சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
_________________________________________
*61*
*நெல்லை மாவட்ட சிவ தல தொடர்.*


* அருள்மிகு பாபநாசசுவாமி, திருக்கோயில். பாபநாசம்.*
__________________________________________
*இறைவன்:* அருள்மிகு பாபநாசர்.


*இறைவி:* அருள்தரும் உலகம்மை.


*அம்சம்:* சூரியன்.


*ராசி:* சிம்மம்.


*பலன்:* இங்கு வந்து வணங்கி வழிபட, கண் நோய், தோல் நோய் சம்பந்த நோய்கள் இருக்கப்பெறுவோர் நீங்கப் பெறுகிறார்கள்.


*தீர்த்தங்கள்:* தாமிரபரணி, வேத தீர்த்தம், பழைய பாபநாச தீர்த்தம் வைரவ தீர்த்தம், வானதீர்த்தம்.


*தல விருட்சம்:* கிளா மரம்.


*ஆகமம்:* காமிக ஆகமம்.


*சிறப்பு:* சூரியத் தலம்.


*தல அருமை:*
தாமிரபரணி ஆற்றின் மேல்கரையில் இத்திருக்கோயில் கிழக்குப் பார்த்த வண்ணம் அமைந்திருந்தது.


இத்திருக்கோயிலை விக்கிரசிங்க பாண்டியன் காலத்தியவை.(இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னதானது)


தம்மை வந்து சரணடைவோர்க்கு, அவர்களின் பாபங்களை நாசம் செய்தருளும் கால் பாபநாசர் என அழைக்கப் படுகிறார்.


அறிந்து செய்த பாவமாயினும், அறியாது செய்த பாவமாயினும் இத்தல இறைவன் அப்பாவங்களை நாசஞ்செய்வாராவார்.


*சிறப்பு:*
விராட்டு மகரிஷி, இறைவனை பூசை செய்து முக்தி அடைந்த திருத்தலம் இது.


விராட்டு மகரிஷி சிலகாலம் வைராசலிங்கர் (பாபநாசர்) சுவாமியை பூஜை செய்து வந்தார்.


சுவாமியிடம் மகரிஷி, தனக்கு மோட்சம் எப்போது கிடைக்கும் என்று வேண்டியபோது, இறைவன் விராட்டு மகரிஷியின் ஆயுட்காலத்தை தெரிவித்தார்.


ஒரு சதுர்யுகமானது, பிரம்மாவிற்கு ஒரு நாள் கணக்கு.


அப்படியானால், முந்நூற்று அறுபத்து ஐந்து நாட்களைக் கொண்டது அவருக்கு ஒரு வருடம். விஷ்ணுவிற்கு நூறு வயது.


இவ்வாறு இரண்டு விஷ்ணுவிற்கு டைம் ஆயுட்காலமானது ருத்ரனுக்கு ஒரு நாள்.


ருத்ரனுடைய ஆயுட்காலம் நூறு. இவ்வாறு இரண்டு ருத்ரனுடைய காலம் முடியும்போது, விராட்டு மகரிஷிக்கு ஒரு நாள். இப்படி சிலகாலம் பூசை செய்து மோட்சம் அடைந்த தலம் என்கிற சிறப்புடையது இத்தலம்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
க்ருத யுகமான முதல் யுகத்தில் மலையரசன் மகளாகிய பார்வதி தேவியின் திருமணமானது கையில்தான் மலையில் வைத்து நடைபெற்றது.


திருமணத்தைக் காண தேவர்களும் முனிவர்களும் மற்றும் ஏனையோரும் கயிலையில் ஒருங்கே கூட, பூமியின் வடபகுதி தாழ்ந்தும் தென்பகுதி உயர்ந்தும் காணப்படுகிறது.


பூமியை சமன் செய்யும் பொருட்டு இறைவன் தமிழ்மாமுனிவரான அகத்தியப் பெருமானை தென்திசை செல்லும்படி ஆணையிட்டார்.


