Sankaranarayanan temple,sankaran kovil
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு. கருப்பசாமி.*
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
*54*
*நெல்லை மாவட்ட சிவாலயத் தல தொடர்.*


*அருள்மிகு சங்கரநாராயணசாமி திருக்கோயில். சங்கரன்கோவில்.*
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||


*இறைவன்:* அருள்மிகு சங்கரலிங்க சுவாமி, அருள்மிகு சங்கரநாராயணசுவாமி.


*இறைவி:* அருள்தரும் கோமதி அம்மன்.


*தல தீர்த்தம்:* நாகசுனை.


*தல விருட்சம்:* புன்னை மரம்.


*ஆகமம்:* காமிக ஆகமம்.


*இதர பெயர்கள்:* பூ கைலாயம், புன்னை வனம், சீராசபுரம், சீராசை, வாராசைபுரம், மற்றும் கூழை நகர்.


*தல அருமை:*
'சைவ வைணவ வேறுபாடு' எவ்வாறு கலயப்படும் என்று அன்னை உமாதேவியார் சிவபெருமானிடம் கேட்டாள்.


அதற்கு சிவபெருமான், *'பூலோகத்தில் புன்னை வனத்தில் நீ தவம் செய்தால்* உனக்கு உரிய விடை தெளிவாகும் என்றார்.


உமாதேவியும் புன்னை வனத்திற்கு வந்து மக்கள் நலனுக்காகத் தவம் மேற்க்கொண்டாள்.


ஆடி மாதத்தில் உத்ராட நட்சத்திரத்தில், பெளர்ணமி நாளன்று *அரியும் அரனும் ஒன்று* என்று அம்மைக்கு "சங்கர-- நாராயணராகக்" அருளிக்காட்டி நின்றார்.


"சங்கர-- நாராயணரின்" கோலத்தைக் கண்ட அம்மை, இருவரும் ஒன்றே என உணர்ந்தாள்.


இருப்பினும் இக்கோலத்தினை மக்களும் கண்டு தரிசிக்க அருள் வேண்டும் என வேண்டினாள்.


அதற்காக சிவபெருமான் *இந்த புன்னை வனத்தில் (சங்கரன்கோவில்) என்றென்றும் இக்கோலத்தினோடு திகழ்வேன்* என்றார்.


அம்மைக்கு காட்சியருளி வரம் தந்த அந்த நாளே *ஆடித் தபசு* நாளாகும்.


*சிறப்பு:*
களக்குடியைத் தலைநகராகக் கொண்டு இப்பகுதியை ஆண்டு வந்தான் உக்கிர பாண்டியன்.


ஒரு நாள் உக்கிர பாண்டியன் மதுரை அருள்மிகு சோமசுந்தரக் கடவுளைத் தரிசிக்கச் சென்றான்.


அப்படி சென்று கொண்டிருந்த போது, உக்கிர பாண்டியனின் பட்டத்து யானை, பெருங்கோட்டூர் என்ற இடத்திற்கு வரும்போது, ஓரிடத்தில் தந்தத்தால் மண்தரையில் மீது குத்திப் பாய்ந்தது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
பட்டத்து யானையின் இச்செயலைக் கண்டு மன்னன் திகைத்து நின்றான்.


அப்போது, புன்னை வனச் சோலையின் காவலாளான மணிக்கிரீவன் என்பவன், மன்னன் அருகில் சென்று அவரிடம்.......


யானை தந்தம் கொண்டு குத்திய இவ்விட பகுதியொன்றில் புற்று ஒன்றை ஏற்கனவே காணப்பெற்றிருக்கிறேன் என்றான்.


மேலும் அப்புற்றினை அகழ்த்தியபோது, ஒரு நாகம் வெளிப்பட்டதென்றும் அந்நாகத்தின் மீதும் வெட்டு பட்டு இரத்தம் பீறிட்டது என்றும் நடந்த சம்பவத்தை மன்னனிடம் விவரித்தார்.


யானையும் அப்புற்றைக் கண்டுவிட்டிருக்கிறது போல என்று எண்ணிய மன்னன், புன்னைவனச் சோலை முழுமையும் அகழ்ந்திட ஆணையிட்டான்.


மன்னனின் சேவகர்களால் புன்னை வனத்தை அகழ்த்தி விரித்தபோது, அவ்விடமொன்றில் சிவலிங்கத்தைக் கண்டு கொண்டு விட்டனர்.


மன்னனும் மக்களும், வியப்போடு மகிழ்வும் ஒன்று சேரப் பெற்று, கரங்கள் சிரசிற்கும் மேலாக உயர்ந்தன.


அரசனும் போர்க்கால பணிபோல புன்னை வனத்தை திருத்தியமைத்தான்.


சுவாமிக்கு திருக்கோயில் எழுப்பிப் பணிமுடித்தான்.


கூடவே திருச்சுற்று மாளிகையையும் கட்டினான். கோபுரத்தையும் காட்சியாக்கினான்.


சங்கரன்நாராயணன் கோவிலிலுக்கு இன்று போனாலும், இக்கோயிலினுள்ளாராக உக்கிரபாண்டிய மன்னன் சிலையும், மணிக்கிரீவன் சிலையும் இருப்பதைக் காணப்பெறலாம்.


*மற்றுமொரு சிறப்பு:*
பாண்டிய நாட்டு பஞ்சபூதத் தலங்களில் இது பிருதிவி தலம். ( மண் தலம்.)


மார்ச் மாதத்தில் 21, 22, 23 ஆகிய மூன்று நாட்களிலும், செப்டம்பர் மாதத்தில் 21, 22, 23 ஆகிய மூன்று நாட்களிலும் சூரியன் உதயமாகும் போது, இவனின் ஒளிக்கற்றலைகள், சங்கரலிங்கர் மீது பிரவாகப் படுவதை, இன்றளவும் அந்நாளில் போது அங்கு இத்தலம் செல்பவர்கள் சூரியப் பிரவாகங்களை காணப்பெறுகிறார்கள்.


நாம சென்று வணங்கச் செல்கிறோமோ? இல்லையோ? இந்த கலியிலும் பூமிக்கு வரும் சூரியப்பெருமான், சங்கரனை வணங்க வரும் வருடத்தையும் நாளையும் தவறவிடுவதில்லை.


கொடிய நஞ்சுடைய நாகப் பாம்புகளாலும், தேள், பூரான் போன்றவற்றினாலும் ஏற்பட்டத் தீங்குகளில் நிவாரணம் பெற, இத்தலத்திற்கு வந்து அன்னை கோமதியை வேண்டுதல் செய்து நஞ்சுவலி நீங்கப் பெறுகின்றனர்.


இதோடு வயிற்று வலியும், குன்ம நோயும் உள்ளவர்கள் வேண்டிக்கொள்ள அந்த நோய்ப்பிணியும் நீங்கப் பெறுகின்றனர்.


நஞ்சு வலியையும், குன்ம நோயையும், ஒழித்தழிக்க இவ்வாலயத்தில் புற்றாக வளர்ந்து வரும் *புற்று மண்ணையே அருமருந்தாக* தருகின்றனர்.


எல்லா புற்றுமண் போலல்ல இவ்வாலயத்திலிருக்கும் புற்று மண்.


இப்புற்றுமண் இயற்கையாகவே வாசனைத் தன்மையுடன் கொஞ்சம் திடத்தன்மையும் கொண்டு, சந்தன வண்ணத்துடன் இந்நிமிடம் வரை வளர்ந்து வருபவை.


கோமதியம்மையின் அருளால் வளர்ந்து பிணியொழிக்கும் பிரசாதமாக இன்றளவும் இப்புற்று மண்ணையே பிரசாதமாக வரும், பிணிதீரும் மருந்தாகவும் தரப்பட்டு வருகிறது.


சங்கரலிங்கனார் கோவிலுக்குள் நீங்கள் வணங்கி வலஞ்செய்து வருகையில், இன்றும் இந்த ஆலயத்துக்குள் வளரப் பெற்றுவரும் அந்தப் *புற்றுமண்பிரசாத* மலையை நீங்கள் காணலாம்.


இவ்வாலயத்தில், சிருங்கேரி பீடாதிபதி நரசிம்ம பாரதி தீர்த்தர் அவர்களால் வழங்கிய ஸ்படிக லிங்கத்திருவுருவுக்கு தினந்தோறும் அபிஷேக ஆராதனை நடைபெற்று வருகிறது.


திருவாவடுதுறை ஆதினம் பதினோராவது பட்டம், கோமதி அம்மன் சந்நிதியில் திருச்சக்கரம் அமைத்துள்ளார்கள்.


பேய், பிசாசு,, பீடைக்கோளாறு, பில்லி,, சூனியம், பிணி, மட்டுமல்ல வறுமையும் உள்ளோர்கள், இந்தத் திருச்சக்கரத்தில் அமர்ந்து தியானம் செய்தால், அவை நீங்கப் பெறுவது இன்றும் வரையும் கண்கூடு.


கொடிமரத்தின் அருகாக உள்ள மண்டபத்தின் மேல்விதானம், ருத்திராட்சத்தால் வேயப்ப்பட்டுள்ளது.


நாயன்மார்கள் வரிசையில் நால்வராக இருக்கும் அமைப்பில் உள்ள மணிவாசகப் பெருமான், எல்லா ஆலயங்களிலும் மணிவாசகர், நான்காம் இடத்தில் எழுந்தருளப்பட்டு அருள்வார்.


ஆனால், சங்கரன்கோவில் சங்கரநாராயணன் திருக்கோயிலில் மணிவாசகர், நால்வர் வரிசையில் முதலாவதாய் எழுந்தருளி சிறப்பாய் அருள்கிறார்.


இவ்வாலயத்தின் கன்னி மூலையில் கன்னி மூலைக் கணபதியின் வலது கையினில், அங்குசத்திற்குப் பதிலாக, நாகப்பாம்பு அலங்கரிக்கிறது.


சுவாமி கருவறையின் பின்புறம், யோக நரசிம்மர் இருக்கிறார்.


வாயு மூலையிலிருக்கும், துர்க்கை, நாடிவரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.


இவ்வாலயத்தில் பிரம்மாவுக்கு தனி சந்நிதி இருக்கிறது.


அரஹரமகாதேவா!
அரோகரா! அரோகரா!!

திருச்சிற்றம்பலம்.


*சங்கரன்--நாராயணன் தல தொடர், இன்னும் சில நாள் பதிவாய் வரும்.*
To be continued