Announcement

Collapse
No announcement yet.

Balasubramania swamy temple, koodalur

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Balasubramania swamy temple, koodalur

    சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    ••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
    *52*
    *நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்களின் தொடர்.*
    _______________________________________
    *அருள்மிகு நாதகிரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், கூடலூர்.*
    (மற்றும்)


    *அருள்மிகு பிரகலாதீசுவரர் திருக்கோயில், சேர்ந்தமரம்.*
    ••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
    *இறைவன்:* அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி.


    *தீர்த்தம்:* நாகசுனை.


    *தல விருட்சம்:* கல்அத்திமரம்.


    *ஆகமம்:* கெளமாரம்.


    *தல சிறப்பு:* தேவேந்திரனின் மகன் சேந்தன் என்பவன் அசுரர்களுக்கு பயந்து அலைந்து கொண்டிருந்த சமயம், அவன் முன்பு தோன்றிய சிவபெருமான் நாதகிரியில் தவம் செய்யும்படி கூறினார்.


    சேந்தனும், பாதிரி மலைக்கு வந்து கடும் தவம் புரிந்தான்.


    அசுரர்களை அழித்துவிட்டு நாதகிரி மலைக்கு வந்த முருகப்பெருமான் கடும் தவம் மேற்கொண்ட சேந்தனுக்கு அருள்பாலித்தார் என்பதும் அகத்தியர், அனுமன், வசிஷ்டர், விசுவாமித்திரர், வாமதேவம் ஆகியோரும் அருள்பாலித்தனர் என் தலபுராணம் கூறுகிறது.


    *சிறப்பு:*
    *குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமே* என்ற பழமொழிக்கேற்ப நாதகிரி மலையின் உச்சியில் இத்திருக்கோயில் அமைந்திருக்கிறது.


    நூற்று அறுபத்தைந்து படிகளேறி திருக்கோயிலை அடைந்து, சுற்றும்முற்றும் பார்க்கையில், மனதிலுள்ள கவலைகளெல்லாம் காணாது போயிருக்கும்.


    இத்திருக்கோயில் அமைந்திருக்கும் நாதகிரி மலையில் சித்தர்கள் இன்றும் குககைகளின் உள்ளே தவம் செய்கிறார்கள்.


    இச்சித்தர்கள் தவம் செய்யும் ஓம் என்னும் ஓங்கார நாத ஒலியின் காரணமாய் இம்மலை நாதகிரி என பெயர் பெற்றது.


    இங்கிருக்கும் குகையில் கீரியும் பாம்பும் ஒன்றாக பால் அருந்துவதாக பார்த்தவர்கள் பரவசத்துடன் சொல்கிறார்கள்.


    *பூஜை:*
    காலை 8.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை நடை திறந்திருக்கும்.


    காலை 11.30 மணியளவில் தினபூசை, அரசு பூஜை திட்டத்தின் சார்பில் நடைபெறுகிறது.


    *திருவிழா:*
    மாதக் கார்த்திகை,
    சித்திரை விசு,
    வைகாசி விசாகம்,
    கந்த சஷ்டி,
    திருக்கல்யாணம்,
    திருவாதிரை,
    மாசி மகம்,
    மகா சிவராத்திரி,
    பங்குனி உத்திரம்.


    *இருப்பிடம்:*
    சங்கரன் கோயிலுக்கு வட மேற்கே சுமார் நாற்பது கி. மிக தொலைவிலும், வாசுதேவநல்லூரிலிருந்து வடகிழக்காக சுமார் பண்ணிரன்டு கி.மி தொலைவிலும், கூடலூர் கிராமத்திலிருந்து சுமார் ஒரு கி.மி தொலைவிலும் மலையின் மீது இத்திருக்கோயில் அமைந்திருக்கிறது.


    வாசுதேவநல்லூரிலிருந்து பேருந்து வசதிகள் உண்டு.


