Announcement

Collapse
No announcement yet.

loan to men -2

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • loan to men -2

    இதை எல்லாம் செய்வது ஒரு சக்தி.இந்த சக்தி நம் உள்ளேயே உறைகிறது. இதை நாம் அறிய முற்பட வேண்டும்.

    பிருஹதாரண்ய உபநிஷத் அனைத்தையும் விட ஆன்மாவே இனிமையுடையது, அருமையுடையது என்கிறது .திருநாவுகரசருமிதையே சொல்கிறார்.


    கடோபனிஷத் சொல்கிறது :ஐம்புலன்களும் அடங்கி மனதிலே அமைதி நிலவி அறிவு ஒரு முனைப்பட்டு இருக்கும் போது ஆன்ம ஒளி தெளிவாக புலப்படுகிறது.


    முண்டகோபநிஷத் சொல்கிறது: நம் அனைத்திலும் ஆன்மாவாக ஒளி வீசி நிற்பது அனைத்திலும் அமைந்து விளங்கும் பிரும்மம் தான் .பிருமத்தினை பற்றி இந்த ஞானத்தை பெற்றவர்கள் பிரும்மமாகவே ஆகி விடுகின்றனர்.


    இதைத்தான் ஶ்ரீ வித்யா உபாசனையில் உபாசகன் தேவியாகவே ஆகி விடுகிறான். என்று சொல்லப்படுகிறது


    ஜபம் செய்து கொண்டிருந்தால் போதாது. இந்த ஜபம் எந்த ஜபத்தை பற்றி ச்செய்ய படுகிறதோ அப்போது அந்த தெய்வத்தை பற்றி நாம் அறிந்து கொண்டதெல்லாம் நம் மனதில் எழ வேண்டும். இறை பண்புகளை நினைக்கும்போதே இறைமையினை அநுபவித்ததாகிறது.


    ஸ்வேதாஸ்வர உபநிஷத் சொல்கிறது. நம் அகத்தில் ஒளிரும் ஆன்ம ஒளியினை பரத்தில் ஒளிரும் ப்ரும்ஹ ஒளியுடன் ஒன்றாக்க வேண்டும்.


    இதை எப்படி செய்வது. இவ்விரண்டும் ஒன்றே என்று எண்ண வேண்டும்.
    அந்த உணர்விலேயே அவை ஒன்றாகி விடுகின்றன.


    கண், காது முதலியவைகளின் மூலம் இன்பம் அனுபவிக்க ஆதாரமாக உள்ளது ஆன்மா. இந்த ஆன்மா இன்ப வடிவானது. இறைவனை தியானிக்கும் போது ஏற்படும் இன்பம் ஆன்மாவினால் தான் உணர முடியும்.


    ஆதி சங்கரரின் வேதாந்த பேரிகை முழங்குகிறது.: மனிதன் சரீரத்தினுடைய பஞ்சகரணங்கள் மூலம் எந்த ஆனந்தத்தை அநுபவிக்கிறானோ அந்த ஆனந்தமே ஆத்மா தான். இந்த ஆனந்தம் ஏற்பட சாந்தி ஏற்பட வேன்டும்.


    உண்மையான நிலையான பேரின்பமாகிய சத்சித் என்கின்ற ஆனந்தத்தை அளிக்கும் தாய் சாந்தி. இந்த சாந்தி இல்லாதவனுக்கு எங்கிருந்து சுகம் வரும் என்கிறார் கண்ணன் தன் கீதையில்.


    சாந்தி என்றால் மனம் சஞ்சலம் இல்லாமல் இருப்பது.. சலனுமமும் சாந்தியும் எதிர் மறைகள். இறைவனின் திருவருளும் குருவருளும் இரண்டும் இருந்து புலன் அடக்கமும் இருந்தால் சாந்தி நிலை ஏற்படும்.


    இதை ஆதி சங்கரர் ஸர்வ வேதாந்த சித்தாந்த சார சங்க்ரஹத்தில் கூறிஉள்ளார். இதையே திருவள்ளுவரும் இன்பத்துள் இன்பம் விழையான் தான் துன்பம் துன்பத்துள் வருதல் இலன். என்கிறார்.


    இங்கு துன்பம் என்பது நிம்மதியின்மை. ஊர் மேய்வது தான் உள்ளத்தின் பொல்லாத்தனம். உள்ளம் அடங்க அடங்க அமைதி ஏற்படுகிறது. ஆத்ம ஞான அடிபடையில் வரும் இன்பம் பேரின்பமாகும். இந்த பேரின்பத்தை அடையும் வழி குண்டலினி யோகமாகும்.


