சிவாயநம.
திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
_______________________________________
*60*
*நெல்லை மாவட்ட சிவாலயத் தல தொடர்.*


*சிவ தல அருமைகள் பெருமைகள்.*


*நவகைலாயச் சிறப்பு.*
_________________________________________
பொதிகை மலையில் தாமிரபரணி என்னும் பொருநை நதி தோன்றிப் பல இடங்களில் செழிப்பை வழங்கிவிட்டு கடலோடு கலந்து விடுகிறது.


இதனின் கரையோரங்களில் பல புண்ணியத்தை தலங்கள் அமைந்துள்ளன.


முனிவர்களும், ஆன்மிகச் சான்றோர்களும் ஆற்றோரக் கரைகளில் சிவனை பூஜிக்கச் செய்தனர்.


இப்படி முனிவர்களால் பூஜிக்கப்பட்ட இடங்களில் உள்ள லிங்கவுருக்களுக்கு, பின்னாளில் அரசர்களால் கோயிலெழுப்பி வைக்கப்பட்டன.


அவ்வாறு உள்ள சிவ தலங்களில், நவக்கிரகவரிசைப்படி ஒன்பது கோயில்களைக் கட்டி நமது முன்னோர்கள் இப்பதிகளுக்கு நவகைலாயம் என பெயரிட்டனர்


நவகைலாய திருத்தலங்கள்
*☘பாபநாசம் (சூரியன்)☘*
நவகைலாய திருத்தலத்தில் முதலாவதாக பாபநாசம் இருக்கின்றது.


இது திருநெல்வேலியிலிருந்து மேற்கே நாற்பத்தைந்து கிமி தொலைவில் பொதிகை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.


மூலவர் கைலாசராதர் அம்பாள் உலகாம்பிகை நடைதிறப்பு காலை 6.00 மணி முதல் 1.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை.


*☘சேரன்மகாதேவி (சந்திரன்)☘*
இந்தத் திருத்தலம் பாபநாசத்திலிருந்து கிழக்கே இருபத்திரண்டு கிமி தொலைவில் அமைந்துள்ளது.


மூலவர் கைலாசநாதர் அம்பாள் ஆவுடைநாயகி நடைதிறப்பு காலை 7.00 மணி முதல், 9.00 வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை.


*☘கோடகநல்லூர் (செவ்வாய்)☘*
இக்கோவில் சேரன்மாகதேவியிலிருந்து திருநெல்வேலி சாலையில் பதினைந்து கி.மி தொலைவில் கல்லூர்க்கு அருகில் அமைந்துள்ளது.


மூலவர் கைலாசநாதர் அம்பாள் சிவகாமி. நடைதிறப்பு காலை 6.00 மணி முதல் 12.00 வரை, மாலை 5.00 மணி முதல் 6.30 மணி வரை.


*☘குன்னத்தூர் (ராகு)☘*
இக்கோவில் திருநெல்வேலி டவுணிலிருந்து நான்கு கி.மி தொலைவில் அமைந்துள்ளது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
மூலவர் கைலாசநாதர். அம்பாள் சிவகாமி. நடைதிறப்பு காலை 7.30 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 6.30 மணி வரை.


*☘முறப்பநாடு (குரு)☘*
இக்கோவில் திருநெல்வேலிலிருந்து தூத்துக்குடிக்கு செல்லும் சாலையில் பதின்மூன்று கி.மி தொலைவில் அமைந்துள்ளது.


மூலவர் கைலாசநாதர். அம்பாள் சிவகாமி. நடைதிறப்பு காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை.


*☘திருவைகுண்டம் (சனி)☘*
இக்கோவில் முறப்பநாடு கோவிலிருந்து கிழக்கே இருபது கி.மி தொலைவில் அமைந்துள்ளது.


மூலவர் கைலாசநாதர். அம்பாள் சிவகாமி. நடைதிறப்பு காலை 7.00 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.


*☘தென்திருப்பேரை (புதன்)☘*
இக்கோவில் திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் திருவைகுண்டத்திலிருந்து எட்டாவது கி.மி தொலைவில் அமைந்துள்ளது.


மூலவர் கைலாசநாதர். அம்பாள் அழகிய பொன்னம்மை.
நடைதிறப்பு காலை 7.00 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.


*☘இராஜபதி (கேது)☘*
இக்கோவில் தென்திருப்பேரையிலிருந்து ஆறாவது கி.மி தொலைவில் அமைந்துள்ளது.


மூலவர் கைலாசநாதர். அம்பாள் அழகிய பொன்னம்மை.


நடைதிறப்பு காலை 7.00 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.


*☘சேந்தபுமங்கலம் (சுக்கிரன்)☘*
இக்கோவில் தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் புன்னக்காயல் என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ளது.


மூலவர் கைலாசநாதர். அம்பாள் சௌந்தர்யநாயகி. நடைதிறப்பு காலை 7.00 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.


இன்றும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் இப்பதியில் புகழ் ஓங்கி பரவியிருக்கின்றன.


அவை,
1.பாபநாசம்.
2.சேரன்மகாதேவி.
3.கோடகநல்லூர்.
4.குன்னத்தூர். (கீழத்திருவேங்கடநாதபுரம்.)
5.முறப்பநாடு.
6.திருவைகுண்டம்.
7.தென்திருப்பேரை.
8.இராஜபதி.
9.சேர்ந்த பூமங்கலம்.


