மனிதனின் கடன்கள்.
இந்த சரீரத்தை போஷித்து வளர்த்த மாதா பிதாகளுக்கு நாம் கடன் பட்டவர்கள். நமது பாப புண்ணிய கணக்குகளை கவனித்து நமக்கும் நல்லது கெட்டதுகளை நிர்வஹிக்கும் தேவதைகளுக்கு நாம் வரி கட்ட வேண்டிய கடன்காரர்கள்.


நமக்கு பல வழிகளிலும் உபகாரமாக இருந்து உதவும் பஞ்ச பூதங்களுக்கும் நாம் கடன்காரர்கள். இந்த ஜீவனுக்கு இந்த சரீரம் கடனாக கொடுக்க பட்டிருக்கிறது. இந்த ஜீவனாவது இந்த சரீரத்தின் உதவியால் கர்மபந்தங்களை அறுக்க வேண்டும்.


பாபங்களை போக்கி கொள்ள வேன்டும். அதற்காகத்தான் இந்த சரீரத்தை கடனாக கொடுதிருக்கிறார். நம்மை சுற்றி கடன் மயம். கடனை அடைக்காமல் இருந்தால் கடன் எப்படி தீரும்.


ஒரு தொழிலதிபர் வங்கியில் கடன் வாங்குவது போல் நாம் கடன் வாங்கி வந்து பிறந்து இருக்கிறோம். வங்கி கடனை திருப்பி தராமல் தொழில் அதிபர் தப்பிக்க முடியாது.


இது போல் தான் நாமும் தெய்வதிற்கும், பித்ருக்களுக்கும், தேவதைகளுக்கும் கடன்களை திருப்பி செலுத்தாவிட்டால் தேவதைகள் ஞாபக படுத்துவார்கள், தண்டனையும் கொடுப்பார்கள். கோச்சார ரீதியாக நவகிரகங்கள் ஞாபக படுத்தும்.
குழந்தைகள் உடல் நிலை பாதிக்க படும். ஆபிசில் ப்ரச்சனைகள், , மன கலக்கம், பயம், மனைவியுடன் கோபம், மனஸ்தாபம், படிப்பில் ப்ரச்னை, குழந்தை பிறக்காமல் இருப்பது, பெண்கள் திருமண தாமதம், தேவையில்லாத வெறுப்புகளுக்கு ஆளாவது, சோக ஸம்பங்கள் நிகழ்வது, இம்மாதிரி தொந்தரவு கொடுத்து ஞாபக படுத்தும்..


வேதங்களும் ரிஷிகளும் இதை இம்மாதிரி செய்தால் தான் கர்ம பந்தம் போகும், கடன் தீரும் என்று சொல்வதை கேளாமல், பஜனை., கீர்த்தனை, நவகிரஹ ஹோமம், , மந்த்ர தந்திர ஹோமம், தானம், பூஜை செய்வதால் ப்ரயோஜனமில்லை.


நாம் நம் நித்ய கர்மாக்களை செய்து கொண்டிருந்தால் இவை எதுவும் செய்ய வேண்டாம். அதாவது தொழிலதிபர் தவறாது மாத தவணை கட்டி கொண்டிருந்தால் வங்கி அதிபரை காக்காய் பிடிக்க வேண்டாம்


. மறுபடியும் இரண்டு வருடம் கழித்து வங்கி கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படும் போது மாத தவணை சரியாக கட்டியதால் உடனே கடனும் வங்கியில் கிடைக்கும். இல்லாவிட்டல் வங்கி கடன் கிடைக்காது. இதே போல் தான் தேவதைகள் விஷயமும். ஆபத்து வரும் போது ஜோசியரிடம் ஓடுவதும், பரிகாரம் செய்வதும் ப்ரயோஜனமில்லை.


ப்ரதி பலன் எதிர்பாராத பக்தி தான் மோக்ஷத்தை கொடுக்கும். பூர்ணமான சித்த சுத்தியுடன் கூடிய ஞானம் தான் மோக்ஷம் கொடுக்கும் .நித்ய கர்மாகள் தான் நமக்கு தேவையான இஷ்டங்களயும், பூர்த்தி செய்து கொண்டே மோக்ஷத்தை நோக்கி அழைத்து செல்லும். பகவான் கீதையிலும் இந்த கர்ம மார்கத்தைதான் உபதேசிக்கிறார்.


தேவ ருணங்கள் தீர யாக யக்யங்கள் செய்ய வேண்டும். ரிஷிகள் அதற்கான வழி முறைகளை கண்டு பிடித்து கொடுத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு அதற்கு ராயல்டி செலுத்த வேண்டும். அதற்காக வேதம் கற்றுக்கொள்ள வேண்டும். அத்யயனம் செய்ய வேண்டும்.


தேவ ருணம் தீர யாகங்கள் செய்ய வேண்டும். யாகங்கள் செய்பவர்களுக்கு உதவி செய்யலாம். வேதம் படிப்பவர்களுக்கும், வேதம் சொல்லி கொடுக்கும் உபாத்யாயர்களுக்கு உதவி செய்து அந்த தர்மத்தை செழிப்பாக்கலாம்.


பித்ருக்களுக்கு நாம் பட்ட கடனை நாம் தான் ச்ராத்தாதிகளை சிரத்தையுடன் செய்து அவர்களை த்ருப்தி செய்ய வேண்டும். பித்ரு கடனை அடைக்க வேண்டும். வேதத்தையும் , மின்சாரத்தையும் சம்பந்த படுத்தி பார்க்கலாம். மின்சாரம் இல்லாவிட்டால் எப்படி அவதி படுகிறோம். மின்சாரம் வந்ததும் எவ்வளவு சந்தோஷ படுகிறோம்.


இதே மாதிரி தான் வேதமும் மனதிற்கும், சரீரத்திற்கும் சுகத்தை கொடுக்கிறது. வேதம் தடைப்பட்டுள்ளதால் மனத்தாலும் சரீரத்திலும் கஷ்டங்கள் வருகிறது. இந்த காரணம் புரியாமல் குழம்பி கொண்டிருக்கிறோம்.


இனி பிறக்காமலிருக்க என்ன செய்வது என்பதற்கு காமகோடி மஹா பெரியவர் சொன்ன பதில்: நாம் ஏதோ தப்பு பண்ணி இருக்கிறோம்.
அதற்கு தண்டனையாக இந்த பிறப்பு ஏற்பட்டிருக்கிறது. பற்று என்று இருப்பதால் தான் தப்பு செய்கிறோம். . இதற்கு அடிப்படை ஆசை.
ஆசைக்கு காரணம் நம்மை தவிர இன்னொன்று இருப்பதாக எண்ணுவதால் ஆசை ஏற்படுகிறது.


ஒரு மாடு கண்ணாடியில் தன்னை பார்த்து விட்டு இன்னொரு மாடு என்று நினைத்து முட்ட போகிறது. மனிதன் தன் ப்ரதிபிம்பம் தான் என அறிந்து கொள்கிறான். இப்படியாக நாம் பார்க்கும் எல்லாம் ஒன்று தான். இரண்டு என்று எண்ணினால் ஆசை வரும். கோபம், பாபம் மறு பிறவி வருகிறது.


எல்லாம் ஒன்று என்ற ஞானத்தை எப்படி பெறுவது. அம்மா உடம்புக்கு பால் கொடுப்பாள். அம்பிகை அறிவு ஞானப்பால் கொடுப்பாள். அம்பாளின் கால்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு அவளுடைய ஸ்வரூபத்தோடு நம்மை நாம் கரைத்தாலே ஞானம் வரும்.


நம் உடம்பிலேயே அம்பிகை குண்டலினி சக்தியாக இருக்கிறாள். அவளை அறிந்து விட்டால் சதா பேரின்பம் தான்.


சித்தம் என்பது பெரிய சமுத்திரம். அதில் எண்ணங்கள் என்ற பல அலைகள் எழும்பி அமிங்கி போகின்றன. இந்த எண்ணங்களின் தழும்புகள் சித்தத்தில் பதிவாகி விடுகின்றன


இம்மாதிரி எண்ண அலைகள் எழுந்த வண்ணம் இருப்பதால் தான் சித்தம் கலங்கி தவிக்கிறது. பூர்வ ஜன்ம வாசனை, ஸம்ஸ்காரம் இவைகளால் ஏற்படும் வ்ருத்திகளே சித்தத்தில் பதிகின்றன..


நம் ஸனாதன தர்மத்தின் அடிப்படை கொள்கை முன் ஜன்மம் மறு ஜன்மம் உண்டு என்பதே.. ஜீவாத்மா இந்த உலகில் பல பிறப்புகளை எடுக்கிறான். ஆத்மாவிற்கு பல சரீரங்கள் உன்டு.


இவ்விதம் எடுக்கும் பல சரீரங்களுக்கும் ஒரு பொது விதி முறை உண்டு. அதாவது ஒரு பிறப்பில் அவன் செய்த கர்மாக்களுக்கு ஏற்றப்படி அவற்றுக்கு தக்க சரீரத்தை மறு பிறவியில் எடுக்கிறான்.