    தியானம்.
    ஒரு பொருளை முழுவதும் அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற துடிப்போடு ஆன்மாவை குரங்கு பிடியாக பிடித்து கொள்வதே தியானம். நாடி அச்சத்தால் தளரும் . கோபத்தால் முறுக்கேறும்.ஆசையினால் இஷ்டப்படி இயங்கும்.


    இதை வரைப் படுத்துவதே த்யானம். த்யானிக்கும் போது நினைப்பவன் ஒருவன். நினைவு ஒன்று. நினைக்கப்படும் பொருள் ஒன்று. த்யானத்தில் லயித்து ஒன்றுபடும் போது முதலில் நினைப்பதை மறக்கிறான். பிறகு நினை பொருள் மறக்கும். அதையும் அழித்து விட்டால் நிர் விகல்ப ஸமாதி ஆகிறான்..


    பதஞ்சலி முனிவர் மனித நிலையிலிருந்து தேவ நிலைக்கான படிகள் குறிப்பிட்டுள்ளார். அவையாவன: யமம்= தள்ளுபவை. நியமம்=கொள்ளுபவை; ஆசனம்= இருக்கை; பிராணாயாமம்=மூச்சுபயிர்ச்சி.


    ப்ரத்யாகாரம்=ஆற்றலை ஒன்றுபடுத்துவது. தாரணை=சக்திகளுக்கு வலிமை ஊட்டுவது. தியானம்=மனம் ஒன்றுபடல்; சமாதி= பேரின்பம் துய்த்தல்.


    இந்த அஷ்டாங்க யோகத்திற்கு உதவுவது மந்த்ரம், யந்திரம், தந்திரம்.
    அநுபவம், சூழ்நிலை, கல்வி இவற்றை அடிபடையாக கொண்டு மனம் ஒரு எல்லையுடன் கற்பனையில் வெகு தூரம் செல்லும். .


    இவற்றிலிருந்து விடுதலை பெற்று நிறை மனதாக விளங்க துணை செய்வது மந்திரம். யந்திரங்களில் எழுதப்படும் எழுத்து மந்திரம். மந்திரத்திற்கு உயிரூட்டும் முறையே தந்திரம்.


    ஏதோ ஒரு பொருளை அல்லது கருத்தை தொடர்ந்து த்யானிக்க பயின்றால்
    பாவனா சக்தி ஏற்படும். . பாவனா சக்தி பெற்று அதன் மூலம் சாந்தி பெற யோக சாஸ்திரத்தில் நான்கு வழிகள் உள்ளன.


    கருணா பாவம்: துன்புற்று பரிதாபமாக இருப்பவரிடம் பரிவும் இரக்கமும் காட்டி பழகுவது.
    மைத்ரீக பாவம்: மகிழ்ச்சியோடு தோழமை உணர்வோடு வளம் பெற்று த்ருப்தியாக வாழ்வது.




    முகிதா பாவம்: ஒழுக்கத்தால் சிறந்தவரோடு பழகுவது.
    உபேஷா பாவம்: தீச்செயலால் இழிந்த கயவர்களை வெறுக்காமல் வாழ்வது.


    இந்த பாவனைகளோடு பழகினால் சாந்தி ஏற்படுகிறது.


    மந்த்ர யோகம்=சிவ யோகம்: மோக்ஷார்த்தமாக ஏதோ ஒரு மந்திரத்தை எக்காலத்திலும் ஜபிப்பது. இந்த மந்திர அக்ஷரங்கள் ஒன்றோ, ஐந்தோ எட்டோ இருக்கலாம்.


    மூச்சு காற்று ஸ என்ற ஒலியுடன் நம் தேகத்தினுள் நுழைகிறது. ஹ என்ற ஒலியுடன் வெளிப்படுகிறது. இதையே குருவால் உபதேசிக்கப்பட்டு ஹம்ஸ மந்த்ர யோகமாக பழகலாம்.


    லய யோகம்: சித்தம் லயித்து இருப்பது. நாதத்தால், அல்லது வாக்குகளால், அல்லது த்யானத்தால். இந்த லய யோக பயிற்சியால் சித்தம் ஓய்வு பெறுகிறது .ஜீவாத்மா, பரமாத்மா ஐக்யம் ஏற்படுகிறது.


    ஹடயோகம்: ஹ=சூரியன்; ஸ= சந்திரன். இந்த சூர்ய சந்திரனின் சேர்க்கையே ஹட யோகம்.. ஹட யோகம் செய்வதால் உடலிலுள்ள எல்லா குற்றங்களும் , சோம்பலும் நீங்கும். பத்து வித முத்ரைகளினாலும், கரணங்களினாலும், கேவல கும்பகத்தினாலும், அஷ்டாங்க மார்கத்தினாலும் வாயுவை வசப்படுத்துவது ஹட யோகம். சுழுமுனையில் வழி ஏற்படுகிறது.


    ராஜ யோகம்; ஞானத்தால் மனோ விருத்திகள் இல்லாமல் இருப்பதேயாகும்.
    ஜீவர்களின் யோனி நடுவே செம்பருத்தி மலரின் நிறமுள்ள செந்நீர் உள்ளது.


    இது தேவி தத்துவம். புருவ மத்தியில் வெண்ணீர் உள்ளது. இது சிவ தத்துவம். இந்த வெண்ணிர், செந்நீரின் சேர்க்கையே ராஜ யோகம். இதனால் அஷ்ட மா சித்திகள் ஏற்படுகின்றன.


    இந் நான்கு யோகங்களும் ப்ராணன்,அபானன்களின் ஐக்கியம்.என்பதை அறிக.


    குண்டலினி சக்தியை விழிப்படைய செய்ய ஆற்றலுள்ளது ஹ்ரீம் என்ற புவனேசுவரி பீஜாக்ஷர மந்திரம்.. யோக முறை மூலம் தான் குண்டலினி சக்தியை எழுப்ப வேண்டும்.


    பாழான என் மனம் குவிய ஒரு தந்திரம் பண்ணுவது உனக்கருமையோ
    பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைகின்ற பரிபூர்னானந்த்மே என்கிறார்-தாயுமானவர். மனம் அகத்தில் ஸூக்ஷம்மாக இருப்ப்தால் “”அகம்””.
    உடலுக்குள்ளே இருந்து இயங்குவதால் உள்ளம்.. இதுவே அறிவுக்கு ஆதாரம்.
    .
    உணர்வுக்கு உறைவிடம். .இந்த உள்ளம் இல்லை என்றால் ஆய கலைகள், அறிவு நூல்கள். விஞ்ஞானம், ,ஞானம் எதுவும் தோன்றி யிருக்க முடியாது


    மனதின் வலிமைக்கு எல்லையே இல்லை. மனம் எவ்வளவுக்கு ஒரு வழிப்பட்டு நிற்கிறதோ அவ்வளவு வலிமையை ஒரு இடத்திலும் செலுத்தும்..


    உடல் சுகமாக இருந்தால் மனமும் சுகப்படும்.. உடலை பாதுகாத்து இந்திரியங்களை அடக்கினால் மனது வலுப்படும். .மிருகங்களை பழக்குவது போலிந்திரியங்களை பழக்கினால் பழக்கம் ஏற்படுமே தவிர குணம் மாறாது..


    எண்ணங்கள், உணர்ச்சிகள், வாசனைகள், பழக்கங்கள், ஸம்ஸ்காரங்கள் யாவும் நிறைந்ததே மனம். மனத்திற்கு தானே ப்ரகாசிக்கும் தன்மை இல்லை. ப்ரகாசம் ஆத்மாவிடமிருந்து பெறுகிறது. இந்த கடன் வாங்கிய ப்ரகாசத்தைக்கொண்டே எல்லா வஸ்துக்களையும் ப்ரகாசிக்க செய்கிறது.


    ஆத்ம ப்ரகாசம் இல்லையேல் உலக வஸ்துக்கள் நம் கண்ணுக்கு தெரியாது.
    மனதின் இயல்பு இந்திரியங்கள் வாயிலாக புறத்தே தென்படும் வஸ்துக்களை பற்றிகொண்டு அதன் வடிவங்களைப் பெறுவதே.


    மனம் இல்லாவிட்டால் இந்திரியங்கள் செயல் பட்டாலும் அவை உபயோகமற்றவையே.. ஜீவனும் அவ்வுணர்ச்சிகளை மனம் உதவியில்லாமல் உணர முடியாது.


    மனம் எதை விரும்புகிறதோ அதன் மயமாகிறது.. மனம் உலக பொருட்களை பற்றும்போது மனம் அசுத்தமடைகிறது. கடவுளை பற்றும் போது நிலைத்த இன்பத்தை அடைகிறது.
Working...
X