அகத்தியப் பெருமான், இறைவனது திருமணக்கோலம் காணக் கிடைக்காமையால், வருந்துவதை அறிந்த சிவபெருமான் அகத்தியரிடம், *எனது திருமணக் கோலத்தை சித்திரை மாதிரிப் பதில் உனக்கு தென் பொதிகை பாபநாசம் திருத்தலத்தில் வழங்குவோம்.* என அருளினார்.


இவ்வாறு மகத்துவம் மிகுந்த அகத்திய மாமுனி பொதிகை மலையில் வந்து தங்கியதும், பூமி சமநிலை அடைந்தது.


இறைவன் தனது திருமணக் கோலத்தை கூறியபடி சித்திரை மாத சிறப்புற்று காட்டியருளினார்.


இன்றுவரை, சித்திரை மாதப்பன்று அகத்தியருக்கு திருமணக் காட்சி முறிய வைபவம் இத்தலத்தில் நடைபெறுகிறது.


*தல பெருமை:*
இத்திருக்கோயிலில் இறைவன், அகத்திய மாமுனிவர் மற்றும் லோபாமித்திரை ஆகியோருக்கு திருமணக் கோலத்தில் உமாதேவியோடு கல்யாணசுந்தரராய்க் காட்சித் தருவது தனிச் சந்நிதியில் உள்ளது.


பொதிகை மலை, சைய மலை, தருத்துர மலை ஆகிய மூன்றும் இறைவனை வணங்கி வரம் பெற்ற தலம்.


இத்திருக்கோயிலில் அம்மன் சந்நிதி முன்பு, உரலில் மஞ்சளை இடித்து பெண்கள் நெற்றியில், மாங்கல்யத்தில் இட்டுக் கொள்வர்.


திருமணமானவர்கள் கணவரோடு நீண்ட நாள் நிலைத்து வாழ்வும், கன்னிப் பெண்கள் விரைவில் திருமணம் கைகூடி வரவும் மஞ்சள் இடித்து அம்மனை நினைத்துப் பூசுவது ஐதீகம்.


இத்திருக்கோயிலின் தாமிரபரணி தீர்த்தத்தில் அமாவாசை காலங்களில் புண்ணிய நீராடிக் கொள்கிறார்கள்.


இதில் தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை காலங்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் இங்கு வந்து கூடி புனித நீராடல் செய்து இறைவனை வழிபடுகிறார்கள்.


நவகைலாயத்தில் முதல் தலமான சூரியத் தலம் இத்திருக்கோயில்.


*பூஜைகள்:*
திருவனந்தல் -காலை 6.00 மணிக்கு,
சிறுகாலசந்தி -காலை 7.30 மணிக்கு,
கால சந்தி -காலை 8.30 மணிக்கு,
உச்சிக் காலம் -காலை 11.00 மணிக்கு,
சாயரட்சை -மாலை 6.00 மணிக்கு,
அர்த்தசாமம் -இரவு 8.00 மணிக்கு.


*திருவிழாக்கள்:*
சித்திரை விசு.
மார்கழி உற்சவம்.
கந்த சஷ்டி திருவிழா.
சிவராத்திரி திருவிழா.


*இருப்பிடம்:*
மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் பொதிகை மலைச் சாரலிடத்தில் அமைந்துள்ளன.


திருநெல்வேலி பேருந்து நிலையத்திலிருந்து சேரன்மகாதேவி சாலையில் முக்கூடல் வழியாகவும் வழித்தடத்தில் செல்லலாம்.


திருநெல்வேலி பேருந்து நிலையத்திலிருந்து நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


பாபநாசத்திலேயே தங்கிக் கொள்ள விடுதிவசதி இருக்கின்றன.


*அஞ்சல் முகவரி:*
செயல் அலுவலர்,
அருள்மிகு பாபநாசசுவாமி திருக்கோயில், பாபநாசம்.
திருநெல்வேலி-627 422


*தொடர்புக்கு:*
04634 293757

திருச்சிற்றம்பலம்.


நெல்லை மாவட்ட சிவ தலங்களில் நாளைய தலப்பதிவு *அருள்மிகு அம்மநாதசுவாமி திருக்கோயில், சேரன்மகாதேவி.*


இன்னும் சில நாளில் நெல்லை மாவட்ட சிவ தல தொடர் மகிழ்ந்து நிறைவாகும்.


________________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*