கீதையும் பிறவி உண்டு என்கிறது. ..குழந்தை பிறந்ததும் பால் குடிக்க வேண்டும் என்று தெரிவது ஜன்மாந்திர வாஸனையினால் ஏற்பட்டதே.


சிலருக்கு யாதொரு போதனையோ காரணமோ இல்லாமல் இயற்கையாகவே சில சக்திகள் உண்டாவதற்கு காரணம் ஜன்மாந்திர வாஸனையே. இன்று பொல்லாதவன் நாளை சாதுவாகவும், இன்று சாதுவானவன் நாளை பொல்லாதவனாகவும் மாறுவதும் ஜன்மாந்தர வாசனையே..


வாசனையின் முட்டையாக உள்ள உட்கருவின் மேற்பரப்பில் , மனமாக தொழில் படுகையில் அடுத்தடுத்து வரும் வாசனைகள் ஒரு வகையான நியதிக்கு உட்பட்டிருக்கிறது..


புதிய மோதுதல்களால் பழய வாசனைகள் மாற்றம் அடைவதற்கும் இப்பொது தொழில் பட தொடங்கியுள்ள பழைய வாசனையின் பலமே காரணமாக உள்ளது.


காமத்தினால் கோபிகைகளும், நட்பினால் பாண்டவர்களும் பகைமையாக சிசுபாலனும் , பழி வாங்கும் உறவினால் ஹிரண்ய கசிபுவும், பயத்தினால் கம்சனும், உறவினால் வ்ருஷ்ணிகளும், பக்தியினால் நாரதாதிகளும் சாவா பெறு நிலை பெற்றனர் என பாகவதம் கூறுகிறது.


இவர்கள் நிலை யோகம் என்று கூறப்படுகிறது.


நான் என்ற எண்ண மில்லாமை.. தாமரை தண்ணிரில் இருந்தாலும் தண்ணீர் தாமரையில் ஒட்டாமல் இருக்கிறது.


அந்த திடமான வாசனையில் தோய்வுராத நிலையில்லவர்கள் உள்ளம் இருந்திருக்க வேண்டும் மனதை கட்டுபடுத்தி ஒரு நிலை படுத்த வேண்டும்.. இதன் மூலம் சித்ததில் எண்ண அலைகள் எழும்போது , மனம் ஏகாக்கிற நிலை அடைந்து சாந்தமாக இருக்கும்.


க்ருஷ்ண யஜுர் வேதத்தில் யோக குன்டலினி உபனிஷத் என்று இருக்கிறது.
.
மனதின் ஒரு அம்சமான சித்த்தை பற்றி விரிவாக விளக்குகிறது. ப்ராணனும்
வாசனைகளும் தான் சித்த்த்தை செயல் படுத்துகிறது. ஒன்றை கட்டு படுத்தினால் மற்றொன்றும் தானே கட்டுபடும்.. இது மூன்று வழிகளை காட்டுகிறது. 1. மிதமான ஆகாரம். 2, ஆசனம். 3. சக்தி சலனம்.


1. மிதாகாரம்: மிதமான ஆகாரம். சத்துள்ள சத்துணவு, கட்டியான உணவும் திரவ உனவும் சரி சம்மாக இருக்க வேண்டும். பட்டினியும் கூடாது. பெருந்தீனியும் கூடாது. வயிற்றின் ஒரு பாகம் காலியாகவே இருக்க வேன்டும்.
2 ஆசனம்: பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் நல்லது.


3 சக்தி சலனம்: ப்ராணாயாமத்தின் மூலம் வயிற்று தசையை இப்படியும் அப்படியும் அசைப்பதன் மூலம் குண்டலினி சக்தியை விழிப்படைய செய்யலாம்.;ஆசன வாயை இறுக்கி அபான வாயுவை மேலே ஏற செய்ய வேண்டும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
தேவி ஆகமங்களில் அம்பிகை ஒன்பது விதங்களாக ப்ரசன்ன மாக இருக்கிறாள் என்று கூறப்பட்டுள்ளது. குன்டலினிக்கு புஜங்கி என்ற பெயருமுண்டு.


1. காலத்தொகுதி: வினாடி முதல் யுகம் வரை காலமாக வ்யாபித்துள்ளவள். இதில் சூரியன், சந்த்திரன் அடக்கம்.
2. குலத்தொகுதி: உருவமாகவும் வர்ணமாகவும் இருப்பவள்.


