைப் பண்ணின பரமேச்வரனின் அனந்த குணங்களையும், மஹிமைகளையும், அருளையும், சக்தியையும் அநுபவிப்பது, சிவன் என்ற மூர்த்தியை அநுபவிக்கிற ஆனந்த வெள்ளத்தைத் தருகிறது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends