Announcement

Collapse
No announcement yet.

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது ....!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது ....!

    அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!



    வசதியாகத்தான் இருக்கிறது மகனே…
    நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்
    பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ
    வெளியேறிய போது, முன்பு நானும்
    இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு
    என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதறக்
    கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி
    ஞாபகத்தில் எழுகிறது!






    முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து
    நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட
    அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி
    எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!



    இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க
    நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான
    மாதத் தொகையை மறக்காமல்
    அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது
    நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில்
    உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும்
    படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன்
    எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்!





    இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை
    என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே
    செலவு செய்கிறாய் ஆயினும்… உனக்கும் எனக்கும்
    ஒரு சிறு வேறுபாடு நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு…
    வாழ்க்கை இதுதானென்று!
    நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு…
    உறவுகள் இதுதானென்று!

    இந்தக் கவிதையைப் படித்ததும் கண்கள் குளமாகின்றது..
    எவ்வளவு யதார்த்தமும் வலியும் இந்தக் கவிதையில்
    அடங்கியுள்ளது..


    கவிஞரைப் பாராட்டுவோம்..
    Last edited by bmbcAdmin; 12-10-12, 20:08.

  • #2
    Re: அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது ....!

    ரொம்ப அற்புதமான கவிதை என் கண்களும் குளமானது
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment


    • #3
      Re: அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது ....!

      எவ்வளவு சிறந்த நிகழ்கால யதார்த்தங்கள்
      எங்கே போகின்றோம்
      அமைதியான முதுமை அரிதாகிவிட்டது
      நன்றி தெரிவித்தமைக்கு

      Comment


      • #4
        Re: அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது ....!

        உண்மையான வார்த்தைகள்
        முதுமையில்நமது மற்ற தேவைகள் குறைந்து வரும் வேளையில் குடும்பத்தினரின் அரவணைப்பும் பேரன் பேத்திகளின் அன்பும் தான் தேவைப்படுகிறது அதுவே நமக்கு மன மகிழ்ச்சயை அளிக்கிறது . நோயற்ற நல் வாழ்வு இறைவன் அளிக்கும் செல்வம் .எல்லா சௌகர்யங்களுடன் உறவில்லா வாழ்வு வாழ்வாகாது. மகிழ்ச்சியையும் கொடுக்காது.
        ப்ரஹ்மண்யன்,
        பெங்களூரு

        Comment


        • #5
          Re: அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது ....!

          என் கண்களில் நீர் கோத்துக்கொண்டது.
          பணம் பணம் என்று அதன் பின்னாலே எல்லோரும் ஓடுகிறார்கள்.
          வெளி நாட்டில் வேலை செய்பவர்களாயின் அவர்களின் பெற்றோர்கள் நிலை பெரும்பான்மையில் இதுவே.இங்கு வேலை செய்யும் பலரும் பெற்றோருக்காகமுதியோர் இல்லம் தேடுகிறார்கள் . ஏனெனில் இப்போது கல்யாணத்திற்கு முன்பே பெண் கேட்கிறாள்-கல்யாணத்திற்கு பின்/ரிடயர்மேன்டிற்குஅப்புறம் உங்கள் பெற்றோர்எங்கு இருக்கப்போகிறார்கள்?உங்கள் பிள்ளை,பெண்ணிற்கு,வெளி நாட்டில் பிள்ளைகள் பிறந்தால் அநேகருக்கு பணம்மிச்சம் செய்ய பெற்றோர் தேவைப்படுகிறார்கள் (ஆயாவாக இருக்க).
          பெற்றோரின் தேவை பணம் அல்ல,அன்பும், பாசமும்,அரவணைப்பும் என்பதை வெகு சிலரே அறிவர்.
          தங்களின் சொற்கள் அக்ஷர லக்ஷம்'பெரும்.
          பெற்றோரின் மன உளைச்சல் குறைய
          அடுத்த தலைமுறைஇதைப் பற்றி சிந்திப்பது தேவை.

          Comment


          • #6
            Re: அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது ....!

            எதார்த்தங்கள் தீயினும் சூடானது

            Comment

            Working...
            X