3. நாமத்தொகுதி: ஆயிரக்கணக்கான் நாமங்களில் உறைபவள்
4. ஞானத்தொகுதி;அறிவாக விளங்குபவள். சதா மாறிக்கொண்டே இருக்கும் அறிவாகவும்,.மாறாமல் ஒரே நிலையில் உள்ள அறிவாகவும் இருப்பவள்.


5. சித்த தொகுதி: சித்தம், புத்தி, மனசு, அஹங்காரமாகவும் விளங்குபவள்.
6. நாத தொகுதி: பரா, பச்யந்தி, மத்யமா, வைகரியாகவும் விளங்குபவள்.
7. பிந்து தொகுதி: ஆறு ஆதாரங்களாகவும் குன்டலினியாகவும் விளங்குபவள்.


8. கலா தொகுதி: 51 மாத்ருகா அக்ஷரங்களாகவும் விளங்குபவள்.
9. ஜீவர்கள் சுதாகுதி: எல்லா ஜீவன்களிலும் உறைபவள்..
குண்டலினி வழிபாட்டில் அம்பிகையின் இந்த ஒன்பது வித ஸான்னித்யமும் இடம் பெறுகிறது.


மனத்தினை கட்டுப்படுத்துவதால் மனிதன் ஒரு போதும் அழியாததும் தன்னியற்கையிலே நித்ய சுத்தமானதும் பூரணமானதுமான ஒரு பொருளை நேர் முகமாக காண்பான்..கவலைகள் அச்சத்தினாலும், நிறைவு பெறாத இச்சையினாலும் உண்டாகின்றன. . பூரண மான ஆனந்தம் உண்டாகின்றது.


சாந்தி ஏற்பட்டால் தான் நிரந்திர சுகம் ஏற்படும். இன்பம் இரு கூற்களாக வுருணிக்கப்படுகிறது. ஒன்று சித். மற்றொன்று ஜடம். இந்த இரண்டின் உண்மை நிலைகளை அறிய வேண்டும்.


உடல் ,பொறி, மன, அறிவு, தூக்க, மயக்க இன்பங்கள் வந்து போக கூடியவை.
உண்மை இன்பம் புதிதாக வருவதில்லை. வந்த பொருள் போவது போல் உண்மை இன்பம் போவதில்லை.


உண்மை உணர்வில் வாழ்பவனுக்கு மனம் இல்லை. மன உணர்வில் வாழ்பவனுக்கு உண்மை உணர்வு வாழ்வு இல்லை. அந்தகரணத்தின் பகுதிகள்: மனம், புத்தி, சித்தம், அஹங்காரம். ஆற்று வெள்ளத்தில் எல்லா இடத்திலும் நீர் இருப்பது போல் உட்கருவின் எப்பகுதியும் நான் என்ற முணைப்புணர்வு இருக்கிறது. இது தான் அஹங்காரம்.


. இந்த இடத்தில் நான் என்கின்ற உண்ர்வு மட்டுமே அஹங்காரம் எனப்படுகிறது.. தண்ணீரில் ஜல வாயுவும், ப்ராண வாயுவும் கலந்தது. ஆனால் உட்கருவின் ஸ்வரூபமான அஹங்காரம் பல கோடி மூட்டைகளின் வாஸனையாகும்.


எல்லா வாஸனைகளும் எப்போதும் உருப்பெறுவதோ தொழில் படுவதோ இல்லை. உருப்பெறாத கரு நிலையிலுள்ள வாசனைகள் கணக்கில்லாதது. இதுவே சித்தம்.


உண்மை உணர்வு அமைதி வடிவானது. அஹங்காரத்திலும் அமைதியுள்ள , அமைதியற்ற என்ற நிலைகள் உண்டு. குரங்கு சேஷ்டை செய்யாமல் இருந்தாலும் குரங்கு குரங்கு தான்..


உண்மை உணர்வு என்பது அமைதியின் ஒரு நிலை அல்ல. அமைதியின் வடிவு.


தன் வம்ச வ்ருத்திக்காக மனிதன் சிற்றின்பத்தை அனுபவிக்க வேன்டியது தான். அதிலேயே மூழ்காமல் பேரின்பத்தை நாட முயல வேன்டும். பேரின்பத்தின் ருசி சிறிது உணர்ந்து விட்டால் பின்னர் மனம் சிற்றின்பத்தை நாடாது.


முக்கனிகள்=மா, பலா, வாழை. மூன்றும் இனிப்பு சுவை தான். இந்த இனிப்பு சுவையிலும் வித்யாசம் உள்ளதை விவரிக்க முடியாது. சாப்பிட்டு பார்த்தால் தான் உணர முடியும்..


எதுவோ ஒன்றை விட்டுவிட்டால் அதுவே யோகம் என்கிறார் கண்ணன் கீதையில் . அந்த ஒன்று தான் துக்கம். .இந்த ஜீவாத்மாவிற்கு பரமாத்மாவை பிரிந்திருக்கிர வறை துக்கம் தான்.


புலன்களுக்கு இன்பமூட்டுபவை எவையோ அவைதான் துன்பத்திற்கு காரணம்.என்கிறார் கண்ணபிரான் கீதையில்.இக லோகத்து மகிழ்ச்சி எல்லாம் மாசுடையது என்பதை மனதில் இருத்தி கொள்ள வேண்டும். . மாசுடைய இன்பம் என்றாலும் துன்பம் என்றாலும் ஒன்று தான். உலகியல் இன்பத்தை பெரிதாக கருதாமல் குறை பாடுகளை தெரிந்து கொள்ள வேண்டும். .


சித்தம் பேதலித்து கொண்டிருப்பதால் தான் இன்ப துன்பங்கள் ஏற்படுகின்றன. சித்தத்தை சஞ்சலிக்காமல் நிறுத்தி விட வேண்டும்.. இதற்காக சுவாச பந்தம் செய்ய வேண்டாம். துறவு வேண்டாம். துறவற மனப்பான்மை அவச்யம் தேவை..


சித்தத்தை நேராக அடக்க வேன்டாம். அது திமிறி கொண்டு பாயும்.. சித்தத்தில் கவனம் வைக்காமல் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தில் நாம் பூரணமாக ஈடுபட தொடங்கினால் சித்தம் அழுக்கு படாமல் இருக்கும். சித்தத்துக்கு சஞ்சலிக்கும் வாய்ப்பும் குறையும்..


பிறவிகளில் மானுட பிறவி யில் தான் மோக்ஷமடைய முடியும். இந்த மோக்ஷம் பெற நிரந்திர ஆனந்த நிலை அடைய வேண்டும். இதற்கு குண்டலினி யோகம் உதவுகிறது...


மலைகளில் பொழிந்த மழை தண்ணீர் வெகு வேகமாக செடிகளையும். கற்களையும் பிறட்டி தள்ளிக்கொன்டு சப்தத்துடனும் கீழே வருகிறது. இதே தண்ணீர் சமுத்திரத்தை நெருங்கும் போது அமைதியாக மெதுவாக சப்தமில்லாமல் செல்கிறது..


இதே மாதிரி தான் ஜீவாத்மாவும் பரமாத்மா விலிருந்து வெகு தூரத்தில் இருக்கும் போது தமோ , ரஜோ குணங்கள் கூடியதாக இருக்கிறது. பரமாத்மா அருகில் ஜீவாத்மா வந்து விட்டால் ஸாத்வீக குணங்கள் அதிக மாகி சாந்த மடைகிறது..மனித சரீரத்தை பிண்டாண்டம் என்றும் வெளியிலிருக்கும் பிரபஞ்சத்தை ப்ரும்மாண்டம் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. இப்படி வேறாக கூறப்பட்ட போதிலும் பிருமாண்டத்திலுள்ள தெல்லாம் பிண்டாண்டத்திலும் உண்டு.இந்த மனித சரீரத்தை க்ஷுத்ர பிருமாண்டம் என்பார்கள்.


ஜீவாத்மா , பரமாத்மா அம்சமாக விளங்குவது போல , பராசக்தியின் அம்சமாக நம் உடலில் குண்டலினி சக்தி இருக்கிறது. .


இந்த சக்தி தான் சகல சரீர சம்பந்தமான காரியங்களுக்கு காரணமாக இருக்கிறது. இச்சா, க்ரியா, ஞான என்று மூவகைப்பட்டது சக்தி ஸ்வரூபம். இத்தகைய சக்தியான குண்டலியான சக்தியை எழுப்பி ஆறு ஆதாரங்களின் வழியாக செலுத்தி சகஸ்ராரத்திலுள்ள சிவத்துடன் ஐக்கியம் செய்வதே சிவ சக்தி ஐக்யம்= மோக்ஷம்..


அகண்டமான ப்ருத்வியில் (திரோதானம்) பிறப்பு (சிருஷ்டி) வளர்ப்பு (ஸ்திதி) இறப்பு (ஸம்ஹாரம்) இம்மூன்றும் முடிந்து அகண்ட வெளியான ஆகாயத்தில் (அருளல்) லயமாகிறது.