    சங்கரன்கோவிலில் தொடர்வண்டி நிலையம் உள்ளது.


    *அஞ்சல் முகவரி:*
    செயல் அலுவலர்,
    அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,
    கூடலூர்,
    திருநெல்வேலி-627 757


    *தொடர்புக்கு:*
    04636 241938


    ••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
    *53*
    *நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்களின் தொடர்.*


    *அருள்மிகு பிரகலாதீசுவரர் திருக்கோயில், சேர்ந்தமரம்.*
    ••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
    *இறைவன்:* அருள்மிகு பிரகலாதீசுவரர் சுவாமி.


    *இறைவி:* அருள்தரும் லோகநாயகி அம்மன்.


    *தீர்த்தம்:* பாட்டான் தீர்த்தம்.


    *தல விருட்சம்:* வில்வ மரம்.


    *ஆகமம்:* காமிக ஆகமம்.


    *தல அருமை:*
    சுமாராக ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னதானது இத்திருக்கோயில்.


    இத்திருக்கோயில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது.


    இதற்கு ஆதாரமாக மீன் சின்னம் பொறிக்கப்பட்ட கல்தூண் உரைக்கிறது.


    *சிறப்பு:*
    இரண்யனுடைய மகன் பக்தபிரகலாதனின் நிமித்தமாக அவன் தந்தை, நரசிங்க மூர்த்தியாய் சம்கரிக்கப்பட்டார் என்பது வரலாறு.


    தகப்பன் இறக்கக் காரணமான பாவம் ஒழிய இத்தலத்தில் பிரகலாதன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, சிவபூஜை ஆற்றி உய்வுற்றார் என்பது பரம்பரையாக வரும் செய்தி.


    ஆதலால்தான் சுவாமியின் திருப்பெயர் பிரகலாதீசுவரர் என் போற்றப் பெறுகின்றது.


    இத்திருக்கோயிலில் நந்திக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், குழந்தைப்பேறு கிட்டுகிறதாம்.


    நந்திக்கு ரோஜா மாலை அணிவித்து வழிபட்டால் தடைப்பட்ட திருமணம் கைகூடி அமைகிறதாம்.


    சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் விடாது பீடித்த தீரா வியாதி தீருகிறதாம். மற்றும் கடன் தொல்லை இருப்பின் அது தீரப்பெறுகிறதாம்.


    *பூஜை காலம்:*
    கால சந்தி- காலை 6.00 மணிக்கு,
    உச்சிக் காலம் - காலை 10.00 மணிக்கு,
    சாயரட்சை - மாலை 6.00 மணிக்கு,
    அர்த்தசாமம் - இரவு 8.00 மணிக்கு.


    *ஆலயத் திறப்பு காலம்:*
    காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை,
    மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.


    விழாக்காலங்களில் இந்த நேர மாறுதல் படும்.


    *திருவிழாக்கள்:*
    திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்கள்.


    *இருப்பிடம்:*
    சுரண்டை சங்கரன்கோவில் சாலையில், சுரண்டையிலிருந்து பத்து கி.மி தொலைவு வடக்கிலும்,


    சங்கரன்கோவிலிலிருந்து பதினைந்து கி.மி தொலைவிலும் சேர்ந்தமரம் அமைந்துள்ளது.


    சங்கரன்கோவில், புளியங்குடி மற்றும் சுரண்டையிலிருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.


    *அஞ்சல் முகவரி:*
    செயல் அலுவலர்,
    அருள்மிகு பிரகலாதீசுவரர் திருக்கோயில், சேர்ந்தமரம்.
    சங்கரன் கோவில் வட்டம்.
    திருநெல்வேலி- 627 857


    *தொடர்புக்கு:*
    04633 245 250


    நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்களில் நாளைய தலப்பதிவு *அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயில், சங்கரன்கோவில்.*


    ••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*


    திருச்சிற்றம்பலம்.
Working...
X