210.ஓங்கும் ஐம்புலன்
210
எட்டிகுடி
(திருவாரூர் அருகில் உள்ளது)


தாந்த தந்தன தான தனத்தம் தனதான
[hg2] ஓங்கு மைம்புல னோட நினைத்தின் பயர்வேனை
ஓம்பெ றும்ப்ரண வாதி யுரைத்தெந் தனையாள்வாய்
வாங்கி வெங்கணை சூரர் குலக்கொம் புகடாவி
வாங்கி நின்றன ஏவி லுகைக்குங் குமரேசா
மூங்கி லம்புய வாச மணக்குஞ் சரிமானு
மூண்ட பைங்குற மாது மணக்குந் திருமார்பா
காங்கை யங்கறு பாசில் மனத்தன் பர்கள்வாழ்வே
காஞ்சி ரங்குடி ஆறு முகத்தெம் பெருமாளே[/hd2]

பதம் பிரித்தல்
ஓங்கும் ஐம்புலன் ஓட நினைத்து இன்பு அயர்வேனை
ஓம் பெறும் ப்ரணவ ஆதி உரைத்து எந்தனை ஆள்வாய்
ஓங்கும் = பெருகி வளரும் ஐம்புலன் ஓட = சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்து புலன்களும் என்னை இழுத்துக் கொண்டு ஓட நினைத்து இன்பு = அவ்வழியே நான் ஓட நினைத்து இன்பம் கொண்டு அயர்வேனை = தளர்ச்சி கொள்பவனாகிய எனக்கு ஓம் பெறும் ப்ரணவ ஆதி = ஓம் என்ற பிரணவப் பொருள் ஆகிய மந்திரங்களை உரைத்து = உபதேசித்து எந்தனை ஆள்வாய் = அடியேனை ஆண்டருளுக.
வாங்கி வெம் கணை சூரர் குல கொம்புகள் தாவி
வாங்கி நின்றன ஏவில் உகைக்கும் குமரேசா
வாங்கி = வில்லை வளைத்து வெம் கணை = கொடிய அம்புகளைக் கொண்ட சூரர் குலக் கொம்பு தாவி = சூரர்களாகிய சிறந்த வீரக் கிளைஞர்கள் பாய்ந்து வர வாங்கி நின்றன = வளைந்து நின்ற சேனை ஏவில் உகைக்கும் = அம்பு கொண்டு செலுத்திய குமரேசா = குமரேசனே
மூங்கில் அம்புய வாச மண குஞ்சரி மானும்
மூண்ட பைம் குற மாது மணக்கும் திரு மார்பா
மூங்கில் அம்புய = மூங்கில் போன்ற அழகிய புயங்களை உடைய வாச மண = நறு மணமுள்ள குஞ்சரி மானும் = யானை மகள் தேவசேனையும் மூண்ட = காதல் பொங்க. பைங் குற மாது = அழகிய குறவர் மகளாகிய வள்ளி. மணக்கும்= மணம் புரிந்த. திருமார்பா = அழகிய மார்பனே.
காங்கை அங்கு அறு பாசு இல் மனத்து அன்பர்கள் வாழ்வே
காஞ்சிரம் குடி ஆறு முகத்து எம் பெருமாளே.
காங்கை = வெப்பம் (மனக் கொதிப்பு). அங்கு அறு = அங்கு இல்லாததும் பாசு இல் = பாசங்கள் இல்லாததும் ஆன மனத்து அன்பர்கள் = மனத்தராகிய அடியார்களின் வாழ்வே = செல்வமே காஞ்சிரம் குடி = எட்டிகுடி என்னும் தலத்தில் வீற்றீருக்கும் ஆறு முகத்து எம்பெருமாளே = எமது ஆறு முகப் பெருமாளே.


காஞ்சிரங்குடி


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
விளக்கக் குறிப்புகள்
காஞ்சிரங்குடி....
இதனை எட்டிகுடி என்று மாற்றி அழைக்கப்பட்டுள்ளது என்பது வ.சு.
செங்கல்வராயரரின் கருத்து.
பந்தணைநல்லூரைக் கந்துகாபுரி என்று அழைத்ததைப் போல (திருப்புகழ் - மதியஞ்சத்தி).
இந்த திருத்தலத்தின் மூலவர் முருகன் சிற்பத்தை வடித்தவர் சிறந்த சிற்பி எண்கண் மற்றும் சிக்கல் முருகன் சிலையை ( தற்சமயம் பொறாவாச்சேரியில் உள்ளது) வடித்துள்ளார். சிக்கல் தலத்தில் சிறந்த சிலையை அவர் வடித்தார். பின் அதை விட சிறந்ததாக எதுவும் அமைய விருப்பபடாத அரசன் சிற்பியின் வலது கட்டை விரலை துண்டித்து விட்டான். முருகனின் அருள் பெற்ற அந்த சிற்பி கட்டை விரலிலாத கைகளினால் எட்டுக்குடி என்ற தலத்தில் முருகன் சிற்பத்தை வடித்தார் .அது சிக்கல்ச் சிற்பத்தை விட சிறந்ததாக அமைந்ததை தொடர்ந்து. அதனால் பொறாமை கொண்ட அரசன் சிற்பியின் கண்களைக் குருடாக்கினான்.


அதன் பின் முருகன் மீதுள்ள மிகந்த பக்தியால் தன்னுடைய பெண் உதவியுடன் என்கண் திருத்தலத்தில் சிலையை வடித்தார். அருமையாக அமைந்த சிலையின் கண்களை திறக்கும் பொழுது உளி கண்களில் பட்டுக் கண்பார்வை மீண்டும் பெற்றார் என்பது வரலாறு கூறும் நிகழ்ச்சி

http://www.vikatan.com/new/article.p...d=129&aid=4633