Announcement

Collapse
No announcement yet.

AUSPICIOUS TIME FOR KEEPING PONGAL PAANAI THIS YEAR

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • AUSPICIOUS TIME FOR KEEPING PONGAL PAANAI THIS YEAR

    Dear Dr.NVS,
    Request inform kindly the auspicious time for keeping PONGAL PAANAI on 14th January. It is told that this year it should be kept a little late and not in the morning. Kindly clarify,Sir.
    Sincerely,
    Varadarajan

  • #2
    Re: AUSPICIOUS TIME FOR KEEPING PONGAL PAANAI THIS YEAR

    மகர ஸங்க்ராந்தி புண்யகாலம்
    -----------------------
    ஸ்வாமி ன்.
    ஸங்க்ராந்தி தர்ப்ணமும் அன்றைய இஜ்யாராதனமும் எப்போது செய்ய வேண்டும்.
    அடியேன்
    மாதவ தாஸன்

    இஜ்யாராதனம் எப்போதும்போல் மாத்யாஹ்நிக காலத்தில் செய்ய வேண்டியதுதான்.
    ஸங்க்ராந்தி தாமதித்து மாலையில் வருவதால், இதை தனிப்பட விசேஷ ஆராதனமாகச் செய்துகொள்ளலாம்.
    மாதா மாதம் ஸங்க்ரமணம் வருகிறது, ஆனால் நாம் அவற்றை பெரிதாகக் கருதுவதில்லை. அதுபோலவே மகர ஸங்க்ராந்தியும் ஆயினும் விசேஷமானது என்பதில் சந்தேஹமில்லை.
    தர்ப்பணத்தைப் பொறுத்தவரை புண்யகாலம் வரை காந்திருந்து பண்ணவேண்டும் என்றால், 5 மணிக்குப் பிறகுதான் பண்ண முடியும், ஆனால் அடியேன் சொந்த அபிப்ராயம் வித்யாஸமானது,
    அதாவது, ஸ்ரீவைஷ்ணவர்கள் கர்மா என்பது பகவன் முகோல்லாசத்திற்காகவேயன்றி, யாதொரு பயனையும் கருதாதது என்பதால், புண்யகாலம் வரை காந்திருந்து பண்ணினால்தான் பலன் என்பதற்காக தாமத்தித்துப் பண்ணவேண்டிய அவசியமில்லை.
    (ஸ்ரீவைஷ்ணவர்களைத் தவிர்த்த மற்ற ப்ராமணர்களும்
    மற்ற எல்லா மாதங்களிலும் புண்யகால வ்யாப்தி உள்ள
    காலத்தைக் கணக்கிட்டுப் பண்ணாததால், இந்த தை - மகர
    சங்க்ராந்தியிலும் புண்யகாலம் வருவதற்கு முன்னதாகவே
    பண்ணியதால் புதிதாக எந்த தோஷமும் வந்துவிடாது.
    சாஸ்த்ரம் என்பது 1000 மாதாவுக்குச் சமம் எனக் கூறுவார்கள்,
    புண்யகாலத்தில் காந்திருந்து பண்ணினால் நிறைய நற்பலன்கள்
    கிட்டும் என்பதற்காக சாஸ்த்ரம் அப்படிக் கூறுகிறது.
    அதே சமயம் சாஸ்த்ரத்தைப்போல ஒரு நாணலைப்போல
    வளைந்து கொடுக்கக்கூடியது வேறெதுவும் இல்லை.
    சாஸ்த்ரம் நபருக்கு நபர், நேரத்துக்கு நேரம், விஷயத்துக்கு விஷயம்
    பல காரணிகளை முன்னிட்டு தளர்த்திக்கொள்ள வகைசெய்து கொடுக்கிறது.
    எனவேதான் 10 சதவீதம்கூட சாஸ்த்ரப்படி நடக்க முடியாத நாம்
    இந்த அளவுக்கு நற்பலன்களை அநுபவிக்க முடிகிறது.
    இல்லாவிட்டால் 1 சதவீதம்பேர்கூட எந்த நன்மையையும் அநுபவிக்கக்
    கூடிய வாய்ப்பிருக்காது.
    )
    அதே சமயம் விதியையும் அலட்சியம் செய்த தோஷம் வராமல் யதாசக்தி தாமதித்து சுமார் 12 மணிபோல தர்பணம் செய்யலாம். அதன் பிறகு தீர்த்தம் ஸ்வீகரித்துக்கொண்டு போஜனமும் செய்யலாம் என்பது அடியேனது சொந்த அபிப்ராயம்.

    உடம்பு நன்றாக இருந்து, சக்தியுள்ளவர்கள், போஜனம் தவிர்த்து மாலை 4 மணிவரை தாமதித்து தர்ப்பணம் செய்வது மிகுந்த விசேஷம் என்பதில் ஐயமில்லை.
    தாஸன்
















    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: AUSPICIOUS TIME FOR KEEPING PONGAL PAANAI THIS YEAR

      Thank you for your prompt reply. HAPPY SANKRANT TO ALL.
      VARADARAJAN

      Comment

      Working...
      X