இந்த நவ கைலாயங்களில் முதல் மூன்று கைலாயங்கள் *மேலக் கைலாயங்கள்* ஆகும்.


நடுவனவான மூன்று கைலாயங்கள் *நடுக்கைலாயங்கள்* நடுக்கைலாயங்களாகும்.


கடைசியாய் மூன்று நதிகளும் *கீழக்கைலாயங்களாகும்.*


மேலும் முதலில் இருக்கும் நான்கு கைலாயங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது.


மீதி உள்ள ஐந்து கைலாயங்களும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது.


*நவகைலாயம் தோன்றிய விதம்:*
பொதிகை மலையிலிருந்து தவஞ் செய்த அகத்திய முனிவர் கல்குளம் முதல் சீடராக உரோமம் முனிவர் பணிவிடைகள் செய்து வந்தார்.


இந்த சிவபெருமானைக் கண்டு அருள் பெற்று முக்தி அடைய வேண்டும் என்ற விருப்பத்துடன் வாழ்ந்து வந்தார்.


இவரும் தவ வலிமை மிக்கவர்தான்.


சிவபெருமானை நினைந்து நினைந்து வழிபட்டு வந்தார்.


எம்பெருமான், இவர் திருவுள்ளத்தைக் கண்டு முனிவரது பெருமையை வெளிக்கொண்டு வர, அகத்தியர் மூலம் திருப்பாங்கு கொள்கிறார்.


அகத்தியர், உரோமச மகரிஷியை அழைத்து, 'எம்பெருமான் சிவபெருமானை நவகோள்களாக நினைத்து ஒவ்வொருவரும் வழிபடுங்கள். இதனால் கிரகங்களினால் தொல்லை இல்லை.


நீயும் எம்பெருமானைக் கண்டு பேரின்பம் எய்தி முக்தி அடைய வேண்டுமென்று விருப்பம் கொள்கிறாய்.


எனவே, தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடினால் வேண்டியன கிடைக்கும்.


எனவே இப்போதே நீ புறப்படு. தாமிரபரணி கரையோரமாய் செல்.


ஒன்பது மலர்களையும் நதியில் விட்டனுப்புகிறேன். இந்த ஒன்பது மலர்கள் ஒவ்வொன்றும் எவ்விடத்தில் ஒதுங்கி நிற்கிறதோ? அவ்விடத்தில் சிவலிங்கத்தை வைத்து வழிபடுவாயாக!


நீ வழிபாடு செய்யும் சிவபெருமான் கைலாசநாதர் என்றும், அம்மையை சிவகாமி என்றும் அழைக்கப்படுவர்.


கடைசியில் *சங்கு முகத்தில் நீராட உன் எண்ணம் ஈடேறும்.* என்று கூறினார்.


உரோமச மகரிஷியும் தம் குருவின் சித்தப்படியே புறப்பட்டார்.


முதல் மலர், பாபநாசத்தில் நின்றது. அவ்விடத்தில் அம்மலரை வைத்து சிவபெருமானை நினைந்து பூசனை புரிந்தார்.


அடுத்து, பயணத்திற்கு பின் இரண்டாவது மலர் சேர்மகாதேவியிலும் இப்படி அடுத்தடுத்து எட்டு மலர்களும் வைத்து எட்டு பதிகளுடன் பூசனை முடித்தார்.


ஒன்பதாவது மலர் சேர்ந்தபூமங்கலம் வந்து நின்றது.அங்கு அம்மலரை வைத்து சிவபெருமானை நினைந்து பூசித்தார்.


கடைசியாக, தாமிரபரணி கடலில் கலக்கும் இடத்தில் நீராடினால் முக்தி பெற்றார்.


நவக்கிரக தோஷம் உள்ளவர்கள், நவகோள்களை நாடிச் செல்லாமல், இங்கிருக்கும் நவகைலாசபதிகளை வணங்கி வழிபட்டு வர, கோஷங்கள் நீங்கப் பெறுவீர்கள்.


கோள் தோஷம் உள்ளவர்களும் இங்கு வந்து வழிபட்டுச் செல்வோர்கள், தோஷம் நீக்கப்பட்டு நல்பேறு பெற்று இருக்கின்றனர்.


நவகைலாயத்தைப் பற்றிய சான்றுகள், திருவைகுண்டம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில் *கலியாண குறடு* எனும் சிறுமண்டபத்தின் மேலே ஒன்பது இடங்களைப் பற்றிய புராணங்களை ஓவியத்தில் தீட்டியிருக்கின்றனர்.


இது தவிர, உரோமச முனிவர் சிலை சேரன்மகாதேவி கோயிலிலும், திருவைகுண்டம் திருக்கோயிலிலும் தூணில் செதுக்கப்பட்டு காட்சி தருகிறார்.


இந்த நவகைலாயத்தில் இராஜபதியில் மட்டும் கோயில் இல்லை.


பிருங்கி முனிவரும் இந்த நவகைலாயங்களுக்கு பாதயாத்திரையாக வந்து தரிசனம் செய்து, தன் சாபம் நீங்கப் பெற்றார்.


திருச்சிற்றம்பலம்.


நெல்லை மாவட்ட சிவ தலங்களில் நாளைய தலப்பதிவு *அருள்மிகு பாபநாசசுவாமி, திருக்கோயில். பாபநாசம்.*


இன்னும் சில நாளில் நெல்லை மாவட்ட சிவ தல தொடர் மகிழ்ந்து நிறைவாகும்.


________________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*