!"!பஞ்ச சம்ஸ்காரம் விளக்கம்!"!


திருமாலுக்கு ஐந்து ஆயுதங்கள் உள்ளது போல, வைணவனுக்கு பஞ்ச சம்ஸ்காரங்கள் (ஐந்து நல்வினை சடங்குகள்) வைணவத்தில் வலியுறுத்தப்படுகிறது.


தாப சம்ஸ்காரம்,


புண்ட்ர சம்ஸ்காரம்,


நாம சம்ஸ்காரம்,


மந்திர சம்ஸ்காரம்


யாக சம்ஸ்காரம்


என ஐந்து வகைப்படும்.


இந்த ஐந்து நல்வினை சடங்குகளையும் தக்க குருவிடமிருந்து (ஆச்சார்யரிடமிருந்து) ஒரே சமயத்தில் பெறுதலே பஞ்ச சம்ஸ்காரம் ஆகும்.


சின்னங்கள் ஆத்மாவில் பொறிக்கப்பட வேண்டும். ஆத்மாவில் நேரடியாகப் பொறிக்க முடியாது அல்லவா?


ஆத்மாவால் தாங்கப்படுகிற தேகத்தில் பொறிக்கப்பட வேண்டும். அரசனுடைய உடைமைகளில் அவனது சின்னத்தைப் பொறிப்பதுபோல் இறைவனுடைய உடைமையான சரீரத்தில் சின்னம் பொறிக்கப்படுகிறது.


தாப சம்ஸ்காரம்


பெருமாளின் சங்கு, சக்கரம் ஆகியவற்றை நிரந்தரமாக உடலில் தரித்துக்கொள்வது. முறையே வலது தோளில் சக்கரத்தையும், இடது தோளில் சங்கத்தையும் முத்திரையாக நெருப்பில் சுட வைத்துப் பொறித்துக்கொள்ள வேண்டும்.


இதனை `கோயிற் கொடியானை ஒன்றுண்டு நின்று` என்று பெரியாழ்வார் குறிப்பிடுகிறார்.


புண்ட்ர சம்ஸ்காரம்


நெற்றியில் மட்டுமின்றி உடலில் பன்னிரு இடங்களில் திருமண் காப்புத் தரித்தல். இவற்றைத் தரிக்கும்பொழுது ஸ்ரீமன் நாராயணனின் பன்னிரெண்டு திருநாமங்களை உச்சரிப்பார்கள்.


இதனை வலியுறுத்தி நம்மாழ்வார் திருவாய்மொழியில், `கேசவன் தமர்` என்று தொடங்கும் பன்னிரெண்டு பாசுரங்கள் பாடியிருகிறார்.


கேசவாய நம நெற்றி
நாராயணாய நம நாபி
மாதவாய நம மார்பு
கோவிந்தாய நம நெஞ்சு
விஷ்ணுவே நம வலது மார்பு
மதுசூதணாய நம வலது புஜம்
த்ரிவிக்ரமாய நம வலது தோள்
வாமனாய நம இடது நாபி
ஸ்ரீதராய நம இடது புஜம்
ரிஷிகேசாய நம இடது தோள்
பத்மநாபாய நம அடிமுதுகு
தாமோதராய நம பிடாரி


நாம சம்ஸ்காரம்


பெற்றோர்கள் வைத்த பெயரைத் தவிர ஆச்சார்யன் (குரு) வைக்கும் பெயர் ஒன்றை வைத்துக்கொள்ளுதல். இதற்கு 'தாஸ்ய நாமம்' என்று பெயர்.


இப்பெயருடன் தாசன் என்ற சொல்லை சேர்த்துக்கொள்வர்கள்.


மந்திர சம்ஸ்காரம்


'ஓம் நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்தான நாராயண மந்திரத்தையும் மறை பொருளோடு த்வயம், சரம ஸ்லோகம் (மோட்சத்துக்கான வழி) ஆகியவற்றையும் ஆச்சாரியன் மூலம், வலது செவியில் உபதேசமாகப் பெறுதல்


.
யாக சம்ஸ்காரம்


திருவாராதணை, பூசை செய்யும் முறைமைகள் ஆகியவற்றை முறையாக ஆச்சாரியனிடம் கற்றுக்கொள்ளல்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
பஞ்ச சம்ஸ்காரத்தைத்தான் ஆச்சாரியனாக இருந்து பெரிய நம்பிகள், ஸ்ரீராமானுஜருக்கு செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முறைமை இன்றளவும் தொடர்கிறது.


!!ஸ்ரீமதே ராமானுஜாய நமோ நமஹ!!


""சர்வம் கிருஷ்ணார்பனம்""