செகந்தராபாதில் பெரியவா முகாம். அப்போது ரயில்வேயில் மூத்த அதிகாரிகள்
சிலபேர் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தனர்.
அவர்களுக்கு ஒரு பெரிய குறை. அது என்னவென்றால்..........
"பெரியவாளோட அனுக்ரகத்தால எங்களோட கர்மானுஷ்டானங்களை
எல்லாம் கூடியவரைக்கும் விடாமப் பண்ணிண்டு இருக்கோம். ஆனா.........இந்த
ஊர்ல, பூஜை, ஸ்ராத்தம், தர்ப்பணம்
இதெல்லாத்தையும் சரியாப் பண்ணிவெக்க, வேதம் படிச்ச
சாஸ்த்ரிகள் இல்லே! ஒரே ஒர்த்தர்தான் இருந்தார்.......அவருக்கும்
பண்ணி வெக்கும்போது அவர் சொல்ற மந்த்ரங்களுக்கு அவருக்கே அர்த்தம்
தெரியலை........அர்த்தம் தெரியாம கர்மாக்களை பண்றதை,
எங்காத்து பிள்ளைகள் ஏத்துக்க மாட்டேங்கறா........இந்தக்
காலத்து பசங்களாச்சே! அதான்......பெரியவா தயவுபண்ணி
மடத்துலேர்ந்து யாராவது வேதம் படிச்ச சாஸ்த்ரிகளா பாத்து
இந்த ஊருக்கு அனுப்பிச்சுக் குடுக்கணும்" என்று ப்ரார்த்தனை
பண்ணினார்கள்.
"ஒங்காத்து பிள்ளைகள் சொல்றதுலேயும் ஞாயம்
இருக்கு.........." என்று அவர் ஆரம்பித்தபோது,
ஸ்ரீமடத்துக்கான அன்றைய தபால்களை
எடுத்துக் கொண்டு ஒரு postman வந்தார். பெரியவா மேலாக சில கடிதங்களைப்
படித்துவிட்டு, ஒரு லெட்டரை எடுத்தார். அதில் PIN
என்று இருந்த இடத்தை அந்த அதிகாரிகளுக்கு
சுட்டிக் காட்டி, "PIN ..ன்னு போட்டிருக்கே.....அதோட அர்த்தம் தெரியுமா?"
ரொம்ப சாதாரண கேள்விதான். ஆனால் அந்த அதிகாரிகளுக்கு
தெரியவில்லை. கொண்டுவந்த தபால்காரருக்கும் தெரியவில்லை.
"POSTAL INDEX NUMBER " என்று தானே அதற்கு விளக்கமும் குடுத்தார்.
சிரித்துக்கொண்டே அந்த அதிகாரிகளைப் பார்த்து " நீங்கள்ளாம்
நெறைய படிச்சு பெரிய உத்தியோகம் பாக்கறவா.........ஆனா,
சாதாரண தபால்ல வர PIN க்கு ஒங்களுக்கு அர்த்தம்
தெரியலே........அவ்வளவு ஏன்? PINCODE ன்னு எதையோ எழுதின அந்த
ஆஸாமிக்கே கூட அதோட அர்த்தம் தெரியாம இருக்கலாம். ஆனா..........PINCODE
ன்னு போட்டிருக்கற எடத்ல சரியான நம்பரை
எழுதிட்டா........அது சரியா போய்சேர வேண்டிய எடத்துக்கு போறா
மாதிரி.........பண்ணி வெக்கற வாத்யாருக்கு மந்த்ரங்களோட
அர்த்தம் தெரியாட்டாலும், பண்ணிக்கற ஒங்களுக்கெல்லாம்
அர்த்தம் புரியாட்டாலும், எந்த கர்மாவுக்கு எந்த மந்த்ரம்
சொல்லணுமோ....அதை செரியா சொன்னா, அதுக்குண்டான
பலனை அது குடுக்கும்! அதுல ஒங்களுக்கு எந்த விதமான
சந்தேஹமும் வேணாம். அதுனால, இப்போ இருக்கற ப்ரோஹிதரை நிறுத்தாம, நீங்க
பண்ண வேண்டிய கர்மாக்களை ஸ்ரத்தையோட பண்ணிண்டு வாங்கோ! ஒரு கொறைவும்
வராது!" கையைத்
தூக்கி ஆசிர்வதித்தார்.
அதிகாரிகள் விக்கித்துப் போனார்கள்! ஒரு சாதாரண, அன்றாடம் கவனத்தில் கூட
வராத PIN னை வைத்தே, எப்பேர்பட்ட பெரிய
சந்தேஹத்தை போக்கிவிட்டார்!

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends